8.அத்தியாயம்

Start from the beginning
                                    

"மச்சி! அப்டியா?", அதிரதன் அவனை பார்த்து கண்ணடிக்க, மற்றவர்களும் கேலியாக அவனை கண்டனர்.

சக்தி தலையை பிடித்திருந்தவன், அவசரமாக சஞ்சனா அருகே வந்து, "அடியேய் சனா! என்ன பேசுறன்னு புரிஞ்சு தான் பேசுறியா?", என விஷ்ருத் சங்கடமான நிலையில் கேட்க,

"ஆமா! நான் என்ன தப்பா சொல்லிட்டேன். கல்யாணத்துக்கு பிறகு குடும்பஸ்த்தனாகிட்டேன், 'நல்லா உழைக்கனும், பாவக்காய்ன்னா கசக்கனும்'னு... நைட் லேப் டாப் வச்சு வேலை பாப்ப.

சரி அத கூட விடு. நீ வேலை பாக்க, என்ன தூங்கவிடாம காபி போட்டு தா, டீ போட்டு தா, ஜூஸ் போட்டு தான்னு உயிர வாங்குறயே... என்ன எங்க நீங்க தூங்க விட்டீங்க மிஸ்டர் விஷ்ருத்.", என்றவளை கண்டு விஷ்ருத் பெருமூச்சுவிட்டு மற்றவர்களை பார்த்து நிம்மதியாக சிரித்தவன், "இனிமே மாமா உன்கூடவே இருக்கேன் சனாம்மா... சரியா?", என கட்டிக்கொள்ள, அவளும் புன்னகைத்தாள்.

"அப்போ ஒன்னுமே நடக்கலையா?", என வினய் ரகசியமாக விஷ்ருத்திடம் கேட்க,

"கருமம் கருமம்! போங்கடா அந்த பக்கம்! இப்போ இதெல்லாம் ரொம்ப முக்கியமா?", என்று பல்லை கடித்தான்.

அதற்குள் இங்கு அதிரதன் பொங்கினான், "அட உன் புருஷன் பரவால சஞ்சனா... என் ஜானுவும் வர வர என்ன தூங்க விடுறதில்ல...", என்றான்.

"ஹலோ! என்ன சார்? டபுள் மீனிங்கா?!", என ஜான்சி முறைத்தாள்.

"ம்க்கும் அப்டியே பேசிட்டாலும்!", என முணுமுணுத்தவன், அவளை காணாது, மீனாட்சியிடம் திரும்பி, "பாட்டி நீங்களே சொல்லுங்க! மாமியார் மருமக சண்டை இருந்தா கூட சமாளிச்சிடலாம். ரைட்டா?"

"எனக்கு தேவகிக்கும் கூட சண்ட வராது கண்ணு", என்று பாட்டி பெருமையாக பேச, ஒளிர்மதி மணக்கண்ணில் தனது அன்னையும் பாட்டியும் வந்தனர்.

"ன் பாட்டியோட வாயிக்கு ஒருநாள் நெய்க்கு பதிலா பசைய தான் சோத்துல ஊத்தி வாய அடைக்கனும்!", என்று சங்கீதாவும்..

[✔]💟உயிரின் நிழலாய் வருடுகிறாய்💟Where stories live. Discover now