ஏமாற்றம் -10

615 33 15
                                    

இரண்டு நாட்கள் கடந்தும் அவள் அடித்த அவனிடமிருந்து எந்த பதிலும் இல்லை...

ஆனால் அவனுக்கு பதிலாக தியாவிடம் இருந்து பதில் கிடைத்தது...நான் அவனிடம் பேசிய அன்றிலிருந்து அவள் தன்னிடம் பேசுவதை நிறுத்தி விட்டாள்,

தான் மீண்டும் பேச போன போது,

"stop it நானி there is a limit and you crossed it...இதுக்குமேல என்னால உன்னோட friendடா இருக்க முடியாது" என்று அவள் மைதானத்தில் அவள் தோலை தள்ளி விட்டு அவள் ஸ்கூட்டியை நோக்கி நகர்த்தாள்,

"தியா நான் சொல்றத முழுசா கேளு அவன் நல்லவன்-" என்று அவள் முடிப்பதற்கு முன்,

"ஆமா அவன் அதையும் சொன்னான், நீ அவன் கிட்ட போய் அவன் ஒரு blackmailing-medical-psycho சொன்னியாமே அதை சொல்லிட்டு தான் என்னோட breakup பண்ணான்" என்று அவள் குரல் நடுங்கி இதயம் உடைந்துபோய் சொல்ல மற்றவளுக்கு விளங்கியதெல்லாம்,

"break up பண்ணிட்டானா" என்று அவள் புத்துணர்ச்சியுடனும் மகிழ்ச்சியுடனும் கேட்க்க,

மற்றவளோ முகத்தில் அருவருப்புடன் "ச்சி போடி அவனை போய் நம்பி என் நானியையும் என்னையும் பிரிசிடெல்ல இனிமே என் மூஞ்சிலேயே முழிக்காத" என்று ஒரு திரைப்பட வசனத்தை பேசிவிட்டு அவள் ஸ்கூட்டியில் ஏறி சென்று விட்டாள்,

நானியும் இதுவும் முந்தைய உறவுகள் போல அவள் இன்னும் சில முறை கெஞ்சினாள் எல்லாம் சரியாகி விடும் என்று காத்துக் கொண்டிருக்கிறாள்,

ஆனால் அவள் தொழியோ மசிவதாக இல்லை....

'என்ன தான் இருந்தாலும் நம்ம அவள் கிட்ட ஒரு வார்னிங் கூட கொடுக்காமல் அவன பஞ்ச் பண்ணினது தப்பு தானோ?' என்று எண்ணத்தோடு

அவளுக்கு அன்று சாயந்திரம் அவனை சந்தித்த தருணம் மீண்டும் எண்ணங்களில் படமாய் ஓடியது,

"நீ எதுக்கு அபி என் பின்னாலேயே வர்ரே just பேசுறதுக்கு தானே நான் ஹேண்டடில் பண்ணிப்பேன்" என்றவளை பார்த்து புருவங்களை தூக்கியவாறு அவள் எதிரியோ,

உயிரில் இணைந்தவனே....Where stories live. Discover now