கானல் - 1

1.5K 38 6
                                    

அழகிய காலை பொழுதில், குருவிகளின் கீச் சத்தம் அவள் செவிகளில் இனிய சங்கீதம் போல் ஒலித்தது. மெதுவாக கண்களை திறந்தாள் வானதி. ஜன்னல் வழியாக இரண்டு குருவிகள் வீட்டுக்குள்ளும் வெளியும் வட்டமிட்டு பறந்து கொண்டிருந்ததை பார்க்க அழகாக இருந்தது.

அதை ரசித்தவாறே கட்டிலில் இருந்து இறங்கி, குளியல் அறைக்குள் நுழைந்தாள்.

"சாப்பாடு தயாரா இருக்கு, நீங்க சாப்பிடுங்க" என்றார் மரகதம், வானதியின் அம்மா. "பொண்ணு வராம, நான் என்னிக்கு சாப்பிட்டிருக்கேன்! அவ வரட்டும்" என்று கூறி விட்டு சாப்பாட்டு மேசையில் வானதிக்காக காத்திருந்தார் ராமச்சந்திரன்.

"வெற்றி நீயாவது சாப்பிடு டா" என்றார் மகனை பார்த்து. "தங்கச்சி வரட்டு மா, அவ கூட சேர்ந்து சாப்பிடுறேன்" என்று கூறி அவனும் மறுத்து விட, மரகதம் தலையில் அடித்து கொண்டார்.

இது இன்று புதிதாக நடக்கும் நிகழ்வல்ல, தினமும் அவர்கள் இல்லத்தில் நடப்பது தான்; ஆனால் இன்று அவர்கள் இருவரும் முக்கியமான விஷயமாக வெளியே செல்ல வேண்டிய வேலை இருந்தது. இருப்பினும் வானதி வந்தால் தான் உணவை கையால் தொடுவேன் என்று கூறி இருவரும் அமர்ந்திருந்தது அவருக்கு கோபத்தையே வரவழைத்தது.

"ரெண்டு பேரும் சேர்ந்து அவளுக்கு ரொம்பவும் செல்லம் கொடுக்குறீங்க. குடும்பமே அவளை தலையில தூக்கி வச்சு கொண்டாடுறதால தான் அவ அவ இஷ்டத்துக்கு இருக்கா.

பொம்பள புள்ளைக்கு இவ்வளவு செல்லம் ஆகாது" என்றாள் வெற்றிமாறனுக்கு மட்டும் கேட்குமாறு.

அவன் புன்னகைத்தான். "நீ என்ன சொன்னாலும், அவ தான் எங்க எல்லாருக்கும் செல்லம். அதுல எந்த மாற்றமும் இல்ல, அப்புறம் என் செல்லம் என்ன செஞ்சாலும் சரியாக தான் செய்வா" என்றான் அவளை விட்டு கொடுக்காமல்.

"என்னவோ பண்ணுங்க! இன்னும் எத்தனை காலம் இப்படி செல்லம் கொடுக்க முடியும், நாளைக்கு அவளுக்கு கலியாணம்னு ஒன்னு ஆனதும் இங்க இருந்து இன்னொரு வீட்டுக்கு தானே போய் ஆகணும்.

கானல் நீ என் காதலே!Where stories live. Discover now