கானல் - 21

239 19 3
                                    

அடுத்து வந்த மாதங்கள் எல்லாம் நாட்கள் போல் வெகு சீக்கிரமாக சென்றிருக்க, வானதி அவள் கல்லூரி படிப்பின் முதலாம் ஆண்டை நிறைவு செய்திருந்தாள்.

குந்தவிக்கும் அவள் கல்லூரி படிப்பு முடிந்திருக்க, இருவரும் அவர்கள் சொந்த ஊரில் உறவினர்களுடன் மகிழ்ச்சியாக தங்கள் நாட்களை கழித்து வந்தார்கள்.

குந்தவி வேலையில் சேர இன்னும் இரண்டு மாத காலம் இடைவேளை இருந்ததால், அதுவரை அவள் ஊரில் இருக்கும் குழந்தைக்களுக்கு பாடம் கற்பிக்க எண்ணி, மரத்தடியில் அவர்களை அமர வைத்து பாடம் சொல்லிக் கொடுப்பதை வாடிக்கையாக வைத்திருந்தாள்.

வானதிக்கு அங்கு வந்ததும் இருந்த மகிழ்ச்சி அடுத்தடுத்த நாட்களில் குறைய தொடங்கி இருந்தது.

அந்த இடைப்பட்ட காலத்தில் அவளுக்கும் மதனுக்கும் இடையில் இருந்த நட்பு ஒருபடி மேலே போய், அவர்கள் காதலிப்பதை அவரவர் மனம் தெளிவாக உணர்ந்திருந்தது.

வானதி அவள் ஊருக்கு வந்த போது, அவள் குடும்பத்தை பார்த்த மகிழ்ச்சியில் சந்தோஷமாக கழித்தாலும், அடுத்து வந்த நாட்களில் அவனின் நினைவு அவளை அமைதி இன்றி செய்தது.

அவனை பார்க்காமல் இருக்கும் நொடிகள் எல்லாம் யுகங்களாக தோன்ற ஆரம்பித்து இருந்தது.

ஒருநாள் அவனிடம் பேசியே ஆக வேண்டும் என்று தோன்ற, அவனை கைபேசியில் அழைத்தாள். ஆனால் அவன் அந்த எண்ணை தொடர்பு கொள்ள முடியாது என்று அதில் வந்தது அவளது கவலையை மேலும் அதிகரித்து இருந்தது.

ஒருவேளை தன் தந்தையை பார்க்க தன் நாட்டிற்கு சென்றிருப்பானோ என்ற சிந்தனையும் வர, அப்படி தான் இருக்கும் என்று ஒரு முடிவுக்கு வந்தாள்.

அன்றும் அதுபோல அவன் நியாபகமாகவே அமர்ந்திருந்தாள்.

"என்ன டீ இங்க தனியா உக்கார்ந்து என்ன யோசனை?" என்று கேட்டவாறு அவள் அன்னை அருகில் வந்து அமர்ந்தார்.

"ஒண்ணும் இல்ல மா, சும்மா தான்" என்று புன்னகையுடன் கூறி சமாளித்தாள் அவள்.

கானல் நீ என் காதலே!Where stories live. Discover now