வானாகி நின்றாய்(Completed)

By Preeja217

105K 4.8K 1.5K

நமது கதாநாயகனுக்கு‌ இரு தோழிகள். இருவரும் அவனைக் காதலித்தனர்.யார் காதல் ஜெயிக்கும்?? யார் காதல் தோற்றது?? யார... More

அறிமுகம்
கதாநாயகன்
கல்லூரி முதல் நாள்
கதிரின் முதல் நட்பு
முதல் கதாநாயகி
சுவாதி அறிமுகம்
இரண்டாம் கதாநாயகி
காதல் மலர்ச்சி
முதலாம் ஆண்டு விடுமுறை
லேட்ரல் என்ட்ரி
கதிருக்கு அட்வைஸ்
சுற்றுலா நேரம்
பெங்களூர் பயணம்
கம்பைன் ஸ்டடிஸ்
கதிர் சுவாதி காதல்
நிலாவின் முடிவு
கல்லூரி தினம்
கதிரின் பரிசு
நிலா தந்தை மரணம்
கதிர் சுவாதி சண்டை
நிலா லவ் பிரோபோஸ்
கேம்பஸ் இன்டர்வியூ
கல்லூரி கடைசி நாள்
இரண்டாவது பாகம்
கதிரின் நிலை
கதிர் ஃபிளாஷ் பேக்
காதலர் தின சர்ப்ரைஸ்
சுவாதி வருகை
கேள்வி - பதில்
நிலாவின் சமாதானம்
சுவாதி திருமண ஏற்பாடு
சுவாதி கதிர் சந்திப்பு
மருத்துவமனையில் கதிரின் நிலை
ஹேமாவின் வருகை
நிலா சுந்தர் சந்திப்பு
ஹேமாவின் பொய் கதை
நிர்மலா ஐபிஎஸ்
நிர்மலாவின் கதை
நிலாவிற்கு ஆறுதல்
நிர்மலாவின் சொந்தம்
நிலா தந்தை மரணத்தில் மர்மம்
நட்சத்திரா குழு
சுவாதி கதிர் சந்திப்பு
சுவாதி தந்தை கைது
நவீன் யார்???
கதிர்-நிலா காதல்
சுவாதி உடைத்த உண்மைகள்
கதிரின் முடிவு
ஹேமாவின் அறிவுரை
ஹேமாவின் கனவு
கதிரின் வேலை
நவீன் முடிவு
சென்னை பயணம்
சுவாதியின் மாற்றம்
நவீன் கேர்ல் ஃபிரண்ட்
மேரேஜ் ஷாப்பிங்
கதிர் நிலா திருமண ஏற்பாடு
திருமணத்திற்கு முந்தைய நாள்
கதிர் நிலா திருமணம்
எதிர்பாராத விருந்தினர்
சுவாதியின் பரிசு
நவீன் லவ் பிரோபோஸ்
சுவாதியின் உதவி
நவீன்-ஹேமா திருமணம்

ஹேமாவை கவர்ந்தவன்

1.1K 64 28
By Preeja217

ஹேமாவுடைய தைரியத்தை காரில் இருந்த இளைஞன் ஒருவன் அப்படியே பார்த்துக் கொண்டே வந்தான்.. உடனே அவன் தன்னுடைய டிரைவரிடம் "டிரைவர் கொஞ்சம் வண்டியை நிறுத்துங்கள்" என்று பதற்றத்துடன் கூறினான்.

அந்த இளைஞன் காரில் இருந்து இறங்கி ஹேமாவை நோக்கி வேகமாகச் சென்றான்.

அவன் கூலிங் கிளாஸ் அணிந்திருந்தான். மிகவும் ஸ்டைலிஷாக இருந்தான். காரில் இருந்து இறங்கி வந்து ஹேமாவிடம் சென்று "நீங்க முதல்ல கை கொடுங்கள்" என்று கேட்டான்.

உடனே அவள் "ஹலோ, யார் மிஸ்டர் நீங்கள்??"  உங்களிடம் நான் ஏன் கைக் கொடுக்க வேண்டும்.தெரியாத பொண்ணுங்க கிட்ட இப்படி தான் கேப்பீங்களா?? உங்களுக்கும் மிளகு ஸ்பிரே வேண்டுமா?? என்று கேட்க ..

உடனே அவன் முதலில் கை கொடுங்கள். நான் சொல்கிறேன் என்று அவள் கையை பிடித்தான். உடனே அவள் கையை உதறினாள்.

அவன் அவளுக்கு" ஹேன்ட் ஷேக்" கொடுத்து விட்டு பெண்கள் என்றால் இப்படித்தான்  தைரியமாக இருக்க வேண்டும்..

தன்னிடம் சில்மிஷம் யாராவது செய்தால்  பயந்து அழாமல், ஐயோ! அம்மா என்று கத்தாமல், உடனே நீங்கள் உங்களுடைய பெப்பர் ஸ்பிரேயை எடுத்து அடித்தீர்களே, அது தான் பிரஸன்ஸ் ஆஃப் மைன்ட் ..

அது உங்களிடம் அதிகமாகவே இருக்கிறது. இப்படி தான் தைரியமாக இருக்க வேண்டும் என்று அவளைப் பாராட்டினான்.. உடனே ஹேமா அவனை ஆச்சரியமாக பார்த்து உதட்டோரம் சிரித்த படி "தேங்க்யூ" என்று கூறினாள்.

அந்த இளைஞன் "உங்களைப் போன்ற ஒரு பெண் என்னுடைய தோழியாக இருக்க வேண்டும்" என்று நான் விரும்புகிறேன்.இருங்க உங்க கூட ஒரு செல்ஃபீ எடுத்துக்குறேன்.. நீங்கள் என்னுடைய தோழியாக இருப்பீர்களா?? என்று அவளிடம் கேட்டான்.

உடனே ஹேமா மனதிற்குள் இவன் யாருடா?? வித்தியாசமா பேசுறான்..இவன் நல்லவனா?? கெட்டவனா?? பழகி பார்ப்போம் என்று சரி!! என்று கைக் குழுக்கி இருவரும் நண்பர்கள் ஆனார்கள்.

ஹேமா அங்கிருந்து கிளம்பத் தயாரானாள்.

அந்த இளைஞன் மறுபடியும் அவளை நிறுத்தி "எக்ஸ்க்யூஸ் மீ, உங்களுடைய பெயர் என்ன என்று தெரிந்து கொள்ளலாமா??" என்று கேட்டான்.

உடனே அவள் "அது எதற்கு??" என்றாள். அவன் அதற்கு "பெயர் எதற்கு கேட்பார்கள்??  கூப்பிட தான். பெயர் சொன்னால் ஹலோ என்று கூப்பிட வேண்டாம் என்றான்..

அவள் சிரித்தபடி "என்னுடைய பெயர் ஹேமா .ஆமா,உங்களுடைய பெயர் என்ன?? என்று கேட்டாள். உடனே அவன் என்னுடைய பெயர் இப்போது சொல்லமாட்டேன் அது சஸ்பன்ஸ் "திங் அபௌட் மீ". அடுத்த முறை சந்திக்கும் போது சொல்கிறேன் "டாட்டா.. பை பை பெப்பர்" என்றான்.

ஹேமா அவனிடம் வாட்?? என்றாள் ஆச்சரியமாக.."ஓகே பை" என்று சொல்லிவிட்டு அவளும் அங்கிருந்து கிளம்பினாள்.

ஹேமா மனதிற்குள் இவன் கொஞ்சம் வித்தியாசமாக தான் இருக்கிறான்.முதல் சந்திப்பிலேயே ஒரு கியூரியாசிட்டி ஏற்படுத்தி விட்டான் என்று நினைத்தாள்..ஹேமாவிற்கு அவனை பிடித்தது..

இவனை அடுத்த முறை சந்திப்போமா?? பார்ப்போம் என்று மனதிற்குள் நினைத்தாள்.

அந்த இளைஞனின் கார் நிலா வீட்டை நோக்கி சென்றது..நிலா வீட்டை சென்றடைந்தது.காரை விட்டு இறங்கியவன் வீட்டு வாசலில் வந்து யாராவது வீட்டில் இருக்கிறீர்களா?? என்று கதவைத் தட்டிக் கொண்டிருந்தான்.

நிலா வந்து கதவைத் திறந்து பார்த்தபோது அந்த இளைஞன் நின்றுக் கொண்டிருந்தான். உடனே நிலா அவனிடம் "நீங்கள் யார்?? உங்களுக்கு யார் வேண்டும்?" என்று கேட்டாள்.

உடனே அந்த இளைஞன் "முதலில் வீட்டிற்கு வந்தவர்களை  உள்ளே அழைக்க வேண்டும். பிறகு அவர்களுக்கு குடிக்க ஏதாவது கொடுக்க வேண்டும் .அதன் பிறகு தான் ஏதாவது பேச வேண்டும். இது கூட உனக்கு தெரியாதா??" என்று கேட்டான் ..

உடனே நிலா "முன் பின் தெரியாதவர்களை வீட்டிற்குள்ளே அனுமதிக்கவே கூடாது என்பது தான் எனக்கு தெரியும்" என்று பதிலடி கொடுத்தாள்.

உடனே அவன் "நான் உன்னுடைய சொந்தக்காரன் தான். உனக்கு என்னை தெரியாது .ஆனால் உன் முதலாளி அம்மாவுக்கு என்னை தெரியும்" என்று கூறினான்.

உடனே நிலா அவனிடம் "என்ன முதலாளி அம்மாவா?? ஓ !! நீ அந்த அம்மாவின் சொந்தக்காரனா?? நீ திமிராகப் பேசும் போதே நினைத்தேன் , அவர்களுடைய சொந்தக்காரனாகத் தான் இருப்பாய் என்று" என்று எரிச்சலுடன் கூறினாள்.

அவர்கள் இப்பொழுது வீட்டில் இல்லை . அவர்கள் வேலைக்குச் சென்று இருக்கிறார்கள். இரவு தான் திரும்ப வருவார்கள். எனவே நீ அவர்களைப் பார்க்க வேண்டும் என்றால் ஆபிஸ் சென்று தான் பார்க்க வேண்டும் .

இப்பொழுது நீ செல்லலாம் என்று கதவை அடைக்கத் தயாரானாள். நிலா அந்த இளைஞனை வெளியே விட்டு கதவை அடைக்கத் தயாரானாள்..

உடனே அவன் கதவைத் தன் கையால் நிறுத்தி "பொறுமையாக இருங்கள் மேடம்,ஏன் அவசர படுறீங்க?? நான் முதலில் பேசுவதைக் கேளுங்கள்.

அதற்குள்ளாகவே கதவைப் பூட்டி என்னை வெளியே தள்ளுகிறீர்கள் என்று சிரித்துக்கொண்டே கூறினான்..உடனே அவள் "முன் பின் தெரியாதவர்களிடம் எனக்கு பேச ஒன்றுமில்லை. உங்களுக்கு என்ன வேண்டும்??" என்று கேட்டாள்.

உடனே அவன் "நான் நிர்மலா ஐபிஎஸ் அவர்களிடம் பேசி விட்டேன். அவர்கள் உள்ளே இருக்குமாறு சொன்னார்கள். அவர்கள் இன்னும் சிறிது நேரத்தில் இங்கே வந்து விடுவார்கள்" என்று கூறினான்.

உடனே நிலா "அப்படியா?? அவர்கள் வந்தப் பிறகு நீங்கள் உள்ளே வந்தால் போதும். அதுவரை நீங்கள் வெளியே பொறுத்திருங்கள். உங்களை நான் இதற்கு முன்பு பார்த்ததே கிடையாது.நீங்கள் வேறு அதிகமாக பேசுகிறீர்கள்..

அது மட்டுமல்ல நீங்கள் ஒரு ஆண் . அதனால் நான் உங்களை யாரும் இல்லாத வேளையில் வீட்டினுள் அனுமதித்தால் அது நன்றாக இருக்காது" என்று கூறினாள்.

உடனே அவன் "ஹலோ மேடம், அதை சொல்ல நீங்கள் யார் ?? நீங்கள் இந்த வீட்டில் வேலை பார்ப்பவர் தானே?? நான் இந்த வீட்டிற்கு சொந்தக்காரன்" . என்னை உள்ளே அனுமதிக்க வேண்டியது உங்களுடைய கடமை என்றான் அதிகாரத்தோடு..

"நீங்கள் தாராளமாக என்னை உள்ளே விடலாம் .நான் உங்களை எதுவும் செய்ய மாட்டேன். நான் திருடன் எல்லாம் இல்லை" என்று கூறினான்.

உடனே அவள் "என்ன நான் வேலைக்காரியா?? நான் இந்த வீட்டிற்கு சொந்தக்காரி. என்னுடைய வீட்டை வந்து நீ உரிமை கொண்டாடுகிறாயா??" நீ இவ்வாறு என்னை பேசியதற்காகவே உன்னை உள்ளே விட மாட்டேன் என்று முறைத்துக் கொண்டே கூறினாள். 

"எல்லாரும் இப்படித்தான் முதலில் நல்லவர்களாக பேசுவார்கள். திருடர்கள் என்று திருடர்களின் நெற்றியில் முத்திரையா குத்தியிருக்கும். இல்லை அல்லவா??" என்று கோபமாகக் கூறிவிட்டு கதவை டப்பென்று மூடினாள்.

உடனே அவன் நிலாவை "திமிர் பிடித்தவள்,அகங்காரி.. இவ்வளவு சொல்லியும் என்னை உள்ளே அனுமதிக்கவில்லை".. "டேய் உனக்கு கிரேட் இன்சல்ட் , இவள நான் அப்புறம் பார்த்துக்கிறேன்" என்று அவன் தன்னிடமே கோபமாகக் கூறிக்கொண்டான்.

அவன்  படியில் அப்படியே உட்கார்ந்து தன் பேகின் மீது சாய்ந்து மொபைலில் கிரிக்கெட் பார்த்துக் கொண்டிருந்தான்.. சிறிது நேரத்தில் நிர்மலா அவர்களுக்கு கொடுக்கப்பட்ட காரில் வந்து இறங்கினார்.

நிர்மலா அவர்கள் அவனை பார்த்ததும் மகிழ்ச்சியாக இறங்கினார்..

*******************

புதிதாக வந்த இளைஞனுக்கும் நிர்மலா அவர்களுக்கும் என்ன உறவு??

நிலா நிர்மலா இடையே வந்த இளைஞனால் பிரச்சினை ஏற்படுமா??

பொறுத்திருந்து பார்ப்போம்..

இன்றைய அப்டேட் எவ்வாறு இருந்தது??
உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும்.

*****************"*

Continue Reading

You'll Also Like

45.4K 2.9K 100
மிதமிஞ்சிய பணத்திமிரில் தன் வீட்டில் வேலை பார்க்கும் பணிப்பெண்ணின் மகனை பாடாய்படுத்தி எடுக்கும் நாயகி, பின்னாளில் யாரை படாத பாடு படுத்தினாளோ, அவனால்...
85K 4.5K 55
அவன் அரச பரம்பரையைச் சேர்ந்தவன். அவளோ, அவனது பாட்டனாரின், வேலைக்காரரின் மகள். அவர்களுக்கிடையில் பிரச்சனையாக இருந்தது வெறும் அந்தஸ்து மட்டும் தானா? அல...
12.1K 807 22
இதயத்தை கொய்த கொலையாளி - பாகம் 2
782 16 5
என்னோட முதல் கதை... இப்போ அமேசான் re எடிட்க்காக மொத்தமா மாத்தி இருக்கேன்🧘🧘