இரண்டாம் கதாநாயகி

2K 89 34
                                    

இரண்டாவது கதாநாயகி

உடனே ஐபிஎஸ் சேகர் அவர்கள் சிரித்துக்கொண்டே "இல்லை மேடம், என் மகளை நான் இந்த கல்லூரியில் சேர்த்திருக்கிறேன்.இன்று அவளுக்கு முதல் நாள்..எனவே அவளை டிராப் செய்வதற்காக இங்கு வந்தேன்” என்று கூறினார்.

அவர் பின்னால் அவருடைய மகள் நின்றுக் கொண்டிருந்தாள். உடனே லெக்சரர் அவளிடம் உன்னுடைய பெயர் என்னமா?? என்று கேட்க.. அவள் என்னுடைய பெயர் நிலா என்றாள்.

உடனே கலா மேடம் ஏன் அங்கேயே தந்தை பின்னால் ஒளிந்துக் கொண்டு இருக்கிறாய்?? “உள்ளே வா” என்று அழைத்தார்..

உடனே நிலாவின் தந்தை சேகர் “அவள் வீட்டில் செல்லமாக வளர்ந்தவள்.. அவளுக்கு அம்மா கிடையாது.. எனவே கொஞ்சம் பத்திரமாக பார்த்துக்கொள்ளுங்கள் என்றார்..

சேகர் நிலாவிடம் “மாணவர்களிடம் கொஞ்சம் கவனமாக இருக்கவேண்டும்” என்று அறிவுறுத்தினார்.அதற்கு நிலா "அப்பா அதெல்லாம் நான் பார்த்துக்கிறேன்" என்றாள். உடனே கலா மேடம் “அதெல்லாம் ஒன்றும் இல்லை சார். நான் அவளை நன்றாகப் பார்த்துக் கொள்கிறேன்”.

ஒரு மாணவனும் அவளை சீண்டாமல் நானே அவளைப் பார்த்துக் கொள்கிறேன் என்று கூறி நிலாவை அவர் உள்ளே அழைத்தார்..

நிலா வகுப்பிற்குள் நுழைந்ததும் மாணவர்கள் அனைவரும் இந்த பொண்ணு நம்ம கிளாஸ்ல படிக்கப்போகுதா.. ஜாலி! ஜாலி! என்று சொல்லி கைதட்டினர்..நிலாவின் தந்தை அங்கிருந்து சென்றார்..

மாணவர்கள் அனைவரும் உற்சாகம் அடைந்தனர்..நிலா வெள்ளை டிரெஸில் சிகப்பு கலர் துப்பட்டா போட்டு வந்திருந்தாள்.

அவள் அழகில் அப்படியே மாணவர்கள் மெய் மறந்து இருக்க, ஆசிரியை அவளை அறிமுகப்படுத்தினார்.நிலா ஐபிஎஸ் அதிகாரியின் மகள். எனவே அவளிடம் யாரும் வால் ஆட்டக் கூடாது என்று அறிவுரை வழங்கினார்..

நிலா அனைவரையும் பார்த்து சிரித்தபடி ஹாய் ஃபிரண்ட்ஸ் , ஐஎம் நிலா..நான் போலிஸ் அதிகாரியின் மகள் என்று என்னை ஒதுக்கி விடாதீர்கள் ..என்னிடம் அனைவரும் இயல்பாக பழகலாம் என்றாள்..நான் உங்க கூட படிக்கிற ஒரு மாணவி அவ்வளவு தான்....அப்படியே நீங்கள் என்னை பார்த்தா போதும் என்றாள்..

வானாகி நின்றாய்(Completed)Where stories live. Discover now