கானல் - 7

407 23 6
                                    

"என்ன டா முதல் நாளே இவ்ளோ போரிங்கா இருக்கு! இதுக்கு நான் அங்கேயே இருந்திருக்கலாம் போலயே!" என்று சலிப்பாக சொல்லி கொண்டே நண்பனுடன் சேர்ந்து விடுதிக்கு சென்று கொண்டிருந்தான் மதன்.

"இந்த ஒரு வாரம் தான் மச்சி இப்படி எல்லாம். அதுக்கு அப்புறம் நாம நினைக்குற மாதிரி இருந்துக்கலாம். மாஸ்டர் டிகிரி பண்ணுற நம்மல யாரும் கேள்வி கேட்க மாட்டாங்க" என்றான் அவன் நண்பன் சதீஷ்.

"என்னவோ போ!" என்று கூறி கொண்டு இருந்த போது தான் அங்கு நின்றிருந்த ஒரு பெண் அவன் கவனத்தை ஈர்த்தாள். அவன் கண்கள் அவளை கண்டு கொண்டது.

வெள்ளை நிற சுடிதார் அணிந்து தேவதை போல் அங்கு நின்றிருந்த பெண் அவன் அருவியில் சந்தித்த பெண் தான் என்று அவளை பார்த்த கனமே அறிந்து கொண்டான்.

அவன் நண்பன் பேசிக் கொண்டு இருந்ததை கூட கவனிக்காமல், வேகமாக அவளிடம் ஓடி சென்று அவள் முன் நின்றான்.

மூச்சிறைக்க ஓடி வந்து ஒருவன் தன் முன்னாள் நிற்பதை உணர்ந்து அவன் முகத்தை நிமிர்ந்து பார்த்தாள் வானதி. அவனை பார்த்ததும் அவளுக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது. அந்த அயல்நாட்டு இளைஞனை மறுபடியும் ஒரு முறை சந்திப்பாள் என்று அவள் எண்ணி இருக்கவில்லை.

அதுவும் அவள் கல்லூரியிலேயே அவனை சந்தித்தது அவளுக்கு மேலும் வியப்பாக இருந்தது. அந்த வியப்பை முகத்தில் காட்டி கொள்ளாமல் அமைதியாகவே நின்றிருந்தாள்.

அவனோ அழகே உருவாக அங்கு நின்றிருந்தவளை பார்த்து வாயடைத்து போனான். அவனும் அவளை அங்கு சந்திப்பான் என்று எதிர்பார்க்கவில்லை.

வெள்ளை நிற சுடிதார் அவளுக்கு மிகவும் அழகாக இருந்தது, நீளமான அவள் கூந்தலை நேர்த்தியாக பின்னலிட்டிருந்தால். பிறை நிலவு போன்ற நெற்றியில் அவள் வைத்திருந்த அந்த வட்டப் பொட்டு அவள் முகத்துக்கு எடுப்பாக இருந்தது. காதில் போட்டிருந்த வெள்ளை கல் பதித்த ஜிமிக்கி காற்றில் அசைந்து அவள் முகத்துக்கு மேலும் அழகு சேர்த்தது.

கானல் நீ என் காதலே!حيث تعيش القصص. اكتشف الآن