பாகம் 42

95 4 6
                                    






ओह! यह छवि हमारे सामग्री दिशानिर्देशों का पालन नहीं करती है। प्रकाशन जारी रखने के लिए, कृपया इसे हटा दें या कोई भिन्न छवि अपलोड करें।


Date published: 1 January 2024

Word count 2626

"ரெண்டு நாளா உன்னை பாக்கலை செல்லம்மா படுத்தாத டீ. போதும் உன் விளையாட்டு".

ஏக்கம், காதல், பரிதவிப்பு என எல்லாம் கலவையாக அவனை ஆட்டிபடைக்க கெஞ்சி கொண்டிருந்தான் அவளிடம் கைபேசி வழியாக.

உள்ளூர பாவமாக தோன்றினாலும் ஒரு காரணமாகவே இந்த விளையாட்டை தொடங்கியிருந்தாள் பூரணி.

"விஷ்வா பேபி, நான் தான் சொன்னேன்ல. நாலு நாள் ஒரு கேம். தினம் ஒரு புதிர். அதையெல்லாம் நீ சால்வ் பண்ணினா, உன் பிறந்தநாள் பரிசா we can go on a date.
உன் பிறந்தாளை, நாம ஒண்ணு சேர்ந்ததை புதுமையா கொண்டாட தான் இந்த ப்ளான். இதெல்லாம் சொன்னப்ப பூம் பூம் மாடு மாதிரி மண்டைய ஆட்டிட்டு இப்ப என்னடா சென்டியா பேசி கவுக்க பாக்கற? "

"ஏய் ஃப்ராடு பேபி! Game  duration and சந்திக்க முடியாதுங்கற கண்டிஷன்லாம் அப்ப சொல்லவேயில்ல நீ..."

"Terms and conditions apply னு அன்னிக்கு சொன்னேன் நீ தான் date அப்படீன்னதும் எதையெல்லாமோ எதிர்பார்த்து ஜொள்ளு விட்டுட்டு நான் சொன்ன எதையும் கவனிக்கலை."

"அப்ப! மேடத்தோட விலைமதிப்பில்லாத ஒரு நாளோட ஈக்வல், நான் நாலு நாள் காயுறதா?"

"இல்லை என் சிவாவோட இத்தனை வருஷ காத்திருப்புக்கு பரிகாரம் அல்லது பரிசுன்னு வச்சுக்கோயேன்"
அவள் குரலில் லேசான குற்ற உணர்வும் வருத்தமும் இழையோடியது.

"ஜானூ not again..." அவள் மனப்போக்கை புரிந்தவன் சட்டென பேச்சை மாற்றினான்.
"ஆமா அதெப்படி நான் எல்லாத்தையும் சால்வ் பண்ணிடுவேன்னு நம்புற? மாமா ஸ்மார்ட்னு அவ்வளவு நம்பிக்கை உனக்கு?" மேஜையின் மீது வைத்திருந்த இரண்டு  பரிசு பெட்டிகளை பார்த்தான், முதல் இரண்டு புதிர்களை கண்டுபிடித்ததன் அடையாளம்.

கை நீட்டி அழைக்கிறேன்..जहाँ कहानियाँ रहती हैं। अभी खोजें