[✔]💟உயிரின் நிழலாய் வருடுகிற...

By ShruthyGayathryS

26.7K 1K 423

LOVE, FAMILY & FRIENDSHIP More

1.அத்தியாயம்
2.அத்தியாயம்
3.அத்தியாயம்
4.அத்தியாயம்
5.அத்தியாயம்
6.அத்தியாயம்
7.அத்தியாயம்
8.அத்தியாயம்
9.அத்தியாயம்
10.அத்தியாயம்
11.அத்தியாயம்
12.அத்தியாயம்
13.அத்தியாயம்
14.அத்தியாயம்
15.அத்தியாயம்
16.அத்தியாயம்
17.அத்தியாயம்
18.அத்தியாயம்
19.அத்தியாயம்
20.அத்தியாயம்
21.அத்தியாயம்
22.அத்தியாயம்
23.அத்தியாயம்
24.அத்தியாயம்
25.அத்தியாயம்
26.அத்தியாயம்
27.அத்தியாயம்
28.அத்தியாயம்
29.அத்தியாயம்
30.அத்தியாயம்
31.அத்தியாயம்
32.அத்தியாயம்
33.அத்தியாயம்
34.அத்தியாயம்
35.அத்தியாயம்
36.அத்தியாயம்
38.அத்தியாயம்
39.அத்தியாயம்
40.அத்தியாயம்
41.அத்தியாயம்
42.அத்தியாயம்
43.அத்தியாயம்
44.அத்தியாயம்
45.அத்தியாயம்
46.அத்தியாயம்
47.அத்தியாயம்
48.அத்தியாயம்
49.அத்தியாயம்
50.அத்தியாயம்
51.அத்தியாயம்
52.அத்தியாயம்
53.அத்தியாயம்
54.அத்தியாயம்
55.அத்தியாயம்
56.அத்தியாயம்
57.அத்தியாயம்
58.அத்தியாயம்
59.அத்தியாயம்
60.அத்தியாயம்
61.அத்தியாயம்
62.அத்தியாயம்

37.அத்தியாயம்

325 18 6
By ShruthyGayathryS

அனைவரது வாழ்விலும் வசந்தமே...

உத்தமன்-வசுமதி தம்பிதிக்கு சிம்புத்தேவன் பிறந்த அடுத்த இருமாதங்களிலே, கிள்ளிவளவன்-வண்ணமதி தம்பதிக்கு பிறந்திருந்தான் இசையன்பன்.

இசையன்பனை குடும்பமே கொண்டாடி மகிழ, பராசக்தி மற்றும் மதிவதனியும் குழந்தையை கண்டுவிட்டு வந்தனர்.

உத்தமன் மற்றும் பராசக்திக்கு பேச்சு வார்த்தை இல்லை என்றாலும் பரஸ்பரமான விசாரிப்புகள் உண்டு, பராசக்தி மடியில் சிம்புத்தேவனுக்கு  மொட்டை அடித்த அதே சமயம், வலம்புரி மடியிலிருந்த இசையன்பனுக்கு மொட்டை அடித்து காது குத்தினர்.

_ _ _ _ _

மதிவதனிக்கு பிடிக்குமென்று பால்கனியில் ஊஞ்சல் போட்டிருந்தான் பராசக்தி. மாலை வேளையை சிலாகித்தபடி அதில் அமர்ந்திருந்தாள். ஏனோ வெளி உலகை வேடிக்கை பார்க்கும்போது, மனதிற்கு தற்காலிக இலைபாறுதல் ஆகுகிறது. எப்போதும் விட இன்று அவளது முகம் பிரகாசித்தது.

அப்போது அவளது தோளை தீண்டிய கரமானது அவளின் சக்தியினுடையது எனப்புரிய, அவள் சிரிப்போடு, "சக்தி!", என அவனை முன்னே இழுக்க, அவனோ அசராமல் அவள் மடியில் உட்கார்ந்துவிட்டான்.

"நீ என்ன சின்ன பிள்ளையா எந்திரிடா!", என முதுகை தள்ளினாள்.

"சின்ன பிள்ளை இல்லடி, உன் புருஷன்!", என கன்னத்தை கிள்ளியவன், "நீ தாங்குற பாரம் தான இருக்கேன்? உட்கார கூடாதா?", என்று அவனே எழுந்துக்கொண்டு, அவளது கால்மாட்டில் அமர்ந்து காலிற்கு சொடுக்கெடுக்க துவங்கினான்.

"நான் ஆயுளுக்கும் உன்ன தாங்கிப்பேன், உடலால மட்டுமில்ல, மனசாலயும்...", என முறுவலோடு கூறியவள், "ஆனா இனிமே கொஞ்ச மாசம் முடியாதுப்பா!", என்றாள் சிரிப்பை அடக்கி.

"தெரியும்!", என கண்ணடித்தான்.

அவள் திகைத்துப்பின், "சக்தி... நான் சொல்ல வரது... அது... நீ... உனக்கு எப்டி தெரியும்?", அவள் தடுமாறவும், "எந்திரி!" என அவளமர்ந்த இடத்தில் இவன் அமர்ந்து, அவளை மாடியில் அமர வைத்தவன், "எப்டினா... நான் டாக்டர்!", என அவளது கையின் மணிக்கட்டில் முத்த வைக்க, அதில் சிலிர்த்து சிரித்தவள், "எப்போ தெரியும்?", அவள் ஆர்வமும் ஆசையுமாக கேட்க,

"ஒருவாரம் முன்னாடியே!", என்றதில் அவள் அதிர்வோடு, "அப்பவே வா? எப்டி?", என்றாள்.

"நீ கொஞ்ச நாளா ரெஸ்ட்லெஸ்ஸா இருந்த, ஆனாலும் மூஞ்சில ஏதோ வித்தியாசம், இந்த கண்ணு, மூக்கு, உன்னோட குட்டி தொப்பை...", என்று சிரித்தவன், "அப்றம் எனக்கு ஏதோ டவுட் வந்தது, உனக்கு பீரியட்ஸ் டேட் வேற தள்ளி போயிருந்துச்சு!", எனும்போது அவளுமே அதை உணர்ந்தவள், "ஆமா! அதவச்சு தான் நானும் யோசிச்சேன்!", என புன்னகைத்தாள்.

"நீ தூங்கும்போது உன்னோட நாடிதுடிப்ப வச்சு பார்த்தேன், கன்பார்ம் ஆகிடுச்சு!", என்றிட,

"இத ஏன்ப்பா அப்பவே சொல்லல!", அவள் கோபமாக கேட்க,

"என்னதான் இருந்தாலும், சில விஷயங்கள் புருஷன் சொல்றத விட, பொண்டாட்டி சொல்றது தான் அழகுடி, என் அழகி!", என அவளை அணைத்துக்கொண்டான்.

"என்ன பத்தி, நான் உணராத விஷயம் கூட உனக்கு தெரிஞ்சிடுது!", என்றதும் அவன் புன்னகைக்க, அவனது புன்னகையை தன்னிதழில் உணர்ந்தவள், அவளது புன்னகைக்கு காரணமான இதழில் முத்தமிட்டாள்.

மதிவதனிக்கு இப்போது ஐந்தாம் மாதம் தொடங்கிவிட்டது. இயல்பாகவே அவனது வதனியை தங்க தட்டில் தாங்குவது போல் தாங்குபவன் இப்போது அவளையும், அவனது வாரிசையும் தினமும் கொண்டாடி, அரவணைத்து, பாதுகாத்து, இன்னும் காதலிக்கிறான்.

"உனக்கு பையன் வேணுமா, பொண்ணு வேணுமா?", என சக்தி கேட்க,

"எதுவா இருந்தாலுமே ஓகே தான், ஆனா பொண்ணா இருக்கனும்ப்பா!", என்றாள்.

"ஏன்?"

"என் சக்திய நான் அவளுக்கு காட்டனும், எனக்கு கிடைச்ச மாதிரி ஒரு நல்ல பையன் யாருக்கும் கிடைக்கலைன்னு சொல்லனும். பெண்களோட கண்ணு பாத்து பேசுற குணத்தால பண்பால உயர்ந்தவன், அவன் முன்னாடி விலை உயர்ந்த பொருட்களே தோத்திடும்னு சொல்லனும்!

நான் நேசிச்ச முதலும் கடைசியுமான ஆண்மகன் நீதான்னு சொல்லனும்! இப்பேர்பட்ட புகழோடும், நிமிர்வோடும் இருக்குற அப்பாவுக்கு ஒரு பொண்ணு பாப்பா வேணும்.

என் வாழ்க்கையில் தான் எனக்கு அப்பாங்கிற வார்த்தையே பிழையா போய்டுச்சு. அதனால நீயும், நம்ம பொண்ணும் பேசுறத, சிரிக்கிறத, நீ அவள பாத்துக்கிறத, அவள அன்பா நடந்துற அதே அளவு கண்டிப்போட, அவ தப்பு செஞ்சா திருத்துற ஆசானா, நான் இழந்த, அப்பாங்கிற இடத்தோடு வெறுமைய, உங்கள பாத்து நான் தீத்துக்குவேன். அதனால பொண்ணு தான்!", என நீண்ட விளக்கம் தந்தவளது கண்களில் காதல் கண்ணீராக கொட்டியது.

"என் தங்கமே!", என அவளை அணைத்து நெற்றியில் முட்டியவன், "நீயும் எனக்கு பேபி தான்டி! நீ அப்பாவுக்காக இவ்ளோ ஏங்கிருப்பன்னு எனக்கு தெரியாது வதனி...", என்றவன், "எனக்கு மட்டுமென்ன, எங்கப்பா இருந்தும் இல்லாத உணர்வு தான்... எத்தன வருஷம் ஆகிடுச்சு, எத்தன முற பாத்திருக்கோம், ஆனா அவரு பேசமலே போகும்போது வலிக்கும்!", என பெருமூச்சுவிட்டவன், "எல்லாம் சீக்கிரமே மாறும்ல வதனி?", என எதிர்பார்ப்போடு கேட்க, அவள் கண்ணீரை துடைத்துக்கொண்டு புன்னகையோடு தலையசைத்தாள்.

முடிந்தவரை மதிவதனியோடே இருக்க முயன்றான், அவளை அதிகம் காதலித்தான், சிரிக்க வைத்தான், அவளுக்கு அலங்காரம் செய்து அழகு பார்த்தான், அவனே சமைத்து ஊட்டிவிடுவான்... இது அவர்களது வாடிக்கையான ஒன்று என்றாலும், சமீப நாட்களில் இன்னும் கூடுதல் அக்கறையோடு இருக்கிறான்.

"நீ இப்டிலாம் பண்றது மூச்சு முட்டுதுப்பா!", என சிரிப்பவளை கண்டு செல்லமாக முறைப்பவன், "ஏன்னே தெரியலடி, உன்கூட இருந்துட்டே இருக்கனும்னு தோணுது, உன்னவிட்டு விலக கஷ்டமா இருக்கு!", என அவளின் உள்ளங்கை எடுத்து கன்னத்தில் வைத்துக்கொண்டவன், "தங்கம்! அம்மாவுக்கு என்ன பாத்தா சிரிப்பா இருக்கு, நீயே சொல்லு... இந்த மாதிரி சமயத்துல நான் தான உங்கள பாத்துக்கனும்!", என்றதும் அவன் குரல் கேட்டு குழந்தை அசைந்தது.

அது ஏனோ பராசக்தி பேசினால், குழந்தை உடனே தனது இருப்பை அசைவுகள் மூலமாக உணர்த்தும். மதிவதனி அதை ரசித்தாலும், வெளிக்காட்டாது, "ம்ம்! இப்பவே பொண்ணு பொண்ணுனு குதிக்கிற, என்ன மறக்காம இருந்தா சரி!", என சலித்துக்கொள்பவளது வயிற்றை வருடி,

"தங்கம்! நாம அம்மா தூங்கினதும் கதை பேசலாம்... இல்லைன்னா உங்கம்மா மூஞ்சி கடுவான் பூனை மாதிரி மாறிடும்!", என சிரிக்க, பக்கத்திலிருந்த தலையணை எடுத்து அவனை மொத்தியவள், "கடுவான் பூனையா நானு??", என்றவளை கண்டு சிரித்தபடி அவன் ஓடிவிட, இவளோ அவனை பொய்யாக முறைக்க, அவன் சிரித்துவிட்டான்.

ஏனோ அன்று காலையிலிருந்தே பராசக்தி மனதில் தெளிவில்லை...

"ஏன்ப்பா மூஞ்ச தூக்கி வச்சிருக்க, சிரியேன்!", என்று மதிவதனி அவனது கன்னத்தை தட்டினாள்.

"மனசே சரியில்ல!"

"அப்போ என்கூடவே இரு!",என சாதாரணமாக கூறியவளை கண்டவன், "முடியாதே! ட்ரஸ்ட்க்கு போனும், ஹோம்க்கு போய் புதுசா செய்ய சொன்ன ஆரேஜ்மெண்ட்ஸ் பாக்கனும்!", என இதழை பிதுக்கினான்.

"சரி நான் வரவா?"

"வேணாம்டி, உனக்கு இப்போ அது அலைச்சல், பேபி வந்த பிறகு ஒன்னா போலாம்! நான் கிளம்புறேன்!", என்றவன் அவளை இறுக்கமான அணைத்து, "போய்ட்டு வரட்டா?", என கேட்கவும், "ம்ம்!", என்றாள்.

"பத்திரமா இரு, சீக்கிரமே வரப்பாக்குறேன்!", என அழுத்தமாக அவளது இதழை முற்றுகையிட்டவன், நீண்ட நேரமாக அவளை விடாமலே இருக்கவும், அவனை தன்னிலிருந்து பிரித்தவள், "சக்தி!", என பெரிய பெரிய மூச்சுகளை வெளிவிட்டு, "இன்னிக்கி எங்கயும் போக வேண்டாம்ப்பா! நாளைக்கு பாத்துக்கலாம், ஒருநாள் எல்லா வேலையையும் தள்ளிப்போடு.", அவன் அப்போதும் சிந்தனையோடே அவள் கண் பார்த்து நிற்க, "எனக்காக!", என கண்களை சுருக்கி கேட்டவும், அவன் புன்னகையோடு அவள் நெற்றி முட்டி, அலைப்பேசியில் யாருக்கோ தகவல் கூறிவிட்டு, அவளோடு வந்தமர்ந்தான்.

அவளது கால்களை பிடித்துவிட்டான், தலையை வாரிவிட்டான், அவனே சமைத்தான். இருவரும் ஒருவருக்கொருவர் உணவை ஊட்டிக்கொண்டனர்.

நிறைய முத்தங்கள், நிறைய அணைப்புகள்... இருவரது திருமண புகைப்படத்தினை கண்டு அவன் ஏதோ கூறி சிரிக்க, அவன் தோளில் அடித்தாலும் அவளுமே சிரித்தாள்.

இறுதியாக அந்த மாலையின் முடிவில், அவன் மடியில் அமர்ந்திருந்தாள்.

"காதல் கவிதைகள் எழுதும்போது, அப்பட்டமாக எனை நானே கேலி செய்துக்கொள்வேன்...

அட பொய்க்கோழி என!

உண்மை தானே!

ஊனல்ல
உயிரலல
நேரிலில்ல
நெஞ்சமில்ல

ஆனால்...

வஞ்சனையின்றி வருங்காலமான,
யாரோ உனக்கு...
காதல் சொட்ட கவிதை எழுதுகிறேன்!

எப்படி இருப்பாய்!
கூரான கண்களால்,
என்னை பித்துக்கொள்ள செய்வாயா...

அடிக்கடி தலைக்கோதி,
உன்வசமாக்கிடுவாயா...

நேரம் கலமின்றி,
என் கனவையும், நினைவையும் திருடிக்கொள்வாயா...

மூக்கின் மீது சிவந்த கோபத்தோடு,
என்னிடம் சண்டை போடுவாயா...

நான் பிழை செய்தாலும்,
அன்பொழுக அதை திருத்தம் செய்வாயா...

ஓரப்பார்வை பார்த்து,
என் இயல்பை பறிப்பாயா...

வேண்டுமென்று சீண்டி
என்னிடம் சிக்கிக்கொள்வாயா...

நமது இருவரி இதழ் கவிதைகளை,
தொகுப்பாக்குவாயா...

இப்படியெல்லாம் பித்தனாக அறிமுகமில்லா உனை எண்ணியே வாழ்ந்திருந்தேன்...

என் கற்பனைகளின் முகவரி,
என் ஆயுளுக்கு சொந்தக்காரி...
உனை காணும் முன்பு வரை!

இப்போது தான் தெரிந்துக்கொண்டேன்...

எப்படி இருப்பாள் என்ற ஐயங்களை,
அவளை பார்த்த பிறகு தேவையின்றி போனது...

என் பிழைகளை திருத்தி,
எனை மொத்தமாக மாற்றிவிட்டாள்..

ஏதேதோ செய்தாள்,
அவளுள் தொலையவே,
எனை நான் தொலைக்க துவங்கினேன்...
மொத்தத்தில் அவளால்,
நான்...
நானாக இல்லை!
அவளின்றி நானே இல்லை!"

அவளை மடியில் வைத்துக்கொண்டவன், அவள் தோளில் சாய்ந்துக்கொண்டான். ஏனோ அவனது மனதில் ஒரே சமயத்தில் மகிழ்வும், பாரமும் கூடியது.

"வதனி!"

"ம்ம்?"

"நீ ரொம்ப தைரியமான பொண்ணுனு எனக்கு தெரியும், ஆனாலும் நான்னு வந்துட்டா நீ இலகிடுற! எனக்கு எதாவது ஒன்னுனா...?", எனும்போதே அவன் வாயிலே பட்டென அடித்தவள், "வாயமூடுப்பா! பொழுது சாயற நேரம், நல்லத தான் பேசனும்!", என்றாள் கோபமாக.

"உன்கிட்ட பேச நான் நேரங்காலம் எல்லாம் பாக்க முடியாதுடி!", என சிரித்தவன், அவள் கூறியதற்காக வாய் மூடிக்கொண்டாள்.

"க்ஸ்யூஸ்மீ!", என்ற குரல், மதிவதனிக்கு வெகுதூரமாக கேட்டது, மீண்டும் அதே குரல் கேட்டாலும், அவளால் அதற்கு எதிர்விணை காட்ட முடியவில்லை.

"மேம்! டாக்டர் பராசக்தி சார் வைப் நீங்க தான?", என சக்தி என்ற பெயர் கேட்ட பின்னரே தான் எங்கிருக்கிறோம் என்பது அவளுக்கு உரைத்தது.

சக்தி மருத்துவமனையில் ஐசியூவிற்கு வெளியே போட்டிருந்த இருக்கையில் அவள் அமர்ந்திருக்கிறாள். நேற்று முடிக்க வேண்டிய வேலைகளை இன்று செய்வதற்காக புறப்பட்டவன், வேலை பற்றி தாமஸிடம் பேச சக்தி மருத்துவமனை வந்தபோது, சாலையை கடக்கவிருந்த அவனது காரை, வேகமாக வந்த லாரி பலமாக தாக்கிய நிலையில், சுற்றியிருந்தவர்கள் அவனை, அருகில் உள்ள சக்தி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

ஒரு சிலருக்கு அவனை அடையாளம் தெரியவே, தாமஸிற்கு தகவல் வந்துவிட, அவனை ஐசியூவில் அனுமதித்த கையோடு, மதிவதனிக்கு ரேகா மூலமாக விஷயத்தை தெரிவித்து இப்போது மதிவதனி மருத்துவமனையில் சக்திக்காக காத்திருக்கிறாள்.

அவளது காதல் மனம் அவனது வதனி என்ற அழைப்பிற்காக தவம் கிடந்தது, ஆனால் எப்போதும் போல் வெளியே இயல்பாக அமர்ந்திருந்தாள்.

அப்போது தான் செவிலி ஒருவர் எதுவோ கேட்க, அவளால் தனது குரலை வெளிக்கொணர முடியாது, தொண்டை அடைக்க, அதற்குள் ரேகாவே அவர் காட்டிய பிடிவத்தை குறிப்பிட்டு மதிவதனியிடம் எதுவோ கூற, அவள் ஜடம் போல் கையொப்பமிட்டு அமைதியாகிவிட்டாள்.

இருமணி நேர போராட்டத்திற்குப் பிறகு, மீட்கமுடியாத சூழ்நிலையில் சடலமாக வெளியே வந்தான் அவளின் சக்தி. தூரத்தில் பரசு என தாமஸ் கதறும் மொழி கேட்டது, சுற்றியிருந்த அனைவரும் அவளை பரிதாபமாக பார்ப்பது புரிந்தது. ரேகா தாமஸை சமாதனம் செய்ய ஓடுவது தெரிந்தது.

அவளால் தன் முன்னால் இருக்கும் நிர்மலமான முகத்தோடு இருக்கும் சக்தியை பார்க்க முடிந்ததே தவிர உணரமுடியவில்லை. அவனோடு வாழ்ந்த ஒவ்வொரு நொடியும் கண்முன் தோன்றியது.

இப்போதும் கூட அவன் இந்த மருத்துவமனையில் அவன் அறையில் அமர்ந்திருப்பான் என்ற எண்ணம் தான் இருக்கே தவிர, அவன் ஒட்டுமொத்தமாக சென்றுவிட்டான், அவளை தனித்துவிட்டு போய்விட்டான் என்பதெல்லாம் அவளுக்கு உரைக்கவில்லை.

அவனது தலை முதல் கால் வரை வெள்ளை துணி சுற்றப்பட்டிருந்தது. மேடிட்ட வயிற்றை ஒருகையால் தங்கியவள், சற்றே நிமிர்ந்து அவனது முகத்தை வருடி, "என்ன ரொம்ப சோதிக்கிறியே சக்தி!", என நெற்றியோடு நெற்றி சேர்த்து இதழில் முத்தமிட்டாள்.

🌸🌸🌸

Continue Reading

You'll Also Like

196K 5.1K 128
காதலால் கசிந்துருகி.. கரம் பிடித்த பெண்ணவளின் நேசம் பொய்யாக போனதில்... மென்மையான இதயம் கொண்டவன்... இரும்பு கவசம் அணிந்து பூட்டிக் கொள்ள... நாயகனின் வ...
451K 15.1K 50
மணவாழ்க்கை குறித்த தன் கனவுகளை தொலைத்ததாக எண்ணுகிறாள்.. உண்மையிலே தொலைத்து விட்டாளா.. ஒரு சில பெண்களால் எல்லாரையும் தவறாக எண்ணுகிறான்.. அவள் அப்படிய...
51.1K 2.9K 54
அவன் அந்த கல்லூரியின் *டான்* என்று பெயர் பெற்றவன். அந்த கல்லூரி பெண்களின் கனவு நாயகன். அவனது கடைக்கண் பார்வைக்காக பெண்கள் தவம் கிடந்தார்கள். அதே கல்...
18.9K 907 25
முதல் திருமணம் தோற்று போக இனி வாழ்க்கையே இல்லை என்று நினைக்கும் நாயகியை கரம் பிடிக்க துடிக்கும் நாயகன்