கல்லூரி முதல் நாள்

3.7K 113 41
                                    

கதிர் வீடு

அது ஒரு அழகிய நாள்.. வீட்டில் காலையிலேயே சுப்ரபாதம் பாடல் ஒலிக்க கதிரின் தாயாகிய சகுந்தலா வீட்டு முற்றத்தில் கோலம் இட்டு பிறகு அனைவருக்காகவும் காப்பி போட்டு வைத்தார்.

கதிரின் தந்தை பெயர் கதிரேசன் . சகுந்தலா கதிரைத் திட்டுவது போன்று அடிக்கடி கதிரேசனை திட்டுவாள் .டேய் கதிர்! டேய் கதிர்! உள்ளே காபி போட்டு வைத்துக் கொண்டு எத்தனை முறை கத்துவது. வந்து எடுத்துட்டு போ.. காபி ஆரிட போகுது என்று உரக்கக் கத்திக் கொண்டே இருந்தாள்..

கதிரேசன் தன்னைத் தான் சகுந்தலா இவ்வாறு கூப்பிடுகிறாள் என்று அறிந்து கிச்சனுக்குள் "வரேண்டி வரேன்" என்று கூறியபடி சென்றார்..

அங்கு அவள் ஒன்றும் அறியாதவள் போல் என்னங்க!! நான் கதிர தானே கூப்பிட்டேன். நீங்கள் ஏன் வந்தீர்கள்?? என்று ஏளனமாகக் கேட்டாள்.

உடனே கதிரேசன் அடியே!! உன்னைப் பற்றி எனக்கு நல்லா தெரியும். உன் கூட இவ்வளவு நாள் வாழ்ந்திருக்கேன், எனக்கு உன்னைப் பத்தி தெரியாதா??

நம் பையனுக்கு கதிர் என்று பெயர் வைத்த போது என் மனைவிக்கு என் மீது எவ்வளவு பிரியம் என்று நம்பி ஏமாந்து விட்டேன். இப்பத் தானே புரியுது உனக்கு எப்பல்லாம் என்மேல கோவம் வருதோ அப்பல்லாம் உன் பயன திட்ற மாதிரி என்னை கேவலமா திட்டுவ.

இதுவே உனக்கு வேலையா போச்சு இன்னொரு வாட்டி உன் வாயிலிருந்து என் பேரு வந்துச்சு பல்லெல்லாம் தட்டி உடைச்சிடுவேன்..ஒன்னுல உன் பையன் பேரை மாத்து, இல்ல கதிர்'னு கூப்பிடாத என்று சொல்லி விட்டு அங்கு போட்டு வைத்திருந்த காப்பியை எடுத்து குடித்தவாறே செய்தித்தாள் வாசிக்கச் சென்றார்.

கதிரும் ஹேமாவும் நன்றாக அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தனர். கதிரேசன் காபியைக் குடித்துவிட்டு ..இன்னும் அந்த கதிர் கழுதை எழும்பவில்லையா?? என்று சொல்லிவிட்டு "ஐயோ!! நம்மை நாமே திட்டுவது போல் இருக்கிறதே"..

வானாகி நின்றாய்(Completed)Where stories live. Discover now