காதல் - 4

718 46 10
                                    

அடுத்த நாள் ஞாயிறு மாலை நேரத்தில் தன் உடன் பிறந்தவன் நாசமாக்கிய பாடங்களை அவனை மனதில் திட்டி கொண்டும் தன் நிலையை மனதில் நொந்துக் கொண்டும் ஒருவழியாக செய்து முடித்துவிட்டு அப்போது தான் தன் மடிக்கணினி திறந்து முகப்புத்தகத்தக பக்கங்களை பார்த்துக் கொண்டு அதிலும் கவனம் செலுத்த முடியாமல் மனதில் நிறைய எண்ணங்கள் ஓடிக் கொண்டிருக்க,

நேற்று மைக்கேலுடன் நடந்தது என்ன தான் அவள் தலையில் திரைப்படமாக திரும்ப திரும்ப ஓடி மன அசௌகரியத்தை கொடுத்தாலும் அதைவிட இன்னும் முக்கியமான சில விஷயங்களை யோசிக்க மனதை கட்டாயப்படுத்தி கொண்டு தன் பெயரை கொண்டவனை பற்றி முக புத்தகத்தை தேடிக்கொண்டு இருந்தாள்,

தன் தோழிக்கு அவள் விஷயத்தில் நானி தலையிடுவது பிடிக்காது என்று நன்கு தெரிந்திருந்தும் அவள் மீண்டும் மீண்டும் தலையிடுவதற்கு காரணம் அவள் மனதில் ஆழமாக பதிந்திருக்கும் ஒரு எண்ணம்,

'காதலித்தால்  என்றும் வலிதான் மிஞ்சும்'

அது தான் அவள் பிறந்த இந்த பதினேழு வருடங்களில் அவள் மூலையில் ஆணியை போல் அறையப்பட்ட ஒரு உண்மை,

அவள் தோழி விஷயத்திலேயே அவள் இதை நிறைய பார்திருக்கிறாள் ஒவ்வொரு முறையும் அவள் மனமுடைந்து அழும்போது அருகில் இருந்து ஆறுதல் சொன்னது அவள் தான்,

வீட்டில் தன் தாய் இருக்கிறாள்... தன் கணவன் இறந்து ஐந்து வருடங்கள் ஆகியும் தந்தையின் பெயர் கேட்டவுடன் இன்னும் கண்ணீர்விடாமல் இருப்பதில்லை,

ஒரு சில சூழ்நிகளின் தன் பிள்ளைகளிடமிருந்து கூட விலகி தனியறையில் யாருக்கும் தெரியாமல் அழுது கொண்டிருக்கும் தன் தாய் முகத்தை இன்னும் அவளால் மறக்க முடியவில்லை,

இதையெல்லாம் விட காதலில் விழுந்து தன்னை மறந்து இதயம் உடைந்து, அடையாளம் தொலைத்து இப்போது அவள் முன் எதிரியாய் நிற்கும் அவள் உயிர் தோழன்...

என்றும் அழுது பார்க்காத அவனை உடைந்தநிலையில் அன்று கண்ட காட்சி அவளுக்கு மரணம் வரை கண்களில் இருக்கும்...

உயிரில் இணைந்தவனே....Where stories live. Discover now