எதிர்பாராத விருந்தினர்

Start from the beginning
                                    

நிலாவின் கையில் கொசுவைக் கொன்று ரத்தமானது..நிலா உடனே கதிரிடம் இருடா வரேன் என்று தன் கைகளை கழுவுவதற்காக பாத்ரூம் சென்றாள் ..அப்பொழுது அறையில் வைக்கப்பட்டிருந்த கிஃப்ட் அவளுடைய கண்களில் பட்டது.. நிலா தன் கைகளை கழுவிக்கொண்டு சுவாதி அவளுக்கு கொடுத்த கிஃப்ட்டை எடுத்து பார்த்தாள்..

உடனே கதிர் நிலாவிடம் வந்து என்ன நிலா கிஃப்ட் பார்த்துட்டு இருக்க?? உனக்கு தூக்கம் வரலையா??ரொம்ப டயர்டா இருக்கு இல்ல?? என்றான்..

உடனே நிலா கதிரிடம் இல்லடா.. சுவாதி எனக்கு ஒரு கிஃப்ட் கொடுத்தாள்.. அதை யார் கிட்டயும் காட்டாம ஓபன் பண்ணி பார்க்க சொல்லி இருக்கா என்றாள்..

உடனே கதிர் நிலாவிடம் ஆமாடி!! எங்கிட்டயும் ஒரு கிஃப்ட் கொடுத்தா..அதை யார்கிட்டயும் காட்ட வேண்டாம் என்று சொன்னாள்.. நம்ம ரெண்டு பேரும் தான் இப்போ கணவன் மனைவி ஆயிட்டோமே.. நம்ம ரெண்டு பேருக்குள்ளே எந்த ஒரு சீக்ரெட்டும் இருக்க கூடாது..

ரெண்டு பேரும் சேர்ந்து நம்ம கிஃப்ட்ட ஓபன் பண்ணுவோம் என்று இருவரும் சேர்ந்து கட்டிலில் அமர்ந்தனர்..முதலில் கதிர் ஓபன் செய்தான்..

கதிருடைய கிஃப்ட் பாக்ஸ்-ஐ ஓபன் செய்து பார்த்தனர் ..அதில் ஒரு அழகான பிரசன்டேஷன் இருந்தது ..அது என்னவென்றால் விலை உயர்ந்த கைக்கடிகாரம் ஒன்று அதில் இருந்தது..

அதைப் பார்த்ததும் கதிரின் முகம் மாறியது. அவன் பழைய நிகழ்வுகளை ஒரு நிமிடம் நினைத்து பார்த்தான்.கதிர் நிலாவிடம் "இந்த வாட்சு எனக்கு ரொம்ப பிடிக்கும்னு காலேஜ் டைம்ல நான் சுவாதி கிட்ட சொல்லி இருக்கேன்.. அவள் அதை ஞாபகம் வச்சு வாங்கிட்டு வந்து இருக்கா பாரு" என்று கூற ..நிலாவின்  முகம் சுருங்கியது.. நிலாவின் மனது காயப்பட்டது ..

ஆனால் அதை அவள் வெளியே காட்டிக் கொள்ளவில்லை .."அப்படியா?? நல்லது!! சூப்பரா இருக்குடா" என்று கூறினாள்..பிறகு நிலா சுவாதி கொடுத்த கிஃப்ட்டை திறந்து பார்க்க மனமில்லாமல் அப்படியே ஓரத்தில் வைத்து விட்டாள்..

வானாகி நின்றாய்(Completed)Where stories live. Discover now