கானல் - 20

258 22 7
                                    

அடுத்தடுத்து வந்த காட்சிகளை மிகவும் சிறப்பாக இருவரும் நடித்து முடித்திருக்க, இறுதியாக வந்த முக்கியமாக காட்சியில் நடித்துக் கொண்டு இருந்தனர். அதில் ஜுலியடாக நடிக்கும் வானதி தான் முழு வசனமும் பேசும் படி இருந்தது.

அவள் பேச தொடங்கும் முன்பே, பின்னணியில் ஒலித்து கொண்டிருந்த வசனம் நின்று விட, மதனுக்கு அது பதட்டமாகி போனது.

அவன் முகத்தில் எதையும் காட்டிக் கொள்ளாமல், அரங்கத்திற்கு அருகில் நின்றிருந்த நண்பர்களை பார்த்து கண்களாலேயே விசாரிக்க, அவர்களும் என்ன செய்வது என்று தெரியாமல் திருதிருவென விழித்தார்கள்.

அவன் வேறு வழியின்றி அந்த காட்சி இல்லாமலே அந்த நாடகத்தை முடித்துக் கொள்ளலாம் என்று நினைத்து விரைவாக ஏதோ செய்ய போக, அவன் அதிசயப்படும் படி, வானதியே அந்த வசனத்தை பேசி கொண்டு இருந்தாள்.

அவன் மட்டும் இல்லாது அவனோடு இருந்த அனைவரும் அவளை ஆச்சரியமாக பார்த்துக் கொண்டு இருந்தார்கள்.

ரோமியோ ஜூலியட் இருவரும் ஒருவர் மீது ஒருவர் வைத்திருக்கும் காதலை பறிமாறிக் கொள்ளும் காட்சி. அவர்கள் இருவரும் பேசிக் கொண்டதை பார்க்க, நாடகமாக தோன்றாமல் உண்மையாக இரண்டு காதலர்கள் முதல் முறையாக தங்கள் காதலை வெளிப்படுத்துவது போன்றே தோன்றியது பார்வையாளர்களுக்கு.

"My bounty is as boundless as the sea, my love as deep: the more I give to thee, the more I have"  "என்னுடைய
நேசமோ கடலைப்போல கட்டற்றது. அதன் ஆழமோ
யாரும் அறியமுடியாதது. உன் காதலுக்காக நான் எவ்வளவு
கொடுக்கிறேனோ அவ்வளவும் என்னிடமே திரும்ப வருகிறது. நம் காதலின் அன்பு எல்லையற்றது" என்று அவன் கண்களை பார்த்து உணர்ச்சி பூர்வமாக அவள் கூறிய போது அவள் கண்களில் தெரிந்த காதல், ஒரு சதவீதம் கூட நடிப்பு போல் தோன்றவில்லை.

அவள் மனதில் இருந்த வார்த்தைகள் தான் அவ்வாறு வெளிவந்தனவோ என்று தோன்றியது அவனுக்கு.

இமைக்கவும் மறந்து அவள் முகத்தை பார்த்து மெய்மறந்து போய் நின்றிருந்தான்.

கானல் நீ என் காதலே!Where stories live. Discover now