33.அத்தியாயம்

339 18 8
                                    

ஒரு சொல் வெல்லும், ஒரு சொல் கொல்லும் என்பதற்கு ஏற்ப, முதலமைச்சர் பேசியது, மதிவதனியை கத்தியின்றி நெஞ்சை குத்தியிருந்தது.

அழுகை வந்தது, அதே நேரம் அதை கட்டுப்படுத்தவும் முயன்றாள். அவர் கூறிய வார்த்தைகள் மனம் அதுவாகவே தோண்டி துருவ, அதை நினைக்க நினைக்க தன் உடலே அருவருப்பை தந்து குமட்டியது, பராசக்தி கையை உதறிவிட்டு சாலை ஓரத்தில் வாந்தி எடுத்துவிட்டாள். இவன் யோசிக்கும் முன்னே எல்லாம் நடக்க, தனது டிராவல் பேகிலிருந்த பாட்டிலை அவளிடம் கொடுத்தவன் அவளது தலையை பற்றிக்கொள்ள, அவளோ குடலே வெளிவரும் அளவான பிறகே நிமிர்ந்தாள். வாய் கொப்பளித்தவள் முகத்தை கழுவிய பிறகு, அங்கிருந்த ஒரு சிறிய பெட்டி கடை நோக்கி வந்தவள், தொங்கிக்கொண்டிருந்த சாக்லேட் ஒன்றை எடுத்து பராசக்தியை காண, அவன் பணத்தை தந்தான். இருவரும் அங்கேயே நின்றனர்.

"திடீர்னு என்னாச்சு வதனி? சாப்பிடலயா?", அவளது கைப்பற்றி கேட்க, நிதானமாக அவன் கையை விலக்கியவள், "ஒன்னுமில்ல!", என முடித்தாள்.

அவளை அழுத்தமாக கண்டவன், தாமஸிற்கு அழைத்தான். சில நிமிடங்களில் தனது காரோடு தாமஸ் அவ்விடம் வர, தாமஸ் அவனது வீட்டிற்கு அழைத்து சென்றான்.

பம்பாயில் வேலை என்றாலும், வசுமதி திருமணத்திற்காக வந்துள்ளான். அத்தோடு இவ்விடம் தான் அவன் பெற்றோர் வசிக்கின்றனர். பராசக்தி அவர்களுக்குமே பரிச்சயமானவன்.

இருவரையும் விருந்தினர் அறையில் தங்கக்கூறியவன், வீட்டினரிடம் அவர்களை தொந்தரவு செய்ய வேண்டாம் என கூறிவிட்டான். ஆனாலும் தாமஸிற்குமே நடந்த நிகழ்வு தெரியாது.

அறைக்குளிருந்த இருவருமே என்ன மனநிலையில் இருக்கின்றனர் என்பதே தெரியவில்லை. ஒருமாதம் முன்பே ஊருக்கு வந்திருக்க வேண்டியது, ஆனால் அப்போது அந்நாட்டில் வானிலை சரியில்லாததால் தாமதமாகிவிட்டது. இதற்கிடையே வசுமதி திருமணம் அறிந்து அவன் கடுப்பாகிப்போயிருக்க, ஆனாலும் தங்கை திருமணம், அத்தோடு வானிலை சரியாகிவிட, அடுத்த விமானத்திலே ஊருக்கு வந்துவிட்டான். வந்து உட்காரும் அவகாசம் கூட இன்றி, ஒரே நாளில் எல்லாமே இழந்தவனாக காயப்பட்டுவிட்டான். இதில் தேவையில்லாமல் இழிவுப்படுத்த பட்டவள் மதிவதனியே!

[✔]💟உயிரின் நிழலாய் வருடுகிறாய்💟Donde viven las historias. Descúbrelo ahora