கானல் - 10

350 25 10
                                    

அங்கு கூடியிருந்த அவள் கல்லூரி மாணவர்களை ஆச்சரியமாக பார்த்து, "இவுங்க எல்லாரும் எப்படி இங்க வந்தாங்க?" என்றாள் வானதி.

"நாம ரெண்டு பேர் மட்டும் போய் குந்தவி எங்கேனு கேட்டா, இவுங்க கிட்ட இருந்து உண்மையை வர வைக்க முடியாது. அதான் ஹாஸ்டல்ல இருந்த ஃப்ரெண்ட்ஸ் எல்லாரையும் வர வச்சேன்.

நீங்க சொல்லுற மாதிரி இங்க ஏதோ தப்பு நடந்திருக்குனு தான் எனக்கும் தோணுது. அதை கண்டுபிடிக்க, நமக்கு நம்ம காலேஜ் ஃப்ரெண்ட்ஸ் எல்லாருடைய சப்போட்டும் அவசியம் வேணும்" என்றான்.

வானதிக்கும் அவன் சொல்வது சரி தான் என்று தோன்ற, அவள் அங்கு நின்றிருந்த அவர்கள் கல்லூரி மாணவர்களை நோக்கி நடந்தாள்.

"நீ ஒன்னும் கவலை படாத வானதி. குந்தவிய நிச்சயம் கண்டுபிடிச்சிடலாம்" என்று குந்தவியின் தோழி அவள் கையை பிடித்து ஆறுதலாக கூறினாள்.

வானதி நம்பிக்கையுடன் தலை அசைத்தாள். அவர்கள் அனைவரும் செய்த கூச்சலில், அந்த மேனேஜர் வெளியே வந்தான்.

"எவ்வளவு முறை சொல்லுறது? குந்தவி இங்க இல்ல" என்றான் தீர்மானமாக.

"இப்போ குந்தவி எங்கேனு எங்களுக்கு தெரிஞ்சாகணும்‌, இல்லைனா இன்னும் பத்து நிமிடத்தில் இங்க இருக்கிற கண்ணாடிகள் எல்லாம் உடையும், அடுத்து உன் மண்டையும் உடையும்" என்று அந்த கூட்டத்தில் இருந்த ஒருவன் கூச்சலிட, அவருக்கு பதட்டமாகி போனது.

அவர்கள் பேசிக் கொண்டு இருந்த போதே, மதன் அவனுக்கு தெரிந்த காவலரை அழைத்து அங்கு நடந்தவற்றை சுருக்கமாக கூறி அவரையும் உதவிக்கு வருமாறு அழைத்திருந்தான்.

வானதிக்கும் மனதில் நம்பிக்கை துளிர் விட்டது. எப்படியும் குந்தவியை கண்டுபிடித்து விடலாம் என்று உறுதியாக நம்பினாள்.

அவர்கள் ஹோட்டல் முன் மாணவர்கள் அவ்வாறு திரளுவார்கள் என்று அதன் உரிமையாளர் நினைத்திருக்கவில்லை.

"இங்க எப்படி இவ்வளவு கூட்டம் வந்துச்சு?" என்றான் அந்த மேனேஜரை பார்த்து. "அந்த பொண்ணு ஒரு ஸ்டூடன்ட், அவளுக்கு ஒன்னுன்னா இந்தளவுக்கு பிரச்சனை வரும்னு நான் ஏற்கனவே சொன்னேன்.

கானல் நீ என் காதலே!Where stories live. Discover now