கானல் - 14

260 21 3
                                    

குந்தவியின் உடல்நிலை கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி கொண்டு இருந்தது. வானதியும் பானுமதியும் அவள் அருகிலேயே இருந்து அவளை கண்ணும் கருத்துமாக கவனித்துக் கொண்டார்கள்.

வெற்றிக்கு அவன் ஊரில் செய்து முடிக்க வேண்டிய வேலைகள் அதிகம் இருந்ததால் அவன் அங்கிருந்து கிளம்பி இருந்தான்.

இருப்பினும் அவன் மனம் முழுவதும் அவளை சுற்றியே இருந்தது. எப்பொழுதும் அவள் உடல்நிலை குணம் அடைய வேண்டும் என்பதை மட்டுமே எண்ணி கொண்டு இருந்தான். அவ்வப்போது அவளிடம் கைபேசியில் பேசிக் கொண்டான்.

"வானு, எனக்கு இப்போ ஹெல்த் ரொம்பவும் பரவாயில்ல. நீ இனிமேலும் காலேஜ் போகாம இங்க இருக்க வேண்டாம். இப்போதைக்கு அம்மா என்கூட இருக்காங்க, அதுவே போதும்! நீ இன்னிக்கு காலேஜ் கிளம்பு" என்றாள் குந்தவி.

"அக்கா! அத்தை மட்டும் தனியா இருந்து கஷ்டப்படுவாங்க, நான் இன்னும் ரெண்டு நாள் லீவ் போடுறதுல எந்த பிரச்சனையும் இல்ல" என்று அசால்ட்டாக பதில் அளித்தாள் வானதி.

"அது ஒன்னும் கஷ்டமான வேலை இல்ல வானு, அம்மா அதெல்லாம் பாத்துப்பாங்க. இதுக்காக நீ உன் படிப்பை கெடுத்துக்க கூடாது. நீ காலேஜ் கிளம்பு, இங்க நான் சமாளிச்சுக்கிறேன்" என்று கூறி அவளை கல்லூரிக்கு அனுப்பி வைத்தாள்.

வானதியும் அவள் அவ்வளவு தூரம் சொல்வதை புறக்கணிக்க முடியாது ஒப்புக்கொண்டு கல்லூரிக்கு கிளம்ப ஆயத்தமானாள்.

பானுமதியிடம் சொல்லி விட்டு, ஒரு ஆட்டோ பிடித்து பத்து நிமிடத்தில் அவள் கல்லூரி விடுதியை அடைந்தாள். வேகமாக அவள் அறைக்கு சென்று அரைமணி நேரத்தில் கல்லூரிக்கு செல்ல தயாராக வெளியே வந்தாள்.

மழைகாலம் என்பதால் வானம் இருண்டு காணப்பட்டது. குளிர் காற்று அவள் முகத்தை வருடி சென்றது.

திடீரென வானில் மின்னல் பளிச்சிட, அதை தொடர்ந்து இடி முழக்கத்துடன் மழைத்துளிகள் மெல்ல மெல்ல பூமியில் விழ தொடங்கின.

கானல் நீ என் காதலே!Where stories live. Discover now