வானாகி நின்றாய்(Completed)

By Preeja217

106K 4.8K 1.5K

நமது கதாநாயகனுக்கு‌ இரு தோழிகள். இருவரும் அவனைக் காதலித்தனர்.யார் காதல் ஜெயிக்கும்?? யார் காதல் தோற்றது?? யார... More

அறிமுகம்
கதாநாயகன்
கல்லூரி முதல் நாள்
கதிரின் முதல் நட்பு
முதல் கதாநாயகி
சுவாதி அறிமுகம்
இரண்டாம் கதாநாயகி
காதல் மலர்ச்சி
முதலாம் ஆண்டு விடுமுறை
லேட்ரல் என்ட்ரி
கதிருக்கு அட்வைஸ்
சுற்றுலா நேரம்
பெங்களூர் பயணம்
கம்பைன் ஸ்டடிஸ்
கதிர் சுவாதி காதல்
நிலாவின் முடிவு
கல்லூரி தினம்
கதிரின் பரிசு
நிலா தந்தை மரணம்
கதிர் சுவாதி சண்டை
நிலா லவ் பிரோபோஸ்
கேம்பஸ் இன்டர்வியூ
கல்லூரி கடைசி நாள்
இரண்டாவது பாகம்
கதிரின் நிலை
கதிர் ஃபிளாஷ் பேக்
காதலர் தின சர்ப்ரைஸ்
சுவாதி வருகை
கேள்வி - பதில்
நிலாவின் சமாதானம்
சுவாதி திருமண ஏற்பாடு
சுவாதி கதிர் சந்திப்பு
மருத்துவமனையில் கதிரின் நிலை
ஹேமாவின் வருகை
நிலா சுந்தர் சந்திப்பு
ஹேமாவின் பொய் கதை
நிர்மலா ஐபிஎஸ்
நிர்மலாவின் கதை
நிலாவிற்கு ஆறுதல்
ஹேமாவை கவர்ந்தவன்
நிர்மலாவின் சொந்தம்
நிலா தந்தை மரணத்தில் மர்மம்
நட்சத்திரா குழு
சுவாதி கதிர் சந்திப்பு
நவீன் யார்???
கதிர்-நிலா காதல்
சுவாதி உடைத்த உண்மைகள்
கதிரின் முடிவு
ஹேமாவின் அறிவுரை
ஹேமாவின் கனவு
கதிரின் வேலை
நவீன் முடிவு
சென்னை பயணம்
சுவாதியின் மாற்றம்
நவீன் கேர்ல் ஃபிரண்ட்
மேரேஜ் ஷாப்பிங்
கதிர் நிலா திருமண ஏற்பாடு
திருமணத்திற்கு முந்தைய நாள்
கதிர் நிலா திருமணம்
எதிர்பாராத விருந்தினர்
சுவாதியின் பரிசு
நவீன் லவ் பிரோபோஸ்
சுவாதியின் உதவி
நவீன்-ஹேமா திருமணம்

சுவாதி தந்தை கைது

1.1K 62 19
By Preeja217

நிலா வீடு

நிர்மலா நிலாவிடம் ஒரு உண்மையைக் கூறுகிறார்...

நிலா நிர்மலாவிடம் அம்மா கூறுங்கள் என்ன உண்மை அது?? என்று கேட்க.. அவர் "இந்த புகைப்படத்தில் இருக்கும் சுரேஷ் வேறு யாருமில்லை".. இவர் தான் உனது தாய் மாமன்.. என்னுடைய அண்ணன்.. நான் உன்னுடைய தந்தையை திருமணம் செய்தது என் குடும்பத்திற்கு பிடிக்கவே இல்லை..

அதற்காகத்தான் எங்கள் இருவரையும் பிரிக்க எவ்வளவோ முயற்சி செய்தான்.. உன் தந்தை மரணத்திற்கும் இவன்தான் காரணமாகிவிட்டான்.. எனவேதான் நான் இவனுக்கு தக்க தண்டனை வாங்கிக் கொடுக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.. என்ன தான் என்னுடைய அண்ணனாக இருந்தாலும் ஒரு நல்ல அண்ணன் என்பவன் தன் தங்கை நன்றாக வாழவேண்டும் என்றுதான் நினைப்பான்..

ஆனால் என் குடும்பத்தை சுக்குநூறாக நொறுக்கிய இவன் என்றுமே என் எதிரி தான் என்று கூறினாள்.. உடனே நிலா இவ்வாறெல்லாம் நடந்திருக்கிறதா?? எனக்கு தெரியவே தெரியாது.. அப்பா இதைப் பற்றி என்னிடம் எதுவும் கூறியதே கிடையாது.. உங்களுடைய திருமணம் காதல் திருமணமா?? என்று கேட்டாள்..

உடனே நிர்மலா ஆம் நிலா,  நானும் உனது தந்தையும் காதல் திருமணம்தான் செய்து கொண்டோம்.நாம் இதைப் பற்றி பிறகு பேசுவோம்.. எனக்கு நேரமாகிறது.. நான் இப்பொழுது கோர்ட் செல்ல வேண்டும் என்று நிலாவிடம் இருந்த அந்த ஃபைலை வாங்கிக் கொண்டு விரைவாகச் சென்றார்..

உடனே நிலா மனதில் இவர்களுடைய உண்மையை நான் முழுமையாக அறிந்து கொள்ள வேண்டும் ..நாம் ஏதோ தவறாக நினைத்து விட்டோம் போன்று தோன்றுகிறது என்று நிர்மலாவின் மீது நிலாவுக்கு நல்ல அபிப்ராயம் வரத்தொடங்கியது..

நிலாவிற்கு இதை யாரிடமாவது பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பது போல் இருந்தது.. எனவே அவள் கதிர் மட்டும் ஹேமாவிற்கு கால் செய்து வீட்டிற்கு அழைத்தாள்.

கதிர் மற்றும் ஹேமா வீட்டில்  தன் பெற்றோரிடம் கூறிவிட்டு நிலா வீட்டிற்கு வந்தனர்..  வந்த கதிரிடம் நிலா அனைத்து விஷயங்களையும் கூறினாள்.உடனே ஹேமா மனதிற்குள் "நல்லவேளை அண்ணன் தப்பித்தான்.. அந்த ரவுடியின் மகளைத் திருமணம் செய்துக் கொள்ளவில்லை" என்று நினைத்தாள்..

உடனே கதிர் நிலாவிடம் "உன்னுடைய அம்மா என்னிடம் அனைத்தையும் கூறி விட்டார்.".அதை சொல்வதற்காக தான் உன்னிடம் நான் அன்று பேசினேன்.. ஆனால் என் அம்மாவைப் பற்றி பேசுவதாக இருந்தால் நீ பேசாதே என்று சொல்லிவிட்டாய்.. இப்பொழுது அனைத்தையும் சொல்வதற்கான சமயம் வந்துவிட்டது என்று கதிர் நிர்மலா அவர்களைப் பற்றிய உண்மைகளைக் கூறினான்..

அவருடைய திருமணம் எவ்வாறு நடந்தது?? எவ்வாறு இருவரும் பிரிந்தார்கள்?? நிலா எவ்வாறு தந்தையுடன் வந்தாள்?? என்று அவரைப்பற்றி உள்ள உண்மைகள் அனைத்தையும் அவளிடம் விளக்கமாகக் கூறினான்..

உடனே நிலா அதிர்ந்து "அய்யோ, இந்த உண்மைகள் அனைத்தும் தெரியாமல் நான் என்னுடைய அம்மாவை தவறாக நினைத்து விட்டேனே.. ஆனால்  இதைப்பற்றி அப்பா என்னிடம் எதுவும் கூறவில்லை" என்று வருந்தினாள்..

உடனே அவள் "நவீனைப் பற்றி ஏதாவது கூறினார்களா?? என்று கேட்டாள்.. உடனே கதிர் இல்லை நிலா, அதைப்பற்றி எனக்கு எந்த உண்மையும் தெரிய வில்லை.. அது மட்டும் புரியாத புதிராகவே இருக்கிறது" என்று கூறினான்..

உடனே நிலா நவீனை அழைத்தாள்.. நவீன் வெளியே வந்தான் .வெளியே வந்ததும் ஹாய் நட்சத்திரா குரூப்!!! என்ன சகோதரி?? எதற்காக என்னை அழைத்தாய்?? என்று கேட்டான்.. உடனே அவள் நான் உன்னிடம் கொஞ்சம் பேச வேண்டும் ..அதற்காகத்தான் அழைத்தேன்..

நீ எப்பொழுதிலிருந்து நிர்மலா அம்மாவுடன் இருக்கிறாய்?? என்று கேட்டாள்..அதற்கு நவீன் "நான் பிறந்ததிலிருந்து அவர்களுடன் தான் இருக்கிறேன்".. ஆனால் சிறு வயதிலேயே என்னை வெளிநாட்டிற்கு அனுப்பிவிட்டார்.

ஏன்?? என்று எனக்கும் தெரியாது.. நான் அடிக்கடி கேட்பேன்.. அம்மா நான் உங்களுடனேயே இருக்கிறேன் என்று அழுது அடம்பிடித்து இருக்கிறேன்.. ஆனால் அம்மா "உனக்கு நன்மையானதை தான் நான் செய்வேன்.. நீ வெளிநாட்டில் இருப்பது தான் உனக்கு நல்லது"..

என்னுடைய வேலை ஆபத்தானது ..அதன் மூலம் உனக்கும் ஆபத்துக்கள் நேரிடலாம் என்று கூறுவார் ..அதனால் நான் எதுவும் பெரிதாக எடுத்துக் கொண்டதில்லை.. சரி !! அம்மா நமது நலனுக்காக தான் கூறுகிறார்கள் என்று நானும் வெளிநாட்டில் நின்று படித்தேன்.. பிறகு அங்கேயே வேலையும் பார்த்தேன் என்று கூறினான்.

உன்னுடைய அப்பா யார் என்று தெரியுமா?? என்று நிலா கேட்டாள்.. அதற்கு நவீன் "நானும் இதை பலமுறை அம்மாவிடம் கேட்டு இருக்கிறேன்.. ஆனால் அம்மா என்னிடம் அதைப்பற்றி எதுவும் கூறியது கிடையாது" என்றான்..

உடனே நிலா மனதிற்குள் "அம்மாவிடம் ஏதோ ஒரு உண்மை மறைந்து இருக்கிறது.. அந்த உண்மையை  கண்டுபிடிக்க வேண்டும்" என்று நினைத்தாள்.. 

நவீன் ஹேமாவிடம் "ஹாய் பெப்பர்!! உன் மூஞ்சு ஏன் இப்படி இருக்கு.. ஏதோ திருட்டு முழி முழிச்சிட்டிருக்க.. என்ன கள்ளத்தனம் பண்ணுன?? என்றான்.. அவள் பதில் எதுவும் கூறாமல் அமைதியாகவே நின்றாள்..

நவீன் கதிரிடம் "மச்சான் உங்க தங்கச்சி முகம் சரி இல்ல.. ஏதோ தப்பு பண்ணின மாதிரி முழிச்சுட்டு இருக்கா.. என்னன்னு கேளுங்க??" என்றான்.

உடனே கதிர் "அது ஒன்னும் இல்ல மச்சான்.. நாங்க இப்போ ஷாப்பிங் மால் போனோம்.. ஒரு பொண்ணு வந்து என்கிட்ட கதிர் நான் தெரியாம மேரேஜ் பண்ணிட்டேன்.. சாரி !சாரி! ன்னு சொல்லிட்டு இருந்தா... அவ நேம் கூட ஏதோ சொன்னாளே..ஆங்!! சுவாதி" என்று கூறினான்..

அதைக் கேட்டதும் நிலாவின் முகமும் விளரியது..நிலா ஹேமாவிடம் கண் அசைத்தாள்..அதை நவீன் பார்த்துவிட்டான்.. உடனே நவீன் இவர்கள் இருவருக்குள்ளும் ஏதோ ஒரு ரகசியம் இருக்கிறது.. எல்லாம் பிறகு கேட்டுத் தெரிந்து கொள்வோம்..கதிருக்கு தெரிய வேண்டாம் என்று நினைக்கிறார்கள் போல..என்று நினைத்தான்..

நவீன் ஹேமாவை "ஹே பெப்பர்!! இங்க வா.. உன்கிட்ட கொஞ்சம் தனியாக பேசணும்" என்று தனியாக அழைத்துச் சென்றான்..நிலா கதிரை எதிர்கொள்ள முடியாமல் நின்றாள்..

ஹேமாவின் நவீன் என்ன பேச போகிறான்??

மறுபக்கம்....

சுவாதி தந்தை வீடு

நிர்மலா தகுந்த ஆதாரங்களுடன் சுரேஷ் வீட்டிற்குச் சென்றாள்..அவள் உள்ளே நுழைந்ததும் சுரேஷின் மனைவி வள்ளி "வாங்க அண்ணி எப்படி இருக்கீங்க??..ஏதாவது சாப்டுறீங்களா?? "என்று கேட்க..

உடனே நிர்மலா அண்ணி!! நல்லா இருக்கேன்..நான் இப்போ ஐபிஎஸ் நிர்மலாவா இங்க வந்துருக்கேன்..என் கடமையைச் செய்ய விடுங்க ..முதல்ல உங்க கணவரை கூப்பிடுங்கள்.. நான் அவரைச் சந்திக்க வேண்டும் என்றார்..

உடனே வள்ளி தன் கணவன் அறைக்குச் சென்று "என்னங்க உங்கள பாக்க உங்க தங்கச்சி வந்துருக்கு..வாங்க" என்றாள்..

உடனே சுரேஷ் "என்ன தங்கச்சியா?? அப்படி ஒரு சொந்தம் எனக்கு இல்லவே இல்லை" என்றான் கோபத்துடன்..

உடனே வள்ளி "உங்கள பாக்க ஐபிஎஸ் நிர்மலா வந்துருக்காங்க" என்றாள்..சுரேஷ் "அப்படியா?? மேடமுக்கு என்ன வேணுமாம்..மாமுல் வேணுமா ??" என்றான் நக்கலாக..

உடனே அங்கு வந்த நிர்மலா "மாமுல் வேண்டாம் மிஸ்டர் சுரேஷ்.. உங்கள மாமியார் வீட்டுக்குக் கூட்டிட்டு போக வந்துருக்கேன்..நீங்களே வரீங்களா?? இல்லை உங்கள இழுத்துட்டு போகணுமா?? என்றாள்..

உடனே சுரேஷ் "ஏய் என்னடி!! விட்டால் பேசிட்டே போற..கொழுப்பா?? யார் கிட்ட பேசுறோம்னு மறந்துட்டியா?? இந்த ஊர்ல எல்லாமே நான் வைக்குறது தான் சட்டம்..என்னையே அரெஸ்ட் பண்ண போறியா?? தப்பு ரொம்ப தப்பு..நான் நினைச்சா இப்பவே உன்ன இங்கேயே போட்டு தள்ளிருவேன்.உன் புருஷன் போன இடத்துக்கே உன்னையும் அனுப்பிடுவேன். ஒழுங்கு மரியாதையா போயிடு.உன்னை கொன்னா கூட கேட்க எவனும் வரமாட்டான்.ஏன்னா என் மேல அவ்வளவு பயம் என்றான் ஆவேசமாக..

சுரேஷ் பேசிய அனைத்தையும் நிர்மலா அழைத்து வந்த டிவி சேனல் ஜன்னல் வழியாக மறைந்திருந்து ஷுட் செய்து லைவ் டெலிகாஸ்ட் செய்தனர்..

சுரேஷ் வீட்டின் முன்பு அனைத்து செய்தியாளர்களும் திரண்டனர்..சுரேஷிற்கு மேலிடத்தில் இருந்து சரணடையும்படி பிரெஷர் வந்தது..அதன் பேரில் சுரேஷ் சரண் அடைந்தான்..

நிர்மலா வெற்றி பெற்ற மகிழ்ச்சியில் அவனை அழைத்துச் சென்றாள்..அவனை லாக்அப்பில் உள்ளே தள்ளினாள்..உடனே சுரேஷ் "ஏய் நிர்மலா..உன்ன சும்மா விட மாட்டேன்டி..இதுக்கு உள்ள பலனை நீ அனுபவிக்கனும்" என்று கம்பியை பிடித்துக் கத்தினான்..

முதல்ல நீ வெளியே வா.அப்புறம் பாக்கலாம் என்றாள் நிர்மலா... பிறகு நிர்மலா மனதிற்குள் "என்னுடைய முதல் கடமை என் கணவனைக் கொன்ற இவனுக்கு தக்க தண்டனை வாங்கிக் கொடுக்க வேண்டும்.. இரண்டாவது கடமை நிலாவிடம் நவீன் பற்றிய உண்மைகளைக் கூற வேண்டும்.. அவர்கள் இருவரும் ஒற்றுமையாக இருப்பதைப்  பார்க்க வேண்டும்"..என்று நினைத்தாள்..

முதலாவது கடமை முடிந்தது..
இரண்டாவது கடமையை பார்ப்போம்...

*************"*"
இனி என்ன நடக்கும்??

பொறுத்திருந்து பார்ப்போம்...

இன்றைய அப்டேட் எவ்வாறு இருந்தது??

உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளவும்...

******"""""******"

Continue Reading

You'll Also Like

72.1K 4.3K 70
தனிமை... அவனுக்கு வேண்டியதெல்லாம் அது மட்டும் தான். அவனுடைய உலகம் வித்தியாசமானது. அந்த உலகத்தில் அவனுக்கு வேறு யாரும் தேவைப்படவில்லை. அவனும் அவனது தன...
237K 6K 147
காதலால் கசிந்துருகி.. கரம் பிடித்த பெண்ணவளின் நேசம் பொய்யாக போனதில்... மென்மையான இதயம் கொண்டவன்... இரும்பு கவசம் அணிந்து பூட்டிக் கொள்ள... நாயகனின் வ...
116K 3.4K 44
ஹாய் டியர்ஸ் இது என்னோட நாலாவது தொடர்கதை. இந்த கதையில தன் அக்காவின் திருமணத்தில் மகிழ்ச்சியாக கலந்து கொண்டிருந்தவள் திடீரென தானே மணப்பெண்ணாக மாறிப் ப...