முதலாம் ஆண்டு விடுமுறை

Start from the beginning
                                    

உடனே சுவாதி "ஏ நிலா, எக்ஸாம் நல்லா பண்ணலன்னு கதிர் ஃபீல் பண்ணிட்டு இருந்தான்.. அதான் ஆறுதல் சொல்லிட்டு இருந்தேன்" என்றாள்..

உடனே நிலா "கதிர் நீ எக்ஸாம் நல்லா எழுதலன்னு ஃபீல் பண்ற ஆளா?? உன்ன பார்த்தா அப்படி தெரியலையே" என்று சிரித்துக்கொண்டே கூறினாள்..

உடனே கதிர் ஹே மூன் !! என்ன கலாய்க்கிறியா?? உன்ன அப்புறம் மொக்க ஜோக்ஸ் சொல்லியே சாகடிக்குறேன் ..சரி இன்னைக்கு லாஸ்ட் டே.. வாங்க கேன்டீன் போய் ஏதாவது வாங்கி சாப்டுவோம் என்றான்..

மூவரும் கேன்டீனை நோக்கி நடந்தனர்..

சுவாதி கதிரிடம் "ஹே கதிர், நிலாவோட ஃபோன் நம்பர் வாங்கிக்கோ..என் கூட தான் பேச முடியாது..உனக்கு டவுட்ஸ் ஏதாவது இருந்தா அவகிட்டே கால் பண்ணலாமே என்றாள்..

உடனே கதிர் நிலா நம்பர் வாங்க வேண்டிய அவசியமே இல்லை.. அவதான் எங்க வீட்டுக்கு அடிக்கடி வருவாளே..இல்ல சுதா வீட்டிற்கு வருவாள்..ஆனா உன்னதான் நான் பாக்கவே முடியாது என்றான்..

நிலா கதிரிடம் "ஹலோ சார் இப்போ எதுக்கு இவ்ளோ ஃபீலிங்ஸ் ..சுவாதி இந்த ஊர்ல தானே இருக்க போறா..அவள் வீட்டுக்கு போய் பார்த்தா போச்சு..ஒரு மாதம் தானே சீக்கிரம் போயிடும்" என்றாள்..

உடனே சுவாதி "என் வீட்ல அப்பா ரொம்ப ஸ்டிரிக்ட் நிலா.. பசங்க கூட பேசவே விட மாட்டாங்க..இதுல எங்க வீட்டுக்கு உள்ள விடுறது" என்றாள் சோகமாக..நிலா சுவாதியிடம் "கூள் சுவாதி!! நான் கண்டிப்பா வரேன் உங்க வீட்டுக்கு" என்றாள்..

கதிர் மனதிற்குள் "அடப் பாவிகளா, நான் அவ கிட்ட எப்படி பேசுறதுன்னு ஃபீல் பண்ணா..அவங்க ரெண்டு பேரும் மீட் பண்ண பிளான் போடுறாங்க..ஐயோ சுவாதிய பாக்க வேற வழியே இல்லையா?? என்று யோசித்தான்..

கதிர் , நிலா மற்றும் சுவாதி கேன்டீனில் இருந்து சாப்பிட அந்த பக்கமாக வந்த ராம் டேய் கதிர்!! நடத்துடா நடத்து என்று கூற..நிலா ராமிடம் "ராம் நீயும் வா?? ஏன் தனியா சுத்திட்டு இருக்க??" என்றாள்..

வானாகி நின்றாய்(Completed)Where stories live. Discover now