மெய்மறந்து நின்றேனே

By Madhu_dr_cool

123K 5K 409

பெண்ணின் மனதைத் தொட்டு கண்ணாமூச்சி ஆடும் காதல்... காதலின் பரிணாமங்களை நாயகி மூலம் நாமும் அறிந்து கொள்வோம். More

கதையில்....
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42
44
45
46
47
48
49
50
51
52
Author's note

43

1.7K 85 7
By Madhu_dr_cool

விளையாட்டு

விஷ்வா தான் கூறியது எதுவும் அன்று அவளுக்குக் கேட்கவில்லை என்று தெரிந்ததும் வாய்விட்டுச் சிரித்தான்.

"பைத்தியமே! பேசினா எல்லா பிரச்சனையும் தீரும்னு சொல்லுவியே... ஒரு தடவை வந்து என்கிட்ட கேட்டிருந்தா, இல்ல திட்டியிருந்தாக் கூட உனக்குப் புரிஞ்சிருக்குமே! ஒரு வாரமா இத மனசிலயே வச்சுக்கிட்டு கவலைப் பட்டுகிட்டு இருந்தியா?"

"நீ எதுவும் பேசாம தலைகுனிஞ்சு நின்ன... அதான் நான் நெனைச்சது கரெக்டுன்னு புரிஞ்சுக்கிட்டேன்"

"உங்கிட்ட மொதல்ல சொல்லலன்னு லேசா வருத்தமா இருந்தது... அதான். அதுக்கப்றம் என்னை பேச விட வேண்டாமா?"

"நீ ஏதோ சமாதானம் சொல்றன்னு நெனைச்சேன்"

"சுத்தம்!"

வாய்விட்டு அவன் சிரிக்க, அவள் தலைகவிழ்ந்து அமர்ந்திருக்க, அவள் திமிறினாலும் அவளை விடாமல் அணைத்துக் கொண்டான் அவன். முகமெல்லாம் முத்தமிட்டு தன் அன்பைக் கொட்டினான்.

"ப்ச், விஷ்வா! விடு என்னை. எனக்கு இதெல்லாம் வேணாம்.."

அவனது பிடியிலிருந்து அவள் தப்ப முயன்று கொண்டிருந்தபோது மருத்துவர் வந்தார்.

"Excuse me, she's a patient"

"Uh.. sorry doctor. Please.."
வழிவிட்டு ஒதுங்கி நின்றான் அவன். முகத்தில் அசட்டுச் சிரிப்பு.

"How are you feeling Miss....Mahima?"

"I'm good, doctor. We'll get going"

"Sure. Sign these papers and you're good to go"

"Thanks, doctor"

அவர் காட்டிய தாள்களில் கையொப்பமிட்டு, தன் உடமைகளை சரிபார்த்து எடுத்துக்கொண்டு, அங்கிருந்து கிளம்ப எழுந்தாள். சோர்வாக இருந்ததால் கால்கள் தள்ளாடின. அவளை விழாமல் பிடித்தவன், அப்படியே அவளைத் தூக்கிக் கொண்டு நடந்தான்.

"விஷ்வா... இது ஹாஸ்பிடல். எல்லாரும் என்ன நினைப்பாங்க? இறக்கிவிடு..."

"யார் என்ன நெனைச்சா எனக்கு என்ன, உனக்கு என்ன, நமக்கு என்ன?"

"நீ எங்கிட்ட பேசாத... இந்த வாரம் முழுக்க ஒரு நாள் கூட என்கிட்ட ஒழுங்காப் பேசல.. என் முகத்தைக் கூட பாக்கல.. நானா பேசினாத் தான் பேசுவியோ?"

"நீ எதுக்கு கோபப்படறன்னே தெரியாம நான் என்னன்னு பேசறது? நான் தானே எப்போதும் வந்து சாரி கேப்பேன். ஒருதடவை நீ கேக்க மாட்டயா?"

"நான் என்ன தப்பு பண்ணினேன்? நான் எதுக்கு ஸாரி கேட்கணும்?"

"சரிதான்... வீட்டுக்கு வா... அங்க சொல்றேன்!"

டாக்சி பிடித்து வீட்டிற்கு வந்தனர் இருவரும். உள்ளே நுழைந்தவுடன் அவளை இழுத்து அணைத்து முத்தமிட்டான் அவன். அவளது பிடிவாதத்தை ரசித்தவாறே இடையோடு கைவைத்து அவளைத் தன்னோடு சேர்த்துக் கொண்டான்.

மஹிமாவுக்கு உலகம் தலைகீழாக சுற்றுவதுபோல் இருந்தது. அவனது திடீர் அன்பின் காரணம் புரியாமல் விழித்தாள் அவள்.

"என்னது இதெல்லாம்?"

"நீ தரையில் விழுந்து கிடந்தப்போ எப்படி பயந்துட்டேன் தெரியுமா... நீ என்னை விட்டுப் போயிடுவ... உன்ன அதுக்கப்றம் பாக்கவே முடியாதுன்னு எல்லாம் நெனைச்சு அரண்டுட்டேன்"
முத்தங்களுக்கிடையில் மூச்சோடு அவன் வார்த்தைகள் காதில் விழுந்தன.

"மஹிமா...நான் அந்த flower shopல வேலைதான் பாக்கறேன். நான் வேலைக்கு போறத உன்கிட்ட சொன்னா நீ ஃபீல் பண்ணுவன்னு தான் சொல்லல. நீ என்னை நம்பறதும் நம்பாததும் உன் இஷ்டம்"

"விஷ்வா... நான் உன்னை சந்தேகப்பட்டிருக்கக் கூடாது. ஐம் சோ ஸாரி விஷ்வா.."

"ம்.. மேடத்துக்கு இப்பவாச்சும் சந்தேகம் தெளிஞ்சதா? நான் உத்தமன்னு புரிஞ்சதா?"

"ம்.. இப்ப கன்ஃபார்ம். நீ என்னோட விஷ்வா. என்னோடவன் மட்டும்தான்"

இறுக்கமாக அவனை அணைத்துக்கொண்டு அவனுள் அடங்கிப்போனாள் அவள்.

---------------

மறுநாள் மஹிமாவின் கல்லூரிக்கு விஷ்வாவும் வந்தான். அவள் எத்தனை முறை கெஞ்சியும் அவன் அசருவதாய் இல்லை. அவளுக்காகக் காத்திருந்த நண்பர்கள் அவனைக் கண்டதும் வியப்போடு பார்த்தனர்.

"விஷ்வா..இவங்க என்னோட க்ளாஸ்மேட்ஸ்" என்று ஒவ்வொருவராக அவனிடம் அறிமுகம் செய்து வைத்தாள். அவன் பதிலுக்கு ஒரு புன்னகை மட்டும் செய்தான்.

ஜஃபீனா அவள் காதருகில் வந்து,
"ஹே..உன் ஆள் செம்ம handsome. வீட்டுக்குப் போய் சுத்திப்போடு, கேட்டியா" என்று கிசுகிசுத்தாள். மற்றவர்களும் சிரித்தனர்.

அவளோ பதற்றத்துடன் அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள். அவன் வந்ததன் காரணம் அவளுக்குத்தானே தெரியும்!

"சரி நீங்க போங்க, க்ளாஸ்க்கு லேட்டாகுது" என்று அவர்களை அனுப்பினான் விஷ்வா. மஹிமா அவனைத் திரும்பித் திரும்பிப் பார்த்தவாறே சென்றாள்.

மஹிமா சொன்ன அடையாளங்களைக் கொண்ட ஒருவன் தன் நண்பர்களோடு வர, அவனை உற்றுப் பார்த்து ஊர்ஜிதப்படுத்திக் கொண்டான் விஷ்வா. அவனருகில் சென்று, "You hit my girlfriend yesterday?" என்றான்.

அவன் அலட்சியமாகத் திரும்பி,
"Who the heck are you? Go away!" என்றான்.

விஷ்வா அமைதியாக நின்றான். அவர்கள் சென்று வேறொரு ஆப்பிரிக்க-அமெரிக்கப் பெண்ணை தொல்லை செய்யத் தொடங்க, அதுவரை பொறுத்திருந்த விஷ்வா அவனையும், உடனிருந்த நான்கு பேரையும் சரமாரியாக அடித்து உதைத்தான். அவர்கள் நடக்கவே முடியாத அளவிற்கு பலவீனமான பின்னர் காவல் அதிகாரிகளிடம் ஒப்படைத்தான்.

"You should not have beat them up, young fellow" என்று அந்தக் காவலர் கறாராகக் கூற, மூச்சு வாங்கிய விஷ்வா, "Anything for my girl" என்று பதிலளித்துவிட்டு நகர்ந்தான்.

அன்று மதியம் நடந்ததை எல்லாம் அறிந்துகொண்ட மஹிமா, நேராக அவன் இருந்த கடைக்கு ஓடினாள். அவள் வருவதைப் பார்த்து அவனும் தன் கையிலிருந்த பூச்செண்டை வைத்துவிட்டு வந்தான். வந்தவள் அவனைத் தழுவிக்கொண்டு, காயங்கள் ஏதேனும் இருக்கிறதா என்று ஆராய்ந்தாள்.

கையில் சிறியதாக சிராய்த்திருந்தது. அதைக் கண்டதும் துடித்தாள் அவள்.

"என்ன விஷ்வா..கையில அடிபட்டிருக்கு, நீ எதுவே பண்ணாம இருக்க? மருந்து போடலைன்னா பெருசாயிடும்.."

அவன் சன்னமாக சிரித்தான்.
"அதெல்லாம் நான் பாத்துக்கறேன். நீ சாப்டுட்டு வீட்டுக்குப் போ"

"விஷ்வா..."

"மஹி, எனக்கு நிஜமா ஒண்ணும் ஆகலை. நாம வீட்ல பேசிக்கலாம். நீ பத்திரமா வீட்டுக்குப் போ.."

மஹிமா அவனைப் பிரிய மனமின்றி வீட்டுக்கு வந்தாள். தனக்காக இவ்வளவு செய்பவனுக்குத் தன்னால் என்ன தர முடியுமென சிந்தித்தவாறே கூடத்தில் அமர்ந்திருந்தாள் அவள். அவளது கண்கள் பனித்தன.

கண்களைத் துடைத்துக்கொண்டு சுவரில் மாட்டியிருந்த நாள்காட்டியை எதேச்சையாகப் பார்த்தபோது, மஹிமா  திடுக்கிட்டாள்.

இன்னும் இரண்டு நாட்களில்...

Continue Reading

You'll Also Like

3K 373 11
இளம் பெண்களின் கனவு நாயகனாய் இருந்தவன் தான் இனியவன். அது முன்பிருந்த நிலைமை. ஆனால் இப்பொழுது, அவன் அருகில் செல்லவே எல்லோரும் அஞ்சுகிறார்கள். அவனுக்கு...
95.2K 2.9K 63
புவியில், அவள் பிறந்த அன்றே , தாய் தந்தையை அறிந்தது போல் கணவனையும் சேர்த்தே அறிந்துக் கொள்ள.. தன் சகோதரியின் கருவறையில் இருக்கும்போதே, அவளை மனைவியா...
53.4K 2.9K 54
அவன் அந்த கல்லூரியின் *டான்* என்று பெயர் பெற்றவன். அந்த கல்லூரி பெண்களின் கனவு நாயகன். அவனது கடைக்கண் பார்வைக்காக பெண்கள் தவம் கிடந்தார்கள். அதே கல்...
108K 3.4K 44
ஹாய் டியர்ஸ் இது என்னோட நாலாவது தொடர்கதை. இந்த கதையில தன் அக்காவின் திருமணத்தில் மகிழ்ச்சியாக கலந்து கொண்டிருந்தவள் திடீரென தானே மணப்பெண்ணாக மாறிப் ப...