மெய்மறந்து நின்றேனே

Von Madhu_dr_cool

123K 5K 409

பெண்ணின் மனதைத் தொட்டு கண்ணாமூச்சி ஆடும் காதல்... காதலின் பரிணாமங்களை நாயகி மூலம் நாமும் அறிந்து கொள்வோம். Mehr

கதையில்....
1
2
3
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42
43
44
45
46
47
48
49
50
51
52
Author's note

4

2.7K 118 5
Von Madhu_dr_cool

கதை-விதை-கவிதை

இரவு வானில் பாதிநிலவு பூத்திருந்தது. மஹிமா தன் வீட்டு மாடியில் நின்று யோசனையில் ஆழ்ந்திருந்தாள்.

'விஷ்வாவிடம் அப்படிப் பேசியிருக்கக் கூடாதோ...?'

'ப்ச்.. எப்போதும் எல்லா நேரத்திலும் நம்மைப் பற்றி அவனிடம் சொல்ல வேண்டுமா? நமக்கென்று தனியான ரகசியங்கள் இருக்கக் கூடாதா?'

'அவன் நம் நண்பன் தானே? அவனுக்குத் தெரிந்தால் என்ன?'

'அட.. கதையை எழுதிவிட்டு அவனிடம் காட்டிவிடலாம். என்ன இப்போது!?'

மனதுக்குள் வாக்குவாதம் செய்தவாறே பால்கனியில் நின்று நிலாவை ரசித்தவளை, பங்கஜம் அம்மாள் வந்து சாப்பிட அழைத்தார். வேண்டாம் என்று சொல்ல மனதின்றி அவருடன் சாப்பாட்டு மேசைக்குச் சென்றாள் படியிறங்கி.

"உனக்குப் புடிக்கும்னு தோசையும் கொத்துமல்லி சட்னியும் செஞ்சேன் பாப்பா.. மூணு தோசையாச்சும் சாப்பிட்டே ஆகணும், ஆமா!!"

"மூணுக்கெல்லாம் இடம் இல்ல பங்கஜம்மா! ஒண்ணு போதும்!!"

"ப்ச்.. தட்டைத் தொடறதுக்கு முன்னாலவே போதும்னு சொல்லக் கூடாது. பேசாம சாப்பிடு!"

சரியாக முதல் விள்ளல் தோசையை சட்டினியில் நனைத்து வாயருகே கொண்டு செல்கையில் லேண்ட் லைன் அலைபேசி அடித்தது. எழ எத்தனித்தவளைப் பார்வையால் அடக்கி அமரச் செய்துவிட்டு, பங்கஜம் அம்மாள் சென்று அதை எடுத்தார்.

ராஜகோபால் தான் மும்பையிலிருந்து அழைத்திருந்தார். ஓரிரு வார்த்தை பேசிவிட்டு பங்கஜம் வந்து மஹிமாவிடம் அலைபேசியைக் கொடுத்தார். இடது கையால் வாங்கிக் காதில் வைத்தாள் அவளும்.

"ஹலோ அப்பா.."

"மஹிம்மா...என்னடா பண்றே?"

"சாப்பிட உட்கார்ந்தேன்பா. கரெக்டா நீங்க கூப்டறீங்க"

"ஹ்ம்ம்... எப்டி போச்சு இன்னிக்கு ஸ்கூல்?"

"ம்ம்.. நல்லா போச்சு பா"
குரலிலிருந்த தொய்வு கவனிக்கப்பட்டது.

"ஏன்டா...எதும் பிரச்சனையா?"

"சேச்ச.... சரி, நீங்க எப்டி இருக்கீங்க, எப்போ வருவீங்க?"
பேச்சை மாற்ற முயன்றாள் அவள்.

"இன்னும் நாலு நாள்மா... அப்பா வந்துர்றேன். சரி, வரும்போது உனக்கு என்ன வாங்கிட்டு வர்றது?"

"ஹாஹாஹா.. நம்ம ஊர்ல கிடைக்காததா எதாவது இருந்தா வாங்கிட்டு வாங்க!"

"அப்ப நான் இண்டியா கேட்டைத் தான் வாங்கிட்டு வரணும்!"

"எனக்கு ஓகே!"

"ஹாஹா!! இப்ப ஒரு மீட்டிங் இருக்கு. அப்பா போகணும்டா. அப்பறமா பேசலாம். பத்திரமா இரு மஹிம்மா.. நான் சீக்கரம் வந்துடறேன்!"

"சரிப்பா...take care!"

"ஓகே ம்மா.. பைய்.."

"பைய் பா"
ஒரு பெருமூச்சு அவளையும் அறியாமல் எழுந்தது. அலைபேசி அணைந்ததை 'கிர்ர்ர்' என்ற மின்னொலி காட்ட, அதை பங்கஜம் அம்மாளிடம் தந்துவிட்டு மீண்டும் சாப்பிடத் தொடங்கினாள். இம்முறை மனதில் அப்பாவின் நினைவுகள்.

அமைதியாக உணவருந்திவிட்டு, தன் அறைக்குச் சென்றாள் மஹி. அவளது அமைதி பங்கஜம் அம்மாளைத் துணுக்குறச் செய்தது.

எப்போதும் கலகலப்பாக இருப்பாளே... என்ன ஆச்சு இவளுக்கு?

-------------------

மறுநாள்

வழக்கம்போல் வாழ்க்கை நகரத் தொடங்கியது. விஷ்வா அவளிடம் ஏதும் கேட்கவில்லை. வகுப்புகள், அரட்டைகள், வீட்டுப்பாடங்கள் என இயல்பாகவே எல்லாம் நடந்தது.

மதிய உணவு இடைவேளை. ஜோஷி சொன்ன ஏதோ ஒரு நகைச்சுவைக்கு மூவரும் சிரித்துக் கொண்டிருந்தனர். அப்போது பேச்சு "காதல், கல்யாணம்" என்று திரும்பியது.

ஜோஷி தான் ஆரம்பித்தான்.
"கோ-எட் ஸ்கூல் என்னுதான் பேரு, பச்சே லவ்வும் சைட்டிங்கும் ஒண்ணு செட்டாகிட்டில்லா! காணுன்ன பெண்ணுகள் எல்லாம் சேட்டன்னு விளிச்சால், ஞான் எங்கணே அவரெ செட் செய்யும்?"

கொல்லென்று சிரித்தனர் அனைவரும்.

"ஏன்டா ஜோஷி.. உன் சின்ன இதயத்துக்குள்ள இவ்ளோ ஆசையா? சரி, சேட்டா-ன்னு கூப்பிடாத பொண்ணு கிடைச்சா, லவ் பண்ணுவியா?"

"பின்னே!? எண்ட அச்சனும் அம்மையும் போல எனிக்கும் லவ் ஸ்டோரி வேண்டே??"

மஹிமா உடனே, "இதுக்கு முன்னாடி யாரையாச்சும் லவ் பண்ணி இருக்கியா?" என்றாள்.

"ஆஹ்....நாலு தடவெ!!! நித்யா மேனன், தீபிகா படுகோன், நஸ்ரியா நஸிம், ஆலியா."

மீண்டும் வெடிச் சிரிப்பு.

"அட பைத்தியமே!?"

மஹிமா, தன் மனதில் இருந்ததைக் கேட்கத் துணிந்தாள்.

"ஆமா...அது எப்படி ஒருத்தரைப் பார்த்ததும் லவ் வருது? எப்படி அந்த உணர்ச்சியை லவ்னு கண்டுபிடிக்கறோம்? என்னென்ன symptoms இருக்கும்?"

மூவரும் சிரிக்கத் தொடங்க, மஹிமா விழித்தாள்.
"ஏன்? என்னாச்சு?"

"இதென்ன நோயா? Symptoms எல்லாம் சொல்றதுக்கு? என்ன மஹி நீ?" கேட்டுவிட்டு மீண்டும் சிரித்தாள் வேணி.

"சரி, நம்ம யாரும் லவ் பண்ணினது கிடையாதுதானே. அப்றம் எப்டி அதைப் பத்தி உங்களுக்குத் தெரியும்?"

"ம்... எல்லாத்தையும் அனுபவிச்சு பார்த்துத் தெரிஞ்சுக்கணுமா என்ன? அதான் பாக்குற எல்லா மீடியாவுலயும் மீட்டர் கணக்குல ஓட்டறாங்களே காதலைப் பத்தி!? டிவி, சினிமால ஆரம்பிச்சு,  இப்பல்லாம் முப்பது செகண்ட் விளம்பரம் முதல்கொண்டு ஒரு பையனையும் பொண்ணையும் சேர்த்து வைச்சுத்தான் எடுக்கறாங்க! அதைவிடு, இந்த மேகஸின்லாம் இருக்கே.. வாரா வாரம் கடமை தவறாம கிசுகிசு எழுதியே காசு சம்பாதிக்கிறாங்க! இப்பல்லாம் ரெண்டு வயசுக் குழந்தைக்குக் கூட, 'பாய்ஃப்ரெண்டு- கேர்ள்ஃப்ரெண்டு'ன்னு ஸ்கூல்லயே சொல்லிக் குடுக்கறாங்க தெரியுமா?"

வேணியின் குரலில் ஆற்றாமையும் ஆயாசமும்.

ஜோஷியும் தலையாட்டி, "மலையாள சினிமாக்களாணும், பிரணயத்தின்டே ஆத்யம்! காணுன்ன எல்லா லவ் ஸ்டோரிகளும் அடிபோளி!" என சிலாகித்தான்.

"அதுதான் காதலா என்ன? பூ கொடுக்கறது, கிஸ் பண்றது, பாத்துப் பாத்து சிரிச்சுக்கறது..." அவள் குரலில் லேசான ரசனையின்மை தெரிந்தது.

அவ்வளவு நேரம் அமைதியாக இருந்த விஷ்வா பேசத் தொடங்கினான்.
"அதுமட்டும் காதல் கிடையாது... ஆனால் அதுவும் காதல்ல ஒரு பகுதி. அன்பின் வெளிப்பாடு."

உறுத்துப் பார்த்த அவன் பார்வையில் என்ன இருந்ததெனத் தெரியவில்லை.

"அடிபொளி... பச்சே, விஷ்வாவொடே பார்யாவுக்கு கஷ்ட காலம். ஓள் ஏதெங்கில் கிப்டுகள் வேண்டுமென்னால் இவன் கவிதை எழுதியே சமாளிப்பானே.."

ஜோஷி சொன்னதைக் கேட்டு எல்லோரும் சிரித்தனர்.

மஹிமா இப்போது நேரடியாக விஷ்வாவிடம் கேட்டாள்.
"ஆமா, நீ காதல் கவிதை எல்லாம் நிறைய எழுதுவியே விஷ்வா, அதெல்லாம் எப்படி? தானா ஃபீல் பண்ணாம, மத்தவங்களைப் பார்த்து எழுதினா அந்தக் கவிதை எப்டி அவ்ளோ realistic-ஆ இருக்கும்?"

விஷ்வா பதில் பேசவில்லை. இருநொடி மௌனம் காக்க, அதற்குள் இடைவேளை முடிந்து மணி அடிக்க, அனைவரும் கலைந்தனர்.

மஹிமா மட்டும் அப்படியே அமர்ந்திருந்தாள்.

பின்னால் அமர்ந்த விஷ்வாவைத் திரும்பி மீண்டும் கண்களால் அவள் வினவ, அவனோ அவள் பார்வையைத் தவிர்த்தான் வேண்டுமென்றே.

"வாழ்க்கைல சில பக்கங்கள் அவங்கவங்களுக்கானது மஹி"

Weiterlesen

Das wird dir gefallen

3.1K 381 11
இளம் பெண்களின் கனவு நாயகனாய் இருந்தவன் தான் இனியவன். அது முன்பிருந்த நிலைமை. ஆனால் இப்பொழுது, அவன் அருகில் செல்லவே எல்லோரும் அஞ்சுகிறார்கள். அவனுக்கு...
498K 16.8K 62
எதிர்பாரா திருமண பந்தத்தில் இணையும் இருவரது காதல் கதை..
369K 12.2K 54
யாரோ ஒரு காட்டுமிராண்டி தன் விருப்பம் இல்லாமல், தான் அறியும் முன் தாலி கட்டியதாக நினைக்கிறாள் ஆனந்தி. கண் இமைக்கும் நொடியில் ஏறிய மூன்று முடிச்சினை அ...
204K 5.4K 131
காதலால் கசிந்துருகி.. கரம் பிடித்த பெண்ணவளின் நேசம் பொய்யாக போனதில்... மென்மையான இதயம் கொண்டவன்... இரும்பு கவசம் அணிந்து பூட்டிக் கொள்ள... நாயகனின் வ...