சங்கடம்-3

824 42 3
                                    


அந்த அமைதியான அறையில் தியா அங்குள்ள பீன் பேக்கில் அமர்ந்து இருக்க மற்ற இரு தோழிகளும் கட்டிலில் அமரதவாறு ஆளுக்கு ஒருபக்கம் பார்த்து கொண்டு இருக்க,

நானியின் மனத்திற்குள்ளோ இந்த விஷயத்தில் தியாவை அதிகம் அழுத்தியதால் தான் அவள் தனக்கு தெரியாமல் உறவு வைத்துக் கொள்ளும் அளவிற்க்கு தள்ள பட்டு விட்டாலோ என அவளின் மனதிற்குள் ஒரே உறுத்தல் ஆனால் அவளுக்கு நல்லதை தானே செய்ய நிந்ததோம் என்று தனக்குள்ளே கேள்விக் கேட்டு கொள்ள,

அந்த தருண் ஓரே நேரத்தில் தியாவை தவிர்த்து இன்னும் மூன்று உறவுகள் இருந்ததால் தான் அவள் தடுத்தாள்,

அப்பறம் அந்த கார்த்திக் அவன் அவள் பணத்திற்காக அவளிடம் பின்னால் சுற்றினான் இதற்கு முன் அவனிடம் பழகிய பெண்களை பார்த்து விட்டுத்தான் அவள் அவனிடமும் பேசினாள்,

ஒருவேளை அவள் இதுவரை செய்தது தப்போ என ஒரு எண்ணம் அவளை வாட்டி வதைத்தது, இன்னும் நடந்த தப்புகளை ஆராய்ச்சி செய்வதற்குள் ஜானுவின் குரல் அங்கு ஒலிக்க ஆரம்பித்தது,

"சோ இதெல்லாம் எப்போ ஆரம்பிச்சது"

ஜானா அதை கேட்டதும் தியா சிறிது நேரம் குலப்பமடைந்த ஒரு முகபாவத்தை வைத்தபடி,

"...எது?" என்று இழுக்க நானிக்கு அது ஏனோ வலித்தது.

"இன்னும் நீ எங்கே கிட்ட எத்தனை விஷயத்த சொல்லல?" என்று நானி ஒரு சோர்ந்து போன குரலில் கேட்க,

தியா அதை கேட்டு கண்கள் பெரிதாகி ஒரு அதிர்ச்சியான பாவத்தில்,

"இல்ல இல்ல நாணி என்ன தப்பா எடுத்துக்கிட்ட நா இந்த கேப்ரியால் விஷயத்த மட்டும் தான் உன் கிட்ட சொல்லல அவன் உன்னோட ப்ரதர் அண்ட் ஆல் தேட்-"

அவள் சொல்லி முடிப்பதற்குள் இடையில் மறித்து,

"அவன் என் பிரதர் இல்ல தியா கசின் தியா.... ப்ளட்டி கசின்....." என கோவமா குரலை உயர்த்த,

"அ..ஆமாம் ஆமாம் பட் அவன் எப்பவும் உங்க வீட்லயே இருக்கான், அண்ட் நீங்க ரெண்டுபேரும் பேசுறது வேர...ஓகே அதை விடு நா உன்கிட்ட சொல்ல கூடாதுன்னு இல்ல அவன் உன் ஃபேம்லி வேர அண்ட் இட் வாஸ் சோ எம்பரிசிங் தெரியுமா? நா சொன்ன உடனே அவன் ஸ்ரைட் அவுட் சிரிச்சி கிட்டே கெட் அவுட் சொல்லிட்டான் எனக்கு உன்கிட்ட எப்படி சொல்ரதுன்னு நெனச்சேன் தென் அவன் என்ன பத்தி சொல்லி உன்கிட்ட நல்ல சிரிச்சிருப்பானு நெனச்சேன் அப்ப இருந்து தான் எனக்கு அவன் மேல வேருப்பே ஆரமிச்சது..."

உயிரில் இணைந்தவனே....Where stories live. Discover now