வானாகி நின்றாய்(Completed)

By Preeja217

105K 4.8K 1.5K

நமது கதாநாயகனுக்கு‌ இரு தோழிகள். இருவரும் அவனைக் காதலித்தனர்.யார் காதல் ஜெயிக்கும்?? யார் காதல் தோற்றது?? யார... More

அறிமுகம்
கதாநாயகன்
கல்லூரி முதல் நாள்
கதிரின் முதல் நட்பு
முதல் கதாநாயகி
சுவாதி அறிமுகம்
இரண்டாம் கதாநாயகி
காதல் மலர்ச்சி
முதலாம் ஆண்டு விடுமுறை
லேட்ரல் என்ட்ரி
கதிருக்கு அட்வைஸ்
சுற்றுலா நேரம்
பெங்களூர் பயணம்
கம்பைன் ஸ்டடிஸ்
கதிர் சுவாதி காதல்
நிலாவின் முடிவு
கல்லூரி தினம்
கதிரின் பரிசு
நிலா தந்தை மரணம்
கதிர் சுவாதி சண்டை
நிலா லவ் பிரோபோஸ்
கேம்பஸ் இன்டர்வியூ
கல்லூரி கடைசி நாள்
இரண்டாவது பாகம்
கதிரின் நிலை
கதிர் ஃபிளாஷ் பேக்
காதலர் தின சர்ப்ரைஸ்
சுவாதி வருகை
கேள்வி - பதில்
நிலாவின் சமாதானம்
சுவாதி திருமண ஏற்பாடு
சுவாதி கதிர் சந்திப்பு
மருத்துவமனையில் கதிரின் நிலை
ஹேமாவின் வருகை
நிலா சுந்தர் சந்திப்பு
ஹேமாவின் பொய் கதை
நிர்மலா ஐபிஎஸ்
நிர்மலாவின் கதை
நிலாவிற்கு ஆறுதல்
ஹேமாவை கவர்ந்தவன்
நிர்மலாவின் சொந்தம்
நிலா தந்தை மரணத்தில் மர்மம்
நட்சத்திரா குழு
சுவாதி கதிர் சந்திப்பு
சுவாதி தந்தை கைது
நவீன் யார்???
கதிர்-நிலா காதல்
சுவாதி உடைத்த உண்மைகள்
கதிரின் முடிவு
ஹேமாவின் அறிவுரை
ஹேமாவின் கனவு
கதிரின் வேலை
நவீன் முடிவு
சென்னை பயணம்
சுவாதியின் மாற்றம்
நவீன் கேர்ல் ஃபிரண்ட்
மேரேஜ் ஷாப்பிங்
கதிர் நிலா திருமண ஏற்பாடு
திருமணத்திற்கு முந்தைய நாள்
கதிர் நிலா திருமணம்
எதிர்பாராத விருந்தினர்
சுவாதியின் பரிசு
சுவாதியின் உதவி
நவீன்-ஹேமா திருமணம்

நவீன் லவ் பிரோபோஸ்

1.4K 69 31
By Preeja217

நவீன் வேலை

ஹேமா வேறு ஒரு கம்பெனியில் வேலைக்கு சேர்ந்தாள்.அவள் வேலையில் சேர்ந்து நவீனை விட்டு கொஞ்சம் கொஞ்சமாக விலகத் தொடங்கினாள்..

நவீன எப்பொழுதும் சுவாதி, ஏஞ்சலினா மற்றும் கைலாஷுடன் பிஸியாக ப்ராஜெக்ட் வொர்க்கில் ஈடுபட்டிருந்தான்.. அவன் ஹேமாவை பார்ப்பதும் கிடையாது..நினைப்பதும் கிடையாது..

தன்னுடைய வேலை உண்டு என்று அதிலேயே மூழ்கி இருந்தான்...ஒருவழியாக அவர்கள் தங்கள் முதல் ப்ராஜெக்டை கம்ப்ளீட் செய்தனர் ..அப்பொழுது அவர்கள் பிராஜக்ட்டிற்கு ஆல் இந்தியா லெவலில் முதலிடம் கிடைத்தது..

அதற்குப் பிறகு நவீனுக்கு நிறைய புராஜெக்ட்கள் குவிய ஆரம்பித்தன.. அவனுடைய பிசினஸ் நல்ல நிலைமைக்கு வந்தது.நவீன் பிஸினஸில் பிஸியாக இருந்தான்...

அவனுடைய ட்ரீம் பிராஜக்டை ஒரு வழியாக டிஸைன் செய்தான்..அதற்கு நவீனுக்கு உலகளவில் வரவேற்ப்பு கிடைத்தது.. நவீன் அவனுடைய பிஸினஸில் கொடிகட்டி பறந்தான்...

நவீனின் திருமணத்தை பற்றி நிர்மலா அவர்கள் பேசத் தொடங்கினார்..

டேய் நவீன்!! இவ்வளவு நாள் பிசினஸ் பிசினஸ்னு ஓடியாச்சு.. இப்பதான் எல்லாம் உனக்கு செட் ஆகிடுச்சுல.. இனி உனக்கு கல்யாணம் பண்ணிடலாம் என்று நிர்மலா கேட்க..

உடனே நவீன் அம்மா!! எனக்கு ஒரு பொண்ணைப் புடிச்சிருக்கு.. நான் அந்த பொண்ண தான் கல்யாணம் பண்ணிக்கனும்னு ஆசைப்படுறேன்.. அதுவும் உங்களோட சம்மதத்தோட நடக்கணும் என்று அவனுடைய காதலை பற்றி நிர்மலாவிடம் தெரிவித்தான்..

ஹனிமூன்

கதிர் மற்றும் நிலா ஸ்விட்ஸர்லான்டில் தங்கள் வாழ்க்கையை தொடங்கினர்.. அவர்கள் அங்கு சில்லான் கேஸில் சுற்றி பார்ப்பதற்காக தயாராகி கொண்டிருந்தனர்.. கதிர் ஒரு வேலையாக வெளியே சென்றான்.. நிலா அறையில் தயாராகி கொண்டிருந்தாள்..

கதிர் திரும்ப வந்து பார்த்த போது நிலா அங்கு இல்லை..கதிர் , நிலா எங்கு சென்றாள் என்று அங்குமிங்கும் தேடி அலைந்தான்..கதிர் தன் வீட்டாரிடம் இதைப் பற்றி கூறவில்லை..

நிலா எங்கு தேடியும் கிடைக்கவில்லை என்பதால் போலிஸ் மற்றும் எம்பஸியின் உதவியை நாடினான்..அப்பொழுது அவர்கள் கூறிய விஷயம் கதிருக்கு அதிர்ச்சியை தந்தது..என்ன அது??

மறுபக்கம் இந்தியா...

சிறிது நாட்களுக்கு பிறகு...

நவீன் காரில் சென்று கொண்டிருந்த போது ஹேமா பஸ்சுக்காக வெயிட் பண்ணிக் கொண்டு இருப்பதைப் பார்த்தான்.. உடனே அவனுடைய காரை ஓரமாக நிறுத்தி ஹேமாவை காரில் வந்து உட்கார சொன்னான்..

ஹலோ பெப்பர்!! இஃப் யூ டோன்ட் மைன்ட் ,நான் உன்னை ட்ராப் செய்கிறேன் என்று அழைத்தான்..உடனே ஹேமா வேண்டாம்!! நானே பாத்துக்குறேன் ..நானே போறேன் என்று கூறினாள்..

உடனே நவீன் "அதெல்லாம் முடியாது.. நான் உன்னை ட்ராப் பண்றேன்.. பேக் சீட்டில் இடம் இருக்கு வா வந்து உட்காரு என்று அவளுக்கு டோரை ஓபன் செய்து கொடுத்தான்..அவளை முன் சீட்டில் இருந்த ஏஞ்சலினாவும் வற்புறுத்த ஹேமா யோசித்தபடியே பின் சீட்டில் அமைதியாக உட்கார்ந்தாள் ..

நவீன் ஏஞ்சலினாவுடன் சிரித்து பேசிக் கொண்டே சென்றான்..ஹேமாவிற்கு அப்பொழுது மிகவும் வருத்தமாக இருந்தது.. நவீன் தன்னை முற்றிலுமாக மறந்து விட்டான்..அவனை பொறுத்தவரை நான் கதிரின் தங்கை மட்டும் தான் என்று வருந்தினாள்..

அவளுக்கு அழுகை அழுகையாக வந்தது..ஆனால் அதை அடக்கி கொண்டாள்.. நவீன் ஹேமாவிடம் அப்புறம் பெப்பர் ஐயாவுக்கு சீக்கிரம் மேரேஜ் ஆகப் போகுது..மறக்காமல் வந்துடு என்ன?? என்றான்..

உடனே ஹேமா என்ன கல்யாணமா?? உனக்கா??என்று அதிர்ந்தாள்..இனி அவ்வளவுதான் நவீன் எனக்கு கிடைக்கவே மாட்டான் என்று வாய்க்குள் முனுமுனுத்த படி கண்ணில் தாரை தாரையாக கண்ணீர் வந்தது....

ஹேமாவால் அவர்களுடன் அதற்கு மேலும் இருந்து பயணிக்க முடியவில்லை.. எனவே ஹேமா நான் இறங்க வேண்டிய இடம் வந்துருச்சு.. ப்ளீஸ் ஸ்டாப்!! என்று சத்தமாக கூறினாள்..

உடனே நவீன் உன்னோட கம்பெனிக்கு இன்னும் கொஞ்சம் தூரம் போகனும் என் ஆபிஸ் பக்கத்துல தானே இருக்கு என்று கேட்டான்..உடனே ஹேமா "அதெல்லாம் உங்களுக்கு எப்படி தெரியும்?? நீங்கதான் பிஸியான பிசினஸ்மேன் ஆச்சே" என்று கேட்டாள்..

அதற்கு நவீன் அதெல்லாம் எனக்கு தெரியும் ..நிலா சொல்லியிருக்காள்.. உன்னோட கம்பெனி என்னோட கம்பெனி பக்கத்துல தான் இருக்குன்னு என்றான். சரி!! இப்போ நீ பேசாம உட்காரு.. என் கம்பெனி இன்ஆகுரேஷன் ஃபன்ஷன் இருக்கு.. அதை அட்டன்ட் பண்ணிட்டு உன் ஆபிஸுக்கு போ.. நான் எதுவும் சொல்லமாட்டேன் என்று அவளிடம் சொல்லிவிட்டு காரை மறுபடியும் ஸ்டார்ட் செய்தான்..

ஹேமா நவீனிடம் "அதெல்லாம் முடியாது..என் ஆபிஸுக்கு நான் போறேன் ..யூ ஹேவ் யூவர் கேர்ல் ஃபிரண்ட் வித் யூ .. அப்புறம் எதுக்கு நான் வரனும்" என்று பிடிவாதம் பிடித்தாள்..

நவீனும் சரி போ நானே உன்னை டிராப் பண்றேன் என்று ஒத்துக் கொண்டான்..ஹேமாவின் முகம் மாறுவதை நவீன் தன்னுடைய காரில் உள்ள மிரர் மூலம் நோட் செய்த படியே ஓட்டினான்..

ஹேமா கவனிக்காமல் இருக்க, நவீன் அப்படியே தன்னுடைய ஆபீஸுக்கு நேராக காரில் சென்றான்.. ஹேமா சத்தம் போட தொடங்கினால்..ஹலோ!!என்னோட கம்பெனி இது கிடையாது ..நீங்க உங்க கம்பெனிக்கு என்ன கூட்டிட்டு வந்திருக்கீங்க.. எனக்கு வேலை போனா.. இங்க வேலை போட்டுக் கொடுக்க போறீங்களா?? என்று எரிச்சலாக கேட்டாள் ..

உடனே நவீன் "நீதான் என்னோட கம்பெனிக்கு இதுவரைக்கும் வந்ததே கிடையாது.. என் மச்சானோட தங்கச்சி வேற..நீ ஒருவாட்டி என்னோட கம்பெனிக்குள்ள வந்து பாரு என்று உள்ளே அவள் கையை பிடித்து அழைத்து சென்றான்..

உள்ளே அவர்கள் இருவரும் செல்லும் போது ஊழியர்கள் அனைவரும் குட் மார்னிங் சார்!!குட் மார்னிங் மேடம்!! என்று அனைவரும் விஷ் செய்தனர்..

ஹேமா மனதிற்குள் இவர்கள் இருவருடைய ஏஞ்சலினா மற்றும் நவீன்) காதல் எல்லோருக்கும் தெரிந்திருக்கிறது போல..அதான் எல்லாரும் ரெண்டு பேரையும் சேர்த்து விஷ் பண்றாங்க என்று மனதில் நினைத்தவாறே சென்று கொண்டிருந்தாள்..

ஹேமா மனதிற்குள் அதான பாத்தேன் இவனெல்லாம் வெளிநாட்டில் படித்தவன்.. அவனுக்கு ஏத்த மாதிரி ஒரு பொண்ண தான் லவ் பண்ணுவான்..நம்மள மாதிரி லோக்கல்ல படிச்சவங்கல எல்லாம் எங்க திரும்பிப் பார்க்க போறான்..ஏஞ்சலினா தான் அவனுக்கு சரியான ஜோடி என்று மனதிற்குள் நினைத்தபடி சென்றாள்..

ஏஞ்சலினா அன்று பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருந்தாள்.. மார்டனாக இருந்தாள்..

ஆபிசில் உள்ள அனைவரும் இந்த பொண்ண தான் நம்ம சார் மேரேஜ் பண்ணிக்க போறாரு என்று அனைவரும் பேசியபடி நின்றனர்.. உடனே ஹேமா "ஓஹோ, மேரேஜ் வரைக்கும் நியூஸ் போயாச்சா??"..நடத்துடா நவீன் ...

என்னவோ நிலா கிட்ட நிறைய கனவுகள் இருக்கு கல்யாணமே வேண்டாம் என்றான்.. இப்போ கேர்ள்பிரண்ட் வந்ததும் எல்லாம் மறந்து விட்டது போல என்று ஹேமா மனதிற்குள் பதில் கூறியவாறு சென்று கொண்டே இருந்தாள்..

ஹேமா நவீனிடம் சார்!! இன்னும் எவ்வளவு தூரம் நடக்கணும் ..இவ்வளவு பெருசா கட்டிவைத்து இருக்கீங்க.. உங்களோடு ரூம் எங்க தான் இருக்கு என்று கேட்டாள்.. உடனே அவன் வெயிட்! வெயிட்! நான் இப்போ ஒரு இடத்துக்கு கூட்டிட்டு போறேன்..நீ அமைதியாக இருக்கனும் என்று ஏஞ்சலினா மற்றும் ஹேமாவை கான்ஃபேரன்ஸ் ஹாலுக்கு அழைத்துச் சென்றான் ..

அங்கு ஆபிஸில் உள்ள அனைத்து ஊழியர்களும் அமர்ந்திருந்தனர்..நவீன், ஹேமா மற்றும் ஏஞ்சலினாவை அருகில் நிறுத்தி பேசத் தொடங்கினான் ..

இப்போ நான் உங்க எல்லாரையும் கூப்பிட்டது ஒரே சந்தோஷமான விஷயத்தை சொல்றதுக்கு.. நான் என்னோட உட்பீயை இந்த வேளையில் உங்ககிட்ட இன்ட்ரொடியூஸ் பண்ண போறேன்.. அதுக்கு வேண்டி தான் உங்க எல்லாரையும் கூப்பிட்டேன் ..

அதுமட்டுமல்ல இந்த கம்பெனியில் இனி அவங்க தான் எம்.டி. ஆக இருக்கப் போறாங்க என்று அவன் சொல்ல..

ஹேமா மனதிற்குள் "இத சொல்றதுக்கு ஏன்டா என்னை இங்க கூட்டிட்டு வந்த.. நான் பாட்டுக்கு சிவனேன்னு தானே இருந்தேன்..நீ கல்யாணம் பண்ணிக்க போற பொண்ணு ஏஞ்சலினா என்று ஊருக்கே தெரியும் ..இத வேற நீ தனியா மைக் போட்டு அனௌன்ஸ் பண்ணனுமா போடா டேய்".. என்று நினைத்தாள்..

நவீன் ஹேமாவின் கையை பிடித்து "ஷீ இஸ் மை கேர்ல் ஃபிரண்ட் ஹேமா..நாங்க சீக்கிரம் மேரேஜ் பண்ணிக்க போறோம்" என்று சொல்ல ஹேமா..வாயை கை வைத்து மூடிய படி சர்ப்ரைஸாகி நின்றாள்.. ஹேமாவால் அந்த சர்ப்ரைஸை தாங்கவே முடியவில்லை..

அவள் கொஞ்சம் கூட நினைத்துப் பார்க்கவே இல்லை.. நவீனின் மனதில் அவள்தான் இருப்பாள் என்று.. அவள் அப்படியே ஒரு நிமிஷத்தில் ஷாக் ஆகி நின்றாள்.

உடனே அங்கு அனைவரும் கைதட்டினர்.. ஹேமா அதிர்ச்சியில் இருந்து வெளியே வந்தாள்..ஹேமா நவீனிடம் ரியலி!! ரியலி!! என்று திரும்பத் திரும்ப கேட்டாள்.. உடனே நவீன் யா, யா..வில் யூ மேரி மீ?? என்று கேட்டான்..
ஹேமா ஹ்ம்ம் என்று தலையாட்டினாள்..

அதே சமயம் சுவாதியும் உள்ளே வந்தாள்..அவள் சிரித்தபடியே அனைவருடனும் வந்து நின்றாள்..

நவீன் ஹேமாவிடம் "என்ன ஹேமா?? இந்த சர்ப்ரைஸ் எப்படி இருந்தது??" என்று கேட்க.. ஹேமாவிடம் வார்த்தைகள் ஒன்றுமில்லை.. உடனே ஹேமா நான் ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கேன்.. எனக்கு நிஜமா வார்த்தையே இல்லை..டேய் நிஜமாவே உனக்கு என்ன பிடிக்குமா?? அப்போ ஏஞ்சலினா?? என்று கேட்டாள் ..

உடனே அவன் புடிக்காமையா பெப்பர் உன்னை கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொல்றேன் ..ஏஞ்சலினா என்னோட ஃபிரண்ட்.. சும்மா உன்னை கடுப்பேத்தறதுக்கு வேண்டி நாங்க ரெண்டு பேரும் லவ்வர்ஸ் மாதிரி நடிச்சோம் அவ்வளவுதான்..

"ஐ லவ் யூ பெப்பர்" என்று அவன் அவளுக்காக வாங்கி வைத்து இருந்த வைர மோதிரத்தை அவளுடைய கையில் அணிவித்தான்..ஹேமா "ஐ லவ் யூ டூ" என்றாள்..

ஹேமா நவீனிடம் வாவ் !!வெரி நைஸ், எனக்கு ரொம்ப பிடிச்சு இருக்கு டா.. நெஜமா இப்படி ஒரு சர்ப்ரைஸ் யாராலுமே கொடுக்கவே முடியாது ..ஐ நெவர் எக்ஸ்பெக்ட் திஸ்..என்றாள்

அதற்கு நவீன் "அது தான் நவீன்.. நான் எப்பவுமே வித்தியாசமா தான் யோசிப்பேன்னு உனக்கு தெரியாதா??உன்னோட ஃபர்ஸ்ட் கிஃப்ட்டே நான் என் காசுல வாங்கி தரனும்னு ஆசைப்பட்டேன் ..அந்த ஆசை எனக்கு ஃபுல்ஃபில் ஆயிடுச்சு"..

என்னோட டார்லிங்கிற்கு டைமன்ட் ரிங் பிரசன்ட் பண்ணனும்னு நான் ஆசைப்பட்டேன்.. அதுவும் நடந்துருச்சு என்றான்..ஹேமாவிற்கு ஏஞ்சலினா மற்றும் சுவாதி வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.. வாழ்த்துக்கள் ஹேமா!! என்றனர்..

பிறகு அனைவரும் அங்கிருந்து செல்ல நவீனும் ஹேமாவும் மட்டும் தனியாக இருந்தனர்.. ஹேமா நவீனை அணைத்துக் கொண்டாள்.. இருவரும் மகிழ்ச்சியில் திளைத்துக் கொண்டிருக்க..

கதிரும் நிலாவும் அங்கு வந்தனர்..நிலா ஹேமாவிடம் சாரி ஹேமா!! உன்கிட்ட நாங்க முன்னாடியே சொல்லியிருப்போம்.நவீன் உன்னைதான் லவ் பண்றேன்னு என்கிட்ட அன்னைக்கே சொல்லிட்டான் ..ஆனா உனக்கு சர்ப்ரைசா இருக்கணும்னு நாங்க எதுவும் சொல்லல. அன்னைக்கே உனக்கு தெரிஞ்சிருந்தா இவ்வளவு சர்ப்ரைஸா உனக்கு கண்டிப்பா இருந்திருக்காது..

நவீன் என் கிட்ட நீ என் வீட்டில் இருந்து சென்றதும் உன்னைப்பற்றி வந்து பேசினான்.. உன்ன அவனுக்கு ரொம்ப புடிக்கும்னு சொன்னான்.. இந்த ஜென்மத்துல ஹேமாவை தான் எப்படியும் மேரேஜ் பண்ணிப்பேன்னு சொன்னான்.. பட் அவனோட ட்ரீம் பிராஜெக்ட் முடிச்சதும் அவனே உன்கிட்ட பிரோபோஸ் பண்றதா சொல்லியிருந்தான்..

அவன் அப்போதைக்கு எதுவும் உன்கிட்ட சொல்ல வேண்டாம்னு சொல்லி இருந்தான்...அதான் நானும் அவன்கூட சேர்ந்து எல்லாம் மறைச்சுட்டேன் என்றாள்..

ஹேமா "இருக்கட்டும் அண்ணி!! நீங்க அந்த விஷயத்தை சொல்லாததுனால தான் இன்னைக்கு எனக்கு ஒட்டு மொத்தம் சந்தோஷமும் திரும்ப கிடைச்ச மாதிரி இருக்குது ..மே பி எனக்கு அன்னைக்கே தெரிஞ்சிருந்தா இந்த அளவு சந்தோஷப் பட்டிருப்பேன்னான்னு எனக்கே தெரியாது"..

கதிரும் நிலாவும் ஹேமாவிற்கு வாழ்த்துக்கள் கூறி விட்டு அவர்களும் வெளியே சென்றனர்.. ஹேமாவும் நவீனும் தனியாக நின்று பேசினர்..ஹேமா நவீனை செல்லமாக அடித்தாள்.. போடா நீ என்ன ரொம்ப பயமுறுத்திட்டே.. என்னமோ என்னை பிடிக்காதுன்னு சொன்னே.. இப்ப மட்டும் ஏன் வந்த?? என்று செல்லமாக சண்டை பிடித்தாள்..

அதற்கு நவீன் உன்னை புடிக்காதுன்னு சொன்னது உனக்கு மட்டும் தான் தெரியும்.. ஆனா உன்ன புடிக்கும்னு சொன்னது நம்மை சுற்றி உள்ள எல்லாருக்குமே தெரியும்.நீ சரியான லூசு பெப்பர்..இது கூட புரியல உனக்கு.வாழ்க்கையில நாம ஏதாவது சாதிக்கணும்னா நமக்கு பிடிச்ச விஷயத்தை சில நாள் தள்ளிப் போட தான் வேணும்..லவ் மட்டுமே வாழ்க்கை கிடையாது..

அதையும் தாண்டி வாழ்க்கையில நிறைய இருக்கு.. அதற்கு வேண்டிதான் நான் போராடினேன்..இன்னிக்கு இரண்டிலுமே ஜெயிச்சு உன் முன்னாடி வின்னராக நிற்கிறேன்.. இன்னைக்கு உன்னோட ஹஸ்பண்ட் ஒரு வின்னர்..ஹேப்பியா டியர் என்று இருவரும் அணைத்துக் கொண்டனர்..

*************"
இனி என்ன நடக்கும்
பொறுத்திருந்து பார்ப்போம்..
உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்...

*****************

Continue Reading

You'll Also Like

110K 4.8K 37
இது என்னுடைய I DON'T LIKE U COZ' U R TOO HANDSOME கதையின் தமிழாக்கம்.
189K 8.5K 81
அவர்கள் பணத்தாலும் தகுதியாலும் நேர் எதிரான வித்தியாசம் கொண்டவர்கள். அவனுடைய கவனம் முழுவதும் பணத்தின் மீதும் கௌரவத்தின் மீதும் மட்டுமே... ஆனால் அவளோ...
37.3K 1.9K 29
A perfect relationship does not bloom between the souls who are perfect, it will happen when the souls who are ready to make the relationship perfect...
12.8K 835 22
இதயத்தை கொய்த கொலையாளி - பாகம் 2