மெய்மறந்து நின்றேனே

By Madhu_dr_cool

123K 5K 409

பெண்ணின் மனதைத் தொட்டு கண்ணாமூச்சி ஆடும் காதல்... காதலின் பரிணாமங்களை நாயகி மூலம் நாமும் அறிந்து கொள்வோம். More

கதையில்....
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42
43
44
46
47
48
49
50
51
52
Author's note

45

1.8K 88 4
By Madhu_dr_cool

ஓவியமாய்

அவனது பிறந்தநாள் கொண்டாட்டம் சிறப்பாக நடந்தது. அவன் கேட்ட பரிசும் அவளிடமிருந்து கிடைத்ததே!

காலை எழுந்தபோது, தன் மார்போடு சாய்ந்து தூங்கிக் கொண்டிருந்தவள் முகத்தில் கண்கள் பதிந்தன. அவள் சின்ன மூக்கும் சிவந்த உதடுகளும் அவனை அழைப்பதுபோல் இருந்தன. அவள் கட்டியிருந்த சேலை கட்டிலின் கீழே கிடந்தது. அவளுக்கு ஒரு தலையணையை அணைப்பாகத் தந்துவிட்டு ஓசைப்படாமல் எழுந்து அவள் சேலையை மடித்து வைத்தான் அவன். மணி ஐந்து இருபது ஆகியிருந்தது.

தன் கைபேசியைத் தேடினான் அவன். அது சத்தமாக அடித்தால் அவள் தூக்கம் கலைந்திடுமே என்ற கரிசனம் முகத்தில். அவன் நினைத்தவுடன் அவனது கைபேசி சத்தமாக அடித்தது. ஹாலில் சோஃபாவில் இருந்தது அது. சென்று அதை எடுத்தான்.

ஜோஷி.

"விஷ்வா!!! ஹேப்பி பர்த்டே! கரெக்டா 12 மணிக்கு விளிச்சேன் பாத்தியா? "

கஷ்டப்பட்டு சிரிப்பை அடக்கிக் கொண்டான் விஷ்வா.
"தேங்க்ஸ் ஜோஷி! எப்டி இருக்க?"

"ஞான் ஃபைன். நிங்களவிட எங்கனெயோ?"

"ம்.. நாங்க நல்லா தான் இருக்கோம் ஜோஷி. நீ வேலைக்குப் போக ஆரம்பிச்சாச்சா?"

"வேலையா?? ஐயடா! ஞான் B.Ed கோர்ஸ்ல சேர்ந்துட்டன்"

"ஓ... அப்ப மாறன் சாருக்கு காம்படீஷன் ரெடி ஆயிடுச்சுன்னு சொல்லு!"

"ஹாஹாஹா! ஷெரி விஷ்வா, நீங்க எப்போ திரிச்சி வருவிங்க?"

"இன்னும் நாலு மாசம்"

"ஓ..."

"ஹம்ம்."

"ஓக்கேடா மோனே.. மஹியை கேட்டதா சொல்லுடா. பின்ன விளிக்கான், பைய்"

"சரிடா வச்சிடறேன். பை"

"ம்.. டேக் கேர். பை"

அழைப்பை அணைத்துவிட்டு வாட்ஸ்ஸாப்பை ஆராய்ந்தான். நண்பர்கள் பலர் வாழ்ந்துச் செய்திகள் அனுப்பியிருந்தனர். அதற்கு பதில்கள் அனுப்பியவாறு சோஃபாவில் சாய்ந்தான் அவன்.

"அதுக்குள்ள எழுத்திருச்சிட்ட.."

குரல் கேட்டு நிமிர்ந்தவன். குளித்துவிட்டு நேற்றைய புடவையிலேயே வந்தவளைப் பார்த்து வியந்தான்.

"காலேஜ்க்கு சேரீ கட்டிட்டு போறயா?"

"காலேஜா?"

"ப்ரெஸன்டேஷன்... சீக்கிரம் போகணும்னு சொன்ன?"

அவள் சிரிப்பில் அறிந்துகொண்டான் அவன். "பொய்யா?"

"சும்மா..." அவள் நாக்கை நீட்டி அழகுகாட்ட, அவன் முறைத்தான்.

அவனருகில் சென்று அமர்ந்தாள் அவள்.
"Today is your day. இன்னிக்கு முழுக்க உன்னோட தான் இருப்பேன். நீ எங்கெல்லாம் போகணுமோ, என்னவெல்லாம் செய்யணுமோ, எல்லாம் பண்ணலாம். ஓகே?"

"நெஜமாவா சொல்ற?"

"நம்பலன்னா போ!"

அவள் எழுந்து போவதுபோல் செல்ல, இடுப்பை வளைத்துப் பிடித்தான் அவளை.

"போலாம் வா!"

லண்டன் நகரம் இன்னும் துயில் விழிக்கவில்லை. சோம்பல் முறித்துக் கொண்டு அப்போதுதான் கதிரவன் எழத் தொடங்கியது. அவனோடு கைகோர்த்துக் கொண்டு வீதியில் நடந்தாள் மஹிமா. குளிர்காற்று மூச்சுக்குள் நுழைந்து நெஞ்சம்வரை தீண்டியது. மூச்சுவிடுவதுகூட புகைபோல தெரிந்தது.

பத்து நிமிடம் நடந்து ம்யூஸ்வெல் குன்றின் அடிவாரத்தில் நின்றனர்.

"மேல ஏறப் போறோமா?"
அவளது குரலில் பயமும் தயக்கமும் தெரிந்தது.

"நான் இருக்கறப்போ என்ன பயம் உனக்கு?" என்று அவளை இழுத்துக் கொண்டு மேலே நடந்தான் அவன்.

கடல்மட்டத்தில் இருந்து நானூறு அடிகள் உயர்ந்திருந்தது அந்தக் குன்று. ஆங்காங்கே பழமையான கோட்டைகளும், கோல்ஃப் மைதானங்களும் தென்பட்டன. வழியெங்கும் காட்டு மலர்கள் பூத்திருந்தன. தார் சாலை போடப்பட்டிருந்தாலும், அவன் மண்பாதையிலேயே அவளை அழைத்துச் சென்றான்.

உச்சியை அடைந்ததும், ஏறிவந்த களைப்பில் இடுப்பில் கைவைத்து பெருமூச்சு விட்டாள் அவள். அதை ஓரக்கண்ணால் பார்த்து சிரித்தான் அவன். அங்கிருந்து கீழே பார்த்தபோது லண்டன் நகரம் மொத்தமும் தெரிந்தது.

விஷ்வாவை பின்னாலிருந்து அணைத்துக் கொண்டாள் அவள். அவள் கைகளைப் பற்றி தன் நெஞ்சோடு சேர்த்துக் கொண்டான் அவன்."Happy birthday Vishwa" அவன் காதோரம் மெல்ல கிசுகிசுத்தாள் அவள்.

கீழே இறங்கும்போது மணி ஒன்பது. விஷ்வா ஆசைப்பட்ட இந்திய உணவகத்தில் சாப்பிட்டுவிட்டு, Neasdenல் இருந்த ஸ்வாமிநாதர் கோவிலுக்குச் சென்றனர். வெள்ளைப் பளிங்கினால் கட்டப்பட்ட அந்தக் கோவில்தான் ஐரோப்பிய கண்டத்தின் மிகப்பெரிய இந்துக் கோவிலாம்.

கோவிலில் அமர்ந்திருந்தபோது விஷ்வாவின் கைபேசி அடித்தது. அண்ணன் அழைத்திருந்தார். அவரோடும் அண்ணியோடும் பேசிவிட்டு, குழந்தை முகிலைக் கொஞ்சிவிட்டதும் அவனுக்கு முகமெல்லாம் பூரித்துப்போக, அதைக் கண்களால் காட்சிப்பிடித்தாள் அவள்.

அன்று முழுவதும் ஊர்சுற்றிவிட்டு, அலுப்புடன் வீடு திரும்பினர் இருவரும். உள்ளே வந்ததும் சோஃபாவில் சாய்ந்தான் அவன்.

"Today is the best day of my life"

சிரித்தாள் அவள். தன் கையில் மறைத்து வைத்திருந்த சின்னப் பெட்டியைத் திறந்தவள், அதிலிருந்த ப்ளாட்டின மோதிரத்தை அவன் விரலில் மாட்டிவிட்டாள்.

அவன் வியப்பாகப் பார்க்கையிலேயே விரலில் முத்தமிட்டு, "ஐ லவ் யூ விஷ்வா" என்றாள் அவள்.

**********

நான்கு மாதங்கள் போனதே தெரியவில்லை யாருக்கும். மஹிமாவுக்கு தேர்வுகளும் கூடவே சிறப்பு வகுப்புகளும் நடந்து கொண்டிருந்தன.

டைனிங் டேபிள் நாற்காலியில் அமர்ந்து ஃபோனில் ஏதோ நோண்டிக் கொண்டிந்தான் விஷ்வா. சட்டையை வெறுமனே மாட்டியிருந்தான், பொத்தான்கள் போடாமல். குளித்துவிட்டு வந்து அவனருகில் அமர்ந்தாள் மஹிமா. அவள் வந்ததைக் கவனித்துவிட்டதாகத் தலையத்தான் அவன்.

"விஷ்வா, ஒரு முக்கியமான விஷயம். "

"ம்ம்.." ஸ்மார்ட்ஃபோன் திரையிலிருந்து கண்ணை அகற்றாமல் கேட்டான்.

"என்னைப் பார்ப்பயா மாட்டயா?"

"கேம்ல இருக்கேன். கடைசி ஸ்டேஜ்!"

"ப்ச், உனக்காக ஸ்பெஷலா ஒண்ணு தரலாம்னு வந்தேன். போ.."

எழுந்து செல்ல எத்தனித்தவளை இழுத்துத் தன் மடியில் அமர்த்தினான் அவன். அவளது
கழுத்தோரத்தில் முத்தக் கோடுகள் போடத் தொடங்கினான்.

"நீயே ஸ்பெஷல் தான். அதுக்கு மேல என்ன ஸ்பெஷல்?"

"ஹ்ம்ம்...Larry message பண்ணிருந்தா... இன்னிக்கு classes இல்லையாம்"

"சூப்பர்...அப்போ நம்ம ஏதாவது productive ஆ பண்ணலாம்"

கண்கள் மின்னப் பேசியவனைப் பார்த்து சிரித்தாள் மஹி.

"உன் productivity பத்தி தெரியாதா? அதெல்லாம் ஒன்னும் வேண்டாம்"
மீண்டும் எழமுயன்று தோற்றாள் அவள்.

அவன் விட்டால்தானே!

அள்ளியணைத்து அவளை எடுத்து மாலைபோல் நெஞ்சோடு சேர்த்துக்கொண்டு படுக்கையறை நோக்கி நடந்தான் விஷ்வா, அவளது பொய்கோபத்தை ரசித்தவாறே.

---------------

விடுமுறை நாள் என்பது அங்கே அதிசயம். அதை வீணாக்க மனமில்லை மஹிமாவுக்கு. செல்லக் கொஞ்சல்கள் சிறிது நேரம் நீடித்தது. காதல் தீண்டல்கள் அழகாய் நடந்தது.

முத்தங்கள் நீண்டது... சமையலறை வரையிலும்.

"இன்னிக்காச்சும் நல்லா சாப்பிடலாம்!"

"அப்போ நீ சமைக்காத மஹி!"

"அடி!!!", கையிலிருந்த கரண்டியால் அவன் கழுத்தைத் தட்டினாள் அவள்.

அன்றைய லஞ்ச் காதல் கலந்து மணத்தது. தென்னாட்டு சமையல். முதல்முறையாக முயன்றிருந்தனர் அவர்கள். யார் முதலில் ருசிபார்ப்பது என்று யோசனை.

"நீதான மஹி சமைச்சே...நீயே சாப்ட்டு சொல்லு"

"நீயும்தான் கூடசேர்ந்து உப்பு போட்றேன், மசாலா போட்றேன்னு வந்தே...நீ டேஸ்ட் பாரு"

"இந்த மோதிரம் எதுக்குத் தெரியுமா?இன்பத்திலும் துன்பத்திலும் ஒண்ணா பங்கெடுத்துக்கணும்.. வா..சேர்ந்தே சாப்டலாம்."

"இது கரெக்ட்"

அரிசிம்பருப்பு சாதம், இஞ்சித் தொக்கு, உருளைக்கிழங்குப் பொரியல், வடகம். இரண்டு தட்டுக்கள் நிறைந்தது. விஷ்வா authentic ஆக இருக்கவேண்டும் என்று பானகம் வேறு செய்திருந்தான்.
அமிர்தமாய் ருசித்தது உணவு. விஷ்வா கண்கள் லேசாகக் கலங்கியது.

"ஹே... என்னாச்சு விஷ்வா? எது காரம்?"

"....."

"விஷ்வா... என்ன ஆச்சு?"

" Thanks Mahi"

எழுந்து சென்று அவளை அணைத்துக் கொண்டாள் அவன்.

"என்ன இதெல்லாம்...சின்ன குழந்தை மாதிரி.."

"I feel home, Really...Thanks"

"It's okay.." அழகான நாயனத்தோடு அவள் சொல்ல, சிரித்தான் அவன்.

அன்றைய நாள் மெதுவாகக் கரைந்தது... அவர்களுக்காகவே நகர்வதுபோல. அருகிலிருந்த பூங்காவில் சிறிதுநேரம் உலவினர்.

"விஷ்வா... ஓடிப் பிடிச்சு விளையாடலாமா?"

"என்ன வயசு உனக்கு? பத்தா பன்னெண்டா?"

"ப்ளீஸ் விஷ்வா..." அவள் கெஞ்சிக் கேட்க, அவன் தலையை மறுப்பாக அசைத்துக் கொண்டே நிற்க... ஒருவழியாக அவனை சம்மதிக்க வைத்து, "Come catch me!" என்று கூவிவிட்டு ஓடத் தொடங்கினாள்.

விஷ்வாவோடு அங்கே விளையாண்டு கொண்டிருந்த நாலைந்து சிறுவர்களும் சேர்ந்துகொண்டு அவளைப் பிடிக்க ஓடி வந்தனர். சிரிப்பும் கும்மாளமுமாய் அவர்கள் விளையாட, மஹியின் முகமெல்லாம் பூரித்தது. பின் அடுத்த சுற்றில் விஷ்வாவை அனைவரும் துரத்தினர். அவன் திரும்பித் திரும்பிப் பார்த்துக்கொண்டும் சிரித்துக்கொண்டும் துள்ளி ஓடினான். அவனை சீக்கிரமே சிறுவர்கள் பிடித்துவிட்டனர். பிடித்ததோடு மட்டும் நில்லாமல் அவனைக் கீழே தள்ளி ஆர்ப்பரித்தனர்.

எல்லோரும் சிரித்து சிரித்துக் கண்ணில் நீரே வந்தது. சிறுவர்களுக்கு ஐஸ்கிரீம் வாங்கித் தந்துவிட்டுத் தாங்களும் வாங்கிக்கொண்டு வீட்டிற்கு நடந்தனர் இருவரும். அவர்கள் வீடு சேர்கையில் வானம் இருட்டத் தொடங்கியிருந்தது.

Continue Reading

You'll Also Like

53.4K 2.9K 54
அவன் அந்த கல்லூரியின் *டான்* என்று பெயர் பெற்றவன். அந்த கல்லூரி பெண்களின் கனவு நாயகன். அவனது கடைக்கண் பார்வைக்காக பெண்கள் தவம் கிடந்தார்கள். அதே கல்...
59.3K 2.4K 36
காதலாகி, காதலாகி காத்திருந்தேன் நான். காலம் தந்த வேதனையை வென்று வந்தேன் உன் காதலால்,, நீயே என் உலகமென்று புரியவைத்தாய் கண்மணி உன் காதல் மொழியில். உ...
42K 1.2K 45
காதல் கலந்த குடும்ப நாவல் - எழுதியது : 2005 - வெளியீடு : 2010 - பதிப்பகம் : அருணோதயம் https://youtu.be/QmqC78hLg00?si=qApZATBpfOha7v3r
369K 12.2K 54
யாரோ ஒரு காட்டுமிராண்டி தன் விருப்பம் இல்லாமல், தான் அறியும் முன் தாலி கட்டியதாக நினைக்கிறாள் ஆனந்தி. கண் இமைக்கும் நொடியில் ஏறிய மூன்று முடிச்சினை அ...