நிலா லவ் பிரோபோஸ்

Start from the beginning
                                    

கதிருக்கு ஒரு நிமிடம் எப்படி ரியாக்ட் செய்வதென்று தெரியவில்லை.. குழப்பத்தில் அவனும் நிலாவை ஆறுதல்படுத்த தன் இரு கைகள் கொண்டு அவளை அணைத்துக் கொண்டான்..

நிலா மற்றும் கதிரின் கண்களில் கண்ணீர் வந்தது..திடீரென்று வாசலில் கார் ஹான்க் சத்தம் கேட்டது.. அந்த சத்தத்தைக் கேட்டதும் நிலா தான் செய்வது தவறு என்று உணர்ந்து.."இதுக்குதான் நான் இங்க இருக்கலன்னு சொன்னேன்..நீயும் சுவாதியும் சந்தோஷமா இருங்க அது போதும் எனக்கு..நான் போறேன்" என்று அங்கிருந்து நிலா அழுதபடியே கீழே ஓடினாள்..

கதிர் அதிர்ச்சியில் நின்றான்.. நிலா அவனைக் காதலிக்கும் விஷயம் அப்போழுது தான் கதிருக்கு முதல்முறையாக தெரிந்தது..நிலா தன்னை இவ்வளவு காதலிக்கிறாளா?? என்று அவளின் காதலை அவளுடைய கண்களைப் பார்த்து புரிந்து கொண்டான்.. சுவாதியின் கண்களில் இதுவரை கண்டிராத காதலை நிலாவிடம் ஒரே நிமிடத்தில் உணர்ந்தான்...

அவளுடைய கண்களில் தெரிந்த ஏக்கம் அவன் மனதிற்குள்ளேயே நின்றது.. நிலா ஏன் என்னிடம் இதைப்பற்றி இதுவரை சொல்லவே இல்லை..நான் அவளுடைய மனதில் போலியான காதலை விதைத்து விட்டேனா?? என்று ஃபீல் செய்தான்..

தீபக் ஒரு பெண்ணை நான் ஏமாற்றுகிறேன் ஏமாற்றுகிறேன் என்று அடிக்கடி கூறியது நிலாவைத் தானா?? இனி நிலாவைப் பார்க்கவே முடியாதா?? நான் அவளுக்கு எப்படியாவது ஒரு நல்ல வாழ்வை அமைத்து தரவேண்டும் என்று நினைத்தான்..பிறகு கதிர் நிலாவுடன் கல்லூரியில் நடந்த பழைய நிகழ்வுகள் அனைத்தையும் நினைத்துப் பார்த்தான்.. ஐயோ!! நான் நிலாவுக்கு துரோகம் செய்துவிட்டேனே என்று கண் கலங்கினான்..கீழே நிலாவுக்காக கார் காத்துக் கொண்டிருப்பதைப் பார்த்து நிலாவைத் தடுக்க கீழே ஓடினான்...

நிலா கதிரின் பெற்றோரிடம் "ஆன்டி!! நான் இன்டேர்ன்ஷிப் பண்ணப் போறேன்.. அது விஷயமாக சென்னைக்கு போகப் போறேன்.. நான் கிளம்புறேன் ஆன்டி" என்று அவர்களிடம் சொல்லிவிட்டு சென்னைக்கு வேகவேகமாக கிளம்பினாள்.

வானாகி நின்றாய்(Completed)Where stories live. Discover now