கானல் - 19

218 21 3
                                    

வகுப்பு முடிந்து வெளியே வந்த வானதிக்காக அவள் வகுப்பு வாயிலில் காத்திருந்தான் மதன். அவனை பார்த்ததும் குழப்பமாக அவன் அருகில் வந்து நின்றாள் வானதி.

"என்ன மதன்? இங்க வெயிட் பண்ணிட்டு இருக்கீங்க? உங்க ஃப்ரெண்ட்ஸ் யாராவதை பார்க்கணுமா?" என்றாள்.

"இல்ல வானதி, நான் உன்ன தான் பார்க்க வந்தேன்" என்றான் அவன். அவள் மேலும் குழப்பமாக அவன் முகத்தை பார்த்தாள்.

"அந்த ட்ராமா பற்றி பேச தான் உனக்காக வெயிட் பண்ணிட்டு இருக்கேன்" என்றான்.

"அதான் என்னால முடியாதுன்னு ஏற்கனவே தெளிவா சொல்லிட்டனே! இனியும் அதுல பேச என்ன இருக்கு?" என்றாள்.

"உனக்கு இங்கிலிஷ் தெரியாது, அதனால டைலாக் பேச முடியாது அவ்வளவு தானே உன் பிரச்சனை?" என்றான்.

"ஆமா! ஆனா அது நீங்க சொல்லுற அளவுக்கு சாதாரண பிரச்சனை இல்ல, ஒரு ட்ராமா போட்டா அதுல டைலாக் தான் ரொம்ப முக்கியம், அதை சரியா செய்ய முடியாத என்ன தேர்வு செய்யுறது ரொம்ப தப்பு, நிச்சயம் நம்ம டீம்லயே நல்லா பேசக் கூடிய நிரைய பேர் இருப்பாங்க, அதுல உங்களுக்கு சமமா நல்லா இங்கிலிஷ் பேசுறவங்கல தேர்வு செய்து நடிக்க வையுங்க. அது தான் சரியா இருக்கும்" என்றாள் தீர்க்கமாக.

"வானதி! ஒரு டிராமாக்கு டைலாக் முக்கியம் தான். ஆனா அது மட்டுமே முக்கியம் இல்ல. அந்த ரோல்க்கு ஏற்ற எல்லா தகுதியும் இருக்கணும்.

மொழி ஒண்ணும் அதுக்கு முக்கியம் இல்ல. எனக்கு தெரிஞ்சு நம்ம டீம்ல உனக்கு தான் அந்த ரோல் நல்லா பொருந்தும், எப்படியும் நாம மைக்க பிடிச்சு டைலாக் பேச போறது இல்ல. நீ நடிச்சா போதும், உனக்கான டைலாக் பேக்ரவுண்ட்ல பேச ஏற்பாடு செஞ்சுக்கலாம்.

அந்த வசனத்துக்கான‌ அர்த்தத்தை நான் உனக்கு சொல்லி தரேன், அதை உள்வாங்கி நீ அந்த உணர்வுகளை பிரதிபலிச்சு நடிச்சா போதும்" என்றான்.

அவள் நெற்றியை சுருக்கி யோசித்தாள்.

"உன்ன தவிர யாருக்கும் அந்த ரோல் பொருந்தாதுனு நம்ம டீம்ல எல்லாரும் நினைக்குறாங்க, இனி நீ தான் முடிவு பண்ணனும். யோசிச்சு முடிவு பண்ணிட்டு நாளு மணிக்கு ட்ராமா ரிகர்சல் பாக்குற ஸ்டுஜுக்கு வந்துரு" என்று கூறி விட்டு அவன் அங்கிருந்து கிளம்பி இருந்தான்.

கானல் நீ என் காதலே!Where stories live. Discover now