கதாநாயகன்

4.9K 141 42
                                    

கதாநாயகன் வீடு

கதிர் ஒரு சாதாரணமான மாணவன் ..அழகானவன் கம்பீரமானவன் என்று சொல்லும் அளவுக்கு இல்லை.நமது பக்கத்து வீடுகளில் பார்க்கும் சாதாரண இளைஞன் தான் நமது கதாநாயகன்.

ஆனால் பெண்களுக்கு மதிப்பு கொடுப்பவன்.சில கட்டுப்பாடுகளுடன் வாழ்பவன்..பன்னிரண்டாம் வகுப்பில் எப்படியோ கஷ்டப்பட்டு படித்து 700 மதிப்பெண்கள் பெற்றான் .

அவனுடைய தந்தை எப்பொழுதும் அவனைத் திட்டிக்கொண்டே இருப்பார்.பசங்களுக்கு படிப்பில் முதல் போட்டியே அவர்களது தங்கை தான்.

நம்ம கதிருக்கும் அதே பிரச்சினை தான்.அவன் தங்கை படிப்பில் கெட்டிக்காரி.பிறகு என்ன சொல்லவா வேண்டும்?? தினமும் கதிருக்கு அவன் தந்தையிடம் இருந்து நிறைய பொன் மொழிகள் கிடைக்கும்.

அவற்றில் ஒன்று தான் இது "உன்னை பெற்றதற்கு ஒரு அரிசி மூட்டையை பெற்றிருக்கலாம். சாப்பிடவாவது செய்யலாம்" .."உன் தங்கச்சி கிட்ட கேட்டுப் படி" என்று எப்பொழுதும் அவனைக் கடிந்துக் கொண்டே இருப்பார்.

அவர் திட்டுவது கூட கதிருக்கு வலிக்காது. ஆனால் அவனுடைய தங்கை நக்கலாக ஒரு சிரிப்பு சிரிப்பாலே அதைப் பார்க்கும் போது அவனுக்கு கோபம் கோபமாக வரும்.

அவனுடைய தாயார் கதிரிடம்” நீ ஏதாவது வாழ்கையில் சாதிக்கவேண்டும்”. அப்பொழுது தான் உன்னுடைய தந்தை உன்னை திட்டுவதை நிறுத்துவார் என்று மகனின் பக்கம் நிற்பார்.

ஆனால் கதிருக்கு அடிக்கடி எழும் சந்தேகம் “ அம்மா, நீ என் பக்கமா?? இல்ல அப்பா பக்கமா??" என்பான் கேலியாக..அப்பா கடிந்து சொல்வதை நீ பாசமாக சொல்கிறாய் என்று தன் அம்மாவைக் கேலி செய்வான்...

கதிருக்கு ஒரே ஒரு தங்கை இருக்கிறாள்..அவளுடைய பெயர் ஹேமா. அவள் படிப்பில் படுச்சுட்டி.கதிர் அமைதியாக இருந்தாலும் அவனைச் சும்மா இருக்க விட மாட்டாள் .அவனை வந்து சீண்டி சண்டை போட்டுக் கொண்டே இருப்பாள்.

பிறகு தந்தையிடம் "அப்பா, அண்ணா என்னை அடிக்கிறான்” என்று மாட்டிக் கொடுத்து விடுவாள்.எவ்வளவு சண்டைப்  போட்டாலும் ஹேமாவுக்கு கதிரை ரொம்ப பிடிக்கும்.

கதிருக்கு அவன் தங்கை ஒரு நல்ல தோழி என்றே கூறலாம்.அவன் செய்யும் கள்ள வேலைகளுக்கு எல்லாம் நன்றாகத் துணை போவாள்.உதாரணமாக வீட்டில் அவர்களுடைய அப்பா மிகவும் கண்டிப்பாக இருப்பார்.

அவர் தின்பண்டங்கள் வாங்கி விட்டு அளவோடுதான் சாப்பிடவேண்டும் என்று அவருடைய மனைவியிடம் கூறி அதை மேலே வைக்க சொல்லுவார் .ஆனால் கதிரும் ஹேமாவும் சேர்ந்து இரவு அனைவரும் தூங்கிய பிறகு வந்து அதை திருட்டுத்தனமாக எடுத்து சாப்பிடுவார்கள் ..

அதுமட்டுமல்ல கதிரின் தந்தைக்கு 10 மணிக்கு மேல் முழித்திருப்பது பிடிக்காது. ஆனால் கதிரும் ஹேமாவும் அவர்கள் இருவரும் தூங்கியப் பிறகு தான் அரட்டை அடிக்கத் தொடங்குவார்கள்..

அவ்வாறு நிறைய முறை அவர்கள் தந்தையிடம் கையும் களவுமாக மாட்டியுள்ளனர்.

அவ்வாறு மாட்டியதும் ஹேமா கதிரையும் கதிர் ஹேமாவையும் மாறி மாறி கை காட்டுவார்கள். ஆனால் அவர்களுடைய தந்தைக்குத் தெரியும் இருவரும் சேர்ந்துதான் கள்ளத்தனம் செய்தார்கள் என்று, பிறகு இருவரையும் சேர்ந்து திட்டுவார்.

ஹேமா அழுவது போல் டிராமா செய்து எஸ்கேப் ஆகி விடுவாள். கடைசியில் நமது கதிர் தான் மாட்டிக் கொள்வான்.

கதிர் வெளி உலகத்தைப் பொறுத்த வரையில் அன்பானவன், பிறரோடு இயல்பாக பழகும் குணம் கொண்டவன்.
கதிரின் பக்கத்து வீட்டில் சுதா என்ற பெண் இருந்தாள்.அவள் தான் கதிரின் தோழி.

சிறு வயதில் இருந்தே ஒரே பள்ளியில் படித்தனர்.அவள் பன்னிரெண்டாம் வகுப்பில் நல்ல மதிப்பெண் பெற்று கதிர் சேர்ந்த கல்லூரியிலேயே சேர்ந்தாள்.
கதிர் டொனேஷன் கொடுத்து கல்லூரியில் சேர்கிறான்..

கதிருக்கு ஒரு கதாநாயகி அல்ல இரண்டு கதாநாயகிகள் காத்துக் கொண்டிருக்கிறார்கள்..

*************
பார்ப்போம்..
அதில் யாரோடு இணைகிறான்??
யாரை வேண்டாம் என்கிறான் என்று..

நமது கதாநாயகிகளைச் சந்திக்க கல்லூரிக்கு அடுத்த வாரம் செல்வோம்..

கதை படிக்கும் அனைவருக்கும் நன்றி..
உங்கள் கருத்துக்களை பகிரவும்..



வானாகி நின்றாய்(Completed)Onde as histórias ganham vida. Descobre agora