கானல் - 9

312 26 5
                                    

அன்று ஞாயிற்றுக்கிழமை, வானதி எட்டு மணிக்கு மேல் தான் எழுந்தாள். அவள் எழுந்து, குளித்து விட்டு வந்து குந்தவியை கைபேசியில் அழைத்தாள். ஆனால் அவள் அதை எடுக்கவில்லை.

என்னவென்று தெரியாமல், அவள் சாப்பிட சென்றாள். சாப்பிட்டு முடித்து வந்து, மீண்டும் அவளை அழைத்தாள். அப்பொழுதும் அவள் அதை எடுக்கவில்லை.

என்னவென்று தெரியாமல் அவளுக்கு குழப்பமாக இருந்தது. அவளை நேரில் போய் பார்க்கலாம் என்று முடிவு செய்து கொண்டு அவள் விடுதிக்கு செல்ல தயாரானாள்.

அரைமணி நேரத்தில் குந்தவி தங்கியிருந்த விடுதியை அடைந்தாள். அவள் உள்ளே சென்ற போதே அந்த விடுதியின் வார்டன் சாப்பிட வந்த பெண்களை பார்த்து கத்தி கொண்டு இருந்தாள்.

"ஒன்பது மணிக்கு ஒரு நிமிஷம் மேல வந்தாலும் இங்க சாப்பாடு போட முடியாது. உங்களுக்கு விருப்பம் இருந்தா இங்க தங்குங்க; இல்லாட்டி கிளம்பி போயிட்டே இருங்க.

இங்க வந்து யாரும் சண்டை போட்டுட்டு இருக்க கூடாது" என்று அங்கிருந்த பெண்களை பார்த்து கத்தினாள். அவர்கள் அனைவரும் வேறு வழியின்றி பேசாமல் அங்கிருந்து சென்று விட்டார்கள்.

அந்த பகுதியில் குறைந்த வாடகைக்கு இருந்த ஒரே மகளிர் விடுதி அது தான். பல வேலைக்கு போகும் பெண்களும், கல்லூரி மாணவிகளும் தங்கி இருந்தார்கள்.

வாடகை குறைவு என்பதால், அங்கே இருந்த விடுதி வார்டன் அவர்களை மிகவும் அதட்டி வைத்திருந்தாள். சரியாக சாப்பாடு கொடுக்காமல், தண்ணீர், மின்சாரம் என அனைத்திலும் மோசடி செய்து வந்தாள்.

குடும்ப சூழ்நிலை காரணமாக வேறு வழியின்றியே பலர் அங்கு தங்கி இருந்தார்கள். கல்லூரி விடுதியிலோ, மற்ற விடுதிகளிலோ தங்க அவர்களுக்கு வசதி இருக்கவில்லை.

அதை பார்த்த வானதி அதிர்ந்தாள். இது என்ன இவ்வளவு நயவஞ்சகமாக இவள் நடந்து கொள்கிறாள் என்று எண்ணினாள். குந்தவியை நினைத்து அவளுக்கு பரிதாபமாக இருந்தது.

கானல் நீ என் காதலே!Where stories live. Discover now