கானல் - 8

351 22 3
                                    

காலை கல்லூரிக்கு சென்றதும் அவளை பார்க்க வேண்டும் என்று எண்ணி ஆர்வமாக அவள் வகுப்பறைக்கு சென்றான்.

அந்த நேரத்தில் சிலர் மட்டுமே அங்கு இருந்தார்கள். அவன் விழிகள் ஆர்வமாக அவளை தேடின. ஆனால் அவள் அப்பொழுது வகுப்பறையில் இல்லை.

ஏமாற்றத்துடன் வெளியே வந்தான். அவன் வெளியே வரவும் அவள் உள்ளே நுழையவும் சரியாக இருந்தது.

அவளை பார்த்ததும் அவன் முகம் மலர்ந்தது. அவள் அவனை பார்த்தும் பாராதது போல் வகுப்பறைக்குள் நுழைந்தாள்.

"ஹேய் அருவி!" அவன் சத்தமாக அழைக்க, அவளை தான் அழைக்கிறான் என்று தெரிந்தும் அதை கண்டு கொள்ளாமல் வேகமாக உள்ளே நுழைந்தாள்.

அவனும் அவளை பின் தொடர்ந்து வந்து மீண்டும் ஒருமுறை அருவி என்று அழைத்தான். இந்த முறை அவன் குரல் மிகவும் அருகில் கேட்டதால் அவளும் நிற்க வேண்டியதாயிற்று.

"யாரு நீங்க?" என்றாள் எரிச்சலாக. "நிஜமாகவே என்ன அடையாளம் தெரியலையா?" என்றான் வியப்பாக.

"இதுக்கு முன் பார்த்திருந்தா தானே தெரியும். நான் உங்களை இப்போ தான் பார்க்குறேன். அப்புறம், என் பேரு அருவி இல்ல. இன்னொரு முறை அப்படி கூப்பிட்டுட்டு என் பின்னாடி வராதீங்க" என்றாள் முகத்தை இறுக்கமாக வைத்துக் கொண்டு.

"ஹேய் கம்-ஆன், இதுக்கு முன்னாடி நான் உன்ன பார்த்திருக்கேன். நீயும் என்ன பார்த்த. அதுவும் ரொம்ப நாள் எல்லாம் ஆகல, ஒரு வாரம் தான் இருக்கும்" என்றான்.

"ஓ! அப்படியா! எனக்கு அப்படி எந்த நிகழ்வும் நியாபகம் இல்ல. முக்கியமா உங்கள இதுக்கு முன்னாடி பார்த்ததா சுத்தமா நினைவிலேயே இல்ல" என்றாள் உறுதியாக, அது பொய் என்று அவள் அடிமனதில் தோன்றியது ஆனால் அதை அவள் முகத்தில் சிறிதளவு கூட வெளிக்காட்டி கொள்ளவில்லை.

"போன வாரம் திங்கள்கிழமை அருவியில் நீங்க உங்க ஃப்ரெண்ட்ஸ் கூட இருந்தீங்க. அப்போ மூனு பசங்க அங்க வந்தாங்க. நீங்க கூட அவுங்க மேல இரக்கப்பட்டு சாப்பாடு எல்லாம் கொடுத்து உதவுனீங்க. அதை எல்லாம் மறந்துட்டீங்களா?" என்றான் வியப்பாக.

கானல் நீ என் காதலே!Where stories live. Discover now