வானாகி நின்றாய்(Completed)

Bởi Preeja217

105K 4.8K 1.5K

நமது கதாநாயகனுக்கு‌ இரு தோழிகள். இருவரும் அவனைக் காதலித்தனர்.யார் காதல் ஜெயிக்கும்?? யார் காதல் தோற்றது?? யார... Xem Thêm

அறிமுகம்
கதாநாயகன்
கல்லூரி முதல் நாள்
கதிரின் முதல் நட்பு
முதல் கதாநாயகி
சுவாதி அறிமுகம்
காதல் மலர்ச்சி
முதலாம் ஆண்டு விடுமுறை
லேட்ரல் என்ட்ரி
கதிருக்கு அட்வைஸ்
சுற்றுலா நேரம்
பெங்களூர் பயணம்
கம்பைன் ஸ்டடிஸ்
கதிர் சுவாதி காதல்
நிலாவின் முடிவு
கல்லூரி தினம்
கதிரின் பரிசு
நிலா தந்தை மரணம்
கதிர் சுவாதி சண்டை
நிலா லவ் பிரோபோஸ்
கேம்பஸ் இன்டர்வியூ
கல்லூரி கடைசி நாள்
இரண்டாவது பாகம்
கதிரின் நிலை
கதிர் ஃபிளாஷ் பேக்
காதலர் தின சர்ப்ரைஸ்
சுவாதி வருகை
கேள்வி - பதில்
நிலாவின் சமாதானம்
சுவாதி திருமண ஏற்பாடு
சுவாதி கதிர் சந்திப்பு
மருத்துவமனையில் கதிரின் நிலை
ஹேமாவின் வருகை
நிலா சுந்தர் சந்திப்பு
ஹேமாவின் பொய் கதை
நிர்மலா ஐபிஎஸ்
நிர்மலாவின் கதை
நிலாவிற்கு ஆறுதல்
ஹேமாவை கவர்ந்தவன்
நிர்மலாவின் சொந்தம்
நிலா தந்தை மரணத்தில் மர்மம்
நட்சத்திரா குழு
சுவாதி கதிர் சந்திப்பு
சுவாதி தந்தை கைது
நவீன் யார்???
கதிர்-நிலா காதல்
சுவாதி உடைத்த உண்மைகள்
கதிரின் முடிவு
ஹேமாவின் அறிவுரை
ஹேமாவின் கனவு
கதிரின் வேலை
நவீன் முடிவு
சென்னை பயணம்
சுவாதியின் மாற்றம்
நவீன் கேர்ல் ஃபிரண்ட்
மேரேஜ் ஷாப்பிங்
கதிர் நிலா திருமண ஏற்பாடு
திருமணத்திற்கு முந்தைய நாள்
கதிர் நிலா திருமணம்
எதிர்பாராத விருந்தினர்
சுவாதியின் பரிசு
நவீன் லவ் பிரோபோஸ்
சுவாதியின் உதவி
நவீன்-ஹேமா திருமணம்

இரண்டாம் கதாநாயகி

2K 89 34
Bởi Preeja217

இரண்டாவது கதாநாயகி

உடனே ஐபிஎஸ் சேகர் அவர்கள் சிரித்துக்கொண்டே "இல்லை மேடம், என் மகளை நான் இந்த கல்லூரியில் சேர்த்திருக்கிறேன்.இன்று அவளுக்கு முதல் நாள்..எனவே அவளை டிராப் செய்வதற்காக இங்கு வந்தேன்” என்று கூறினார்.

அவர் பின்னால் அவருடைய மகள் நின்றுக் கொண்டிருந்தாள். உடனே லெக்சரர் அவளிடம் உன்னுடைய பெயர் என்னமா?? என்று கேட்க.. அவள் என்னுடைய பெயர் நிலா என்றாள்.

உடனே கலா மேடம் ஏன் அங்கேயே தந்தை பின்னால் ஒளிந்துக் கொண்டு இருக்கிறாய்?? “உள்ளே வா” என்று அழைத்தார்..

உடனே நிலாவின் தந்தை சேகர் “அவள் வீட்டில் செல்லமாக வளர்ந்தவள்.. அவளுக்கு அம்மா கிடையாது.. எனவே கொஞ்சம் பத்திரமாக பார்த்துக்கொள்ளுங்கள் என்றார்..

சேகர் நிலாவிடம் “மாணவர்களிடம் கொஞ்சம் கவனமாக இருக்கவேண்டும்” என்று அறிவுறுத்தினார்.அதற்கு நிலா "அப்பா அதெல்லாம் நான் பார்த்துக்கிறேன்" என்றாள். உடனே கலா மேடம் “அதெல்லாம் ஒன்றும் இல்லை சார். நான் அவளை நன்றாகப் பார்த்துக் கொள்கிறேன்”.

ஒரு மாணவனும் அவளை சீண்டாமல் நானே அவளைப் பார்த்துக் கொள்கிறேன் என்று கூறி நிலாவை அவர் உள்ளே அழைத்தார்..

நிலா வகுப்பிற்குள் நுழைந்ததும் மாணவர்கள் அனைவரும் இந்த பொண்ணு நம்ம கிளாஸ்ல படிக்கப்போகுதா.. ஜாலி! ஜாலி! என்று சொல்லி கைதட்டினர்..நிலாவின் தந்தை அங்கிருந்து சென்றார்..

மாணவர்கள் அனைவரும் உற்சாகம் அடைந்தனர்..நிலா வெள்ளை டிரெஸில் சிகப்பு கலர் துப்பட்டா போட்டு வந்திருந்தாள்.

அவள் அழகில் அப்படியே மாணவர்கள் மெய் மறந்து இருக்க, ஆசிரியை அவளை அறிமுகப்படுத்தினார்.நிலா ஐபிஎஸ் அதிகாரியின் மகள். எனவே அவளிடம் யாரும் வால் ஆட்டக் கூடாது என்று அறிவுரை வழங்கினார்..

நிலா அனைவரையும் பார்த்து சிரித்தபடி ஹாய் ஃபிரண்ட்ஸ் , ஐஎம் நிலா..நான் போலிஸ் அதிகாரியின் மகள் என்று என்னை ஒதுக்கி விடாதீர்கள் ..என்னிடம் அனைவரும் இயல்பாக பழகலாம் என்றாள்..நான் உங்க கூட படிக்கிற ஒரு மாணவி அவ்வளவு தான்....அப்படியே நீங்கள் என்னை பார்த்தா போதும் என்றாள்..

மாணவர்கள் அனைவரும் “வீ லைக் யூ நிலா” என்றனர்..

சுவாதியின் முகம் வாடத் தொடங்கியது.. "எனக்கு போட்டியா ஒருத்தி வந்து இருக்காளே" என்று அவளை முறைத்தபடி பார்த்துக் கொண்டிருந்தாள்...

சுவாதி அருகில் இடம் இருந்தும் அவள் அசையவில்லை..

நிலா அமைதியாக சிரித்தவாறு சுவாதிக்கு நேர் பின்னால் சென்று சுதாவின் அருகில் அமர்ந்தாள்..கதிருக்கு நேர் இரண்டாம் வரிசையில் ஓரத்தில் உட்கார்ந்தாள்.

சுதாவிடம் கைக்கொடுத்து தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டாள்..சுதாவும் நிலாவும் தோழிகள் ஆயினர்..

உடனே ராம் கதிரிடம் “டேய், நீ கொடுத்து வச்சவன்டா..உனக்கு முன்னாடி உள்ள பொண்ணும் சூப்பர் ,இரண்டாவது உனக்கு நேரா இருக்கிற பொண்ணும் சூப்பரா இருக்கு”.. அவகூட ஏதாவது பேசு பேசு என்றான்..

சுவாதிய விட நிலா நல்ல பொண்ணு மாதிரி இருக்குடா..பேசாம நீ சுவாதிய விட்டுட்டு நிலாவ லவ் பண்ணு மச்சி என்றான்…

கதிர் உடனே "ஒருத்தனுக்கு வாய்ல சனி தாண்டவமாடுது.உனக்கு நேரம் சரி இல்லன்னு நினைக்குறேன்" ..என்று மிரட்டினான்..உடனே ராம் "போடா நீ பேசாட்டா எனக்கு என்ன?? நான் பேசுறேன் பாரு" என்று நிலாவிடம் பேச முயற்சித்தான்..

ராம் "ஹை நிலா" என்று கைகாட்டினான்.. நிலாவும் "ஹை" சொல்லி சிரித்தாள்.. உடனே ராம் "வாவ் நிலா பேசுறாடா.. சூப்பர் சூப்பர்" என்றான்..

உடனே ராம் கதிரிடம் “சுவாதிக்கு டஃப் காம்பிட்டீஷன் கொடுக்க வந்தாள் நிலா.சுவாதி கொஞ்சம் ஓவர் பில்ட்அப் தான். நான் நிலா பக்கம் தான் நிற்பேன்” என்று கூறினான்.நிலாவிற்கு தலைகனம் கிடையாது..அவளைப் பார்த்தாலே தெரிகிறது..என்றான்..

கதிர் உடனே ராமை பார்த்து முறைத்தான்..கதிரிடம் ராம் “நான் வேணும்ணா அந்த சைடுல உன் ப்ளேஸ்ல வந்து உட்காரவா..நிலா கூட பேச கொஞ்சம் ஈஸியா இருக்கும்” என்று கேட்டான்..

உடனே கதிர் “டேய், உன்னிடமிருந்து அவர்கள் இருவரையும் காப்பாற்ற வேண்டியது என்னுடைய கடமை”. நீ உள்ளே இருந்தால் தான் அவர்களுக்கு பாதுகாப்பு ..எனவே நீ உள்ளேயே உட்கார் என்று கூறினான்.

நிலா , சுவாதி இருவரும் வகுப்பில் நன்றாய் படிக்கும் மாணவிகள். நிலாவுக்கும் ,சுவாதிக்கும் தோழிகள் கிடைத்தனர். அவர்கள் தங்கள் தங்கள் தோழிகளுடன் பேசிக் கொண்டிருப்பார்கள்.

வகுப்பில் நிலாவுக்கும் சுவாதிக்கும்  தான் அனைத்து விதமான போட்டியும் நடக்கும்...சுவாதி தான் எப்பொழுதும் நிலாவை ஜெயிப்பாள்.ஜெயித்து விட்டு நிலாவைப் பார்த்து நக்கலாக சிரிப்பாள்.நிலா அதைக் கண்டுகொள்ளாமல் இருப்பாள். இவர்கள் இருவருக்கும் இடையில் கோல்ட் வார் செல்வது வகுப்பில் அனைவருக்கும் தெரியும்..

வகுப்பில் நிறைய பேருக்கு நிலாவைப் பிடிக்கும்.. ஒரு சில பேருக்கு சுவாதியைப் பிடிக்கும்.

தலைவி தேர்வு

கலா மேடம் வகுப்பிற்குள் நுழைந்தார்..அனைவரும் மேடம் வந்தது கூட தெரியாமல் பேசிக் கொண்டே இருந்தனர்..உடனே கலா மேடம் கோபத்தில் "நீங்க எல்லாரும் ஸ்கூல் ஸ்டுடென்ட்ஸ் இல்ல..இப்ப நீங்க காலேஜ் வந்தாச்சு.. ஒரு டிசிப்ளின் வேண்டாமா??

கிளாஸ்ல மேடம் வரது கூட தெரியாம பேசிட்டு இருக்கீங்க..முதல் வாரம் என்பதால் இவ்ளோ நாள் அமைதியா இருந்தேன்..எவனுக்கெல்லாம் பேசனுமோ அப்படியே எழும்பி வெளியே போகலாம்.. என்று கத்தத் தொடங்கினார்.ரவி கதிரிடம் "டேய் வாடா வெளியே போகலாம்.. மேடமே சொல்லியாச்சு" என்று சிரித்தான். பிறகு அனைவரும் அமைதியாக இருந்தனர்..

இந்த வகுப்பிற்கு நான் ஒரு லீடர் தேர்ந்தெடுக்கப் போகிறேன்.அவன் தான் இந்த வகுப்பிற்கு இனி பொறுப்பு.. ஏதாவது தவறு நடந்தால் நான் லீடரிடம் தான் கேட்பேன் என்று கூறினார் ..

மாணவர்கள் பக்கத்தில் இருந்து ஒரு பெயர்.. மாணவிகள் பக்கத்தில் இருந்து இரண்டு பெயர்களை தேர்ந்தெடுக்கிறேன்.. யாரை தேர்ந்த்தெடுக்கலாம் என்று நீங்கள் எனக்கு அறிவிக்க வேண்டும் என்றார் ..

கலா மேடம் சுவாதி ,நிலா மற்றும் மாணவர்கள் பக்கத்தில் இருந்து ரமேஷ் என்ற மாணவனைத் தேர்ந்தெடுத்தார்... வகுப்பு தலைவியாக யாரைத் தேர்ந்தெடுக்கலாம்?? நிலாவா?? சுவாதி யா?? என்று கலா மேடம் கேட்டார்.. அப்போது அனைவரும்  நிலாவின் பெயரைக் கூறினர்.

ஓகே ஸ்டூடன்ட்ஸ்!! நிலா தலைவியாகவும் ரமேஷ் தலைவனாகவும் தேர்ந்த்தெடுக்கப்படுகிறார்கள் என்று அறிவித்தார்..நெக்ஸ்ட் வீக்ல இருந்து உங்களுக்கு வீக்லி எக்ஸாம் ஸ்டார்ட் ஆகுது என்றார்..

அனைவரும் வியந்தபடி கல்லூரியில் வீக்லி எக்ஸாமா?? என்று திருதிருவென முழித்தனர்..

பிறகு கலா மேடம் நிலாவை அழைத்து "இன்றிலிருந்து லெக்சரர்ஸ் இல்லாத போது இந்த வகுப்பு உன் பொறுப்பு..பின் டிராப் சைலன்ஸா இருக்கனும்" என்றார்..
உடனே நிலா "ஓகே மேம்" என்றாள்..

சுவாதி தன்னை தான் தலைவியாக தேர்ந்தெடுப்பார்கள் என்ற நம்பிக்கையில் இருந்தாள்.. மாணவர்கள் நிலா பக்கம் சாய்ந்ததும் சுவாதி மிகவும் வருந்தினாள்..

இடைவேளை வந்தது..கதிருக்கு சுவாதி சோகமாக இருப்பது புரிந்தது..அவன் அவளுக்கு நேர் முதல் பெஞ்சில் போய் உட்கார்ந்து ..சுவாதி "ப்ளீஸ் ஃபீல் பண்ணாத"..கிளாஸ் லீடர் தானே தேர்ந்த்தெடுத்தாங்க..அதுக்குன்னு நீ புத்திசாலி இல்லன்னு ஆயிடுமா?? என்று ஆறுதலாக பேசினான்..

உடனே சுவாதி "என் வாழ்வில் இதுவரை நான் யாரிடமும் தோற்றது இல்லை.ஆனால் நிலா என்னை தோற்கடித்துவிட்டாள்.என்னை இந்த வகுப்பில் யாருக்கும் பிடிக்கல" என்று கவலையுடன் கதிரிடம் பகிர்ந்தாள்..

உடனே கதிர் "யார் சொன்னா?? எனக்கு உன்ன ரொம்ப பிடிக்கும்..நீ எல்லார்கிட்டயும் ஃபிரீயா பேசு..உன்னை எல்லாருக்கும் பிடிக்கும்" என்று ஆறுதலாக பேசினான்..

சுவாதி மனதில் கதிர் நல்லவன் என்ற எண்ணம் எழுந்தது..அவனை அவள் நண்பனாக ஏற்றுக் கொண்டாள்..

பிறகு ஒரு நாள் கணக்கு ஆசிரியை ஒரு பிராப்ளம் சால்வ் செய்யுமாறு கொடுத்தார்.. அப்பொழுது மாணவிகள் அனைவரும் செய்து முடித்து விட்டனர்..

ஆனால் மாணவர்கள் அனைவரும் திருதிருவென்று முழித்துக் கொண்டிருந்தனர்..சில மாணவர்கள் மட்டுமே முடித்திருந்தனர்..

கதிர் தன் பேனாவைக் கடித்துக் கொண்டு "பிராப்லம் எவ்வாறு வரும்?" என்று தீவிரமாக யோசித்துக் கொண்டே இருந்தான்.. அவன் யாரிடம் கேட்பது என்று முழித்துக் கொண்டே இருந்தான்.

நிலா அவனிடம் தன்னுடைய நோட்டை காட்டிக் கொடுத்தாள்.ஆசிரியை அதை பார்த்து விட்டார். எனவே கதிரால் முழுவதுமாக பார்த்து எழுத முடியவில்லை.

சுவாதி திரும்பிப் பார்த்து "முடிச்சாச்சா??" என்று கதிரிடம் கேட்டாள்..அவன் நோட்டைக் காட்டினான்.. அவனுடைய நோட்டில் எதுவும் எழுதாமல் இருந்தது..

உடனே சுவாதி அவனிடம் அந்தப் ப்ராப்ளத்தை ஒரு பேப்பரில் எழுதிக் கொடுத்தாள். கதிர் அதைப் பார்த்து அப்படியே எழுதினான்.அவளிடம் "தேங்க்ஸ்" என்று பேப்பரில் திரும்ப எழுதிக் கொடுத்தான்..
            
அந்த வகுப்பு முடிந்ததும் கதிர் நிலாவிடம் சென்று “நன்றி” என்று கூறினான்.நிலா "இட்ஸ் ஓகே கதிர்" என்றாள். பிறகு கதிர் சுவாதியிடம் சென்று “இன்று மட்டும் நீ எனக்கு அந்த பிராப்லம் சால்வ் செய்து தரவில்லை என்றால் நான் வகுப்பில் இருந்து வெளியே தான் சென்றிருக்க வேண்டும்”..

இந்த பசங்க வேற எப்படியோ எல்லாம் காப்பி அடிச்சி எழுதிட்டாங்க.. நானும் ராமும் மட்டும் தான் எழுதாமல் முழிச்சிட்டு இருந்தோம்..

"நல்ல வேளை நீ ஹெல்ப் பண்ணின" என்று அவளிடம் கூறினான். உடனே சுவாதி “நீ என்னோட பெஸ்ட் பிரண்ட்.. நான் உனக்கு ஹெல்ப் பண்றது என்னோட கடமை”என்று கூறி சிரித்தாள்..கதிர் சுவாதி சிரிப்பில் அவளுடைய கன்னங்குழியில் விழுந்தான்..

சுவாதி கதிருடன் நிறைய பேசத் தொடங்கினாள்.இருவரும் நட்புடன் பழகத் தொடங்கினர்..

**********************

இன்றைய அப்டேட் எவ்வாறு இருந்தது??

சுவாதி மற்றும் கதிர் நட்பு காதலை நோக்கி செல்லுமா??

நிலா கதிர் இடையே காதல் வளருமா??

பொறுத்திருந்து பார்ப்போம்..

************************

Đọc tiếp

Bạn Cũng Sẽ Thích

37.3K 1.9K 29
A perfect relationship does not bloom between the souls who are perfect, it will happen when the souls who are ready to make the relationship perfect...
110K 4.8K 37
இது என்னுடைய I DON'T LIKE U COZ' U R TOO HANDSOME கதையின் தமிழாக்கம்.
58.8K 2.4K 36
காதலாகி, காதலாகி காத்திருந்தேன் நான். காலம் தந்த வேதனையை வென்று வந்தேன் உன் காதலால்,, நீயே என் உலகமென்று புரியவைத்தாய் கண்மணி உன் காதல் மொழியில். உ...
80.6K 2.5K 46
திருமணத்தையே வெறுக்கும் ஒருவனை விரட்டி விரட்டி ஒரு பெண் காதலிக்கிறாள்... அவளை ஏற்பனா இல்லை தள்ளி நிறுத்துவனா என்பதே இந்த கதை...