மெய்மறந்து நின்றேனே

By Madhu_dr_cool

123K 5K 409

பெண்ணின் மனதைத் தொட்டு கண்ணாமூச்சி ஆடும் காதல்... காதலின் பரிணாமங்களை நாயகி மூலம் நாமும் அறிந்து கொள்வோம். More

கதையில்....
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42
43
44
45
46
47
48
49
51
52
Author's note

50

1.8K 88 5
By Madhu_dr_cool

வழிகளாய்

ஒரு வேகத்தில் கேட்டைத் தாண்டிக் குதித்துவிட்டு, தற்போது எப்படி உள்ளே போவது எனத் தவித்துக் கொண்டிருந்த விஷ்வா, கேட்டில் அண்ணனின் கார் சத்தம் கேட்டு திகைத்து நின்றான்.


காரின் விளக்கொளி படாமல் சற்றே தள்ளி நின்றவன், விளக்கைத் தாண்டி கவனித்தான். பின்னாலிருந்து அவசரமாக இறங்கிக் கேட்டைத் திறந்து விட்டவனை மணி என்று அடையாளம் கண்டான். கார் உள்ளே வந்து நின்றதும் அதை நிறுத்திவிட்டு ஓட்டுனர் இருக்கையில் இருந்து இறங்கியது ரங்கா. காரிலிருந்து அண்ணன் இறங்கும்வரை இவனை யாரும் கவனிக்கவில்லை.

"நாளைக்கு காலைல அஞ்சு மணிக்கு வந்துருங்க..." என்று அவர்களை அனுப்பிய பின் திரும்பிப் பார்த்தபோது சர்வேஸ்வரன் கண்ணில் அவன் பட்டான். இருட்டோடு ஒன்றிக்கொண்டு, முகத்தைத் தொங்கப் போட்டுக் கொண்டு...

"விஷ்வா....?!"

ஆண்டுக்கணக்கில் பிரிந்திருந்த சோகம் அவன் நெஞ்சைப் பிளக்க, இரண்டெட்டில் தாவி ஓடிவந்து அவரை ஆரத் தழுவிக்கொண்டான் அவன்.

"அண்ணா!"

அவன் உணர்ச்சிகரமாக அவரை அழைக்க, அவருக்குமே கோபமெல்லாம் தற்காலிகமாக மறைந்து பாசம் பெருக்கெடுத்தது.
"விஷ்வா.."

ஆதுரமாக அணைத்து உச்சி முகர்ந்தார் அவனை.

"எப்டிடா இருக்க என் தங்கமே?"

"நல்லா இருக்கேண்ணா... உங்ககிட்ட சொல்லாம ஓடிப் போனதுக்கு சாரி அண்ணா.. உங்களை எல்லாம் எவ்ளோ மிஸ் பண்ணேன்னு எனக்கு தான் தெரியும்."

"நாங்க மட்டும் உன்னை நினைக்காம இருப்போமாடா? தினமும் உன்னைப் பத்தி பேசாத நேரமே கிடையாதுடா.. விஷ்வா.. நீ பத்தரமா திரும்பி வந்ததே போதும்.."

மீண்டும் அவனை இறுக்கி அணைத்துக்கொண்டு பெருமூச்செரிந்தார் அவர். விஷ்வாவுக்கும் அவரது பாசம் நிறையத் தேவைப்பட்டது. சந்தோஷமாய் அவரது தோளில் சாய்ந்துகொண்டான்.

"நீங்க எப்டி இருக்கீங்க? வீட்ல எல்லாரும் எப்டி இருக்காங்க?"

"எல்லாரும் அப்டியே தான் இருக்காங்க. உன்னைக் கேட்டுட்டே இருக்காங்க. லண்டன்ல இருந்து எப்போ வந்த நீ..? ஏன் உள்ள போகாம வாசல்ல நிக்கற?"

"அது.. இல்லண்ணா.. இப்பதான் வந்தேன். நடுராத்திரில எப்டி கதவைத் தட்டறது? அம்மா அப்பா எதாச்சும் கேட்டா எப்டி சமாளிக்கறது? அதான் நின்னுட்டேன்.."

"ஹ்ம்.. நல்லது தான்.. டேய், நீ மும்பைல வேலை பாக்கறதாகவும், நம்மள்ட்ட சொன்னா விடமாட்டோம்னு சொல்லாமக் கொள்ளாம போயிட்டதாவும் சொல்லி வச்சிருக்கேன். அதையே சமாளி. சரியா? அப்றம்... மஹிமா எங்க? எப்டி இருக்கா?"

"ம்.. நல்லா இருக்கா. அவங்க வீட்டில இருக்காண்ணா. ரெண்டு பேரும் லண்டன்ல இருந்து ஒண்ணா தான் வந்தோம்."

"ஓ.. சரி வா.. உள்ள போலாம்"

தன்னிடமிருந்த சாவியால் கதவைத் திறந்து அவனை உள்ளே அழைத்துச் சென்றார்.

"உன் ரூம் அப்டியேதான் இருக்கு. உன் அண்ணி தான் நீ இன்னிக்கு வருவ, நாளைக்கு வருவன்னு தினமும் கூட்டி துடைச்சுகிட்டு இருப்பா"

"அ..அண்ணா.. நான்... தங்க வரல... நான் அப்டியே கிளம்பறேண்ணா. உங்களையெல்லாம் பார்த்துட்டுப் போலாம்னு தான் வந்தேன்."

"கிளம்பறயா? மறுபடியுமா? என்னடா? எங்க போற?"

"என்னோட சர்ட்டிபிகேட்ஸ் எடுத்துட்டுப் பூனே போகணும். அங்க ஒரு ஃப்ரெண்டு மூலமா வேலை இண்டர்வியூ ஏற்பாடு பண்ணியிருக்காங்க. வேலை வாங்கணும். நல்ல சம்பளம் வாங்கி நல்ல நிலமைக்கு வரணும். அதுக்கப்றம் தானே நம்ம வீட்ல, மஹிமா வீட்டில பேசமுடியும்.."

"டேய்.. நீ வந்தது தெரிஞ்சா எல்லோரும் சந்தோஷப்படுவாங்க.. எல்லாரையும் ஒருதடவை பாத்துட்டுப் போடா... என் பையனை வீடியோ கால்ல மட்டுமே தான பார்ப்ப... முகிலை ஒருமுறை நேர்ல பார்த்து அவன்கூட பேசிட்டுப் போடா.. அம்மா பாவம், விஷ்வாவுக்கு அது புடிக்கும், இது புடிக்கும்னு தினமும் பார்த்துப் பார்த்து எதாவது செய்வாங்க... எங்க எல்லாத்தையும்விட, உனக்கு அவள் மட்டும் தான் பெருசா?"

அவர் ஆற்றாமையில் புலம்பினார்.
அவன் என்ன பேசுவதென்று தெரியாமல் நின்றான்.

"விஷ்வா.. இந்த நேரத்துல எங்க போவ?  நான் சொல்றதக் கேளுடா.. காலைல போலாம்.. அண்ணனுக்காகடா.."

அரைகுறை மனதுடன் சம்மதித்து அவனறைக்குச் சென்று அசதியில் உறங்கிப் போனான் அவன். காலை லேசான வெளிச்சம் பட்டதுமே விழிப்பு வந்தது.

"முகில்... என்ன பண்ணற? யார் பேக் அது?"
என்று அண்ணியின் குரல் வாசலில் கேட்டது. அப்போதுதான் குனிந்து கட்டிலருகில் பார்த்தான். தெற்றுப்பல் சிரிப்போடு தவழ்ந்து வந்திருந்த அழகிய குழந்தை அவனது ஸ்ட்ராலர் கைப்பிடியை எட்ட முயற்சிக்கும் காட்சியைக் கண்டான்.

அண்ணன் மகனை முதன்முதலில் நேரே கண்ட ஆனந்தத்தில் திளைத்தவன், அவனை அள்ளியெடுத்து முத்தமழை பொழிந்தான். அவனைத் அழைத்துக் கொண்டே உள்ளே வந்த வசுந்தரா விஷ்வாவைக் கண்டதும் திகைத்தார்.

"விஷ்வா! நீங்களா... வாங்க, வாங்க. எப்ப வந்தீங்க? என்னங்க! யார் வந்திருக்கா பாருங்க!"

அதிர்ச்சியிலும் ஆனந்தத்திலும் அண்ணி வசுந்தரா கூக்குரலிட, விஷ்வா மெலிதாகப் புன்னகைத்தான்.

"அண்ணனுக்குத் தெரியும் அண்ணி. நைட் அவர்தான் உள்ள கூட்டிட்டு வந்தார்"

"எங்கிட்ட ஒரு வார்த்தை சொல்லல..."

அதற்குள் சத்தம் கேட்டு அங்கு அண்ணன் அம்மா அப்பா என அனைவரும் வந்துவிட, அவன் சற்றே குற்ற உணர்வோடு சிரித்தான்.

"எல்லாரும் எப்டி இருக்கீங்க ?"

அன்னபூரணி ஓடிவந்து மகனைப் பிடித்துக்கொண்டு கண்ணீர் வடித்தார்.

"என்னடா கண்ணா சொல்லாம கொள்ளாம போயிட்ட.. ஏன்டா அப்படி பண்ணின ?நாங்கல்லாம் எவ்ளோ பயந்துட்டோம் தெரியுமா?"

"ஸாரிம்மா.."

"ஒரு ஃபோன் பண்ணி சொல்றதுக்கு என்ன? அவ்ளோ ரோஷக்காரனா நீ? சரி, நல்லா சாப்பிட்டயா அங்க? உடம்பைப் பாத்துக்கறயா நல்லா? மும்பைல தண்ணியெல்லாம் ஒழுங்கா இருக்குமா? தங்கற இடம் எப்படி? வசதியா இருக்குமா?"

அவன் தலையை மட்டும் ஆட்டினான். உண்மை தெரிந்த அண்ணனும் அண்ணியும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டு நின்றனர்.

அன்னபூரணியின் மகிழ்வான முகத்தைக் குற்றவுணர்வோடு ஏறிட்டான் விஷ்வா.

"அ.. அம்மா, வந்து.. நான்.. உடனே திரும்பக் கிளம்பறேன்மா.."

அவன் அப்படிச் சொன்னதும் அண்ணனைத் தவிர அனைவரும் அதிர்ந்தனர்.

"என்னடா சொல்ற?"

"ஆமாம்மா. வேலை--"

அப்பா சிவராமன், "ஏன் விஷ்வா...இங்க வேற எதாவது வேலை பார்க்கக் கூடாதா? எங்களை விட்டுத் தள்ளிதான் இருக்கணுமா?" என வருத்தம் தோய்ந்த குரலில் கேட்டார்.

அவன் தோளில் இருந்த முகில் அவர்கள் பேசுவது எதுவும் புரியாமல், சிரித்துக் கொண்டே அவனது தலைமுடியோடு விளையாடிக் கொண்டிருந்தான்.

"அப்டிலாம் இல்லப்பா... அது.. அங்க வேலை இருக்கு.. உங்களைப் பார்க்கணும்போல இருந்தது.. அதான் வந்தேன்.. லீவு இல்ல.."

"எப்படா விஷ்வா கிளம்பலாம்?"

அண்ணன் அந்த உரையாடலை ஒரு கேள்வியால் முடித்துவிட்டார். அனைவருக்கும் வருத்தம் இருந்தாலும் அவனது முடிவில் தலையிட வேண்டாமென அமைதி காத்தனர்.

குளித்து, சாப்பிட்டு, தனக்குத் தேவையான பொருட்களை எடுத்துக்கொண்டு அண்ணனோடு கிளம்பினான் அவன். போகும்முன் அண்ணியிடம் காதோடு "ரூம்ல இருக்க பச்சை பேக்ல லண்டன்ல இருந்து வாங்கிட்டு வந்த ட்ரஸ், கிப்ட் எல்லாம் இருக்கு. எடுத்துக்கங்க அண்ணி. முகிலுக்கும் பொம்மை எல்லாம் வாங்கிட்டு வந்திருக்கேன்" என்று சொல்ல, அவர் சோகமாகப் புன்னகைத்தார்.

"உடம்பை பாத்துக்கங்க விஷ்வா.. உங்க அண்ணாவுக்கு அடிக்கடி ஃபோன் பண்ணுங்க. இனிமேல்தான் வாழ்க்கையில நிறைய சவாலைப் பார்க்கப் போறீங்க.. மனசை திடமா வச்சுக்கோங்க.."

அவரிடம் ஆசிபெற்று விடைபெற்றான் அவன்.

அவனை அழைத்துக்கொண்டு இரயில் நிலையம் சென்றார் சர்வேஸ்வரன். வழியில் நிறைய பேருடன் ஃபோனில் பேசினார்.

அவனை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இறக்கிவிட்டு, ஒரு தாளில் சில முகவரிகள் எழுதித் தந்தார்.

"விஷ்வா...பத்தரமா போ. பூனாவுல எனக்குத் தெரிஞ்ச ஒருத்தரோட வீட்டு அட்ரஸ் இது. நீ தங்கிக்க இடம் தருவார். அடிக்கடி ஃபோன் பண்ணுடா.. உடம்பைப் பாத்துக்க. நல்லா இருடா.. ஆல் தி பெஸ்ட்."

"வரேண்ணா"

திரும்பிப் பாராமல் அவன் நடந்து செல்ல, கண்களைத் துடைத்துக் கொண்டு அவர் புறப்பட்டார்.

****

Continue Reading

You'll Also Like

13.1K 835 22
இதயத்தை கொய்த கொலையாளி - பாகம் 2
339K 13.1K 63
சக்தியின் வாழ்வில் மாயங்கள் செய்திடும் மாயவளாய் சாருமதியின் வரவு....
95.2K 2.9K 63
புவியில், அவள் பிறந்த அன்றே , தாய் தந்தையை அறிந்தது போல் கணவனையும் சேர்த்தே அறிந்துக் கொள்ள.. தன் சகோதரியின் கருவறையில் இருக்கும்போதே, அவளை மனைவியா...