முதலாம் ஆண்டு விடுமுறை

1.6K 90 16
                                    

முதலாம் ஆண்டு இறுதி நாள்

கதிர் சுவாதியைப் பார்க்காமல் எப்படி இருப்பது?? அவளிடம் பேசாமல் எப்படி இருப்பது?? என்று தேர்வு முடிந்த கடைசி நாள் வருத்தத்தில் இருந்தான்..

அப்பொழுது அங்கு வந்த சுவாதி "ஹாய் கதிர் எக்ஸாம் எப்டி பண்ணுன?? "என்று கேட்டாள்..கதிர் "ஏதோ பண்ணுனேன்.. பாஸ் ஆனா சரிதான்" என்று வருத்தத்துடன் கூறினான்..

உடனே சுவாதி "ஹே கதிர், கமான் சியர் அப், இதுக்கெல்லாம் ஃபீல் பண்ணாத" என்றாள்..கதிர் மனதிற்குள் "நீ படிப்புல மட்டும் தான் புத்திசாலி..எந்த ஊர்ல பசங்க எக்ஸாம் நல்லா எழுதலன்னு ஃபீல் பண்ணாங்க..என் ஃபீலிங்ஸே வேற" என்று நினைத்தான்..

உடனே சுவாதி கதிரிடம் "ஆர் யூ ஓகே கதிர் ??" என்று கேட்க..கதிர் யோசனையில் இருந்து வெளியே வந்தான்..

கதிர் அவளிடம் "சுவாதி நான் உன்கிட்ட ஒன்னு கேட்பேன் ..குடுப்பியா ??" உன்ன நிறைய நாள் பார்க்கவும் முடியாது, பேசவும் முடியாது.. ப்ளீஸ்! ப்ளீஸ்! என்று கேட்டான்..

உடனே சுவாதி என்ன கதிர்?? கேள்.. என்னால் முடிஞ்சா கண்டிப்பா தர்றேன் என்றாள்.. கதிர் சுவாதியிடன் "சுவாதி ப்ளீஸ் தப்பா நெனைக்காத..உன் மொபைல் நம்பர் கிடைக்குமா??" என்றான்..

உடனே சுவாதி "சாரி கதிர் என் அப்பா எனக்கு மொபைல் வாங்கி கொடுக்கல்..வீட்ல அப்பா அம்மா கிட்ட தான் மொபைல் இருக்கு..உனக்கு யாரோட நம்பர் வேணும் சொல்லு, தரேன் என்றாள்..

கதிர் மனதில் உன் அப்பா அம்மா கிட்ட பேசி நான் என்ன பண்ண?? என்று நினைத்தான்.. அவளிடம் "உனக்கு சீக்கிரம் ஒரு மொபைல் வாங்கு சுவாதி..ஏதாவது அர்ஜென்ட்டாவோ இல்ல டவுட் கேக்கவோ உன் அப்பா அம்மாவ டிஸ்டர்ப் பண்ணா நல்லாவா இருக்கும்??" என்று கூறினான்..

சரி!! கதிர், மொபைல் வாங்குனதும் உனக்கு கண்டிப்பா நம்பர் தருவேன் என்றாள்..அவர்கள் பேசிக் கொண்டிருக்க நிலா அங்கு வந்தாள் ..ஹை ஃபிரண்ட்ஸ்!! எக்ஸாம் எப்படி பண்ணுனீங்க?? என்று கேட்டாள்..

வானாகி நின்றாய்(Completed)Where stories live. Discover now