கானல் நீ என் காதலே!

By Aarthi_Parthipan

15K 711 134

துயரம் என்றாள் இன்னதென்று தெரியாமல் வளர்ந்தவள் அவள்! ஊரே மெச்சும் அந்த பெரிய குடும்பத்தின் செல்லப்பிள்ளை. இயற... More

கானல் நீ என் காதலே!
கானல் - 2
கானல் - 3
கானல் - 4
கானல் - 5
கானல் - 6
கானல் - 7
கானல் - 8
கானல் - 9
கானல் - 10
கானல் - 11
கானல் - 12
கானல் - 13
கானல் - 14
கானல் - 15
கானல் - 16
கானல் - 17
கானல் - 18
கானல் - 19
கானல் - 20
கானல் - 21
கானல் - 22
கானல் - 23
கானல் - 24
கானல் - 25
கானல் - 26
கானல் - 27

கானல் - 1

1.6K 39 6
By Aarthi_Parthipan

அழகிய காலை பொழுதில், குருவிகளின் கீச் சத்தம் அவள் செவிகளில் இனிய சங்கீதம் போல் ஒலித்தது. மெதுவாக கண்களை திறந்தாள் வானதி. ஜன்னல் வழியாக இரண்டு குருவிகள் வீட்டுக்குள்ளும் வெளியும் வட்டமிட்டு பறந்து கொண்டிருந்ததை பார்க்க அழகாக இருந்தது.

அதை ரசித்தவாறே கட்டிலில் இருந்து இறங்கி, குளியல் அறைக்குள் நுழைந்தாள்.

"சாப்பாடு தயாரா இருக்கு, நீங்க சாப்பிடுங்க" என்றார் மரகதம், வானதியின் அம்மா. "பொண்ணு வராம, நான் என்னிக்கு சாப்பிட்டிருக்கேன்! அவ வரட்டும்" என்று கூறி விட்டு சாப்பாட்டு மேசையில் வானதிக்காக காத்திருந்தார் ராமச்சந்திரன்.

"வெற்றி நீயாவது சாப்பிடு டா" என்றார் மகனை பார்த்து. "தங்கச்சி வரட்டு மா, அவ கூட சேர்ந்து சாப்பிடுறேன்" என்று கூறி அவனும் மறுத்து விட, மரகதம் தலையில் அடித்து கொண்டார்.

இது இன்று புதிதாக நடக்கும் நிகழ்வல்ல, தினமும் அவர்கள் இல்லத்தில் நடப்பது தான்; ஆனால் இன்று அவர்கள் இருவரும் முக்கியமான விஷயமாக வெளியே செல்ல வேண்டிய வேலை இருந்தது. இருப்பினும் வானதி வந்தால் தான் உணவை கையால் தொடுவேன் என்று கூறி இருவரும் அமர்ந்திருந்தது அவருக்கு கோபத்தையே வரவழைத்தது.

"ரெண்டு பேரும் சேர்ந்து அவளுக்கு ரொம்பவும் செல்லம் கொடுக்குறீங்க. குடும்பமே அவளை தலையில தூக்கி வச்சு கொண்டாடுறதால தான் அவ அவ இஷ்டத்துக்கு இருக்கா.

பொம்பள புள்ளைக்கு இவ்வளவு செல்லம் ஆகாது" என்றாள் வெற்றிமாறனுக்கு மட்டும் கேட்குமாறு.

அவன் புன்னகைத்தான். "நீ என்ன சொன்னாலும், அவ தான் எங்க எல்லாருக்கும் செல்லம். அதுல எந்த மாற்றமும் இல்ல, அப்புறம் என் செல்லம் என்ன செஞ்சாலும் சரியாக தான் செய்வா" என்றான் அவளை விட்டு கொடுக்காமல்.

"என்னவோ பண்ணுங்க! இன்னும் எத்தனை காலம் இப்படி செல்லம் கொடுக்க முடியும், நாளைக்கு அவளுக்கு கலியாணம்னு ஒன்னு ஆனதும் இங்க இருந்து இன்னொரு வீட்டுக்கு தானே போய் ஆகணும்.

அங்க யாரு அவளை இப்படி தாங்குவாங்க?" என்று புலம்பிக் கொண்டே அடுப்படியில் வேலை செய்து கொண்டு இருந்தார்.

"என்ன அண்ணி, காலையிலேயே வருத்தப் பட்டு ஏதோ பேசிட்டு இருக்கீங்க" என்று கேட்டுக் கொண்டு சமையல் அறைக்குள் நுழைந்தார் பானுமதி.

"நீயே சொல்லு மா, இவுங்க செய்யுறது எல்லாம் ரொம்ப அதிகப்படியா இல்லையா? இப்படியா செல்லம் கொடுக்குறது புள்ளைக்கு" என்றார்.

"நம்ம வீட்டுல இருக்க வரைக்கும் தானே அண்ணி. அதுக்கு அப்புறம் அவளுடைய புகுந்த வீடு எப்படி இருக்கும்னு தெரியாதே! இங்க இருக்க வரைக்கும் சந்தோஷமா இருக்கட்டும்" என்றார் மென்மையாக.

"அது தான் என் பயமே! நாளைக்கு போற வீட்டுலயும் எல்லாரும் இப்படி இருக்கணும்னு தானே இவ எதிர்பார்ப்பா! எதாவது சின்ன பிரச்சனை வந்தாலும் இவ அதை சரி செய்யாம இங்க வந்து சொன்னா அவ்வளவு தான் அப்பாவும் பையனும் எதை பற்றியும் யோசிக்காம அவுங்க கிட்ட சண்டைக்கு போயிருவாங்க! அதெல்லாம் நினைச்சு தான் நான் ரொம்ப பயப் படுறேன்.

இவ என்னவோ அதிசிய பிறவி மாதிரி நினைச்சு அவளை ராஜ்குமாரி மாதிரி வளர்த்துட்டு இருக்காங்க. இவளும் வெளி உலகம் தெரியாம, பிடிவாதமே குணமா வளர்ந்திருக்கா. இவ எதிர்காலம் பத்தி நினைச்சா பயமா இருக்கு" என்று மனதில் இருந்தவற்றை அவரிடம் ஆதங்கத்துடன் தெரிவித்தார்.

"கவலை படாதீங்க அண்ணி. வானதி புத்திசாலி, அவளுக்கு இருக்க நல்ல குணத்துக்கு எந்த குறையும் இல்லாம நல்ல வாழ்க்கை அமையும்" என்று கூறினார் மனதார.

மரகதம் சொல்லியது போல அந்த குடும்பத்தில் அனைவரும் அவளை அதிசயமானவளாக தான் பார்த்தார்கள். நான்கு தலைமுறைகளாக பெண் வாரிசே இல்லாத அந்த குடும்பத்தில் பிறந்த முதல் பெண் குழந்தை அவள் தான்.

அவள் பிறந்தநாளை மொத்த குடும்பமும் கோலாகலமாக கொண்டாடினார்கள்.

திலகவதி வேதநாயகம் தம்பதியருக்கு மூன்று மகன்கள். அதில் மூத்தவர் ராமசந்திரன். வேதநாயகம் இறைவனடி சேர்ந்த பிறகு, தாய் திலகவதியுடன் சேர்ந்து உழைத்து அவர் குடும்பத்தை நல்ல நிலைக்கு கொண்டு வந்தவர். அவர் தம்பிகளுடன் ஒரே வீட்டில் தான் அவர்கள் அனைவரும் ஒற்றுமையாக வாழ்ந்து வருகிறார்கள்.

பெண் குழந்தை இல்லாத வீட்டில் முதல் முறையாக பிறந்த பெண் குழந்தையான வானதியை இளவரசியை போலவே வளர்த்தார்கள்.

அவளின் அப்பா அண்ணனை தவிர, இரண்டு சித்தப்பாவும் செல்ல பிள்ளை அவள் தான்.

சாப்பாட்டு மேசையில் அவளுக்காக நால்வரும் காத்திருந்தார்கள். அரைமணி நேரத்தில் அவள் அங்கு வந்து சேர்ந்தாள்.

மாம்பழ நிற பாவாடையும் அரக்கு நிற தாவணியும் அணிந்து அழகிய சிற்பம் போல் அங்கு வந்து நின்றவளை பார்த்த அனைவரது முகமும் மலர்ந்தது. "வாடி ராசாத்தி! நல்லா தூங்குனயா?" என்று கேட்டு அவளுக்கு நெட்டி முறித்தார் திலகவதி.

"நல்லா தூங்கினேன் அப்பத்தா. காலையில அந்த சிட்டுக்குருவி ரெண்டும் அழகா என் ரூமுக்குள்ள பறந்துட்டு இருந்தது. அதுக்கு கூட கட்ட ஒரு நல்ல இடமா ஏற்பாடு பண்ணனும்" என்றாள் உற்சாகமாக.

"அதுக்கென்ன கண்ணு, அப்படியே செஞ்சுருவோம்" என்று கூறி அவளை சாப்பிட அமர சொன்னார் திலகவதி.

"அப்பா!" என்று செல்லமாக கூச்சலிட்டபடி அவர் அருகில் வந்து அமர்ந்தாள்.

அனைவரும் சேர்ந்து காலை உணவை சாப்பிட்டார்கள். சாப்பாடு முடிந்ததும், ராமசந்திரனும் வெற்றிமாறனும் அவர்கள் வேலையை கவனிக்க வெளியே சென்றார்கள்.

போவதற்கு முன், தங்கையிடம் என்ன வாங்கி வர வேண்டும் என்று கேட்டுக் கொண்டு தான் புறப்பட்டான் வெற்றிமாறன்.

வானதி சாப்பிட்டு முடித்ததும் அவள் அம்மாவை தேடிக் கொண்டு சமையல் அறைக்கு சென்றாள். அங்கு அவர் இல்லாததால் பின்புற தோட்டத்திற்கு சென்று பார்க்கலாம் என்று சென்றாள்.

அவள் எண்ணியது போல அவளுடைய அம்மாவும் சித்திகள் இருவரும் அங்கு தான் இருந்தார்கள்.

"அம்மா!" அவள் குரல் கேட்டு அவளை திரும்பி பார்த்தார் மரகதம். அவர் பார்வையிலேயே அவர் கோபமாக இருப்பதை அவள் உணர்ந்து கொண்டாள்.

"என்னாச்சு?" ரகசியமாக அவள் சித்தியிடம் சமிக்ஞை செய்தாள். அவள் தெரியவில்லை என்று கூறி விட, காரணம் என்ன என்று கண்டுபிடிக்க வேண்டும் என்று எண்ணி அவளிடம் சென்று செல்லமாக அவள் கழுத்தை கட்டிக் கொண்டாள்.

"ஒரு பொம்பள புள்ள இவ்வளவு நேரமா தூங்குறது?" என்றாள் கோபமாக.

"நான் எப்பவோ எழுந்துட்டேன் மா. குருவி கூட விளையாடிட்டு இருந்தேன்" என்றாள் அப்பாவி போல.

"பொய் சொல்லாதே! நான் ஒருமணி நேரத்திற்கு முன்னதான் உன் அறைக்கு வந்து பார்த்தேன். நல்லா போர்வையை இழுத்து போர்த்தி தூங்கிட்டு இருந்த" என்றார் கோபமாக.

"இப்போ தானே மா பரிட்சை எல்லாம் முடிஞ்சுது. பரிட்சை நேரத்தில எவ்வளவு நேரம் கண் விழிச்சு படிச்சிருப்பேன்‌‌. அதான் அதுக்கெல்லாம் சேர்த்து வச்சு இப்போ தூங்குறேன். அதுக்கு ஏன் நீ இவ்வளவு கோபிச்சுகிற" என்றாள்.

"நீ வந்தா தான் எல்லாரும் சாப்பிடுவாங்கனு உனக்கு தெரியும் தானே. உனக்காக எல்லாரும் பசியோட காத்திருக்கணுமா?

ராத்திரி தூங்கும் போதே காலையில சீக்கிரம் எழுந்திருக்கணும்னு மனசுல எண்ணம் இருக்கணும், அப்போ தான் காலையில எழுந்திருக்க முடியும். உனக்கு அந்த பொறுப்பெல்லாம் ஒருநாளும் வந்ததில்லையே!" என்றார் கோபம் குறையாமல்.

அவள் கண்களில் கண்ணீர் துளிர் விட தொடங்கியது. "ஐயோ! என்ன கா நீ! இப்படி தான் காலையிலேயே புள்ளைய திட்டுவயா?" என்று கூறி அவள் சித்தி அவளை அணைத்துக் கொண்டாள்.

அவள் கண்களில் கண்ணீரை கண்டதும் அவர் மனமும் இளகியது. "அவ சொல்லுறது சரி தானே அக்கா. இப்போ தான் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு முடிஞ்சுது. கொஞ்சம் ஓய்வெடுத்துக்கட்டுமே!" என்று கூறி இரண்டு சித்திகளும் அவளுக்கு ஆதரவாக பேச, மரகதம் அதற்கு மேலும் அவளிடம் கோபித்துக் கொள்ளவில்லை.

சான் பிரான்சிஸ்கோ,

ஒரு ஆங்கில பாடலை சத்தமாக பாடிக் கொண்டு வீட்டுக்குள் நுழைந்ததும், "டேடி! இன்னிக்கு சூப்பர் ஃபன் நீங்க மிஸ் பண்ணிட்டீங்க. அடுத்த வாரமும் ஒர்க் இருக்குனு சொல்லி பப் வராம இருந்துராதீங்க" என்றான் அந்த பாடலை முணுமுணுத்து கொண்டே.

"ஸ்யூர் மதன்! இன்னிக்கு ஆடிட் க்ளோஸ் பண்ண வேண்டி இருந்தது. அடுத்த வாரம் ரெண்டு பேரும் சேர்ந்தே என்ஜாய் பண்ணலாம். இப்போ ரொம்ப லேட் ஆயிடுச்சு போய் தூங்கு. குட் நைட்!" என்று கூறி அவனை அறைக்கு செல்லுமாறு கூறினார் ஆனந்தன். அவனும் அவன் அறைக்கு சென்று விட்டான்.

இந்தியாவில் பிறந்து, அமேரிக்காவில் குடியுரிமை பெற்று அங்கேயே குடியேறியவர் ஆனந்தன். அவர் வாழ்வில் அனைத்து உறவுகளையும் இழந்த பிறகு, அவருக்கென்று இருந்த ஒரே உறவு அவரின் மகன் மதன் தான். மகன் மீது அளவுகடந்த பாசம் வைத்திருந்தார். அதனாலேயே அவனை கண்டிக்காமல் அவனுக்கு பிடித்த வழியிலேயே அவனை வளர்த்து வந்தார்.

மதன் பெயருக்கு ஏற்றவாறு அழகிலும் குணத்திலும் மன்மதனையே ஒத்திருந்தான். அனைவரையும் ஈர்க்கும் வசீகரம் அவனிடம் அதிகமாகவே இருந்தது. உறவு, பாசம், அன்பு, காதல் என்று எதிலும் அவனுக்கு நம்பிக்கை இருந்ததே இல்லை.

அவனை சுற்றி இருந்தவர்களை வைத்து இன்னது தான் வாழ்க்கை என்று எண்ணி, எந்த கவலையும் இன்றி அவனுக்கு பிடித்தவாறு வாழ்க்கையை வாழ்ந்து வந்தான்.

அப்பொழுது தான் இளங்கலை பட்ட படிப்பை முடித்திருந்தான். அடுத்து என்ன செய்வது என்பதில் அதிக ஆர்வமில்லாமல், நண்பர்களுடன் சேர்ந்து சில நாட்கள் சந்தோஷமாக கழிக்கலாம் என்று முடிவெடுத்து இருந்தான்.

அவன் தந்தை அவன் விருப்பத்துக்கு ஒருநாளும் குறுக்கே நின்றதில்லை. எனவே அவனுக்கு பிடித்தவற்றை எல்லாம் எந்த இடையூறும் இல்லாமல் செய்து, மகிழ்ச்சியாக சுற்றி திரிந்தான்.

வணக்கம் நண்பர்களே,

கானல் நீ என் காதலே தொடர்கதையின் முதல் அத்தியாயம் உங்களுக்காக. உங்கள் மதிப்புமிக்க கருத்துகளை பகிரவும்.

முடிந்த அளவுக்கு சீக்கிரம் அப்டேட் பண்ணுறேன்!!

Continue Reading

You'll Also Like

23.4K 601 46
இது முழுக்க முழுக்க காதல் கதை தான் நண்பர்களே படிச்சி பாருங்க உங்களுக்கு நிச்சயம் பிடிக்கும்
35.3K 2.4K 50
இளம் பெண்களின் கனவு நாயகனாய் இருந்தவன் தான் இனியவன். அது முன்பிருந்த நிலைமை. ஆனால் இப்பொழுது, அவன் அருகில் செல்லவே எல்லோரும் அஞ்சுகிறார்கள். அவனுக்கு...
57.6K 2.3K 53
வார்த்தைகள் இல்லாத இடத்தில் கூட மௌனம் பேசும். மௌனத்தை மொழியாக அவள் கொண்டாள். அவளுக்காக மௌன மொழியையும் கற்பான் அவன் மௌனம் பேசும் மொழி அறிய படிங்கள் வா...
8.4K 169 22
டேய் கண்ணா மூன்று மணி நேரம் தொடர்ந்து ஓர்க் அவுட் செய்துவிட்டு இருக்க உன் உடம்புக்கு எதாவது ஆயிடும்டா. அம்மா சொல்றதை கேளுடா கண்ணா இந்த குடி, கேர்ள் ஃ...