வானாகி நின்றாய்(Completed)

By Preeja217

105K 4.8K 1.5K

நமது கதாநாயகனுக்கு‌ இரு தோழிகள். இருவரும் அவனைக் காதலித்தனர்.யார் காதல் ஜெயிக்கும்?? யார் காதல் தோற்றது?? யார... More

அறிமுகம்
கல்லூரி முதல் நாள்
கதிரின் முதல் நட்பு
முதல் கதாநாயகி
சுவாதி அறிமுகம்
இரண்டாம் கதாநாயகி
காதல் மலர்ச்சி
முதலாம் ஆண்டு விடுமுறை
லேட்ரல் என்ட்ரி
கதிருக்கு அட்வைஸ்
சுற்றுலா நேரம்
பெங்களூர் பயணம்
கம்பைன் ஸ்டடிஸ்
கதிர் சுவாதி காதல்
நிலாவின் முடிவு
கல்லூரி தினம்
கதிரின் பரிசு
நிலா தந்தை மரணம்
கதிர் சுவாதி சண்டை
நிலா லவ் பிரோபோஸ்
கேம்பஸ் இன்டர்வியூ
கல்லூரி கடைசி நாள்
இரண்டாவது பாகம்
கதிரின் நிலை
கதிர் ஃபிளாஷ் பேக்
காதலர் தின சர்ப்ரைஸ்
சுவாதி வருகை
கேள்வி - பதில்
நிலாவின் சமாதானம்
சுவாதி திருமண ஏற்பாடு
சுவாதி கதிர் சந்திப்பு
மருத்துவமனையில் கதிரின் நிலை
ஹேமாவின் வருகை
நிலா சுந்தர் சந்திப்பு
ஹேமாவின் பொய் கதை
நிர்மலா ஐபிஎஸ்
நிர்மலாவின் கதை
நிலாவிற்கு ஆறுதல்
ஹேமாவை கவர்ந்தவன்
நிர்மலாவின் சொந்தம்
நிலா தந்தை மரணத்தில் மர்மம்
நட்சத்திரா குழு
சுவாதி கதிர் சந்திப்பு
சுவாதி தந்தை கைது
நவீன் யார்???
கதிர்-நிலா காதல்
சுவாதி உடைத்த உண்மைகள்
கதிரின் முடிவு
ஹேமாவின் அறிவுரை
ஹேமாவின் கனவு
கதிரின் வேலை
நவீன் முடிவு
சென்னை பயணம்
சுவாதியின் மாற்றம்
நவீன் கேர்ல் ஃபிரண்ட்
மேரேஜ் ஷாப்பிங்
கதிர் நிலா திருமண ஏற்பாடு
திருமணத்திற்கு முந்தைய நாள்
கதிர் நிலா திருமணம்
எதிர்பாராத விருந்தினர்
சுவாதியின் பரிசு
நவீன் லவ் பிரோபோஸ்
சுவாதியின் உதவி
நவீன்-ஹேமா திருமணம்

கதாநாயகன்

4.9K 141 42
By Preeja217

கதாநாயகன் வீடு

கதிர் ஒரு சாதாரணமான மாணவன் ..அழகானவன் கம்பீரமானவன் என்று சொல்லும் அளவுக்கு இல்லை.நமது பக்கத்து வீடுகளில் பார்க்கும் சாதாரண இளைஞன் தான் நமது கதாநாயகன்.

ஆனால் பெண்களுக்கு மதிப்பு கொடுப்பவன்.சில கட்டுப்பாடுகளுடன் வாழ்பவன்..பன்னிரண்டாம் வகுப்பில் எப்படியோ கஷ்டப்பட்டு படித்து 700 மதிப்பெண்கள் பெற்றான் .

அவனுடைய தந்தை எப்பொழுதும் அவனைத் திட்டிக்கொண்டே இருப்பார்.பசங்களுக்கு படிப்பில் முதல் போட்டியே அவர்களது தங்கை தான்.

நம்ம கதிருக்கும் அதே பிரச்சினை தான்.அவன் தங்கை படிப்பில் கெட்டிக்காரி.பிறகு என்ன சொல்லவா வேண்டும்?? தினமும் கதிருக்கு அவன் தந்தையிடம் இருந்து நிறைய பொன் மொழிகள் கிடைக்கும்.

அவற்றில் ஒன்று தான் இது "உன்னை பெற்றதற்கு ஒரு அரிசி மூட்டையை பெற்றிருக்கலாம். சாப்பிடவாவது செய்யலாம்" .."உன் தங்கச்சி கிட்ட கேட்டுப் படி" என்று எப்பொழுதும் அவனைக் கடிந்துக் கொண்டே இருப்பார்.

அவர் திட்டுவது கூட கதிருக்கு வலிக்காது. ஆனால் அவனுடைய தங்கை நக்கலாக ஒரு சிரிப்பு சிரிப்பாலே அதைப் பார்க்கும் போது அவனுக்கு கோபம் கோபமாக வரும்.

அவனுடைய தாயார் கதிரிடம்” நீ ஏதாவது வாழ்கையில் சாதிக்கவேண்டும்”. அப்பொழுது தான் உன்னுடைய தந்தை உன்னை திட்டுவதை நிறுத்துவார் என்று மகனின் பக்கம் நிற்பார்.

ஆனால் கதிருக்கு அடிக்கடி எழும் சந்தேகம் “ அம்மா, நீ என் பக்கமா?? இல்ல அப்பா பக்கமா??" என்பான் கேலியாக..அப்பா கடிந்து சொல்வதை நீ பாசமாக சொல்கிறாய் என்று தன் அம்மாவைக் கேலி செய்வான்...

கதிருக்கு ஒரே ஒரு தங்கை இருக்கிறாள்..அவளுடைய பெயர் ஹேமா. அவள் படிப்பில் படுச்சுட்டி.கதிர் அமைதியாக இருந்தாலும் அவனைச் சும்மா இருக்க விட மாட்டாள் .அவனை வந்து சீண்டி சண்டை போட்டுக் கொண்டே இருப்பாள்.

பிறகு தந்தையிடம் "அப்பா, அண்ணா என்னை அடிக்கிறான்” என்று மாட்டிக் கொடுத்து விடுவாள்.எவ்வளவு சண்டைப்  போட்டாலும் ஹேமாவுக்கு கதிரை ரொம்ப பிடிக்கும்.

கதிருக்கு அவன் தங்கை ஒரு நல்ல தோழி என்றே கூறலாம்.அவன் செய்யும் கள்ள வேலைகளுக்கு எல்லாம் நன்றாகத் துணை போவாள்.உதாரணமாக வீட்டில் அவர்களுடைய அப்பா மிகவும் கண்டிப்பாக இருப்பார்.

அவர் தின்பண்டங்கள் வாங்கி விட்டு அளவோடுதான் சாப்பிடவேண்டும் என்று அவருடைய மனைவியிடம் கூறி அதை மேலே வைக்க சொல்லுவார் .ஆனால் கதிரும் ஹேமாவும் சேர்ந்து இரவு அனைவரும் தூங்கிய பிறகு வந்து அதை திருட்டுத்தனமாக எடுத்து சாப்பிடுவார்கள் ..

அதுமட்டுமல்ல கதிரின் தந்தைக்கு 10 மணிக்கு மேல் முழித்திருப்பது பிடிக்காது. ஆனால் கதிரும் ஹேமாவும் அவர்கள் இருவரும் தூங்கியப் பிறகு தான் அரட்டை அடிக்கத் தொடங்குவார்கள்..

அவ்வாறு நிறைய முறை அவர்கள் தந்தையிடம் கையும் களவுமாக மாட்டியுள்ளனர்.

அவ்வாறு மாட்டியதும் ஹேமா கதிரையும் கதிர் ஹேமாவையும் மாறி மாறி கை காட்டுவார்கள். ஆனால் அவர்களுடைய தந்தைக்குத் தெரியும் இருவரும் சேர்ந்துதான் கள்ளத்தனம் செய்தார்கள் என்று, பிறகு இருவரையும் சேர்ந்து திட்டுவார்.

ஹேமா அழுவது போல் டிராமா செய்து எஸ்கேப் ஆகி விடுவாள். கடைசியில் நமது கதிர் தான் மாட்டிக் கொள்வான்.

கதிர் வெளி உலகத்தைப் பொறுத்த வரையில் அன்பானவன், பிறரோடு இயல்பாக பழகும் குணம் கொண்டவன்.
கதிரின் பக்கத்து வீட்டில் சுதா என்ற பெண் இருந்தாள்.அவள் தான் கதிரின் தோழி.

சிறு வயதில் இருந்தே ஒரே பள்ளியில் படித்தனர்.அவள் பன்னிரெண்டாம் வகுப்பில் நல்ல மதிப்பெண் பெற்று கதிர் சேர்ந்த கல்லூரியிலேயே சேர்ந்தாள்.
கதிர் டொனேஷன் கொடுத்து கல்லூரியில் சேர்கிறான்..

கதிருக்கு ஒரு கதாநாயகி அல்ல இரண்டு கதாநாயகிகள் காத்துக் கொண்டிருக்கிறார்கள்..

*************
பார்ப்போம்..
அதில் யாரோடு இணைகிறான்??
யாரை வேண்டாம் என்கிறான் என்று..

நமது கதாநாயகிகளைச் சந்திக்க கல்லூரிக்கு அடுத்த வாரம் செல்வோம்..

கதை படிக்கும் அனைவருக்கும் நன்றி..
உங்கள் கருத்துக்களை பகிரவும்..



Continue Reading

You'll Also Like

11.5K 372 22
ஆயிரம் அறிவுரைகள், ஆதரவு கரங்கள் நீண்டாலும் காதலாய் அவன் பார்க்கும் அந்த ஒரு பார்வைக்காக ஏங்கி தவித்தவள் கண்ணீர் கன்னத்தை தொட, அவள் கணவன் கையை கொஞ்சம...
41K 1.2K 45
காதல் கலந்த குடும்ப நாவல் - எழுதியது : 2005 - வெளியீடு : 2010 - பதிப்பகம் : அருணோதயம் https://youtu.be/QmqC78hLg00?si=qApZATBpfOha7v3r
202K 5.3K 131
காதலால் கசிந்துருகி.. கரம் பிடித்த பெண்ணவளின் நேசம் பொய்யாக போனதில்... மென்மையான இதயம் கொண்டவன்... இரும்பு கவசம் அணிந்து பூட்டிக் கொள்ள... நாயகனின் வ...
137K 3.5K 62
தாயின் சுகத்தையும் தாரத்தின் சுகத்தையும் ஒன்றாய் தந்த பெண்ணவள் யாரென தெரியாத நாயகன் நிகில் . முகமறியா ஆடவனை விழிமூடி தனக்குள் நிறைத்தவள் . உணர்விலே க...