கானல் - 17

256 27 3
                                    

"என்ன மா, எல்லா ஏற்பாடும் முடிஞ்சுதா? மாப்பிள்ளை வீட்டு காரங்க ஒருமுறை அலங்காரத்தை பார்க்க வந்திருக்காங்க, உள்ள தான் போயிருக்காங்க! அங்க எல்லாம் ஓகே தானே?" என்றார் வினோத்தின் தந்தை.

"அது வந்து பா..." அவள் சொல்லி கொண்டு இருந்த போதே மாப்பிள்ளை வீட்டு காரர்கள் சிலர் மண்டபத்திற்குள் சென்று கொண்டு இருந்தார்கள்.

"அண்ணா! இப்போ என்ன பண்ணுறது? எனக்கு பதட்டமா இருக்கு, இந்த மாதிரி எல்லாம் இதுவரைக்கும் என் வாழ்க்கையில நடந்ததே இல்ல அண்ணா.

நான் நிறைய இடத்துல ஸ்டேஜ் டெகரேஷன் பண்ணி இருக்கேன். இங்க நடந்த மாதிரி எங்கேயும் நடந்தது இல்ல! உள்ள போய் பாத்துட்டு என்ன சொல்லுவாங்கனு தெரியல, பயமா இருக்கு.

வினோத் என்ன நினைப்பான்? வீரப்பா பேசிட்டு இப்படி சொதப்பிட்டேனு நினைக்க மாட்டானா?" என்று பதட்டமாக புலம்பியவளை பார்க்கவே பாவமாக இருந்தது சதீஷுக்கு.

"கவலை படாதே மா, சின்ன தப்பு தானே, எதாவது சொல்லி சமாளிக்கலாம். இப்போ உள்ள போகாம இருந்தா நல்லா இருக்காது, வா போகலாம்" என்று கூறி அவளை உள்ளே அழைத்து சென்றான்.

உள்ளே சென்றவள் விழிகள் ஆச்சரியத்தில் விரிந்தன. அந்த இடத்தில் அனைத்து அலங்காரங்களும் முடிக்கப்பட்டு பார்க்க ஒரு குட்டி சொர்க்கம் போல் தோன்றியது.

ஆங்காங்கே ஊதா நிற குறிஞ்சி மலர்கள் வைக்கப்பட்டு இருந்தது அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.

"ஸ்டேஜ் டெகரேஷன் சூப்பரா இருக்கு மா! அசத்திட்ட! எப்படி குறிஞ்சி பூ கிடைச்சுது? இங்க அது விலையும் அதிகமாச்சே?" அவர் கேட்ட எதுவும் அவள் செவிகளை எட்டவே இல்லை.

அவள் பார்வை கவனம் முழுவதும் அந்த இடத்தில் இருந்த அலங்காரங்களை கவனிப்பதிலேயே இருந்தது.

அவள் அலங்கரித்த மேடை தான், ஆனால் அதை அவ்வளவு எடுப்பாக காட்டியது அங்கிருந்த ஊதா மலர்கள் தான். அந்த இடத்தில் லாவண்டர் மலர்களை வைக்க நினைத்திருந்தாள், ஆனால் அவளுக்கு தெரியாமல் நடந்த சதியால் அந்த மலர்களை இழக்க நேர்ந்தது.

கானல் நீ என் காதலே!Wo Geschichten leben. Entdecke jetzt