வானாகி நின்றாய்(Completed)

By Preeja217

105K 4.8K 1.5K

நமது கதாநாயகனுக்கு‌ இரு தோழிகள். இருவரும் அவனைக் காதலித்தனர்.யார் காதல் ஜெயிக்கும்?? யார் காதல் தோற்றது?? யார... More

அறிமுகம்
கதாநாயகன்
கல்லூரி முதல் நாள்
கதிரின் முதல் நட்பு
முதல் கதாநாயகி
சுவாதி அறிமுகம்
இரண்டாம் கதாநாயகி
காதல் மலர்ச்சி
லேட்ரல் என்ட்ரி
கதிருக்கு அட்வைஸ்
சுற்றுலா நேரம்
பெங்களூர் பயணம்
கம்பைன் ஸ்டடிஸ்
கதிர் சுவாதி காதல்
நிலாவின் முடிவு
கல்லூரி தினம்
கதிரின் பரிசு
நிலா தந்தை மரணம்
கதிர் சுவாதி சண்டை
நிலா லவ் பிரோபோஸ்
கேம்பஸ் இன்டர்வியூ
கல்லூரி கடைசி நாள்
இரண்டாவது பாகம்
கதிரின் நிலை
கதிர் ஃபிளாஷ் பேக்
காதலர் தின சர்ப்ரைஸ்
சுவாதி வருகை
கேள்வி - பதில்
நிலாவின் சமாதானம்
சுவாதி திருமண ஏற்பாடு
சுவாதி கதிர் சந்திப்பு
மருத்துவமனையில் கதிரின் நிலை
ஹேமாவின் வருகை
நிலா சுந்தர் சந்திப்பு
ஹேமாவின் பொய் கதை
நிர்மலா ஐபிஎஸ்
நிர்மலாவின் கதை
நிலாவிற்கு ஆறுதல்
ஹேமாவை கவர்ந்தவன்
நிர்மலாவின் சொந்தம்
நிலா தந்தை மரணத்தில் மர்மம்
நட்சத்திரா குழு
சுவாதி கதிர் சந்திப்பு
சுவாதி தந்தை கைது
நவீன் யார்???
கதிர்-நிலா காதல்
சுவாதி உடைத்த உண்மைகள்
கதிரின் முடிவு
ஹேமாவின் அறிவுரை
ஹேமாவின் கனவு
கதிரின் வேலை
நவீன் முடிவு
சென்னை பயணம்
சுவாதியின் மாற்றம்
நவீன் கேர்ல் ஃபிரண்ட்
மேரேஜ் ஷாப்பிங்
கதிர் நிலா திருமண ஏற்பாடு
திருமணத்திற்கு முந்தைய நாள்
கதிர் நிலா திருமணம்
எதிர்பாராத விருந்தினர்
சுவாதியின் பரிசு
நவீன் லவ் பிரோபோஸ்
சுவாதியின் உதவி
நவீன்-ஹேமா திருமணம்

முதலாம் ஆண்டு விடுமுறை

1.6K 90 16
By Preeja217

முதலாம் ஆண்டு இறுதி நாள்

கதிர் சுவாதியைப் பார்க்காமல் எப்படி இருப்பது?? அவளிடம் பேசாமல் எப்படி இருப்பது?? என்று தேர்வு முடிந்த கடைசி நாள் வருத்தத்தில் இருந்தான்..

அப்பொழுது அங்கு வந்த சுவாதி "ஹாய் கதிர் எக்ஸாம் எப்டி பண்ணுன?? "என்று கேட்டாள்..கதிர் "ஏதோ பண்ணுனேன்.. பாஸ் ஆனா சரிதான்" என்று வருத்தத்துடன் கூறினான்..

உடனே சுவாதி "ஹே கதிர், கமான் சியர் அப், இதுக்கெல்லாம் ஃபீல் பண்ணாத" என்றாள்..கதிர் மனதிற்குள் "நீ படிப்புல மட்டும் தான் புத்திசாலி..எந்த ஊர்ல பசங்க எக்ஸாம் நல்லா எழுதலன்னு ஃபீல் பண்ணாங்க..என் ஃபீலிங்ஸே வேற" என்று நினைத்தான்..

உடனே சுவாதி கதிரிடம் "ஆர் யூ ஓகே கதிர் ??" என்று கேட்க..கதிர் யோசனையில் இருந்து வெளியே வந்தான்..

கதிர் அவளிடம் "சுவாதி நான் உன்கிட்ட ஒன்னு கேட்பேன் ..குடுப்பியா ??" உன்ன நிறைய நாள் பார்க்கவும் முடியாது, பேசவும் முடியாது.. ப்ளீஸ்! ப்ளீஸ்! என்று கேட்டான்..

உடனே சுவாதி என்ன கதிர்?? கேள்.. என்னால் முடிஞ்சா கண்டிப்பா தர்றேன் என்றாள்.. கதிர் சுவாதியிடன் "சுவாதி ப்ளீஸ் தப்பா நெனைக்காத..உன் மொபைல் நம்பர் கிடைக்குமா??" என்றான்..

உடனே சுவாதி "சாரி கதிர் என் அப்பா எனக்கு மொபைல் வாங்கி கொடுக்கல்..வீட்ல அப்பா அம்மா கிட்ட தான் மொபைல் இருக்கு..உனக்கு யாரோட நம்பர் வேணும் சொல்லு, தரேன் என்றாள்..

கதிர் மனதில் உன் அப்பா அம்மா கிட்ட பேசி நான் என்ன பண்ண?? என்று நினைத்தான்.. அவளிடம் "உனக்கு சீக்கிரம் ஒரு மொபைல் வாங்கு சுவாதி..ஏதாவது அர்ஜென்ட்டாவோ இல்ல டவுட் கேக்கவோ உன் அப்பா அம்மாவ டிஸ்டர்ப் பண்ணா நல்லாவா இருக்கும்??" என்று கூறினான்..

சரி!! கதிர், மொபைல் வாங்குனதும் உனக்கு கண்டிப்பா நம்பர் தருவேன் என்றாள்..அவர்கள் பேசிக் கொண்டிருக்க நிலா அங்கு வந்தாள் ..ஹை ஃபிரண்ட்ஸ்!! எக்ஸாம் எப்படி பண்ணுனீங்க?? என்று கேட்டாள்..

உடனே சுவாதி "ஏ நிலா, எக்ஸாம் நல்லா பண்ணலன்னு கதிர் ஃபீல் பண்ணிட்டு இருந்தான்.. அதான் ஆறுதல் சொல்லிட்டு இருந்தேன்" என்றாள்..

உடனே நிலா "கதிர் நீ எக்ஸாம் நல்லா எழுதலன்னு ஃபீல் பண்ற ஆளா?? உன்ன பார்த்தா அப்படி தெரியலையே" என்று சிரித்துக்கொண்டே கூறினாள்..

உடனே கதிர் ஹே மூன் !! என்ன கலாய்க்கிறியா?? உன்ன அப்புறம் மொக்க ஜோக்ஸ் சொல்லியே சாகடிக்குறேன் ..சரி இன்னைக்கு லாஸ்ட் டே.. வாங்க கேன்டீன் போய் ஏதாவது வாங்கி சாப்டுவோம் என்றான்..

மூவரும் கேன்டீனை நோக்கி நடந்தனர்..

சுவாதி கதிரிடம் "ஹே கதிர், நிலாவோட ஃபோன் நம்பர் வாங்கிக்கோ..என் கூட தான் பேச முடியாது..உனக்கு டவுட்ஸ் ஏதாவது இருந்தா அவகிட்டே கால் பண்ணலாமே என்றாள்..

உடனே கதிர் நிலா நம்பர் வாங்க வேண்டிய அவசியமே இல்லை.. அவதான் எங்க வீட்டுக்கு அடிக்கடி வருவாளே..இல்ல சுதா வீட்டிற்கு வருவாள்..ஆனா உன்னதான் நான் பாக்கவே முடியாது என்றான்..

நிலா கதிரிடம் "ஹலோ சார் இப்போ எதுக்கு இவ்ளோ ஃபீலிங்ஸ் ..சுவாதி இந்த ஊர்ல தானே இருக்க போறா..அவள் வீட்டுக்கு போய் பார்த்தா போச்சு..ஒரு மாதம் தானே சீக்கிரம் போயிடும்" என்றாள்..

உடனே சுவாதி "என் வீட்ல அப்பா ரொம்ப ஸ்டிரிக்ட் நிலா.. பசங்க கூட பேசவே விட மாட்டாங்க..இதுல எங்க வீட்டுக்கு உள்ள விடுறது" என்றாள் சோகமாக..நிலா சுவாதியிடம் "கூள் சுவாதி!! நான் கண்டிப்பா வரேன் உங்க வீட்டுக்கு" என்றாள்..

கதிர் மனதிற்குள் "அடப் பாவிகளா, நான் அவ கிட்ட எப்படி பேசுறதுன்னு ஃபீல் பண்ணா..அவங்க ரெண்டு பேரும் மீட் பண்ண பிளான் போடுறாங்க..ஐயோ சுவாதிய பாக்க வேற வழியே இல்லையா?? என்று யோசித்தான்..

கதிர் , நிலா மற்றும் சுவாதி கேன்டீனில் இருந்து சாப்பிட அந்த பக்கமாக வந்த ராம் டேய் கதிர்!! நடத்துடா நடத்து என்று கூற..நிலா ராமிடம் "ராம் நீயும் வா?? ஏன் தனியா சுத்திட்டு இருக்க??" என்றாள்..

உடனே ராம் "இதோ வந்துட்டேன் நிலா..ஹா ஹா.. என் உயிர் தோழனுக்கு கூட என்னை கூப்பிடும்னு தோணல.. ஆனா நிலா "யூ ஆர் கிரேட்"..தேங்கியூ நிலா என்று அவர்களுடன் இணைந்தான்..

ராம் கதிரிடம் "உன்ன அப்புறம் பாத்துக்குறேண்டா" என்றான்..உடனே கதிர் "போடா" என்று மௌன மொழியில் சைகை மூலம் பேசினர்..

விடுமுறை ஆரம்பமானது.. கதிர் சுவாதியைப் மிகவும் மிஸ் செய்தான்.. சுவாதியை நினைத்து எந்த வேலையும் செய்யாமல் அப்படியே படுத்து கிடந்தான்.. சகுந்தலா கதிரிடம் "டேய் கடைக்கு போய்ட்டு வா"..என்றார்...

உடனே கதிர் "ஏம்மா நான் தான் எப்பவும் போகணுமா? அப்பாவ போகச் சொல்லுங்க" என்று சீரினான்..சகுந்தலா டேய் உனக்கு என்ன ஆச்சுடா?? உடம்பு முடியலையா?? நீ இப்படி இருந்ததே இல்லையே.. இந்த காலேஜ் போனதுல இருந்து உன் நடவடிக்கையே சரி இல்ல.. அம்மாவ இப்படி நீ சத்தமா பேசுனதே இல்ல..இப்போ இப்படி என் கிட்ட பேசிட்ட என்று அவனது தாய் வருந்த..

கதிர் "சகுமா ,அதெல்லாம் ஒன்னும் இல்ல..இப்போ தான் எக்ஸாம் முடிஞ்சுது.. உடனே அங்க போ, இங்க போன்னு சொன்னா கோபம் வருமா?? வராதா??.என் அம்மா கிட்ட தானே உரிமையா பேசமுடியும் என்று தன் தாயின் தோளில் கையைப் போட்டு சமாதானம் செய்தான்..

உடனே சகுந்தலா "சரிடா.. நீ ரெஸ்ட் எடு..நானே கடைக்குப் போறேன் என்றாள்..கதிர் உடனே "அம்மா இருங்கள் நீங்க போக வேண்டாம்.. நானே போறேன்" என்று கிளம்பினான்..

வெளியே அனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்த ஹேமா ..ஆமா இவரு ஐஏஎஸ் எக்ஸாம் எழுதியிருக்காரு..வேற எதுவும் வேலை பார்க்க மாட்டான்..என்று கூற கதிர் ஹேமாவை தலையில் கொட்டி.. போடி!! ராக்காயி கெழவி என்று கூறிவிட்டு சென்றான்..ஹேமா கதிரிடம் "நீதான் கிழவன்..என் கைல மாட்டுவ..உனக்கு இருக்குடா" என்றாள்..

அவன் கடைக்குச் செல்லும் வழியில் சுவாதியை நினைத்து என் அம்மா தங்கையை மறந்துவிட்டேனே..அவர்கள் என்னுடன் எத்தனை வருடங்கள் இருக்கிறார்கள்..அவர்களை சுவாதிக்காகக் கஷ்டப்படுத்துவது தவறு..

இனி சுவாதியை நினைத்து வீட்டில் கவலையாக இருக்கக் கூடாது என்று முடிவு செய்தான்.. அன்று மாலை நிலா தன் தந்தையிடம் சொல்லிவிட்டு சுதா வீட்டிற்கு வந்தாள்..அவளுக்கு கதிரை பார்க்கலாம் என்று தோன்றியது..

அப்படியே கதிர் வீட்டிற்கும் சென்றாள்..
ஹேமா நிலாவிடம் "ஹாய் அக்கா, எப்படி இருக்கீங்க?? என்று கேட்க..நல்லா இருக்கேன் மா..வீட்ல அண்ணன் இல்லையா?? என்று கேட்டாள்..அவன் ரூம்ல தூங்கிட்டு இருக்கான், சோம்பேறி..

வாங்க போய் சர்ப்ரைஸ் குடுப்போம்.. என்று உள்ளே அழைத்து சென்றாள்..
கதிர் நன்றாக தூங்கிக் கொண்டிருந்தான்.. ஹேமா மனதிற்குள் "காலைல என்ன அடிச்சால, இப்போ அத திரும்ப தரேன்" என்று நினைத்து...

"மாலை வேளையில இவனுக்கு என்ன தூக்கம்" என்று அவன் காதை பிடித்து இழுத்தாள்..உடனே அவள் அங்கிருந்து வெளியே ஓடி விட்டாள்..கதிர் ஹேமா என்று நினைத்து பெட்ஷீட்டை நிலா மீது மூடி அவளை தன் கையால் இறுக்கி பிடித்துக் கொண்டான்..

நிலா முகம் பெட்ஷீட்டால் மூடியிருந்தது...
கதிர் நிலாவிடம் "ஏய் ராக்காயி மாட்டுனியா?? அண்ணன் கிட்ட சாரி சொல்லு.. விடுரேன் என்றான்..ஹேமா வெளியே நின்று கதிர் ரூமில் எட்டிப் பார்த்து "கிழவா!! நான் இங்க இருக்கேன்" என்று அலவம் காட்டினாள்..

உடனே அவன் நிலாவைத் தன் பிடியில் இருந்து விடுவித்தான்..பெட்ஷீட்டை எடுத்து யார் ?? என்று பார்த்தான்.. உள்ளே நிலா..சாரி நிலா!! என்று கதிர் செய்வதறியாது பதறினான்.அவன் வாய் உளரியது...

நிலா கதிரிடம் "ஒன்னும் இல்லடா.. தெரியாம தானே பண்ணுன..இட்ஸ் ஓகே" என்று அங்கிருந்த கண்ணாடியில் தன் தலைமுடியை சரி செய்து கொண்டாள்..
இந்த ராக்காயி கெழவி எங்க போனா?? என்று ஹேமாவை தேடி கதிர் ஓடினான்..
ஹேமா அவன் கையில் மாட்டினாள்..

கதிர் ஹேமாவிடம் "வாடி ...நிலா கிட்ட சாரி சொல்லு..உன்னால அவல நான் ஹர்ட் பண்ணிட்டேன் என்று நிலாவிடம் இழுத்துச் சென்றான்..ஹேமா நிலாவிடம் "சாரி அக்கா" என்று சொல்ல...

நிலா கதிரிடம் எனக்கு உன் குடும்பத்தை ரொம்ப பிடிச்சு இருக்கு..வீட்ல எப்போதும் தனியாவே இருந்து பழகிடுச்சு..குடும்பம் என்றால் என்ன?? என்பது உன் வீட்டுக்கு வரும் போது தெரிகிறது என்று கண் கலங்கினாள்..

கதிரும் ஹேமாவும் நிலாவுக்காக வருந்தினர்..

அதே சமயம் சகுந்தலா அங்கு வர "மறுபடியும் அண்ணனும் தங்கையும் ஆரம்புச்சிட்டீங்களா??" வாமா நிலா..உன்னையும் அழ வச்சுட்டாங்களா??எப்படி இருக்க??.. வந்து டீ குடிமா.. அப்படியே இந்த பையனுக்கு பாடத்துல டவுட் ஏதாவது இருந்தா சொல்லிக் கொடுமா..ஒன்னும் கேட்டு படிக்க மாட்டான் என்றார்..

கதிர் " சகுமா..எக்ஸாம் தான் முடிஞ்சாச்சே.." என்றான்..

அனைவரும் சேர்ந்து பிறகு மகிழ்ச்சியாக பேசினர்..பிறகு நிலா தன் வீட்டிற்கு மகிழ்ச்சியாக சென்றாள்..

ஒருவழியாக விடுமுறை முடிவிற்கு வந்தது...

*****************
இன்றைய அப்டேட் எவ்வாறு இருந்தது??

இரண்டாவது ஆண்டில் என்ன நடக்க போகிறது??

கதிர் சுவாதியிடம் பிரோபோஸ் செய்வானா??நிலா கதிரிடம் பிரொபோஸ் செய்வாளா??

விடை காண்போம் விரைவில்...

ஆதரவு தரும் அனைத்து நல்லுள்ளங்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்..

என் கதையை ரீடிங் லிஸ்டில் சேர்த்த அனைவருக்கும் நன்றி..

***********************

Continue Reading

You'll Also Like

189K 8.5K 81
அவர்கள் பணத்தாலும் தகுதியாலும் நேர் எதிரான வித்தியாசம் கொண்டவர்கள். அவனுடைய கவனம் முழுவதும் பணத்தின் மீதும் கௌரவத்தின் மீதும் மட்டுமே... ஆனால் அவளோ...
150K 6.6K 63
எல்லாவற்றிலும் வித்தியாசத்தை விரும்பும் நாயகன்... உலகமே அறியாத நாயகி... அவர்கள் வாழ்வில் நடைபெறும் சுவாரசியங்களே ஒரு தொகுப்பாய்...இந்த கதை.
110K 4.8K 37
இது என்னுடைய I DON'T LIKE U COZ' U R TOO HANDSOME கதையின் தமிழாக்கம்.
12.7K 834 22
இதயத்தை கொய்த கொலையாளி - பாகம் 2