நவீன் லவ் பிரோபோஸ்

Start from the beginning
                                    

நிலா எங்கு தேடியும் கிடைக்கவில்லை என்பதால் போலிஸ் மற்றும் எம்பஸியின் உதவியை நாடினான்..அப்பொழுது அவர்கள் கூறிய விஷயம் கதிருக்கு அதிர்ச்சியை தந்தது..என்ன அது??

மறுபக்கம் இந்தியா...

சிறிது நாட்களுக்கு பிறகு...

நவீன் காரில் சென்று கொண்டிருந்த போது ஹேமா பஸ்சுக்காக வெயிட் பண்ணிக் கொண்டு இருப்பதைப் பார்த்தான்.. உடனே அவனுடைய காரை ஓரமாக நிறுத்தி ஹேமாவை காரில் வந்து உட்கார சொன்னான்..

ஹலோ பெப்பர்!! இஃப் யூ டோன்ட் மைன்ட் ,நான் உன்னை ட்ராப் செய்கிறேன் என்று அழைத்தான்..உடனே ஹேமா வேண்டாம்!! நானே பாத்துக்குறேன் ..நானே போறேன் என்று கூறினாள்..

உடனே நவீன் "அதெல்லாம் முடியாது.. நான் உன்னை ட்ராப் பண்றேன்.. பேக் சீட்டில் இடம் இருக்கு வா வந்து உட்காரு என்று அவளுக்கு டோரை ஓபன் செய்து கொடுத்தான்..அவளை முன் சீட்டில் இருந்த ஏஞ்சலினாவும் வற்புறுத்த ஹேமா யோசித்தபடியே பின் சீட்டில் அமைதியாக உட்கார்ந்தாள் ..

நவீன் ஏஞ்சலினாவுடன் சிரித்து பேசிக் கொண்டே சென்றான்..ஹேமாவிற்கு அப்பொழுது மிகவும் வருத்தமாக இருந்தது.. நவீன் தன்னை முற்றிலுமாக மறந்து விட்டான்..அவனை பொறுத்தவரை நான் கதிரின் தங்கை மட்டும் தான் என்று வருந்தினாள்..

அவளுக்கு அழுகை அழுகையாக வந்தது..ஆனால் அதை அடக்கி கொண்டாள்.. நவீன் ஹேமாவிடம் அப்புறம் பெப்பர் ஐயாவுக்கு சீக்கிரம் மேரேஜ் ஆகப் போகுது..மறக்காமல் வந்துடு என்ன?? என்றான்..

உடனே ஹேமா என்ன கல்யாணமா?? உனக்கா??என்று அதிர்ந்தாள்..இனி அவ்வளவுதான் நவீன் எனக்கு கிடைக்கவே மாட்டான் என்று வாய்க்குள் முனுமுனுத்த படி கண்ணில் தாரை தாரையாக கண்ணீர் வந்தது....

ஹேமாவால் அவர்களுடன் அதற்கு மேலும் இருந்து பயணிக்க முடியவில்லை.. எனவே ஹேமா நான் இறங்க வேண்டிய இடம் வந்துருச்சு.. ப்ளீஸ் ஸ்டாப்!! என்று சத்தமாக கூறினாள்..

வானாகி நின்றாய்(Completed)Where stories live. Discover now