பாகம் 35

206 6 15
                                    

டாக்டர் சிவநேசன், அறுபது சொச்சம் வயது, சென்னை மாநகரின் மிக பிரபலமான மருத்துவர்களில் ஒருவர், சமூக ஆர்வலர், பல தொண்டு நிறுவனங்களாலும், அரசாங்கத்தாலும் பாராட்டுக்களையும், கௌரவங்களையும் பெற்ற நல்ல உள்ளம் படைத்த மனிதர்

Oops! This image does not follow our content guidelines. To continue publishing, please remove it or upload a different image.

டாக்டர் சிவநேசன், அறுபது சொச்சம் வயது, சென்னை மாநகரின் மிக பிரபலமான மருத்துவர்களில் ஒருவர், சமூக ஆர்வலர், பல தொண்டு நிறுவனங்களாலும், அரசாங்கத்தாலும் பாராட்டுக்களையும், கௌரவங்களையும் பெற்ற நல்ல உள்ளம் படைத்த மனிதர்.

"கோகிலா உங்க பொண்ணுக்கு கை காயத்துக்கு தையல் போட்டிருக்கு, கொஞ்சம் ஆழம் தான். காலுல ரெண்டு விரலுல ஹேர்லைன் ஃபிராக்ச்சர். ஸப்போர்ட் குடுத்து கட்டு போட்டிருக்கு. விரலை அசைக்க கூடாது. ரெண்டு காயமுமே கவனமா இருக்கணும். மருந்து எழுதி குடுக்கறேன். மீதி விஷயம் கொஞ்சம் பேசணும்.."

"நாங்க வெளிய இருக்கோம்" நகர எத்தனித்த ஷர்மிளாவை கோகிலா தடுத்தார்.

"டாக்டர் இவங்கள்ளாமும் என்
பிள்ளைங்க தான். நீங்க சொல்லுங்க" ஷர்மிளாவை தோளோடு அணைத்துக்கொண்டார் கோகிலா.

"நீங்க பயப்பட ஒண்ணும் இல்லை ஷீ இஸ் ஃபைன். இன்னைக்கு ஏற்பட்ட காயங்கள் அதிக படியா ஒன் ஆர் டூ மன்த்துல ஆறிடும். ஆனா நான் சொல்ல வேண்டியது அவங்களோட பழைய பிரச்சினை பத்தி. இன்றைய சம்பவம் ஏற்படுத்தின அதிர்ச்சியால இருக்கலாம், கடந்த சில நாட்களா கொஞ்சம் கொஞ்சமா பழைய நினைவுகளை தூண்டும் விதமா சில சம்பவங்கள் நடந்ததாக சொல்றாங்க. அதுவும் இருக்கலாம். ஷார்ட் டெர்ம் மெமரி லாஸ்ல இருந்து அன்னபூரணி ரிலீவ் ஆகிட்டு" வராங்க."
அனைவரும் நிம்மதி பெருமூச்செறிந்தனர்.
கோகிலாவக்கு சந்தோஷத்தில் லேசாக விம்மினார்.

"உங்க அப்பாவும் நல்லா இருக்காரு மா. நாங்க எதிர்பார்த்ததை விட டிரீட்மெண்டுக்கு நல்லா ஒத்துழைக்கிறாரு. கூடிய சீக்கிரம் டிஸ்சார்ஜ் ஆயிடுவாரு. டோண்ட் வொரி. மெடிசன்ஸ் கரெக்டா எடு, நல்லா ஓய்வெடு. ஓகே!"

கை நீட்டி அழைக்கிறேன்..Where stories live. Discover now