சுவாதி அறிமுகம்

1.9K 91 30
                                    

சுவாதி வீடு

சுவாதியின் தந்தை பெயர் சுரேஷ்.. அவர் கந்துவட்டிக்காரர்..அவருக்கு அன்பாக பேசவே தெரியாது.. பணம் ,அதிகாரம், அடிதடி இவைதான் வாழ்வில் முக்கியம் என்று நினைப்பவர்..

சுவாதி சிறுவயதிலிருந்தே வெளிநாட்டில் படித்து வளர்ந்தவள்.. அவளுக்கு அவள் தாய் தந்தையோடு இருக்க வேண்டும் என்பது ஆசை.. ஆனால் அவளுடைய தாய் வள்ளி அவளுடைய தந்தையோடு அவள் இருப்பது பாதுகாப்பு கிடையாது..

அவர் செய்யும் தீய வேலைகள் அனைத்தையும் அவள் தெரிந்து கொள்வாள் என்பதற்காக அவளுக்கு எதுவும் தெரியக்கூடாது என்ற எண்ணத்தில் அவளை சிறுவயதிலேயே வெளிநாட்டில் அனுப்பி படிக்க வைத்தாள்.

சுவாதி முதல் நாள் கல்லூரிக்கு வரும்பொழுது அவளுடைய மனதில் நாம் வெளிநாட்டில் படித்துவிட்டு போயும் போயும் இந்த காலேஜில் போய் சேருகிறோம் என்ற எண்ணம் தான் இருந்தது.

நம்ம ரேஞ்சுக்கு இந்த காலேஜ் எல்லாம் ஒன்னுமே கிடையாது.. இங்கே உள்ள பிள்ளைகள் எல்லாரையும் பார்த்தா ரொம்ப லோக்கலா இருக்காங்க என்று நினைத்தாள்.

அவள் அந்த காலேஜில் வேண்டா வெறுப்பாகவே சேர்ந்தாள்.அனைவரும் தங்களை இன்டுரொடியூஸ் பண்ணும் போது அவளுடைய மனதில் இந்த கிளாஸ்ல எப்படியும் நம்ம தான் தலைவியாய் இருக்கப் போறோம்.. அது மட்டும் நல்லா தெரியுது என்ற தலைகனத்தில் இருந்தாள்..

கதிர் அவளை கண்ணசைக்காமல் பார்ப்பது அவளுக்கு நன்றாக தெரிந்திருந்தது ..அவள் மனதிற்குள் "இவங்களுக்கெல்லாம் லைஃப்ல முன்னேறனும்னு ஆசையே கிடையாது..ஏதோ பொண்ணுங்கள பார்க்காத மாதிரி இருந்து பார்த்துட்டு இருக்கிறான்" என நினைத்தாள்..இந்த கிளாஸ்லயே நான் தான் அழகா இருக்கிறேன் என்று நினைத்தாள்.

நான் எப்படியும் இந்த காலேஜ்ல இருந்து எவனையும் லவ் பண்ண போறது கிடையாது ..என் ரேஞ்சுக்கு எல்லாம் நான் ஃபாரின்ல போய் செட்டில் ஆகனும் என்று திமிராக இருந்தாள்..

சரி நாம் கொஞ்சம் எல்லார்கிட்டயும் சிரிச்சு பேசினா தான் நம்மள இந்த கிளாஸ்ல பெரிய ஆளா இருக்க விடுவாங்க..

இங்கெல்லாம் இங்கிலீஷ் பேசினாலே போதும் எல்லாரையும் கைக்குள்ள போடலாம்.. அதுதான் நமக்கு நல்லா வருமே என்று அனைவரிடமும் தமிழ் தெரிந்தாலும் இங்கிலிஷ்லயே பேசுவாள்..

இங்கிலீஷ் தெரியாமல் மற்றவர்கள் தட்டு தடுமாறுவதை பார்த்து அவளுக்குள் ஒரு சந்தோஷம்..எனவே கதிரைப் பார்த்து அவன் பேசியதற்கு சிரிப்பு வராமல் இருந்த போதிலும் சிரித்தாள்.

அவள் மனதிற்குள் கதிரை ஒரு காமெடி பீஸ் ஆகவே பார்த்தாள்..அந்த எண்ணம் மாறுமா??

கல்லூரி மறுநாள்

கதிர் இரண்டாம் பெஞ்சில் ஓரத்தில் இருக்க, சுவாதி நேர் வரிசையில் பெண்கள் பக்கம் முதல் பெஞ்சில் ஓரத்தில் இருக்கிறாள்.கதிர் அடிக்கடி சுவாதியைப் பார்த்துக் கொண்டேயிருந்தான்.

உடனே ராம் அவனைக் கிண்டல் செய்தான் "யாரோ காலேஜ் வந்து நான் படித்து சாதித்து கிழிக்கப் போகிறேன் என்று கூறினார்கள்.. யார் அது?? இப்படியே போனால் காதல் பரத் ஆகிறது கன்ஃபார்ம் .. டைனிங் டேபிள்ள கால் மேல் கால் போட்டு சாப்பிட முடியாதுப்பா தம்பி" என்று நக்கலாக கூறினான்..



உடனே கதிர் "டேய் ஏண்டா, நான் இப்போவும் சொல்றேன்.நான் படிக்கிறதுக்கு தான் வந்து இருக்கேன்.நான் காலேஜ்ல நல்லா படிப்பேன் ,அப்பாவோட மூஞ்சில கரிய பூசுவேன்.. இதுதான் என்னோட ஒரே ஆசை" என்றான்.

உடனே ராம் கதிரிடம் "அதை மறக்காமல் இருந்தால் சரி தான்.நான் தான் உனக்கு தினமும் நியாபகப்படுத்தனும்.." என்று கூறினான்.

இவ்வாறாக ஒரு வாரம் முடிந்தது..

ஒரு வாரம் கழிந்து

கலா மேடம் கிளாஸ் எடுத்துக் கொண்டிருந்தார். அப்போது திடீரென்று ஒரு ஐபிஎஸ் அதிகாரி வாசலில் வந்து நின்றார். .உடனே மாணவ மாணவிகள் சத்தம் போடத் தொடங்கினர் "மேடம் ஐபிஎஸ் சேகர் சார் வந்திருக்காங்க" என்று சத்தம் போட்டார்கள்.



உடனே கலா மேடம் அவரிடம் சென்று "சார், என்ன சார்? ஏதாவது ப்ராப்ளமா? என்ன ஆச்சு சார்?? என்று பதறியவாறு கேட்டார்..

யார் அந்த போலிஸ் அதிகாரி..

***************************
வாசகர்களுக்கு ஒரு கேள்வி

இரண்டாவது கதாநாயகியை கதிர் எங்கு சந்திப்பான்??

சுவாதியின் தலைக்கனம் மாறுமா??

இன்றைய அப்டேட் எப்படி இருந்தது??

வானாகி நின்றாய்(Completed)Where stories live. Discover now