46.அத்தியாயம்

368 15 10
                                    

ஒளிர்மதி கோவிலுக்கு புறப்பட்டு செல்வவதை பார்த்திருந்த சிம்புத்தேவன் முன் வந்தார் மதிவதனி. சிறு தயக்கத்திற்கு பிறகு பேச்சை துவங்கினார்.

"ஒளிர்மதிய உனக்கு பிடிக்குமா தேவா?", அவர் கேட்ட கேள்வியில் ஒளிர்மதி மீதான அக்கறையும், சிம்புத்தேவன் மீதான ஐயமும் சேர்ந்தே இருக்க, அத்தோடு அவருக்கு தங்களது திருமணம் நடந்த விதமும் தெரியுமென ஏற்கனவே அவன் அறிவான். அவரிடம் தன் மனதை மறைத்தோன்றவில்லை.

ஒரு பெருமூச்சுவிட்டு புன்னகைத்தவன், "உண்மைய சொல்லட்டா அத்த?", என இதழை பிதுக்கியவன், "நான் அவள முதன்முதல பார்த்தது அந்த மணமேடையில தான். அன்பனோட கண்ணுல அவளுக்கான காதல், அவளுக்கு ஏதோ தலைப்பில்லா உணர்வுல உட்கார்ந்திருந்தா!

நம்மள யார் வேணா ஈர்க்கலாம், ஏனோ நமக்கு ஒருசிலர தான் நெருங்கத்தோணும். ஆனா நான் மதிய நெருங்க நினைக்கல, அந்த நொடி என் மனசுல இருந்தது அந்த வீட்டு பெரியவர, எங்கம்மாவ பெத்த அப்பாவ... அவமானப்படுத்தி, என் பழியுணர்வ தீர்க்கனும்னு ஒரு வெறி.

ஒருவேள அங்க மதியில்லாம வேற யாராவது இருந்திருந்தாலும் இப்டி பண்ணிருப்பியானு கேட்டா, நிச்சயமா எனக்கு தெரியல!

ஏனோ என் பழியுணர்வு, மதியோட முகம்... சம்திங் என்ன ஏதோ பாதிச்சிடுச்சு, தாலி கட்டிட்டேன். அப்போ கூட பெரியவரோட மானம் மரியாதை பறிச்ச சந்தோஷம் தானே தவிர, அவள பத்தி யோசிக்கல.

சொல்லப்போனா அவகிட்ட பேச எனக்கு கஷ்டமா இருந்தது, என் சுயநலத்துக்காக அன்பன், மதிய கஷ்டப்படுத்தினதா தோணுச்சு. அப்போ வேற பாத்து, அமுதன் வேற, 'ஒளிர் அன்பன் தான் காதலிக்கிறா'னு சொல்லவும் எனக்கு ரொம்ப மனவேதனை ஆகிடுச்சு.

பெரியவர கஷ்டப்படுத்துறதா நினைச்சு, என்னோட செயலால என்ன நானே மனசளவுல குற்றவுணர்ச்சிக்கு ஆளாக்கி, கவலைப்பட்டேன்.

மதியும் இந்த வீட்டுல எதையாவது வேலை செய்றேன்னு அங்க இங்க நடக்கும்போது எங்கம்மா பாத்த மாதிரி ஒரு உணர்வு. எங்க அம்மா மாதிரி என்ன, எங்கம்மா தான்! தெய்வீக முகம் அவளுக்கு. அவ பேச்சுல தூய்மையான துளசி வாசம் வீசும், அவளால யாருக்குமே தீங்கு நினைக்க முடியாது. கலப்படமில்லா தங்கம், அதனால தான் தங்களோட சுயநலத்துக்காக அந்த பெரியவர் வீட்டுல இருக்குற எல்லாரும், ஏன்! நானுமே கூட அவளுக்கு கஷ்டம் மட்டும் தான் தந்திருக்கேன்.

[✔]💟உயிரின் நிழலாய் வருடுகிறாய்💟Où les histoires vivent. Découvrez maintenant