30.அத்தியாயம்

344 16 3
                                    

"வதனி! எங்கமா?", என்றபடி கொல்லைப்புறம்  வந்த மகனை கண்ட மகமாயி, "என்னாச்சுடா? இப்போதான் மடிக்கு துணி காயப்போட போனா?", எனவும் நொடியும் தாமதிக்காமல் அவளை காண ஓடிவிட்டான் பராசக்தி.

மகமாயி சிரித்தபடி மாட்டிற்கு தீவனம் வைத்துக்கொண்டிருந்தார். மகமாயிக்கு மாடுகளை வளர்ப்பது அலாதி பிரியம், இந்த சிட்டி வாழ்க்கைக்கு வரும் முன்பு, கிராமத்தில் அவர்கள் சொந்தமாக நான்கு மாடு மற்றும் இரு கன்றுகளை வைத்திருந்தனர்.

குடும்பத்தலைவியான மகமாயிக்கு மாடுகள் தான் மகிழ்ச்சி. யாரும் கேட்டிராத சோகங்களும், சந்தோஷங்களும் அவரது வளர்ப்பு பிராணிகளுக்கு தெரியும். ஆனால் இங்கு வர முடிவெடுத்தபோது முதலமைச்சர் கட்டாயத்தால் கண்ணீர் மல்க அதை விற்றுவிட்டனர், காரணம் புதிய ஊரில், தங்க இடம் கிடைத்தாலும், வாடகை வீடாக தான் இருக்கும். அத்தோடு அப்போது ஏற்பட்ட பணம் பற்றாக்குறைவு காரணமாக மனதில்லாமல் மாடுகளை வீற்றனர்.

இப்போது சொந்த வீடு, தாயின் ஆசை அறிந்த பராசக்தி, அவருக்காகவே மீண்டும் இருமாடுகளை இல்லம் அழைத்து வந்தான். மகமாயி அழுதேவிட்டார் அவைகளை கண்டு. அத்தோடு மகனை உவகை பொங்க பார்த்தவர், அவனையும் அணைத்து தனது சந்தோஷத்தை வெளிப்படுத்தினார். அதன்பிறகு கொல்லைப்புறத்தில் மாட்டு தொழுவத்தில் அதிக நேரம் இருப்பது தான் அவருக்கு வேலை.

மகமாயி மாடுகளை குளிப்பாட்டி, தொழுவத்தை சத்தம் செய்து முடித்து உள்ளே வர, கூடத்தில் அகலமான சுவற்றை அழகாக காட்டியது புகைப்படங்கள்.

முதலில் பெற்றவர்களோடு பிள்ளைகள் நால்வரும் இருப்பது போன்ற ஒன்று, அது எப்போதோ சில வருடங்கள் முன்பு எடுக்கப்பட்டது.

அடுத்ததாக மகமாயி-முதலமைச்சர் திருமண புகைப்படத்தின் அருகே, இப்போது அவ்வீட்டில் மதிவதனி-பராசக்தி புகைப்படமும் இடம் பெற்றிருக்க, அதற்கு கீழே இயல்பான தோற்றத்தோடு குடும்பத்தினர் அனைவரும் எடுத்துக்கொண்ட மற்றொரு புகைப்படம், அதில் வசுமதி மட்டும் இல்லை ஒரு தேர்வு எழுத, டெல்லி சென்றிருந்தாள்.

[✔]💟உயிரின் நிழலாய் வருடுகிறாய்💟Where stories live. Discover now