கானல் நீ என் காதலே!

By Aarthi_Parthipan

14.4K 709 134

துயரம் என்றாள் இன்னதென்று தெரியாமல் வளர்ந்தவள் அவள்! ஊரே மெச்சும் அந்த பெரிய குடும்பத்தின் செல்லப்பிள்ளை. இயற... More

கானல் நீ என் காதலே!
கானல் - 1
கானல் - 2
கானல் - 3
கானல் - 4
கானல் - 5
கானல் - 6
கானல் - 7
கானல் - 8
கானல் - 9
கானல் - 10
கானல் - 11
கானல் - 12
கானல் - 13
கானல் - 15
கானல் - 16
கானல் - 17
கானல் - 18
கானல் - 19
கானல் - 20
கானல் - 21
கானல் - 22
கானல் - 23
கானல் - 24
கானல் - 25
கானல் - 26
கானல் - 27

கானல் - 14

264 21 3
By Aarthi_Parthipan

குந்தவியின் உடல்நிலை கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி கொண்டு இருந்தது. வானதியும் பானுமதியும் அவள் அருகிலேயே இருந்து அவளை கண்ணும் கருத்துமாக கவனித்துக் கொண்டார்கள்.

வெற்றிக்கு அவன் ஊரில் செய்து முடிக்க வேண்டிய வேலைகள் அதிகம் இருந்ததால் அவன் அங்கிருந்து கிளம்பி இருந்தான்.

இருப்பினும் அவன் மனம் முழுவதும் அவளை சுற்றியே இருந்தது. எப்பொழுதும் அவள் உடல்நிலை குணம் அடைய வேண்டும் என்பதை மட்டுமே எண்ணி கொண்டு இருந்தான். அவ்வப்போது அவளிடம் கைபேசியில் பேசிக் கொண்டான்.

"வானு, எனக்கு இப்போ ஹெல்த் ரொம்பவும் பரவாயில்ல. நீ இனிமேலும் காலேஜ் போகாம இங்க இருக்க வேண்டாம். இப்போதைக்கு அம்மா என்கூட இருக்காங்க, அதுவே போதும்! நீ இன்னிக்கு காலேஜ் கிளம்பு" என்றாள் குந்தவி.

"அக்கா! அத்தை மட்டும் தனியா இருந்து கஷ்டப்படுவாங்க, நான் இன்னும் ரெண்டு நாள் லீவ் போடுறதுல எந்த பிரச்சனையும் இல்ல" என்று அசால்ட்டாக பதில் அளித்தாள் வானதி.

"அது ஒன்னும் கஷ்டமான வேலை இல்ல வானு, அம்மா அதெல்லாம் பாத்துப்பாங்க. இதுக்காக நீ உன் படிப்பை கெடுத்துக்க கூடாது. நீ காலேஜ் கிளம்பு, இங்க நான் சமாளிச்சுக்கிறேன்" என்று கூறி அவளை கல்லூரிக்கு அனுப்பி வைத்தாள்.

வானதியும் அவள் அவ்வளவு தூரம் சொல்வதை புறக்கணிக்க முடியாது ஒப்புக்கொண்டு கல்லூரிக்கு கிளம்ப ஆயத்தமானாள்.

பானுமதியிடம் சொல்லி விட்டு, ஒரு ஆட்டோ பிடித்து பத்து நிமிடத்தில் அவள் கல்லூரி விடுதியை அடைந்தாள். வேகமாக அவள் அறைக்கு சென்று அரைமணி நேரத்தில் கல்லூரிக்கு செல்ல தயாராக வெளியே வந்தாள்.

மழைகாலம் என்பதால் வானம் இருண்டு காணப்பட்டது. குளிர் காற்று அவள் முகத்தை வருடி சென்றது.

திடீரென வானில் மின்னல் பளிச்சிட, அதை தொடர்ந்து இடி முழக்கத்துடன் மழைத்துளிகள் மெல்ல மெல்ல பூமியில் விழ தொடங்கின.

பத்து நிமிடத்தில் கல்லூரியை அடைந்து விடலாம், அதற்குள் மழை வர வாய்ப்பில்லை என்ற நம்பிக்கையில் அவள் குடை எதுவும் எடுக்காமல் வெளியே வந்திருந்தாள்.

கல்லூரிக்கும் விடுதிக்கும் நடுவில் அவள் வந்த பொழுது மழை வர தொடங்கி இருந்தது.

"இப்படி பண்ணிட்டீங்களே வருண பகவானே!" என்று மனதில் எண்ணிக் கொண்டு கல்லூரியை நோக்கி வேகமாக நடக்க தொடங்கினாள்.

சிறு தூறலாக தொடங்கிய மழை அடுத்த சில மணித்துளிகள் சோவென கொட்ட தொடங்கியது. வானதி ஒருவாறு சமாளித்து அருகில் இருந்த மரத்தடியில் நின்று கொண்டாள். ஆனால் மழைநீர் அந்த இடத்தில் அதிகரிப்பதை உணர்ந்து வேறு வழியின்றி மழையை சமாளித்து கொண்டு கல்லூரியை நோக்கி ஓட்டமும் நடையுமாக விரைந்தாள்.

ஒருவழியாக தெப்பலாக நனைந்து, குளிரில் நடுங்கியபடி கல்லூரியை அடைந்தாள். கல்லூரியின் கீழ்தளத்தில் நின்று அவள் உடைகளை உலர்த்திய பின் வகுப்புக்கு செல்லலாம் என நினைத்தாள்.

அவள் துப்பட்டாவை எடுத்து போர்த்திக்கொண்டு ஓய்வெடுக்கும் அறைக்கு செல்ல எத்தனித்தாள்.

"வானதி!" மதனின் குரல் கேட்டு அவளுக்கு அதிர்ச்சியாக இருந்தது.

"ஐயோ! இப்படி ஒரு நிலையில இவனை வேற பார்க்கணுமா!" என்று மனதுக்குள் நொந்து கொண்டு அவனை திரும்பி பார்த்தாள்.

"ஹாய் மதன்!" என்றாள் செயற்கையாக புன்னகைத்தவாறு.

"ஒரு குடை எடுத்துட்டு வந்துருக்கலாமே! பாருங்க இப்படி மழையில நனையுற மாதிரி ஆயிடுச்சு" என்றான்.

"ஐயோ! இவன் வேற, நான் என்ன செஞ்சா இவனுக்கு என்ன வந்தது!" என்று மனதுக்குள் பொருமிக் கொண்டு, அதை வெளிக்காட்டி கொள்ளாமல்,

"காலேஜ்க்கு வர டைம் ஆயிடுச்சு, அதான் அவசரத்துல குடை எடுக்க மறந்துட்டேன். இப்போ க்ளாஸ்க்கு டைம் ஆச்சு, ஈவினிங் பாக்கலாம், வரேன்!" என்று கூறி வேகமாக அங்கிருந்து புறப்பட நினைத்தாள்.

"ஹலோ மேடம்! நீங்க டீவில நியூஸ் எல்லாம் பாக்குறது இல்லையா? இவ்வளவு மழை பெய்யும் போது யாரு காலேஜுக்கு வருவாங்க!

இன்னிக்கு காலேஜ் லீவு!" என்றான்.

அவள் விழிகள் விரிய அவனை பார்த்தாள். "காலேஜ் லீவா! அட கடவுளே!" என்று தலையில் அடித்து கொண்டாள்.

அவன் சிரித்தான்!

"அவ்வளவு சின்சியாரிட்டியா!" என்றான் கிண்டலாக.

"நான் மூனு நாளா காலேஜ் வரல, அதான் இதை பற்றி தெரியாம போயிருச்சு. இன்னிக்கும் அவசரத்துல தான் கிளம்பினேன் அதான்" என்றாள்.

"ம்ம்! உங்க ரூம்மேட்ஸ் ஆவது சொல்லி இருக்கலாம்" என்றான்.

"அவுங்க ரூம்ல இல்ல, காலேஜ் வந்திருக்காங்கனு தான் நினைச்சேன்! இப்படி நடக்கும்னு நானும் எதிர்பார்க்கல" என்றாள் சிறு புன்னகையுடனே.

"அது சரி! ஆளே இல்லாத காலேஜ்ல நீங்க என்ன பண்ணிட்டு இருக்கீங்க?" என்றாள் சந்தேகமாக.

"அதை ஏங்க இவ்வளவு சந்தேகமா கேக்குறீங்க! நான் வாலிபால் விளையாடலாம்னு ஃப்ரெண்ட்ஸ் வர சொன்னாங்கனு வந்தேங்க!

இங்க வந்து பார்த்தா, மழை எங்கள விளையாட விடாது போல, அவுங்களும் இன்னும் வந்து சேரல" என்றான்.

"ஓ! ஓகே ஓகே, என்ஜாய்! சரி மதன் நான் அப்படியே கிளம்புறேன்!" என்றாள்.

"மறுபடியும் இந்த மழையில நனைஞ்சுட்டு போவிங்களா? அப்புறம் குந்தவி பக்கத்துல இன்னொரு பெட் அரேஞ்ச் பண்ணி, உங்களையும் அங்க அட்மிட் பண்ண வேண்டியது தான்" என்றான் சிரித்து கொண்டே.

"ம்ம்! அது சரி, ஆனா இப்போதைக்கு மழை விடுற மாதிரி தெரியலயே! எவ்வளவு நேரம் இங்க தனியா நின்னுட்டு இருக்கிறது! அதுக்கு அப்படியே அட்ஜெஸ்ட் பண்ணி ஹாஸ்டலுக்கு போயிடலாம்" என்றாள் மழையை பார்த்தவாறு.

"ஒரு நிமிஷம்!" என்று கூறி அவன் அங்கிருந்து செல்ல, "என்ன சொல்லிட்டு, நீங்க எங்க மழையில நனைஞ்சுட்டு போறிங்க?" என்றாள் அவள் விழிகளை உருட்டி.

"இதோ வந்துடுறேன்" என்று கூறி விட்டு வேகமாக அங்கிருந்து சென்றான். அவள் ஒன்றும் புரியாமல், அவள் உடைகளை உலர்த்தி கொண்டு அங்கேயே நின்றிருந்தாள்‌.

பத்து நிமிடத்தில் அவன் ஒரு குடையுடன் அங்கு வந்து சேர்ந்தான்.

"இந்தாங்க! குடையை பிடிச்சுட்டு நனையாம ரூமுக்கு போங்க" என்றான் புன்னகையுடன்.

"அப்போ நீங்க எப்படி போவிங்க?" அவள் கேட்க, "இப்போ எப்படி வந்தேனோ அதே போல போய், கார் எடுத்துட்டு போயிடுவேன். ஒன்னும் கவலை பட வேண்டாம். நீங்க நனையாம போயிருங்க" என்றான்.

"ம்ம்! சரி வாங்க, கார் பார்க்கிங் வரைக்கும் நான் உங்களை ட்ராப் பண்ணுறேன்" என்றாள் சிரித்துக்கொண்டே.

"நீங்க அவ்வளவு தூரம் வந்து மறுபடியும் ஹாஸ்டலுக்கு நடந்து போகணும், அது உங்களுக்கு சிரமம் தானே! நீங்க கிளம்புங்க நான் அப்படியே மழையை ரசிச்சுட்டே நடந்து போயிடுறேன்" என்றான்.

"ஆமா! ஆமா! உங்க ரசனையை தான் பார்த்தேனே, மழையை ரசிக்க நினைக்குற யாரும் மழையில அவ்வளவு வேகமாக ஓட மாட்டாங்க!

எனக்கு எந்த சிரமமும் இல்ல, நீங்க வாங்க" என்று கூறி குடையை விரித்து அவன் தலைக்கு மேல் பிடித்தாள்.

அவன் அவளை விட மிகவும் உயரமாக இருந்ததால் அவள் சற்று சிரமப்பட்டு பிடிக்க வேண்டியதாய் இருந்தது. அதை புரிந்து கொண்டவன் அவளிடம் இருந்து குடையை வாங்கினான்.

"வாங்க, கார் பார்க்கிங் வரைக்கும் நானே பிடிக்குறேன்" என்று கூறி அவளை நடக்க சொன்னான்.

மொசைக் நிலம் என்பதால் அவள் உடையில் இருந்து வடிந்த மழைநீரில் அந்த இடம் நன்றாக வழுக்கி விடும் நிலையில் இருந்தது. அவள் ஒரு அடி எடுத்து வைத்த போதே, அவளின் கால் இடறி கீழே விழும் முன் அவன் சட்டையை இறுக்கமாக பிடித்து கொண்டாள்.

பின் சரியாக கால்களை ஊன்றி நின்று, அவன் சட்டையில் இருந்து கையை எடுத்துக் கொண்டாள்.

"சாரி!" அவள் கண்களை குறுக்கி, உதட்டை சுளித்து மன்னிப்பு கேட்க, அவன் அவள் முகத்தை ரசித்தவாறே தலை அசைத்தான்.

ஒரு குடையில் இருவரும் சேர்ந்து நடக்க தொடங்கினர்.

சாரலாக முகத்தில் மென்மையாக பட்ட மழைத்துளிகளை ரசித்தவாறு வானதி அவனுடன் நடந்தாள். ஐந்து நிமிடத்தில் அவன் கார் நிறுத்தி இருந்த இடத்திற்கு வந்து சேர்ந்தார்கள்.

"பை வானதி! நாளைக்கு பார்ப்போம்" என்று கூறி விட்டு அவன் உள்ளே ஏறி கொள்ள, அவளும் புன்னகையுடன் அவனை கை அசைத்து வழியனுப்பி விட்டு விடுதியை நோக்கி நடக்க தொடங்கினாள்.

மண் வாசனையை நுகர்ந்து, குடையின் ஓரத்தில் வழிந்து கொண்டிருந்த மழைத்துளிகளை கையில் பிடித்து ரசித்தவாறே அவள் சென்றதை அவனும் ரசித்தவாறு மெதுவாக வண்டியை ஓட்டிச் சென்றான் மதன்.

அவன் அறைக்கு சென்ற பிறகும் அவன் மனம் அவளிடம் இருந்து வர மறுப்பதை உணர்ந்தான்.

அன்று நடந்த அனைத்து நிகழ்வுகளையும் மனதுக்குள் ஓட்டி பார்த்தான்.

காலை வானிலை அறிக்கையில் நன்றாக மழை வரும் என்று குறிப்பிட்டதால் கல்லூரிகள் விடுமுறை என்று சொல்லி விட்டார்கள்.

அவ்வாறு சொன்னால் நிச்சயம் மழை பெரிதாய் வராது என்று எண்ணி அவனும் அவன் நண்பர்களும் சேர்ந்து கல்லூரிக்கு சென்று வாலிபால் விளையாடலாம் என்று முடிவு செய்திருந்தார்கள்.

ஆனால் அங்கு சென்றதும் மழை நன்றாக பெய்ய ஆரம்பித்து இருந்தது. அவனுக்கு சிறு வயதில் இருந்து மழை என்றாலே அலர்ஜி, எனவே எரிச்சலாக காருக்குள்ளேயே அமர்ந்து கொண்டான்.

அவன் நண்பர்களை அழைத்து விவரம் கேட்க நினைத்து கைபேசியை எடுத்தபோது தான் தொலைவில் அவள் வருவதை கண்டான்.

அவ்வளவு நேரம் சிடுசிடுவென இருந்த அவன் முகம் மலர்ந்தது.

மூன்று நாட்கள் அவளை பார்க்காமல் அவனுக்கும் என்னவோ போல் இருந்தது. அன்று அவளை பார்த்தது முற்றிலும் அவன் எதிர்பாராமல் நடந்த நிகழ்வு தான்.

அந்த மழையில் அவள் நடந்து வருவதை பார்த்து மெய்மறந்து போய் அமர்ந்திருந்தான்.

"அவ கொடைய
மறந்து வரும் போது
நான் மழைய ரசிக்க
மாட்டேனே!" அதே சமயம் எஃப் எம்மில் ஒலித்து கொண்டிருந்த பாடல் வரிகள் அவன் காதில் விழுந்தது.

"ஸுச்சுவேஸன் ஸாங்கா! பரவால்ல இப்போல்லாம் நமக்கு நடக்குறது எல்லாம் ரொம்ப சரியா தான் நடக்குது" என்று சொல்லி கொண்டு அவளையே பார்த்துக் கொண்டு இருந்தான்.

கொட்டும் மழையிலும் அவள் கண்களை மூடி ரசித்தவாறு நடந்து வந்ததை வைத்தே அவளுக்கு மழை மிகவும் பிடிக்கும் என்று புரிந்து கொண்டான்.

அவள் வேகமாக கல்லூரி வாசலை நோக்கி நடக்கவும், இவனும் வேகமாக கீழே இறங்கி கல்லூரியை நோக்கி நடந்தான்.

அவளுடன் சேர்ந்து ஒரு குடையில் நடந்து வந்ததை நினைத்து அப்போதும் கூட அவன் மனம் உற்சாகத்தில் குதித்தது. அதுவரை எத்தனை பெண்கள் அவன் வாழ்வில் வந்து போய் இருந்தாலும், அவளை போன்ற ஒருத்தியை அதுவரை அவன் கண்டதில்லை என்பது மட்டும் அடிக்கடி அவனுக்கு உறைத்து கொண்டே இருந்தது.

"டேய்! மழையில நனைஞ்சுட்டு வந்து தலையை கூட துவட்டாம உக்காந்துட்டு இருக்க, இந்தா டவல் தலையை துடச்சுக்கோ!" என்று கூறி துவாலையை அவனிடம் கொடுத்தான்.

மதன் அப்போது தான் சுயநினைவுக்கு வந்தவன் போல் அதை வாங்கி தலையை துவட்டி கொண்டான்.

"குட்டிமா எங்க? உன்கூட இல்லையா?" வெற்றி கேட்க, "இல்ல மாமா, நான் தான் அவளை காலேஜ்க்கு போக சொல்லி அனுப்பி வச்சேன்" என்றாள்.

"மழை காரணமா இன்னிக்கு காலேஜ் எல்லாம் லீவுனு டீவில சொன்னாங்களே!" அவன் கேட்க,

"அடடா! அது தெரியாம அவளை போக சொல்லிட்டேன். பாவம் அவளுக்கு அலைச்சல்! இப்போ அங்க ரூம்ல தனியா இருக்க அவளுக்கு போர் அடிக்கும்" என்றாள் வருத்தமாக.

"அதான் உடனே கிளம்பி இங்க வந்துட்டேன்!" என்று கூறி கொண்டே உள்ளே நுழைந்தாள் வானதி. அவளை பார்த்ததும் குந்தவியின் முகம் மலர்ந்தது.

"சாரி வானு, நான் சொன்னதால தானே நீ போன, உனக்கு தேவையில்லாத அலைச்சல்" என்றாள்.

"அதெல்லாம் ஒன்னும் இல்ல அக்கா! நீங்க அதுக்காக எல்லாம் ஃபீல் பண்ணாதிங்க" என்று கூறி கைபேசியை வாங்கி அவளும் அவனுடன் ஓரிரு வார்த்தைகள் பேசி விட்டு கைபேசியை வைத்தாள்.

குந்தவியின் முகம் சோர்வாக இருப்பதை உணர்ந்தாள்.

"என்னாச்சு அண்ணி?" அவள் அவள் முகத்தை பற்றி கொண்டு கேட்க,

"இதுக்கு அப்புரம் என்ன செஞ்சு எப்படி படிக்குறதுனு நினைச்சா வருத்தமா இருக்கு வானதி. நிச்சயமா என்னால மாமாவுக்கு சிரமம் கொடுக்க முடியாது, அம்மாவும் அதுக்கு சம்மதிக்க மாட்டாங்க! அடுத்து என் வாழ்க்கையில என்ன நடக்கும்னு யோசிக்கவே பயமா இருக்கு" என்றாள்.

அவள் வருத்தம் வானதிக்கு நன்றாகவே புரிந்தது. அவளை மேலும் கஷ்டப்படுத்த கூடாது என்று எண்ணி,

"எதுக்கும் கவலைப் படாம நல்லபடியா குணமாகி வாங்க, அதுக்கு அப்புறம் இதை பற்றி எல்லாம் பாத்துக்கலாம். இப்போவே இதையெல்லாம் நினைச்சு மனசை குழப்பிக்கிட்டா, அது உங்க உடல்நிலையை தான் பாதிக்கும்" என்று கூறி அவளை தேற்றி உறங்க செய்தாள்.

பின் தீவிரமாக அவள் சொல்லியது குறித்து யோசிக்க தொடங்கினாள்.

வெகு நேரம் யோசித்தவள் முகத்தில் ஒரு புன்னகை மலர, அந்த யோசனை நிச்சயம் பயனளிக்கும் என்று தோன்றியது அவளுக்கு.

குந்தவி குணமடைந்ததும் அவளுக்கு ஏற்ற ஒரு வேலையை அவள் எந்த இடையூறும் இல்லாமல் செய்ய தன்னாலான முயற்சியை செய்ய வேண்டும் என்று மனதுக்குள் எண்ணிக் கொண்டாள்.

ஆனால் அதை பற்றி தெரிந்து யாராவது ஒருவர் வேண்டுமே என்று யோசித்தபோது அந்த ஊரில் அவளுக்கு நன்கு தெரிந்த நபர் அவன் ஒருவனாக மட்டுமே இருக்க, அவனிடமே உதவி கேட்கலாமா என்று முடிவும் செய்து கொண்டாள்.

வானதி இடம் இருந்து அழைப்பு வந்தது அவனுக்கு மிகவும் ஆச்சரியமாகவே இருந்தது. அவளிடம் பேசப் போகும் ஆர்வத்தில் வேகமாக வந்து கைபேசியை எடுத்தான்.
.
.
.
.
வணக்கம் நண்பர்களே,

கானல் நீ என் காதலே தொடர்கதையின் பதினான்காம் அத்தியாயம் உங்களுக்காக. உங்கள் மதிப்புமிக்க கருத்துகளை பகிரவும்.

Continue Reading

You'll Also Like

53.1K 3.7K 54
மூடப்பட்ட கதவின் மீது சாய்ந்து கண்களை மூடி நின்றான் யாழினியன், தன் உள்ளம் வென்ற பாரதியை எண்ணியபடி. ஆரத்தி தான், யாழினியனுக்கு எல்லாமாய் இருந்தவள். ஆன...
75.3K 1.3K 36
இது ஒரு ஆன்ட்டி ஹீரோ வகை கதை...
81K 5K 54
வாழ்க்கை எப்படி எப்போது மாறும் என்று யாருக்கும் தெரியாது. அது போகும் போக்கில் செல்ல பழகிவிட்டால் பல ஆச்சரியங்களை அது நமக்கு பரிசளிக்கிறது. அப்படிப்பட...
12K 471 22
ஆயிரம் அறிவுரைகள், ஆதரவு கரங்கள் நீண்டாலும் காதலாய் அவன் பார்க்கும் அந்த ஒரு பார்வைக்காக ஏங்கி தவித்தவள் கண்ணீர் கன்னத்தை தொட, அவள் கணவன் கையை கொஞ்சம...