கானல் - 16

233 22 4
                                    

சில வாரங்களுக்கு பிறகு,

அந்த நாட்களில் குந்தவி பூரணமாக குணமடைந்து கல்லூரிக்கு செல்ல தொடங்கி இருந்தாள். வானதி சொன்ன யோசனை படி, அவள் வேலை செய்யவும் தொடங்கி இருந்தாள்.

அன்று கல்லூரியில் மதிய உணவை வானதி, மதன், குந்தவி, சதீஷ் மற்றும் அவர்கள் நண்பர்கள் சேர்ந்து சாப்பிட்டுக்கொண்டு இருந்தார்கள்.

"என்ன டா, ஏன் டல்லா இருக்க?" மதன் அவனுடன் அமர்ந்திருந்த நண்பன் வினோத்திடம் கேட்க, "எங்க அப்பா ஒரு மேரேஜ் கான்ட்ராக்டர் டா! அவர் தான் எல்லா அரேஞ்மென்டும் பண்ணுவாரு.

நாளைக்கு ஒரு கல்யாண ரிசப்ஷன் இருக்கு, அதுக்காக வேலை செஞ்சுட்டு இருந்த போது ஒரு சின்ன பிரச்சனை ஆயிடுச்சு, அதனால ஸ்டேஜ் டெகரேஷன் பண்ணுற டீம் வேலை செய்ய முடியாதுனு போயிட்டாங்கலாம்.

இந்த ஃபங்ஸன் நல்லபடியா போனா தான் எனக்கும் தங்கச்சிக்கும் காலேஜ் ஃபீஸ்ஸே கட்ட முடியும்னு சொல்லி இருந்தாரு! இப்போ அவரு இப்படி ஒரு ப்ராப்ளம்ல இருக்கும் போது, என்னால எந்த ஹெல்ப்பும் பண்ண முடியலையேனு நினைச்சு ரொம்ப வருத்தமா இருக்கு டா! சாப்பாடு மத்த விஷயத்துக்கு ஆள் கிடைக்குறது சுலபம் ஆனா இதை செய்ய நல்ல டெக்னீசியன் வேணுமே!" என்றான் சோகமாக.

"டேய்! இதுக்காகவா ஃபீல் பண்ணுற, எப்படியாவது அரேஞ்ச் பண்ணிடலாம். நீ கவலையை விடு" என்று மதன் ஆறுதல் கூறினான்.

"நாளைக்கு விஷேசம், அதுவும் ரொம்ப பிஸியான முகூர்த்தம், இப்படி இருக்கும் போது அது ரொம்ப கஷ்டம் டா!" என்று அவன் கூறியதை கேட்டு கொண்டு இருந்த வானதி குறுக்கிட்டு பேசினாள்.

"நான் வேணும்னா வந்து ஸ்டேஜ் அரேஞ்மென்ட் பண்ணி கொடுக்கட்டுமா?" என்றாள் ஆர்வமாக.

அங்கிருந்த அனைவரும் அவளை வினோதமாக பார்த்தனர், குந்தவியை தவிர.

"கரெக்ட்டா சொன்ன வானு, உங்களுக்கு தெரியுமா வானு இந்த மாதிரி அரேஞ்மென்ட் வேலை எல்லாம் ரொம்ப சிறப்பா செய்வா.

கானல் நீ என் காதலே!Hikayelerin yaşadığı yer. Şimdi keşfedin