[✔]💟உயிரின் நிழலாய் வருடுகிற...

Par ShruthyGayathryS

28.8K 1K 423

LOVE, FAMILY & FRIENDSHIP Plus

1.அத்தியாயம்
2.அத்தியாயம்
3.அத்தியாயம்
4.அத்தியாயம்
5.அத்தியாயம்
6.அத்தியாயம்
7.அத்தியாயம்
8.அத்தியாயம்
9.அத்தியாயம்
10.அத்தியாயம்
11.அத்தியாயம்
12.அத்தியாயம்
13.அத்தியாயம்
14.அத்தியாயம்
15.அத்தியாயம்
16.அத்தியாயம்
17.அத்தியாயம்
18.அத்தியாயம்
19.அத்தியாயம்
20.அத்தியாயம்
21.அத்தியாயம்
22.அத்தியாயம்
23.அத்தியாயம்
24.அத்தியாயம்
25.அத்தியாயம்
26.அத்தியாயம்
27.அத்தியாயம்
28.அத்தியாயம்
29.அத்தியாயம்
30.அத்தியாயம்
31.அத்தியாயம்
32.அத்தியாயம்
33.அத்தியாயம்
34.அத்தியாயம்
35.அத்தியாயம்
36.அத்தியாயம்
37.அத்தியாயம்
38.அத்தியாயம்
39.அத்தியாயம்
40.அத்தியாயம்
41.அத்தியாயம்
42.அத்தியாயம்
43.அத்தியாயம்
44.அத்தியாயம்
45.அத்தியாயம்
46.அத்தியாயம்
47.அத்தியாயம்
48.அத்தியாயம்
49.அத்தியாயம்
50.அத்தியாயம்
51.அத்தியாயம்
53.அத்தியாயம்
54.அத்தியாயம்
55.அத்தியாயம்
56.அத்தியாயம்
57.அத்தியாயம்
58.அத்தியாயம்
59.அத்தியாயம்
60.அத்தியாயம்
61.அத்தியாயம்
62.அத்தியாயம்

52.அத்தியாயம்

424 15 4
Par ShruthyGayathryS

ஒளிர்மதி கடத்தப்பட்ட கார் சில அடிகளில் நிற்கவே, அன்பன் தனது இயல்புக்கு திரும்பி வேகவேகமாக ஓடி காரை நெருங்க, அதிலிருந்து இறங்கிய சிம்புத்தேவனை கண்டு அதிர்வும் கோபமும் ஒருங்கே தோன்றியது.

"என்னப்பா தம்பி? எப்டி இருக்க?", என சிம்புத்தேவன் புருவம் தூக்கி நக்கலாக கேட்க,

"ப்ச் தள்ளு!", என அவனை விலக்கி, ஒளிர்மதியை காண அவன் ஒருஅடி முன் வைக்க,

"தோடா! என்ன தாண்டி அவள நீ நெருங்கிடுவியா? நீ அடிக்கடி ஒரு விஷயத்த மறந்திடுற அன்பா! நீயும் அவளும் பிரிஞ்சிட்டீங்க. அவளுக்கும் உன் மேல எதுவும் இல்ல...", எனும்போதே,

"அதெல்லாம் எதுக்கு பேசுற? முதல கார் கதவ திற... அவள ஏன்டா இப்டி கஷ்டப்படுத்துற, நீ வேணாம்னு தான போனா... அவள நிம்மதியா விடமாட்டியா?", ஆத்திரமாக கேட்டிருந்தான்.

"எப்டி விடுறது? அவள யாருக்காவது பிடிக்காம போகுமா? எல்லாருமே காதலே ஸ்வீட் விஷயமா சொல்லுவாங்க. ஆனா என்ன பொறுத்தவரை, காதல்ங்கிறது உப்பு மாதிரி... அது சாப்பாட்டுல கூடவோ, குறைச்சலாவோ சேர்த்தாலும், ஒருவேள சேர்க்காம போனாலும்... சுவை இருக்காது. இந்த காதலும் நம்ம வாழ்க்கையில அப்டிதான்.", என ரசனையாக கூறியவனை வெறுத்துப்போய் கண்டான் அன்பன்.

"நீ திருந்திட்டேனு நினைச்சேன்ல என் தப்புதான்!", என்றவனிடம், "ஆஹான்! நீ ஏன் இப்போ இவ்ளோ குதிக்கிற? அதான் நீயும் அவளும் பிரிஞ்சிட்டீங்களே, அப்றம் என்ன பாசம் பொத்துக்கிட்டு வருது!", சிம்புத்தேவன் சீண்டினான்.

"ஏய்! என்ன சும்மா பிரிஞ்சிட்டீங்க  பிரிஞ்சிட்டீங்கனு! யாருடா பிரிஞ்சா? இப்பவும் அவ என்னோட மதி தான், எப்பவும் அவ மட்டும் தான்.

நாங்களா பிரியலயே! சூழ்நிலை எங்கள பிரிச்சிடுச்சு. ஆனா இத்தன வருஷத்துல அவளும் சரி நானும் சரி... எவ்ளோ அடிச்சிக்கிட்டாலும், திட்டிக்கிட்டாலும்... எனக்கு ஒன்னுனா துடிக்கிற முதல் ஆள் அவ தான், அவளுக்கு ஒன்னுனா என்னாலயும் தாங்க முடியாது.

வந்துட்டான் வியாக்கியானம் பேச! முன்ன சொன்னியே... அவள யாருக்காவது பிடிக்காம போகுமானு! அவள எத்தன நாள் உனக்கு தெரியும் மிஞ்சிப்போனா ஒருமாதம் அவளோட பழகிருப்ப.

அவ பிறந்த குழந்தையா இருந்தப்பவே எனக்கு உயிர் மாதிரி, அவ என்னோட நிழல் மாதிரி!

காதல்னா உப்பு, சப்புனு பேசுற நீயெல்லாம், காதல தாண்டிய எங்களோட உறவ பத்தி பேச உரிமையில்ல... வந்துட்டான் பெரிய இவனாட்டம்!

போதும்டா! அவ பட்ட கஷ்டமெல்லாம் போதும்... குடும்பம், கட்டுப்பாடு, எங்கப்பாவோட வக்கிர எண்ணம், பழிவாங்க உன்கூட நடந்த கட்டாய கல்யாணம்...

இதுல இருந்து இப்போ தான் அவ கொஞ்ச கொஞ்சமா வெளியில வரா... அவ இஷ்டப்படி இனியாவது வாழட்டும். நீ, நான், இந்த சமுதாயம் எல்லாருமே ஏதோ ஒருவகையில அவ கண்ணீருக்கு காரணம் ஆகிட்டோம். அவ அழுத வரை போதும்! அவள விட்ரு... என் காதல் எப்பவும் அவளுக்கானது தான், முதல் காதல் ஆச்சே, அவ்ளோ சீக்கிரம் மறக்காது", அன்பன் கூறியது சிம்புத்தேவன் பற்றியா இல்லை தனது மனத்தாங்கலா, ஆதங்கமா, அவன் மூடிவைத்த உணர்வுகளா, என்பது அவனுக்கே வெளிச்சம்!

இப்போது சிம்புத்தேவன் தோளை அழுத்தமாக பற்றி தூரத்தள்ளிய அன்பன், கார் கதவை திறக்க, அங்க கண்ட காட்சியில் அவனது கண்கள் அதிர்வில் கலங்கிவிட்டது.

அமுதன் ஒரு பக்கம் கையிலிருந்த சிப்ஸை கொறித்து தள்ள, டிரைவர் சீட்டிலிருந்த சிவா அமுதனிடமிருந்து சில சிப்சுகளை அள்ளிக்கொள்ள, ஒளிர்மதி அமுதனருகே கண்ணீரோடு மூக்கை உறிஞ்சிக்கொண்டிருந்தாள்.

ஆக! எல்லாமே திட்டம்... இது புரியவும் அன்பன் கோபமாக, "என்னடா இது?", என அமுதனிடம் சீறினான்.

"அதுவா!", என ஆரம்பித்தவன், அமுதன் கூறவருவது பின் வருமாறு.
அமுதன் பார்வையில்...

ந்த ஒன்றரை வருடத்தில் அனைவரது வாழ்க்கையிலும் ஏதோ ஒரு வகையில் மாற்றம் நிகழ்ந்தாலும், அன்பனுக்கு மட்டுமே எதுவுமே அமையவில்லை.

அண்ணனது சிரிப்புக்கு பின், அவ்வப்போது எட்டிப்பார்க்கும் சோகம் அவன் அறியாமலா இருப்பான்.

அன்று கிள்ளிவளவன் பற்றி அமுதனிடம் ஒளிர்மதி கூறியபோது, இவன் தான் அன்பனிடம் இனி பேசாதே, அவன் நெருங்கினால் விலகிவிடு என கூறியிருந்தான். அப்போது ஒளிர்மதியின் நண்பனாக யோசித்தானே தவிர, அன்பனின் தம்பியாக அவன் யோசிக்கவில்லை எனலாம்.

தோழிக்கு ஆபத்தென்றதும், அதை பொறுக்க முடியாமல் அவன் கூறியது, பின் நாட்களில் எவ்வளவு பெரிய தப்பு என்று அன்பனது தீவிர காதல் வைத்தே உணர்ந்தான்.

அதற்குள் ஒளிர்மதி முழுதாக அன்பனை ஒதுக்கவே, இருவருக்கும் அவரவருக்கென ஒரு வாழ்க்கை அமைந்தால் எல்லாம் மாறும் என நினைத்தான்.

சிம்புத்தேவன் ஒளிர்மதியை மணந்தது அமுதனே எதிர்பாராமல் நடந்தது என்றாலும், அவர்கள் அப்படியே சேர்ந்திருந்தால், அதை வைத்து அண்ணன் மனதை மாற்றலாம் என யோசித்தான். ஆனால் அப்படி ஒரு நிகழ்வு எப்போதும் நடக்கப்போவதில்லை என்பது ஊர்ஜிதமாகிவிட்ட பிறகு, ஒளிர்மதி மேற்படிப்பிற்காக கனடாவிற்கு போய்விட்டாள்.

அன்பன் இயல்பாக தனது வாழ்க்கை சுழற்சியில் இருந்தாலும், அவனை அப்படியே விட மனமின்றி, வண்ணமதி வரன் பார்க்க துவங்கினார். எப்போதுமே எதேனும் காரணம் கூறி தட்டிக்கழிக்கும் அன்பனே ஒத்துக்கொண்டது தான் அதிசயம்.

ஒவ்வொரு வரனுமே ஒவ்வொரு காரணத்தை முன் வைத்தனர். அவனது கவரும் அழகும், குணமும் பிடித்தாலுமே... கருப்பு புள்ளியாக, கிள்ளிவளவன் பற்றி, அவனுக்கு ஏற்கனவே ஒருமுறை கல்யாணம் நின்றது, பிறகு சொந்தமாக தொழில் செய்யாமல் தாத்தா கடையில் இருப்பது போன்று காரணங்களால் எதுவுமே அமையவில்லை.

இறுதியாக அன்புமதி அன்பன் என்ற பேச்சு வர, எப்போதும் அமைதியே உருவாக, தனக்கு வேண்டியதை கூட அறிவுமதி மூலமாக கேட்கும் அன்புமதி, அனைவரது முகத்தை கண்டு நேராகவே, அன்பனை மணக்க தனது விருப்பமின்மையை தெரிவித்துவிட்டாள்.

அமுதனுக்கோ காண்டாகிவிட்டது.

"ஏன்டி! அன்பன் மாமா அன்பன் மாமானு உருகுவ! இப்போ அவன கட்டிக்க கசிக்குதா? இல்ல எங்கப்பா மாதிரி தான் அவனும்னு நினைச்சிட்டியா?", என அவளை தனியாக அழைத்து பேசி கொதித்தான்.

சிறு முறுவலோடும் கண்ணீரோடும், "தப்பா பேசாதீங்க மாமா! அன்பன் மாமாவ போய் வளவன் மாமாவோட... ச்சே! அன்பன் மாமாவோட குணம் இங்க யாருக்கு இருக்கு. எங்களுக்காக அவர் எவ்ளோ விஷயம் பாத்து பாத்து செஞ்சிருக்காரு, செஞ்சிட்டிருக்காரு! வைரக்கியம் உள்ள, வைர நெஞ்சம் உள்ளவரு! அவர கட்டிக்க கசக்குமா?", என்றாள்.

"அப்போ மறுக்க காரணம் சொல்லு!", அமுதன் முறைத்தான்.

"அவர் மேல ஆசைப்பட்டது உண்மை தான், ஆனா காலத்துக்கும் அவரோட வாழ ஒளிர்மதி அக்காவுக்கு தான் உரிம இருக்கு! நாம யார் மேல வேணா ஆசைப்படலாம், ஆனா பாக்குறதெல்லாம் அனுபவிக்க நினைக்கிறது பேராசை, ஆபத்து அது! எனக்கு அன்பன் மாமா, என் மாமாவா இருந்தாலே போதும்! அதுல காதல் இல்ல, பாசம் மட்டும் தான்!", அன்புமதி கூறியதை கேட்டு, அமுதனே ஆடிப்போய்விட்டான்.

"உன்ன என்னமோ நினைச்சேன், ஆனா... உனக்குள்ளயும் என்னமோ இருந்திருக்கு பாரேன்!", என்றவன் அவளது தலையில் கைவைத்து ஆட்ட, சிரிப்போடு, "என்னமோலாம் இல்ல! காதல் தான்!", என்றாள் கண்ணடித்து.

"காதலா? திரும்பவுமா?", அவன் அதிர, அதில் பெரிதாக சிரித்தவள், "ஷாக்க குறைங்க.", என்றாள்.

"யாரு?"

"வேற யாரு, நம்ம கனடா பேக்கரி ஓனர் வீரபாகு தான்!", என்றவள் கள்ளச்சிரிப்பொன்றை சிந்த,

"கனடால வீரபாகுவா? பேக்கரியா?", என குழம்பினாலும், பின் ஏதோ புரிந்தவனாக ஆச்சரியமாக, "அடியாத்தி! உன்ன போய் சாத்வீகம்னு நினைச்சேனேடி.", என மகமாயி குரலில் அவன் நாடியில் கைவைத்து கேட்க, அவள் சிரிப்போடு ஓடிவிட்டாள்.

ந்நிகழ்விற்கு பிறகு, அவ்வீட்டில் அன்பன் திருமணம் பற்றி யாரும் பேசவில்லை. அவனுக்குமே அது கொஞ்சம் நிம்மதியாக இருந்தாலும், மற்றவர்கள் தன்னை பரிதாபமாக, சில சமயம் வினோதமாக பார்க்கும் போது, கிள்ளிவளவன் மகனாக பிறந்ததன் பலன் என தன்னை நொந்துக்கொள்வதோடு சரி, அதை வெளிக்காட்ட கூட மாட்டான்.

மன அழுத்தம் அதிகமாக அதிகமாக, இறுக்கமும் ஜாஸ்தியாகி, அன்பனது உணர்வுகள் அவனுக்குள்ளே முடங்கிவிட்டது.

முதலமைச்சர் கூட அவனது மாற்றங்களை கவனித்து, லட்சத்து எட்டு முறையாக தனது தவறுகளை எண்ணி தன்னையே திட்டிக்கொண்டார்.

மற்ற ஆண்மகன்கள் போல், அவனுக்கென தனி நட்பு வட்டாரமோ, ஆடம்பர செலவுகளோ, ஏன் வீட்டை தாண்டிய வாழ்க்கை கூட பெரிதாக இல்லை.

நட்பு வட்டமெல்லாம், அமுதனும் ஒளிர்மதியும் தான்! அவனது ஆடைகளுக்கு கூட பணத்தை கரைக்கமாட்டான். சில வரன்கள் தாத்தா கடையில் வேலை செய்வதால் மறுத்த போது, முதலமைச்சர் கூட, மனம் பொறுக்காமல் கவலையோடு அவனுக்கென சொந்தமாக விரும்பிதை செய்ய கூற, "என்ன தாத்தா பிரிச்சு பேசுறீங்க? யாரோ சொன்னா, நான் மாறுனுமா? இந்த தொழில் நம்ம பரம்பரை தொழில்!

எனக்கு தெரியாதா? என் படிப்புக்கு எங்க வேலை செய்யலாம்னு. ஆனா நான் ஏன் உங்களோட இருக்கேன்! எந்த நம்பிக்கையில இத என்கிட்ட ஒப்படைச்சிங்க, எப்பவுமே நான் போகமாட்டேன் அப்டிங்கிற நம்பிக்கையால தான! அதே எப்டி உடைப்பேன்?

ஒத்துக்குறேன், அன்னிக்கி ஒரு கோபத்துல சாவிய கொடுத்தேன் தான், ஆனா கடைய விட்டு நான் எப்டி போவேன்!

ஒருவேள எனக்கு வேற வேலை செய்ய தோணுச்சுனா, அப்போவும் இதவிடமாட்டேன். பரம்பரை தொழில் செய்யுறது சாதாரணமில்ல தாத்தா, உங்களுக்கு தெரியுமே!

தாத்தாவோட கடையில தொழில் செய்யறத நான் கேவலமா பாக்கல, எனக்கு வரப்போறவளும், அப்டி தான் இருக்கனும், இருப்பா! நீங்க இதுக்காக வருந்தாதீங்க!", என நீண்டதொரு விளக்கத்தை தந்து, தாத்தாவை மட்டுமின்றி அனைவரையும் நெகிழ வைத்திருந்தான்.

இப்படி ஒரு நல்லவனுக்கு அவனது காதல் கிடைக்காட்டி கூட பரவாயில்லை, திருமணமாவது கைகூடட்டுமே என நினைத்த அமுதனது எண்ணம் யாவும் சொதப்பலாகவே போனது!

அப்போது தான், 'ரத சாந்தி வைபவம்', பற்றி அமுதன் மூலமாக சிம்புத்தேவன் அறியவே, பழையதை எல்லாம் விட்டுவிட்டு, அமுதன் அழைத்தமைக்காக கிளம்பி வந்தான். ஏர்போர்ட்டில் சிவா அவனை பிக் செய்துக்கொள்ள, தான் வந்துவிட்டதாக அமுதனுக்கு சிம்புத்தேவன் தெரிவிக்க, அச்சமயம் தீட்டிய திட்டம் தான் ஒளிரமதியை கடத்துவது. அவர்களுக்கு ஏதுவாகிப்போனது அன்பன் பைக் பாதியில் நின்றது தான். கார் ஒன் சைட் மிரர் என்பதால், சிவா மற்றும் அமுதன் ஒளிர்மதியோடு இருப்பது அவனுக்கு தெரியவில்லை.

ஆனால் இவர்களே அறியாது ஒன்றே, ஒளிர்மதி மற்றும் அன்பனை அவர்கள் பாட்டிற்கு விட்டிருந்தால், ஏதேனும் ஒரு இனிய தருணம் நடந்திருக்குமோ என்னவோ!

அமுதன் கூறி முடிக்க, நியாயப்படி இந்த திட்டத்தினை கேட்டு அன்பன் கோபம் பட்டிருக்க வேண்டும், அது தான் நடந்தது.

ஒளிர்மதி அமுதனோடு இருப்பதால், அதை மனதில் குறித்துக்கொண்டவனாக, "போங்கடாங்...", என திட்டிவிட்டு அவன் நடக்க ஆரம்பிக்க,

"என்னடா இது?", சிம்புத்தேவனுக்கு அன்பன் பற்றி அதிகம் தெரியாவிட்டாலும், ஒளிர்மதி விஷயத்தில் நடந்தவைகளை வைத்து, அவளுக்கு ஒன்றென்றால் அவன் எதுவும் செய்வான் எனப்புரியவே முதலில் அமுதன் கூறியதற்கு ஒத்துக்கொள்ளவில்லை. அமுதன் தனது வாய் ஜாலத்தை வைத்து சமாளித்துவிட்டான். இப்போது அன்பன் கோபமாக செல்லவே சிம்புத்தேவன் அமுதனை முறைத்தான், "நான் தான் வேண்டாம்னு சொன்னேனே, கேட்டியா?", என்பதாக.

"தேவாண்ணா! அமுதன் ப்ரோவ திட்டாதீங்க. இந்த ப்ளான் நல்லா தான் இருந்துச்சு, ஆனா லைட்டா ஊத்திக்கிச்சு!", என சிப்ஸூ கடித்தான்.

"அதான! நம்பியார் மாதிரி வில்லத்தனமா பேசுங்கன்னா, உங்கள யாரு... சோறு உப்புனு உருட்ட சொன்னது!", என்றான் அமுதன்.

'இவனுங்கள வச்சிட்டு!', என தலையலடித்துக்கொண்ட சிம்புத்தேவன், "மதி!", என ஒளிர்மதியை அழைக்க, மூவரையும் கண்டவள், "போங்கடா பட்டர் பசங்களா!", என திட்டியவளாக அவளும் காரிலிருந்து இறங்கி, "இசை!", என கத்தினாள்.

சில அடிதூரத்தில் அன்பன் அவள் குரலில் நின்றிருந்தான். சாலையில் ஆங்காங்கே நடக்கும் சிலர், அவள் கத்தியதில் அவளை நோக்க, இதையெல்லாம் கவனித்த மூவரும், புரியாமல் ஒளிர்மதியை கண்டனர்.

அதிலும் சிவா ஒருபடி மேலே சென்று வீடியோ வேறு எடுக்க, அமுதன் அவனை கண்டு புன்னகையோடு கண்ணடித்தான். அவர்கள் ஏதோ சுவாரஸ்யமான காதல் தருணம் நடக்கப்போவதாக ஆர்வமாக இருந்தனர்.

ஆனால் ஒளிர்மதி அன்பனை நோக்கி கூறினாளே ஒன்று, "நானும் வரேன்!", என்று.

சிவா, 'ச்சே!'

அமுதன், 'இதுங்கள சேர்த்து வைக்க நினைச்சது என் தப்பு தான். இதுக்கு அவன்கூட நடந்து போறதுக்கு, எங்களோட கார்லயே வரலாம்!'

"டேய்ய்ய்!", சிம்புத்தேவன் அதட்ட, இருவரும் தங்களது மைண்ட் வாய்ஸை கட்டுப்படுத்தினர்.

"நடந்தா?", அன்பன் கத்த,

அமுதன், "ஆமா! அப்டியே இடுப்புல வச்சு தூக்கிட்டு போ!"

"இந்த ரோட்டுல மட்டுமில்ல...", என ஒளிர்மதி துவங்க,

அமுதன், "ம்ம்! டோரா புஜ்ஜி மாதிரி ரோடு ரோடா சுத்துங்க!"

ஒளிர்மதி திரும்பி அமுதனை முறைக்க, அதற்குள் சிம்புத்தேவன் அவனது கழுத்தை மடக்கி, "விஷம் விஷம் விஷம்!", என வாயிலே அடிக்க,

சிவா, "அடுத்தவங்க வாயிலயும் வயித்துலயும் அடிக்க கூடாது ண்ணா!", என்றதில் அமுதன் சிரிக்க, சிம்புத்தேவனுக்கோ, "அட ராமா, என்ன ஏன் இவங்களோட கூட்டு சேர்த்த!", என வாய்விட்டே புலம்பினான்.

அதற்குள் அன்பனே ஒளிர்மதியை நெருங்கி வந்தவன், "நீ கார்ல வா மதி!", எனும்போதே, "நான் உங்களோட வரத பத்தி பேசுறேன்!", என்றாள். பாவம் அன்பன் இருந்த மனநிலையில் அதையெல்லாம் கவனிக்க முடியாமல், "லூசே! அமுதனோட வா! இந்த தண்டங்களும் வீட்டுக்கு தான் வருதுங்க!", என மூவரையும் குறிப்பிட்டு கூறிட,

சிவா & அமுதன், 'கிரேட் இன்சலட்!', சிம்புத்தேவன் சிரித்தான்.

"ப்ச் இசை மாமா! புரியலயா உங்களுக்கு?"

"ம்ஹூம்!", எனும்போதே ஒளிர்மதி மொபைல் அடித்தது, மதிவதனி தான்!

"அம்மா கால் பண்றாங்க!", என்றிட,

அமுதன், 'நல்ல சீன்ல... பெரிய எதிரி இந்த போன் தான்'

சிவா, 'அஹ் ஆம் ப்பா...'

ஒளிர்மதியால் தற்போது எதையும் கூற முடியவில்லை. அத்தோடு அன்பனும் தான் கூற வருவதை கேட்கும் நிலையில் இல்லை எனப்புரியவே, கட்டாயமாக அமுதன் அன்பனை காரில் ஏற வைக்க, ஐவரும் முதலமைச்சர் வீட்டிற்கு வந்து சேர்ந்தனர்.

🌸🌸🌸

Continuer la Lecture

Vous Aimerez Aussi

15.9K 840 7
TAMIL STORY Krish ❤️ Kavya Not everyone gets married to their love. Some fall in love after marriage too ❤️
28.1K 1.4K 76
நான் விரும்பிடாத இன்பம் நீ ... உனை விரும்பும் துன்பம் நான்...!
12K 1.9K 24
கதிர் முல்லை எப்போது இணைவர். Km story
203K 5.3K 131
காதலால் கசிந்துருகி.. கரம் பிடித்த பெண்ணவளின் நேசம் பொய்யாக போனதில்... மென்மையான இதயம் கொண்டவன்... இரும்பு கவசம் அணிந்து பூட்டிக் கொள்ள... நாயகனின் வ...