பதுக்கல் - 23

387 22 1
                                    

அந்த சிவப்பு நீல நிற விளக்குகள் எரியும் க்ளப்பிற்குள் இருவரும் புகுந்திட யூசுஃபிர்க்கோ அவன் நாசியை நாசமாக்கும் அந்த மதுவின் வாடை கொஞ்சமும் பிடிக்கவில்லை இதில் கும்பல் கும்பலாக ஆண்களும் பெண்களும் ஒருவர் மேல் ஒருவர் உரசிக்கொண்டு பார்க்கவே...'disgusting... இவங்க எல்லாம் எப்படி இதற்குள்ள நிக்கராங்க? இதுல எத்தனை பேருக்கு என்னென்ன வியாதி எல்லாம் இருக்கோ...no no..no அதை எல்லாம் யோசிக்காத யூசுஃப்...இங்க எல்லாம் நான் வந்தேன்னு தெரிஞ்சா என் அம்மா என்னை..."

"யூசுப் அஸ்லம் சின்ன வயசுல பாக்கரவன் கிட்ட எல்லாம் சண்டை போடறேன்னு உன்னை பாக்ஸிங் ஸ்கூலில் சேர்த்த்து விட்டதற்க்கு நீ காலேஜ் படிக்க மாட்டேன்னு ஏதோ வேலைக்கு போறேன்னு என்கிட்ட சொல்லிட்டு இங்க என்ன பண்ணிட்டு-"

'oh no...please அம்மா மட்டும் வேணாம் என்னால முடியாது' என்ற எண்ணத்தோடு அவன் தலையில் இருந்த கருப்பு தொப்பியை இன்னும் முகத்திற்கு முன்னாள் இறக்கிக் கொண்டு என்னவோ அவனை பெற்றவள் தான் அவனை அங்கு தேடிவந்து விட்டால் என்பதுபோல் ஒளிந்து மறைந்தவாறு உள்ளே சென்ற அவன் முதலாளியை தேடிட ஜீயோ அங்கு வித்தியாசமாய் ஊதானிர நிற பஞ்சு மிட்டாயை தலை கவில்த்தியது போல் ஒருபெண் உதட்டில் ரத்த நிற வண்ணத்தை பூசிக்கொண்டு தனக்கு சம்பளம் தருபவனை தான் பிரியாணியை பார்ப்பது போல ஒரு பார்வையில் பார்த்தவாறு இருவரும் நடனம் என்ற பெயரில் அங்கு நெளிந்து கொண்டிருக்க யூசுஃபிற்க்கோ இன்னும் குடலை பிறட்ட அவனோ அந்த காட்சியிலிருந்து திரும்பி வேறு புறம் திரும்பிக்கொண்டான்...

"hai handsome big baby..." தரையில் தகரத்தை இழுப்பது போல் ஒரு குரல் அவனை நோக்கி கேட்க்க திரும்பி பார்த்தால் முன்னாள் எதுவும் இல்லாமல் போக யூசுஃப் மீண்டும் வேறு புறம் திரும்ப செல்ல "hey hulky.." மீண்டும் அதே குறள் ஆனால் இந்த முறை கீழிருந்து சத்தம் வந்ததை கவனித்த அவன் தலையை குனிந்து பார்த்திட அங்கோ அவன் வயிற்றின் உயரத்திற்கு கண்களிலும் உதட்டிலும் நிறைய கருப்பு வண்ணம் தீட்டப்பட்ட ஒரு....பெண்ணாகத்தான் இருக்கும் என்பது அவன் கணிப்பு...அவன் அவனை பார்த்து உதைட்டை கடித்து கண் அடித்திட சற்று மறந்த புரட்டல் வயிற்றில் மீண்டும் எழுந்திட அவன் அங்கிருந்து வாசலை தேடி ஓடிச்சென்றான்...

உயிரில் இணைந்தவனே....Where stories live. Discover now