நிலாவின் முடிவு

1.6K 69 28
                                    

நிலா கதிரை வெறுத்தாள்…நன்கு படித்து அவர்கள் முகத்தில் கரியைப் பூச வேண்டும் என்று முடிவு செய்தாள்.. வகுப்பில் சுவாதியைக் காட்டிலும் சிறந்த மதிப்பெண்கள் பெற்றாள். ஆசிரியைகளிடம் நல்ல பேரைச் சம்பாதித்தாள்.சுவாதியை கீழே தள்ளி நிலா முதலிடத்தில் வந்தாள்..

நிலா புது நட்பு வட்டாரத்தை தனக்கென உருவாக்கிக் கொண்டாள். நிலாவின் வீட்டில் நிலாவின் தந்தை அவள் வருத்தமாக இருப்பதை தினமும் பார்த்துக் கொண்டே வந்தார் .ஆனால் அதைப் பற்றி அவளிடம் ஏதும் கேட்கவில்லை. ஆனால் அவளுக்கு தெரியாமலேயே அவளுடைய தோழி சுதா மூலம் அனைத்தையும் தெரிந்துக் கொண்டார்.

அப்பொழுது ஒரு பவர்பாய்ன்ட் பிரசன்டேஷன் பண்ண வேண்டி நிலாவிடமும் சுவாதியிடமும் கலா மேடம் கேட்டார்…சுவாதி "சரி" என்று ஒத்துக் கொண்டாள்..நிலா சுவாதியுடன் இணைந்து பண்ண விரும்பவில்லை என்று கூறினாள்.. நிலா கலா மேடமிடம் "வேறு ஒருவரோடு இணைந்து பண்ணுகிறேன் மேம்" என்று கூறினாள்.

நிலா சுதாவை தன்னுடன் அழைத்தாள்.. ஆனால் சுதா "பிரசண்டேஷன் பண்ற அளவுக்கு நான் பெரிய ஆள் இல்லமா".. என்று அவள் ஒதுங்கிவிட்டாள். பிறகு தன்னுடன் யாரை அழைப்பது என்று நிலா யோசித்துக் கொண்டிருக்கும்போது தீபக் அந்த வழியாக வர.. உடனே நிலா “டேய் தீபக் , நீ எனக்கு ஒரு ஹெல்ப் பண்ணுவியா?? என்கூட ஒரு பிரசன்டேஷன் பண்ண முடியுமா??” என்று கேட்டாள்..

உடனே தீபக் “பிரசன்டேஷன் தானே.. இதெல்லாம் எனக்கு கை வந்த கலை.. பண்ணிட்டா போச்சு” என்று நிலாவுடன் சேர்ந்து ப்ரிப்பேர் செய்யத் தொடங்கினான்… நிலா தீபக்குடன் பிரிப்பேர் செய்வதைப் பார்த்து சுவாதி “நீ என்னுடன் பண்ண மாட்டேன் என்று சொன்னாய் அல்லவா??..உன்ன கடுப்பேத்துறேன் பாரு.. நான் கதிர் கூட சேர்ந்து பண்றேன் பாரு” என்று கதிரை தன்னோடு பிரசன்டேஷன் செய்யுமாறு அழைத்தாள்..

கதிர் சுவாதியிடம் “என்னால முடியாது.. எனக்கு அவ்வளவு தைரியம் எல்லாம் கிடையாது.. எனக்கு கூட்டத்தைப் பார்த்தாலே கைகள் நடுங்கும்.வாய் உளறும். நான் வரல” என்று அவளிடம் எவ்வளவோ சொல்லி பார்த்தான்..

வானாகி நின்றாய்(Completed)Where stories live. Discover now