பாகம் 21

121 6 13
                                    

✴✴✴✴

சில வருடங்கள் முன்

"ஏன் அஜ்ஜு, நமக்கு கல்யாணம் ஆச்சுனா பூ குட்டியை இதே மாதிரி பாத்துக்க முடியுமா?" வாடிய முகத்தோடு அவன் தோள் சாய்ந்தவளை குழப்பமாக நோக்கினான். அருகே பூரணி மருத்தவமனை படுக்கையில் மயக்கத்தில் இருக்க கையில் டிரிப்ஸ் ஏறிக்கொண்டிருந்தது.

"இல்லைடா, கல்யாணம் ஆனா நமக்குன்னு சில பொறுப்பு கடமைன்னு இருக்கு. நான் நம்ம பிரைவஸிங்கற ஆங்கிள்ள (angle) சொல்லலை, பொதுவான கடமைகள், குடும்பத்தோட எதிர்பார்ப்புகள், வேலை.. அப்ப பூகுட்டியை நாம கவனிக்காம விட முடியாதுல்ல. அதோட அவ இப்படி கஷ்டபடும் போது நான்.. நாம... எப்படி அஜ்ஜு சந்தோஷமா..." விசும்பலை கட்டுபடுத்த முயன்றாள் உறங்கும் தோழியை பார்த்தபடி.

"நானே உன்கிட்ட பேசணும்னு இருந்தேன் டி." அவள் தோள் தழுவி தன்னோடு சேர்த்தணைத்து கொண்டான். "அப்பா அம்மாவோட இதை பத்தி பேசினேன். எப்படி பாத்தாலும் இருபத்தியாறு வயசுக்குள்ள கல்யாணம் பண்ணி ஆகணும். வேற ஆப்ஷன் இல்லையே மா. அதுக்குள்ள அவ சீக்கிரம் குணமாகணும்னு வேண்டிக்குவோம். அப்படி இல்லைனா கூட என்ன அவளை விட்டுருவேனா? நீங்க ரெண்டு பேரும் எனக்கு உசிரு உங்கள்ள யாரையும் விட்டு கொடுக்க முடியாது அழகிமா. கல்யாணம் ஆனா என்ன அவளை பாத்துக்க முடியாதா? இந்த பிரச்சினை மத்தவங்களுக்கு வரலாம், ஆனா இவ நம்ம ரெண்டு பேருக்கும் சிஸ்டர் டி, அவளை விலக்கி வைக்க முடியுமா நம்மால?" அவள் உச்சியில் முத்தமிட்டு ஆழ்ந்து மூச்செடுத்து தன்னை சமன் படுத்திகொண்டான்.

இவர்கள் காதல் விவகாரம் தெரிந்த பின்னர் திருமணத்தை பற்றிய முடிவு எடுக்க அர்ஜுனின் சொந்த ஊருக்கு இரு குடும்பங்களும் சென்றிருந்தனர். குல தெய்வ கோவிலில் இருக்கும் சித்தரை சந்திக்க.

அவர் அர்ஜனின் இருபத்தி ஆறாம் வயதுக்குள் இருவருக்கும் திருமணம் செய்து வைத்து விடவேண்டும், ஏனெனில் அர்ஜுனுக்கு ஆயுள் கண்டம் இருக்கிறது என்றும் அதை தவிர்க்க கூடிய வகையில் மாங்கல்ய பாக்கியம் சுகந்தியின் ஜாதகத்தில் இருப்பதாகவும் கூறினார். அவரிடம் மூர்த்திக்கு அதிக பக்தியும் நம்பிக்கையும் உண்டு.

கை நீட்டி அழைக்கிறேன்..Where stories live. Discover now