சுவாதி தந்தை கைது

Começar do início
                                    

உடனே கதிர் நிலாவிடம் "உன்னுடைய அம்மா என்னிடம் அனைத்தையும் கூறி விட்டார்.".அதை சொல்வதற்காக தான் உன்னிடம் நான் அன்று பேசினேன்.. ஆனால் என் அம்மாவைப் பற்றி பேசுவதாக இருந்தால் நீ பேசாதே என்று சொல்லிவிட்டாய்.. இப்பொழுது அனைத்தையும் சொல்வதற்கான சமயம் வந்துவிட்டது என்று கதிர் நிர்மலா அவர்களைப் பற்றிய உண்மைகளைக் கூறினான்..

அவருடைய திருமணம் எவ்வாறு நடந்தது?? எவ்வாறு இருவரும் பிரிந்தார்கள்?? நிலா எவ்வாறு தந்தையுடன் வந்தாள்?? என்று அவரைப்பற்றி உள்ள உண்மைகள் அனைத்தையும் அவளிடம் விளக்கமாகக் கூறினான்..

உடனே நிலா அதிர்ந்து "அய்யோ, இந்த உண்மைகள் அனைத்தும் தெரியாமல் நான் என்னுடைய அம்மாவை தவறாக நினைத்து விட்டேனே.. ஆனால்  இதைப்பற்றி அப்பா என்னிடம் எதுவும் கூறவில்லை" என்று வருந்தினாள்..

உடனே அவள் "நவீனைப் பற்றி ஏதாவது கூறினார்களா?? என்று கேட்டாள்.. உடனே கதிர் இல்லை நிலா, அதைப்பற்றி எனக்கு எந்த உண்மையும் தெரிய வில்லை.. அது மட்டும் புரியாத புதிராகவே இருக்கிறது" என்று கூறினான்..

உடனே நிலா நவீனை அழைத்தாள்.. நவீன் வெளியே வந்தான் .வெளியே வந்ததும் ஹாய் நட்சத்திரா குரூப்!!! என்ன சகோதரி?? எதற்காக என்னை அழைத்தாய்?? என்று கேட்டான்.. உடனே அவள் நான் உன்னிடம் கொஞ்சம் பேச வேண்டும் ..அதற்காகத்தான் அழைத்தேன்..

நீ எப்பொழுதிலிருந்து நிர்மலா அம்மாவுடன் இருக்கிறாய்?? என்று கேட்டாள்..அதற்கு நவீன் "நான் பிறந்ததிலிருந்து அவர்களுடன் தான் இருக்கிறேன்".. ஆனால் சிறு வயதிலேயே என்னை வெளிநாட்டிற்கு அனுப்பிவிட்டார்.

ஏன்?? என்று எனக்கும் தெரியாது.. நான் அடிக்கடி கேட்பேன்.. அம்மா நான் உங்களுடனேயே இருக்கிறேன் என்று அழுது அடம்பிடித்து இருக்கிறேன்.. ஆனால் அம்மா "உனக்கு நன்மையானதை தான் நான் செய்வேன்.. நீ வெளிநாட்டில் இருப்பது தான் உனக்கு நல்லது"..

என்னுடைய வேலை ஆபத்தானது ..அதன் மூலம் உனக்கும் ஆபத்துக்கள் நேரிடலாம் என்று கூறுவார் ..அதனால் நான் எதுவும் பெரிதாக எடுத்துக் கொண்டதில்லை.. சரி !! அம்மா நமது நலனுக்காக தான் கூறுகிறார்கள் என்று நானும் வெளிநாட்டில் நின்று படித்தேன்.. பிறகு அங்கேயே வேலையும் பார்த்தேன் என்று கூறினான்.

வானாகி நின்றாய்(Completed)Onde histórias criam vida. Descubra agora