மெய்மறந்து நின்றேனே

By Madhu_dr_cool

123K 5K 409

பெண்ணின் மனதைத் தொட்டு கண்ணாமூச்சி ஆடும் காதல்... காதலின் பரிணாமங்களை நாயகி மூலம் நாமும் அறிந்து கொள்வோம். More

கதையில்....
1
2
3
4
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42
43
44
45
46
47
48
49
50
51
52
Author's note

5

2.5K 116 3
By Madhu_dr_cool

அன்பு - வம்பு

அன்று ஸ்பெஷல் க்ளாஸ் முடிந்து நால்வரும் பள்ளிக்கு வெளியே இருந்த பேருந்து நிறுத்தத்திற்கு நடந்து வந்துகொண்டிருந்தனர்.

வேணியும் ஜோஷியும் ஒரே குடியிருப்புப் பகுதியில் வசித்தனர். இருவரும் அவர்கள் ஏற வேண்டிய பேருந்து முதலில் வந்ததால் ஏதும் பேச நேரமின்றி, கைகாட்டிவிட்டு ஏறிக் கொண்டனர். காலையில் தான் கேட்டபோது விஷ்வா பதில் சொல்லாமல் இருந்தது மஹிமாவை என்னவோ செய்தது.

சில நிமிடங்கள் மவுனத்தில் கழிய, அவர்கள் ஏறவேண்டிய பேருந்து வந்தவுடன் விஷ்வா ஏறிச்சென்று இடம் பிடித்தான். காலையில் பள்ளிப் பேருந்தில் வந்தாலும், மாலை எப்போது வகுப்பு முடியுமென்று தெரியாததால் அரசுப் பேருந்துகளில் தான் அதிக நேரம் செல்வர்.

மஹியின் தந்தையும் அவள் அதுபோல் பொது போக்குவரத்து வசதிகளை உபயோகிப்பதை ஊக்குவித்தார். அப்போது தான் நாட்டுநடப்பு பற்றி அதிகம் தெரிந்துகொள்ளலாம் என்றும் அவர் சொல்வார். மஹிமாவிற்கும் நண்பர்களுடன் கூடுதலாகச் செலவிடும் நேரம் பிடித்திருந்தது.

வானம் மெல்லச் சிவந்து பின் இருட்டத் தொடங்கியது. விஷ்வா ஜன்னல் வழியே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான். மஹிமா வெளியே பார்ப்பது போல அவன் முகத்தைப் பார்த்தாள். சலனமற்றதாய் இருந்தது அவன் முகம். கண்களில் தெருவிளக்கு வெளிச்சம் பட்டுப்பட்டு ஏதோபோல ஜாலம் காட்டியது.

தாங்காமல் கேட்டுவிட்டாள் அவள்.

"ஏன் விஷ்வா?"

"ஹ்ம்ம்...என்ன?"

"ஏன்? எனக்கு பதில் சொல்லு!"

"என்னது மஹி?"

"எப்படி உன்னோட காதல் கவிதை எல்லாம் அவ்ளோ யதார்த்தமா, உண்மையா இருக்கு? நீயா feel பண்ணி எழுதுவியா? யாரையாச்சும் லவ் பண்றயா என்ன? யாரு, நம்ம ஸ்கூலா? ஜோஷிக்குத் தெரியுமா? எங்ககிட்ட ஏன் சொல்லல?"

மௌனம் கனத்தது.... இடையிடையே வண்டியின் ஹாரன் சத்தம் மட்டும்.

விஷ்வா நீண்ட நேரம் கழித்து வாய் திறந்தான்.

"நம்ம வாழ்க்கைல சில பக்கங்களாவது நமக்கானதா இருக்கணும் மஹி"

--------------------

நண்பர்களுக்குள் எப்போதும் மனத்தாங்கல் இருக்காது. வந்தாலும், அனைவரும் பேசிச் சிரிக்கையில் அது கரைந்துவிடும்.

அன்றும் அப்படித்தான் நடந்தது. மஹிமா புரிந்துகொண்டாள்.

அவரவருக்கு என்று சில பக்கங்கள் .. அவனிடமும் நிறைய ரகசியங்கள் உள்ளது. நம்மிடம் அதைச் சொல்லவேண்டிய அவசியமில்லை அவனுக்கு. அதேபோல நாமும் சொல்லத் தேவையில்லை.

நண்பர்கள் மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்பினர். வழக்கமான சிரிப்பும், கிண்டல்களும், சண்டைகளும், சீண்டல்களும் மீண்டும் தொடங்கின.

டிசம்பர் மாதம் பொதுத்தேர்வு அறிவிப்பு வந்தது.

"டேய் விஷ்வா, நோட்டீஸ் போர்டு கண்டோ?? எக்ஸாம் டைம்டேபிள் வந்நூ!!" என்றவாறே ஜோஷி வகுப்பிற்குள் பதற்றமாக நுழைய, விஷ்வா தலையை மட்டும் ஆட்டினான்.

"எல்லாமே நாம எழுதற சாதாரண எக்ஸாம் மாதிரித் தான். படிச்சதை எழுதப் போறோம்.. டென்ஷன் வேண்டா ஜோஷிமோனே!" என்றாள் மஹிமா.

வேணியைத் திரும்பிப் பார்த்த மூவரும், "தாயே வேணி.. உங்களைத் தான் நம்பி இருக்கோம்.." என ஒரே கோரஸில் கைகூப்ப, அவள் வாய்விட்டுச் சிரித்தாள்.

"சரி சரி, ஸ்பெஷல் க்ளால் முடிச்சிட்டு கொஞ்ச நேரம் சொல்லித் தர்றேன்.."

ஐந்து மாதங்களில் பொதுத்தேர்வு வந்தது. அட்டவணை மோசம். இடைவேளை இல்லாமல் படிக்கத் தொடங்கியதால் நண்பர்கள் சந்திப்புகள் குறைந்தது. தேர்வுகளுக்கு முன்னால் சந்தித்துக்கொண்டு 'ஆல் தி பெஸ்ட்' கூறிட மட்டுமே நேரமிருந்தது.

தேர்வு விடுமுறையில் ஜோஷி தன் தாத்தா வீட்டிற்கு கேரளா சென்றுவிட்டான். வேணி தன் பெற்றோர் மற்றும் தம்பியுடன் வெளிநாட்டுச் சுற்றுலா சென்றிருந்தாள். விஷ்வாவும் குடும்பத்துடன் அவர்கள் பூர்வீகமான திருநெல்வேலி சென்றிருந்தான்.

மஹிமாவிடம் அவள் தந்தை ஐந்தாறு சுற்றுலா கம்பெனிகளின் brochureகளைக் கொடுத்து எங்கே செல்வது எனக் கேட்டபோது, அவள் கம்ப்யூட்டர் பயிற்சி வகுப்பு ஒன்றில் சேரப்போவதாகவும் அதனால் எங்கும் வரவில்லை எனவும் சொல்லிவிட்டாள்.

"ஏன்மா? இந்த ரெண்டு மாசம்தான் ஜாலியா இருக்க முடியும். அப்றம் காலேஜ் வேலை அது இதுன்னு பிஸி ஆய்டுவீங்க. இப்ப என்ஜாய் பண்ணினா தான் உண்டு"

"இல்லப்பா... ப்ரெண்ட்ஸ் எல்லாம் அவங்கவங்க ஃபேமிலியோட அவங்கவங்க ஊருக்குப் போய்ருக்காங்க...நம்ம என்ன... நீங்க, நான்... அவ்ளோ தானே... தேவையில்லாம உங்க வேலையும் தடைப்படும். வேண்டாம்பா"

அதற்குமேல் அவர் ஏதும் பேசவில்லை. இன்னும் தங்களை ஒரு குடும்பமாக உணர வைக்க முடியவில்லை என்ற வருத்தம் வந்தது அவருக்கு.

மற்ற விடுமுறைகளின்போது அவளது நண்பர்கள் உடனிருந்ததால் அவளுக்குப் பெரிதாக எதுவும் தெரிவதில்லை. அவர்கள் இல்லாததால் தான் வாழ்வே வறண்டதுபோல் இருந்தது அவளுக்கு.

அதை விடுத்து, தனிமையை productive ஆக செலவிட நினைத்தாள். அதோடு தன் கதையை எழுதத் தொடங்கவும் எண்ணினாள். காலையில் யோகா வகுப்பு. பின் கம்ப்யூட்டர் பயிற்சி, மாலையில் பங்கஜம் அம்மாளோடு கோவில், பஜனை,பாடல் என்று நேரம் போனது. எப்போதாவது நண்பர்கள் யாரேனும் ஃபோன் பண்ணி கதை பேசுவார்கள். அவர்கள் பேசும் நேரமெல்லாம் ஏக்கம் மனதில் சூழும் அவளுக்கு.

ஒரு நாள் கோவிலுக்குச் சென்று திரும்பி வரும்போது, ஒரு காதல் ஜோடியைக் கண்டாள். கோவில் பிரகாரத்தில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தவர்களை சற்று நின்று கவனித்தாள்.

"டேய்...என்ன உனக்கு எவ்ளோ புடிக்கும்?"

"ம்... உனக்காக என்ன வேணுனாவும் செய்வேன்டி. அவ்ளோ புடிக்கும்"

"என்ன வேணுன்னாலும் செய்வியாடா?"

"ம்ம். உனக்காக சாக சொன்னாக் கூட சந்தோஷமா செத்துப் போவேன்"

அவன் சொன்னதும் வாயைப் பொத்திய அந்தப் பெண்,
"ஏன்டா அப்டிலாம் பேசற.. உங்கூட நூறு வருசம் வாழணும்டா" என்று அவன் தோளோடு சாய்ந்துகொண்டாள்.

பார்த்துக் கொண்டிருந்த மஹிமா புல்லரித்துப் போனாள்.

'சே..... காதல்னா இதுதான்... இவ்ளோ அழகான காதல்... இதுபோலத்தான் நம்ம கதை இருக்கணும்'

முடிவெடுத்துவிட்டவளாய் மஹிமா விறுவிறுவென நடந்து வீட்டிற்கு வந்தாள். தன் நோட்டை எடுத்து எழுதத் தொடங்கினாள்.

காதல் அழகானது. காதலர் யாவும் அழகு. அவர்களுக்கு சாதிமத பேதங்கள் ஏதும் இல்லை. எவ்வித வித்தியாசம் இருந்தாலும் அவற்றைப் புறக்கணித்து, இதயம் ஒன்றை மட்டுமே பார்த்து வரும் உணர்வு காதல். காதல் செய்வதற்கும் மாதவம் செய்திட வேண்டும்போல...

இன்னும் நான்கு பக்கங்கள் எழுதிய பின்னர் நிமிர்ந்தாள். ஏதோ சாதித்தது போன்ற உணர்வு. சந்தோஷமாக சாப்பிட இறங்கிச் சென்றாள். அதற்குள் ராஜகோபாலும் வந்துவிட, அவரைப் பார்த்து புன்னகைத்துவிட்டு இருக்கையில் அமர்ந்தாள்.

"என்ன மஹிம்மா? முகமெல்லாம் பளிச்னு இருக்கு... என்ன விசேஷம்?"

"ஒன்னும் இல்லப்பா...ரொம்ப நாளா செய்யணும்னு நெனச்சிருந்த ஒரு வேலை... இன்னிக்கு ஸ்டார்ட் பண்ணிட்டேன்.. அதான்"

"Super da. That's the spirit!"

"போதும் போதும். சாப்பிட்டுட்டு அப்றம் பேசலாம்" என்றபடி வந்த பங்கஜம் அம்மாள் இருவருக்கும் பரிமாறினார்.

"நாளைக்கு ரிசல்ட் இல்ல?"

சாப்பிட்டபடியே ராஜகோபால் கேட்க, அவளும் தலையசைத்தாள்.

"ஆமாப்பா, காலைல ஒன்பது மணிக்கு ரிசல்ட் பப்ளிஷ் பண்றாங்க"

"சரிடா, நீ ரெஸ்ட் எடு. மனசை ஃப்ரீயா வச்சுக்கோ. எது வந்தாலும் பாத்துக்கலாம்.."

"ஓகே பா.. குட்நைட்.."

*****

Continue Reading

You'll Also Like

204K 5.4K 131
காதலால் கசிந்துருகி.. கரம் பிடித்த பெண்ணவளின் நேசம் பொய்யாக போனதில்... மென்மையான இதயம் கொண்டவன்... இரும்பு கவசம் அணிந்து பூட்டிக் கொள்ள... நாயகனின் வ...
150K 6.6K 63
எல்லாவற்றிலும் வித்தியாசத்தை விரும்பும் நாயகன்... உலகமே அறியாத நாயகி... அவர்கள் வாழ்வில் நடைபெறும் சுவாரசியங்களே ஒரு தொகுப்பாய்...இந்த கதை.
81K 2.5K 46
திருமணத்தையே வெறுக்கும் ஒருவனை விரட்டி விரட்டி ஒரு பெண் காதலிக்கிறாள்... அவளை ஏற்பனா இல்லை தள்ளி நிறுத்துவனா என்பதே இந்த கதை...