[✔]💟உயிரின் நிழலாய் வருடுகிற...

By ShruthyGayathryS

28.6K 1K 423

LOVE, FAMILY & FRIENDSHIP More

1.அத்தியாயம்
2.அத்தியாயம்
3.அத்தியாயம்
4.அத்தியாயம்
5.அத்தியாயம்
6.அத்தியாயம்
7.அத்தியாயம்
8.அத்தியாயம்
9.அத்தியாயம்
10.அத்தியாயம்
11.அத்தியாயம்
12.அத்தியாயம்
13.அத்தியாயம்
14.அத்தியாயம்
15.அத்தியாயம்
16.அத்தியாயம்
17.அத்தியாயம்
18.அத்தியாயம்
19.அத்தியாயம்
20.அத்தியாயம்
21.அத்தியாயம்
22.அத்தியாயம்
23.அத்தியாயம்
24.அத்தியாயம்
25.அத்தியாயம்
26.அத்தியாயம்
27.அத்தியாயம்
28.அத்தியாயம்
29.அத்தியாயம்
30.அத்தியாயம்
31.அத்தியாயம்
32.அத்தியாயம்
33.அத்தியாயம்
34.அத்தியாயம்
35.அத்தியாயம்
36.அத்தியாயம்
37.அத்தியாயம்
38.அத்தியாயம்
39.அத்தியாயம்
40.அத்தியாயம்
41.அத்தியாயம்
42.அத்தியாயம்
43.அத்தியாயம்
44.அத்தியாயம்
45.அத்தியாயம்
46.அத்தியாயம்
47.அத்தியாயம்
48.அத்தியாயம்
49.அத்தியாயம்
50.அத்தியாயம்
51.அத்தியாயம்
52.அத்தியாயம்
53.அத்தியாயம்
54.அத்தியாயம்
55.அத்தியாயம்
56.அத்தியாயம்
57.அத்தியாயம்
58.அத்தியாயம்
59.அத்தியாயம்
60.அத்தியாயம்
61.அத்தியாயம்

62.அத்தியாயம்

1.1K 23 19
By ShruthyGayathryS

ல்லூரி முடிந்து கிளம்பவென பார்க்கிங் வந்தான் அமுதன். சற்று தொலைவில் ஸ்டார் ஆகாத வண்டியை பார்த்தபடி அறிவுமதி நிற்கவும், அவளருகே பைக் எடுத்தபடி வந்தவன், "என்னாச்சு?", என்றான்.

அவள் வண்டி எப்போதும் போல் இயக்க முடியவில்லை என விஷயத்தை கூற, "அப்போ வா நானே ட்ராப் பண்றேன்!", என்றதும் ஒருநொடி அவள் முகம் விகாசிக்க, ஆனால் உடனே ஒத்துக்கொண்டால் தனது தன்மானம் என்னாவது என வீம்புக்கென ஆர்வமில்லாதது போல், "ஏன் அப்பதான் கல்யாணம் பண்ணுவீங்களா?", என்றாள்.

"இல்லைனாலும் கட்டிப்பேன்! ஒரு உதவிக்காக கேட்டேன்.", என்றிட,

அவன் பேசியதில் புன்னகைத்தவள் அவன் வண்டியை நெருங்கிய வந்த சமயம், "இரு இரு இரு! இங்க வேணாம், காலேஜ் தெரு முக்குல வெயிட் பண்றேன் வா.", என்றதும் முதலிலேயே வாய் மூடி ஏறி இருக்க வேண்டுமோ என தன்னை நொந்தாலும், அவன் கூறுவதால் அமைதியாக தலையாட்டினாள்.

கிளம்புவதற்கு வண்டியை முறுக்கியவன், மீண்டும் நிறுத்தி அவள் புறமாக திரும்பி, "அது சரி வராது அறிவாளி! இங்கயே வண்டிய நிறுத்திட்டா, எப்டி சரி பண்றது. அதனால நீ என்ன பண்ற? அதே காலேஜ் முக்குல இருக்குற மெக்கானிக் ஷாப்ல வண்டிய விடு, அதுவரைக்கும் நான் அங்க இருக்குற காபி ஷாப்ல வெயிட் பண்றேன், பத்திரமா வந்திடு.", என கூறிச்செல்பவனை வெட்டவா குத்தவா என பார்த்து வைத்தாலும், அவன் தன் நலனுக்காக தானே கூறிகிறான் என அவன் சொன்னது போலவே செய்தாள்.

ஒருவழியாக வண்டியை பழுது பார்க்க மெக்கனிக் கடையில் ஒப்படைத்தவள், காபி ஷாப் உள்ளே வர, அவளுக்கு கை உயரத்தி அமுதன் அழைக்க, மேஜையருகே வந்து இருக்கையில் அமர்ந்தாள்.

அமுதன் எப்போதும்விட இன்று கொஞ்சம் கூடுதல் மகிழ்ச்சியோடு இருப்பதை காலையிலிருந்து கவனித்துக்கொண்டு தான் இருக்கிறாள், என்ன விஷயம் என அவளுக்கும் தெரியும். ஒளிர்மதி வருவதால் வந்த சந்தோஷம் அது.

"ஏன் மாமா உங்களுக்கு ஒளிரக்காவ ரொம்ப பிடிக்குது?", அக்கேள்வியில் அவளது சிறுப்பிள்ளை தனமான பொறாமை இல்லை, மாறாக ஆர்வம் இருந்தது.

"தெரியலயே!", என புன்னகைத்தான் ஜூஸை உறிஞ்சியபடி.

"ஹே! எதாவது ரீசன் இருக்கும்!", என மீண்டும் கேட்க,

"ஒருவேள! எங்களுக்குள்ள இருக்குற கருத்துக்கள், ஒரே வயசு காரணமா இருக்கலாம்!", என்றான் தோளை குலுக்கி.

"வேற?"

"அவகிட்ட பேசும்போது நான் நானா இருக்கேன், அவ அவளா இருக்க! லைக்... என்னோட பீமேல் வெர்ஷன் அவ, அவளோட மேல் வெர்ஷன் நான்.", என்றதும் அறிவுமதி பக்கென சிரித்துவிட்டாள்.

"சீரியஸ்லி? அப்போ அக்காவ அப்டிதான் பாக்குறீங்களா?"

"நட்புல என்ன ஜென்டர் டிப்ரெண்ட்ஸ், எக்சட்ரா எக்சட்ரா... ஜஸ்ட் ப்ரெண்ட்ஷிப்! அவ என்னிக்கும என் பேபி தான், நான் அவளோட ஹனி தான். நாங்க எங்க பாண்ட்'அ காம்ப்ளிகேட் செய்யல.", என கண்சிமிட்டி, "அன்ப ஓவரா கொட்டினாலும் உறவுகள் உடைஞ்சிடும். அன்பு இல்லைனாலும் உறவுகள் உடைஞ்சிடும்.", என தத்துவமளித்தவனை புன்சிரிப்போடு நோக்கினாள்.

ருவரும் வீடு வந்து சேர, ஒளிர்மதி-சிம்புத்தேவன் வந்திருந்தனர். மாலை போல் வண்ணமதியோடு அன்பன் வர, அதன் பிறகு சற்று நேரத்தில் வெற்றிச்செல்வன், வெண்மதி மற்றும் மதிவதனியும் வந்துவிடுவர்.

இரவு சாப்பிட்டு முடித்து இளையவர்கள் தனியே காயும் நிலவின் நிழலை சுகித்தபடியே குழுமியிருந்தனர் என்பதைவிட சிறுவர்கள் போல், மழலை மகிழ்ச்சியோடு விளையாடிக்கொண்டிருந்தனர் எனலாம்.

விளையாட்டு யாதெனில் 'ட்ரூத்' ஆர் 'டேர்'!

ஒருபக்கம் விளையாடினாலும், அனைவரும் தத்தம் துணைகளை ரசிக்க, கவனிக்கத்தவறவில்லை. ஒளிர்மதி, சிம்புத்தேவன், வெற்றிச்செல்வன், அன்புமதி, வெண்மதி, அறிவுமதி, அன்பன், அமுதன் என வட்டமாக அமர்ந்திருந்தனர்.

அமுதன் காலியான ஜூஸ் பாட்டிலை சுழற்ற, அதன் திறக்கும் முனை ஒளிர்மதி அருகே வந்து நிற்க, கேள்வி கேட்கும் இடத்தில் வெண்மதி இருந்தாள்.

" 'ட்ரூத்' ஆர் 'டேர்'? ", என்றாள் வெண்மதி.

"ட்ரூத்!", என சிரித்தாள்.

"ஓகே! கேள்வி என்னென்னா... எங்க யாருக்குமே தெரியாது ஒரு சீக்ரெட்ட சொல்லனும்.", என்றிட, யோசித்தவள் வெற்றிச்செல்வனை வில்லத்தனமாக கண்டுவிட்டு, "டூ இயர்ஸ் பேக், கனடாவுல ஒரு மால்ல வெற்றிக்கு ஒரு பொண்ணு ப்ரோபஸ் பண்ணா, சார் மறுக்காம அத ஏத்துக்கிட்டாரு.", என கூலாக ஒரு குண்டை தூக்கிப்போட்டாள்.

அனைவரும் வாயை பிளக்க, வெற்றிச்செல்வன் பதறி, "தாயே! அவ உன்ன பத்தி சீக்ரெட் கேட்டா!", என முறைக்க,

அதற்கு நமது ஒளிர்மதி நட்பு அமுதனோ, "கேள்வியில குறிப்பிட்டு எதுவும் சொல்லலை ப்ரோ.", என அசட்டையாக தோள் குலுக்கிய அமுதன் கண்களில், வெற்றிக்கும் அன்புமதிக்கும் இடையே அடுத்து நடக்கப்போகும் சம்பவத்தை காணும் ஆவல் மின்னியது.

"ஓகே கூல் மை டியர் லவ்!", என அன்புமதியை சாந்தப்படுத்தியவன், "ஆக்டுவலி அது ஒரு ப்ராங் ஷோ போல, என்னன்னு இல்ல அந்த மால்ல நிறைய பேருக்கு இது நடந்துச்சு!", என தேடிப்பிடித்து யூடியூபிலிருந்து அக்காணோலியை காட்ட, அப்போது தான் அன்புமதி புன்னகைக்க, அமுதனோ, "ஜஸ்ட் மிஸ்!", என முணுமுணுத்தான்.

"நல்லா விளையாடுறீங்கடா என்ன வாழ்க்கையில!", என வெளிப்படையாக கூறி, தாரளமாக தன் தங்கை வெண்மதியை, ஹை-பை அடித்துக்கொண்ட ஒளிர்மதி மற்றும் அமுதனை பாவமாக காண, மற்றவர்கள் வெடித்து சிரித்தனர்.

இப்போது வெற்றிச்செல்வன் பாட்டிலை சுழற்ற, அது அன்பனை குறிப்பிட்டது. மீண்டும் கேள்வி கேட்கும் இடத்தில் வெண்மதி.

"ஹே! இது போங்கு... திரும்ப சுத்துங்க!", என அமுதன் கூற,

"ஆ... அஸ்கு புஸ்கு, அதெல்லாம் முடியாது", என்றதும், அனைவரும் சிரித்துவிட்டனர்.

"சரி கேளு!", என சிம்புத்தேவன் அவளை ஊக்குவித்தான்.

"சபாஷ்! சரியான போட்டி...", என அமுதன் கூறினான்.

" 'ட்ரூத்' ஆர் 'டேர்'? ", வெண்மதி அன்பனிடம் கேட்க, ஆட்டத்தை சுவாரஸ்யமாக்கும் நோக்கில், "டேர்!", என்றான் அடக்கிய சிரிப்போடு.

அவளோ யோசிக்காமல் சட்டென, "மேரி மீ!", என்றுவிட்டாள்.

அன்புமதி, "இது நம்ம லீஸ்ட்டுலயே இல்லயே!"

ஒளிர்மதி, "இது ரொம்ப புதுசா இருக்குண்ணே, புதுசா இருக்கு!"

வெற்றி, "வெண்ணு! இத என்ன விளையாட்டு,", என முறைக்க, கண்களாலே அவனை தடுத்த அன்பன், "நவ்?", என வெண்மதியை நோக்கி அழகாக புன்னகைத்து கேட்க, அதில் விளையாட்டு தனத்தை தாண்டி, வெண்மதியை அவன் ஏற்றுக்கொண்டதையும் அப்பட்டமாக காட்டிக்கொடுக்க, அவளோ அதிர்ந்து சிரித்தாள்.

இப்போது 'ஓ'வென்று அனைவருமே கத்தவும், அச்சத்தத்தில் மாடுகளுக்கு தண்ணீர் காட்டிவிட்டு உள்ளே போகவிருந்த மகமாயி மற்றும் நடந்துக்கொண்டிருந்த முதலமைச்சர் என்னவோ ஏதோவென ஏறி வந்தனர்.

"தூங்காம என்னடா அலப்பறை இது?", என மகமாயி அதட்ட,

"நீங்களும் வாங்க பாட்டி!", என அன்புமதி அழைக்க, வெற்றிச்செல்வன் தாத்தாவின் கைப்பிடித்து தங்களோடு அமர்த்திக்கொண்டான்.

விளையாட்டை பெரியவர்கள் இருவருக்கும் விளக்கிய பின்னர் மீண்டும் ஆட்டம் தொடர்ந்தது.

சரியாக அமுதனை குறிப்பிட்டு அன்புமதி கேள்வி கேட்கும் இடத்தில் இருக்க, 'இருக்குடி வாத்தி உனக்கு.', என நம்பியார் தனமாக புன்னகைத்தவள், " 'ட்ரூத்' ஆர் 'டேர்'? ", என்றிட, அவளது சிரிப்புக்கு சளைக்காத பார்வையோடு திமிராக, "டேர்!", என்றதும், "அமுதன் மாமா! பாட்டியோட வாய்ஸ்ல, தாத்தாகிட்ட பேசுங்க.", என்றாள் குஷியாக. மகமாயி அப்படியா என ஆச்சரியமாகினார்.

அமுதன் போர்த்திருந்த போர்வையை நொடியில் சேலையாக மாற்றி, வெட்கத்தோடு முதலமைச்சர் அருகே அமர்ந்தவன், அவரது கைப்பிடித்து பெண்ணின் பாவனையில் அமர்ந்தவன், தொண்டையை செருமி மகமாயி குரலில், "முதல!", என ஆரம்பிக்கும்போதே அனைவரும் வெடித்து சிரித்துவிட, மகமாயிக்கு கூட அவன் பேசிய விதம் கண்டு சிரித்துவிட்டார். முதலமைச்சரின் நரைத்த மீசைக்கு பின்னே லேசாக சிறு புன்னகை பூத்தது.

"முதல டார்லிங்!
சட்டையில இல்ல பட்டனு,
என் நெஞ்சு மேல நீதான் சிட்டிங்கு,
தேவையில்ல எக்ஸ்ட்ரா பிட்டிங்கு,
நேரா நானும் டெலிங்கு,
நீ கிடைச்சது தான் செல்லம்
மை லைப் டைம் செட்லிங்கு!", என அச்சு பிசகாத மகமாயி குரலை, அவன் இரவல் வாங்கி பேசியதோடு வாய்க்கு வந்த கவிதையையும் அடித்துவிட்டு, முதலமைச்சர் கன்னத்தில் பறக்கும் முத்தம் வேறு தர, அதில் அனைவரும் சத்தமாகவே வயிற்றை பிடித்துக்கொண்டு சிரித்துவிட, முதலமைச்சர் கூட அட்டகாசமாக சிரித்திருந்தார். சிரிப்பொலி அடங்கவே சில நிமிடங்கள் எடுத்தது.

"ஹே மகமாயி! எப்டி?", என ஸ்டைலிஷ் மகமாயி போல் அவன் உடலை ஆட்டி ஆட்டி கேட்க, "அட போடா!", என வெட்கத்தோடு சிரித்தார்.

மாடியில் கேட்ட சத்தத்தில் மீது நால்வரும் கூட ஆட்டத்தில் இணைந்திருந்தனர்.

லம்புரி பாட்டிலை சுழற்ற, கேள்வி கேட்கும் இடத்தில் சிம்புத்தேவனும், பதில் சொல்லும் இடத்தில் முதலமைச்சரும் இருந்தனர். மற்றவர்கள் சிம்புத்தேவனை காண, " ட்ரூத் ஆர் டேர்? தாத்தா ", என்றான்.

"ட்ரூத்", என முதலமைச்சர் கூற,

"உங்க பசங்கள்ளையே உங்களுக்கு யார ரொம்ப பிடிக்கும்? எதனால்?", என்றதில் அனைவரும் ஆர்வமாகினர்.

முதலமைச்சர் சிறு சங்கடமான புன்னகையோடு, "சக்தி!", என்றதில் அனைவருக்கும் அதிர்ச்சியும் கேள்வியும். மதிவதனி கண்கள் சட்டென கலங்கிவிட்டது.

"சக்தி ரொம்ப சுதந்திர மனப்பான்மை கொண்டவன், அவன் பார்க்க விளையாட்டு தனமா நடந்துக்கிட்டாலும், அவன் முடிவு தப்பானதில்ல. அதுக்கு அத்தாட்சி இந்த வீடும் தான். ஆனா நான் பழைய காலத்து ஆளு... உண்மையா மத்தவங்களோட மனசு புரியாதவன், கௌரவம்ங்கிற வெத்து கிரிடத்த வச்சிட்டு, நிறைய தவறுகள் செஞ்சிருந்தாலும்... சக்தி அத சரி செய்ய தான் முயற்சி செஞ்சான். என்ன மன்னிச்சிடுடா!", என்றவர் பேசி, மானசீகமாக பாராசக்தியிடம் மன்னிப்பு கேட்டதும், அனைவருமே முகம் சுருங்கி அமைதியாக, ஒளிர்மதி சிம்புத்தேவன் கையில் அடித்து, தாத்தாவை கண் காட்ட, அவன் நிதானமாக எழுந்து வந்து, தாத்தா முன் மண்டியிட்டு, "ப்ச்! தாத்தா... என்னதிது! கூல்... இப்போ நீங்க அப்டி இல்லைல... ரிலாக்ஸ்!", என அவரது கைப்பிடித்தான்.

அடுத்த வண்ணமதிக்கு வர, அவரது ட்ரூத் தேர்வுக்கு கேள்வியாக, "அத்த! உங்களோட பெரிய பயம் என்ன?", என்றாள் அறிவுமதி.

ஒருநொடி யோசித்தவர், "பயம் இருந்துச்சு. நின்னா, நடந்தா, பேசினா, சாப்பிட்டா எல்லாத்துக்கும் பயம் தான். வண்ணமதி=பயம் அப்டினு சொல்ற அளவுக்கு. இப்போ பயம்னு குறிப்பிட்டு சொல்ல எதுவுமில்ல... அன்பனோட வாழ்க்கை தவிர!", என்றார் சிரிப்போடு.

"சீக்கிரமே அதுவும் மாறிடும்", என வெண்மதி கூற, வண்ணமதி அர்த்தமாக புன்னகைத்து அன்பனை கண்டார்.

அடுத்ததாக வலம்புரிக்கு வர, டேர் என்றவர் கூற, வெற்றிச்செல்வன் குறும்பாக, "பாடுங்க மாமா!", என்றான்.

"நானா?", என்றவர் திகைத்து சிரிக்க, தந்தையருகே வந்த ஒளிர்மதியோ, "ப்ளீஸ்!", என கண்ணை சுருக்கிட, "ஓகே!", என சிரித்தவரை மகள்கள் மூவரும், வலம்புரியை சுற்றி அமர்ந்துக்கொள்ள, மற்றவர்கள் சுவாரஸ்யமாகினர். அவர் அபியும் நானும் படத்தில் 'வா வா என் தேவதையே' எனும் பாடலை பாடி முடிக்க, மகள் மூவருமே கண்கள் கலங்கினர் என்றால் சங்கீதா மற்றும் மதிவதனி ஒருவரையொருவர் புன்னகையோடு பார்த்துக்கொண்டு அவர்களை கண்டனர். வலம்புரி மகள்கள் மீது வைத்துள்ள பாசத்தினை அப்பாடல் வரிகள் எடுத்துக்காட்டியது..

அடுத்தடுத்து சில பாச போராட்டங்கள், நகைச்சுவை பேச்சுகள் என தொடர்ந்தது. தாமதமாவதை உணர்ந்து மகமாயி அனைவரையும் உறங்குமாறு அனுப்பி வைத்தார்.

பெரியவர்கள் முதலில் கிளம்ப, இளையவர்கள் தத்தம் ஜோடியோடு இணைந்தபடி பேசத்துவங்கிவிட, "டேய்! உங்களுக்குலாம் தூக்கமே வராதாடா?", என அமுதன் அரை தூக்கத்தில் கேட்க, அவனது மோவாயில் இடித்த அறிவுமதி, "அது தான் காதல்!", என்றாள்.

"தூங்காம பேசினா காதல் வராது, கண்ண சுத்தி கருவளையம் தான் வரும்!", என அவளது கன்னத்தை வலிக்கும்படி கிள்ளிவிட்டான்.

இவர்கள் அடித்துக்கொள்ள, வெற்றிச்செல்வன் மற்றும் அறிவுமதி, தங்களது வருங்கால வாழ்க்கை பற்றி தீவிரமாக பேச, அன்பன் மற்றும் வெண்மதி, கண்களாலே காதல் வீணையை மீட்டிக்கொண்டிருந்தனர்.

சிம்புத்தேவன் மற்றும் ஒளிர்மதி, அனைவரையும் நிறைவாக கண்டுவிட்டு, ஒருவரையொருவர் கண்டு புன்னகைத்துக்கொள்ள, அவளது நெற்றி முட்டியதில், அவள் அழகாக சிரித்து, "ப்ரீஷியஸ் மொமண்ட்!", என்றாள் மற்றவர்களின் மகிழ்ச்சி கண்டு.

"எல்லாம் உன்னால தான்!", என புன்னகைத்தான்.

"மே பீ!", என அவள் கண்ணடித்து குறுஞ்சிரிப்போடு அவன் தோள் சாய்ந்தாள்.

வெற்றிச்செல்வன் அன்புமதி...
இசையமுதன் அறிவுமதி...
இசையன்பன் வெண்மதி...
சிம்புத்தேவன் ஒளிர்மதி.... என நால்வருமே தங்களது வாழ்வெனும் வானில், தத்தம் நிலவை... மனதால் உணர்ந்து, உயிரில் சேர்த்து உயிரின் நிழலாய் வருடத்தொடங்கியிருந்தனர்.

🌸🌸🌸

இந்த கதை எங்கு தொடங்குச்சோ அங்கயே முடிஞ்சிடுச்சு! என் வாழ்க்கையில் இருந்த மர்மங்கள், பிரச்சனைகள், கஷ்டங்கள் எல்லாத்துக்குமே ஒரு முடிவு வந்தாச்சு. வாழ்க்கையில் பிரச்சனைகள் நிரந்திரமா முடியப்போறதில்ல, ஆனா இதுக்கப்புறம் எதாவது ஒரு பிரச்சனை வந்தா அதை கையாளும் மனநிலை எனக்கு வந்தாச்சு.

இன்னும் நம்ம சமூகத்துல எத்தனையோ கிள்ளிவளவன்கள் இருக்கத்தான் செய்றாங்க... அந்த மாதிரியான ஆட்கள் மத்தியில தான சக்தி, மதிவதனி, தாமஸ் போல சில நல்ல உள்ளுங்களும் வாழ்ந்தாங்க, வாழ்றாங்க.

ஒவ்வொரு நாளும் விழிக்கும்போது ஏன் இந்த வீட்டுல எப்பவுமே ஒரு இறுக்கம் இருக்குனு நான் நினைப்பேன், அதுக்கு வசுமதி அத்தை காரணமோன்னு யோசிப்பேன். ஏனோ எனக்கு உயிர் கொடுத்த பெத்தவங்க இல்லாம தான் இந்த வீடு புன்னகை இழந்து பல வருஷமாச்சுனு இப்போ தான் புரியுது!

ஒளிர்மதியா நான் ஆசைப்பட்டது சின்ன சின்ன விஷயங்கள் தான், ஆனா நாம ஆசைப்பட்டத அடையறதுக்கு கொடுக்குற விலை பெருசு...
என் வார்த்தைகள் பறவையோட சிறகு போல் சுதந்திரமா வெளி வரணும்,
ஒருமுறையாவது இந்த உலகத்த தனிமனுஷியா எதிர்கொள்ளனும்,
யாரையும் சாராம வாழனும்,
என் உணர்வுகள்ல யாருக்காவும் நான் பூட்டி வச்சுக்கூடாது, அது நியாயமா இருக்கும் பட்சத்தில்,
எவ்ளோ தூரம் போனாலும், என் குடும்பத்த எந்த சூழ்நிலையையும் கஷ்டபடுத்தாம சந்தோஷமா பாத்துக்கனும்,
லாஸ்ட் பட் நாட் லீஸ்ட்... எனக்கே எனக்கான ஒரு காதல்!

நான் சொன்ன விஷயங்கள் இங்க பல பேருக்கும் என்ன போலவே ஆசைகளா, கனவுகளா இருக்க வாய்ப்புகள் இருக்கு. ஒரு சிலத அடைய, பல விஷயங்கள் இழக்க வச்சு, நம்மள அழ வச்சு, கஷ்டத்த பழகுற சமயம், திரும்பவும் சந்தோஷத்த திணிச்சு அழகு பாக்குறது தான இந்த வாழ்க்கை!

ஒளிர்மதி சாதாரண பொண்ணு தான், இன்னும் சொல்லப்போனா அவள மாதிரியான குணம் உள்ளவங்கள நாம தினம் தினம் பாத்திருக்கலாம், நம்ம கூட இருக்குறவங்களாவும் இருக்கலாம்!

அவ சிரிப்புக்கு பின்னாடி சிறகு முளைத்தும் அடைக்கப்பட்ட கனவுகள் இருக்கலாம்,
அவள சிரிக்க வைக்க அமுதன் போல ஒரு உண்மையான நட்பு இருக்கலாம்,
அவள மட்டுமே நம்புற வலம்புரி-சங்கீதா போல பெற்றவர்கள் இருக்கலாம்,
அவள அக்கறையோட கண்டிக்கிற மகமாயி இருக்கலாம்,
அவளுக்கு தப்பா எதுவும் ஆகிட கூடாதுனு எல்லைகள வகுக்க ஒரு முதலமைச்சர் இருக்கலாம்,
அவள சீண்டி பாத்து கஷ்டபடுத்தினாலும், அவளுக்காக எதுவும் செய்ற உடன்பிறப்புகள் இருக்கலாம்,
அவளோட விருப்பத்த புரிஞ்சு விலகுற அன்பன் இருக்கலாம்,
அவள சில காரணங்களால விட்டுப்போன சக்தி-வதனி இருக்கலாம்,
அவள அவளுக்காகவே நேசிக்கிற சிம்புத்தேவன் இருக்கலாம்...

இவங்கள போல உண்மையான அன்புள்ளவங்க வாழ்ற அதே இடத்துல தான, அவ மனச ஒடிச்சு முடக்கிப்போடுற சில வக்கிர பிடிச்ச கிள்ளிவளவன் போல ஆட்களும் இருக்கலாம்,

ஏன்... அவங்களும் இந்த உலகத்துல, நம்மளோட ஒருத்தங்களா தான் வாழ்றாங்க, அதுக்காக நம்பிக்கை இழந்து வாழ்க்கைய வெறுக்குறதில்லையே! நாம என்னதான் வெளி உலகத்துக்கு நம்மள இயல்பா, சந்தோஷமா காட்டிக்கிட்டாலும், வெளியில சொல்லத்தயங்குற பல ரணமான விஷயங்கள் புதைச்சு வச்சிருப்போம். என்ன! ஒளிர்மதிக்கு தக்க சமயத்துல அவ நிலம புரிஞ்சு உதவ அவளுக்கான நட்பும், குடும்பமும் இருந்தது. ஆனா எல்லாருமே இதே புரிதலோடு இருக்குறதில்லையே!

" 'கடந்து போ' என சொல்வது எளிது...
ஏற்று கடந்து போகும் மனம் தான் அரிது! "

ஒளிர்மதியான எனக்கு இப்போ நான் நினைச்சது எல்லாமே கிடைச்ச உணர்வு. ஆமா! தேவ்வும் நானும் இப்போ பெங்களூர்ல இருக்கோம். எனக்கு பிடிச்ச வேலைய இப்போ பெங்களூர்ல பிரபலமான ஒரு ஹோட்டல்ல நிறைவா செஞ்சிட்டிருக்கேன். இப்போ என்னோட மொத்த பேமிலியும் முதலமைச்சர் வீட்டுல இருக்காங்க.

இன்னும் பத்து நாள்ல வெற்றிச்செல்வன் மற்றும் அன்புமதியோட கல்யாணம் நடக்கப்போகுது.

வதனியம்மா கனடாவுல இருக்குற பொறுப்புகள வெற்றிச்செல்வன் கிட்ட ஒப்படைச்சிட்டு, வெற்றிச்செல்வனோட கல்யாணம் முடிஞ்சதும்! சக்தி அப்பாவோட அவங்க வாழ்ந்த வீட்டுக்கு வந்து எல்லா பொறுப்புகளையும் ஏத்துக்கப்போறாங்க, சக்தி ட்ரஸ்ட் இனியும் மக்களுக்காக பற்பல சேவைகள் செய்யும்! அவங்க முடிவுல தாமஸ் அங்கிளுக்கு சந்தோஷம், வெற்றிச்செல்வனுக்கு அம்மாவிட்டு பிரியப்போற வருத்தம், அதுவும் அன்புமதியோட அன்பால மாறிடும்.

வெண்மதி-இசையன்பன் காதல் கண்ணாமூச்சி ஆட்டம் ஒரு முடிவுக்கு வந்தாச்சு. ஏற்கனவே வண்ணமதி அத்தைக்கிட்ட தங்களோட காதல பத்தி சொல்லி அனுமதி வாங்கின வெண்மதி, அன்பனும் அவள ஏத்துக்கவும் வீட்டுல விஷயத்த சொல்லியாச்சு. அடுத்த கெட்டி மேளம் ரெடி!

அறிவுமதி-இசையமுதன்! அடாவடி காதல் ஜோடி ரெண்டும் இப்பவும் அப்டியே தான் இருக்காங்க. அண்ணன் கல்யாணம் முடிஞ்சதும், அடுத்ததா தனக்கு கல்யாணம்னு சொல்லிருக்கான் நம்ம அறிவாளியோட வாத்தி!

முதலமைச்சர்-மகமாயி வீட்டுல நடக்குற அடுத்தடுத்த கல்யாணம் வேலைகளால ஒருவித பரபரப்போடும், சந்தோஷத்தோடும் இருக்காங்க!

வலம்புரி-சங்கீதா தங்களோட மகள்கள் ஒவ்வொருத்தரா... பெங்களூர், கனடானு போறதுல கவலைபட்டாலும், பொண்ணுங்க சந்தோஷமா வாழ்றத பாக்க நெகிழ்வோடும், அவ்வப்போது கண்ணோரம் எட்டி பார்க்கும் ஆனந்த கண்ணீருடனும் வலம் வராங்க.

எல்லாரோட வாழ்க்கையிலயும் ஏதோ ஒருவகையில நல்ல மாற்றங்கள் நிகழ்ந்த மாதிரி, வண்ணமதி அத்தையும்... கிள்ளிவளவன் மாமா பத்தின நினைவுகள முழுசா ஒதுக்கி, இப்போ யூடியூப்ல தன்னோட சமையல் குறிப்புகள், உணவு பதார்த்தங்கள் செய்முறை பற்றி வீடியோவாக்கி, யூடியூபர் ஆகிட்டாங்க! தன்னோட அடையாளத்த கண்டுபிடிச்ச களிப்போட சந்தோஷமா இருக்காங்க!

ஒருவழியாக அனைவரது வாழ்க்கையிலும் புதிவித மாற்றங்கள் நிகழ்ந்தாகிவிட்டது!

உங்ககிட்ட' ட்ரூத் ஆர் டேர் ' கேட்கமாட்டேன், நேரா டேர் தான் தரப்போறேன். உங்களுக்கு இந்த கதையில யார ரொம்ப பிடிக்கும், எதனாலன்னு சொல்லுங்க. கதை பத்தின உங்களோட கருத்துக்கள கண்டிப்பா பகிர்ந்துக்கோங்க.

இந்த கதையோட தொடக்கத்துல இருந்து என்கூட பயணிச்சு, என் கதைய வாசிச்சு, ஆதரவளிச்சு, ஊக்குவிச்ச எல்லாருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்!😇😊🤩😁🙏🏻

🌸சுபம்🌸

_ஸ்ருதி காயத்ரி

Continue Reading

You'll Also Like

202K 4.9K 30
திருமணத்திற்கு பிறகு வரும் காதல்
15.9K 840 7
TAMIL STORY Krish ❤️ Kavya Not everyone gets married to their love. Some fall in love after marriage too ❤️
94.4K 2.9K 63
புவியில், அவள் பிறந்த அன்றே , தாய் தந்தையை அறிந்தது போல் கணவனையும் சேர்த்தே அறிந்துக் கொள்ள.. தன் சகோதரியின் கருவறையில் இருக்கும்போதே, அவளை மனைவியா...
164K 6.2K 21
திருமணத்தில் இணைந்த இரு மனம்..❤❤