ஹேமாவை கவர்ந்தவன்

Depuis le début
                                    

ஹேமா அங்கிருந்து கிளம்பத் தயாரானாள்.

அந்த இளைஞன் மறுபடியும் அவளை நிறுத்தி "எக்ஸ்க்யூஸ் மீ, உங்களுடைய பெயர் என்ன என்று தெரிந்து கொள்ளலாமா??" என்று கேட்டான்.

உடனே அவள் "அது எதற்கு??" என்றாள். அவன் அதற்கு "பெயர் எதற்கு கேட்பார்கள்??  கூப்பிட தான். பெயர் சொன்னால் ஹலோ என்று கூப்பிட வேண்டாம் என்றான்..

அவள் சிரித்தபடி "என்னுடைய பெயர் ஹேமா .ஆமா,உங்களுடைய பெயர் என்ன?? என்று கேட்டாள். உடனே அவன் என்னுடைய பெயர் இப்போது சொல்லமாட்டேன் அது சஸ்பன்ஸ் "திங் அபௌட் மீ". அடுத்த முறை சந்திக்கும் போது சொல்கிறேன் "டாட்டா.. பை பை பெப்பர்" என்றான்.

ஹேமா அவனிடம் வாட்?? என்றாள் ஆச்சரியமாக.."ஓகே பை" என்று சொல்லிவிட்டு அவளும் அங்கிருந்து கிளம்பினாள்.

ஹேமா மனதிற்குள் இவன் கொஞ்சம் வித்தியாசமாக தான் இருக்கிறான்.முதல் சந்திப்பிலேயே ஒரு கியூரியாசிட்டி ஏற்படுத்தி விட்டான் என்று நினைத்தாள்..ஹேமாவிற்கு அவனை பிடித்தது..

இவனை அடுத்த முறை சந்திப்போமா?? பார்ப்போம் என்று மனதிற்குள் நினைத்தாள்.

அந்த இளைஞனின் கார் நிலா வீட்டை நோக்கி சென்றது..நிலா வீட்டை சென்றடைந்தது.காரை விட்டு இறங்கியவன் வீட்டு வாசலில் வந்து யாராவது வீட்டில் இருக்கிறீர்களா?? என்று கதவைத் தட்டிக் கொண்டிருந்தான்.

நிலா வந்து கதவைத் திறந்து பார்த்தபோது அந்த இளைஞன் நின்றுக் கொண்டிருந்தான். உடனே நிலா அவனிடம் "நீங்கள் யார்?? உங்களுக்கு யார் வேண்டும்?" என்று கேட்டாள்.

உடனே அந்த இளைஞன் "முதலில் வீட்டிற்கு வந்தவர்களை  உள்ளே அழைக்க வேண்டும். பிறகு அவர்களுக்கு குடிக்க ஏதாவது கொடுக்க வேண்டும் .அதன் பிறகு தான் ஏதாவது பேச வேண்டும். இது கூட உனக்கு தெரியாதா??" என்று கேட்டான் ..

உடனே நிலா "முன் பின் தெரியாதவர்களை வீட்டிற்குள்ளே அனுமதிக்கவே கூடாது என்பது தான் எனக்கு தெரியும்" என்று பதிலடி கொடுத்தாள்.

வானாகி நின்றாய்(Completed)Où les histoires vivent. Découvrez maintenant